Friday, April 19, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -8

:""தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை போராடுவேன்,'' என, உடுமலை அருகே நடைபயணம் சென்ற வைகோ பேசினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மூன்றாம் கட்ட நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கரட்டு மடத்திலிருந்து நேற்று(18.04.13) காலை 7:30 மணிக்கு மூன்றாம் நாள் நடைபயணத்தை வைகோ துவக்கினார். இவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். 

தீபாலபட்டி அருகே, பெண்கள் கூட்டமாக வைகோவை சூழ்ந்து கொண்டு, "மதுவை ஒழித்தால் நிம்மதியாக இருக்கும். சம்பாதிக்கிற பணத்தயெல்லாம் கொண்டு போய் அதுலேயே போடுறாங்க... நிம்மதியே இல்ல; 


கையெழுத்து வேணும்னாலும் போட்டு தரோம்; மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கணும்' என்றனர்.


இதற்கு வைகோ, ""பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பேரணி மேற்கொண்டுள்ளேன். நீங்களும் போராட வேண்டும்; உங்கள் போராட்டத் துக்கு உறுதுணையாக இருப்போம். 

பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை போராடுவேன்,'' என்றார். 

ஜிலோப்பன்நாயக்கன்பாளையம் வழியாக நடந்து வந்த வைகோ வெயிலின் உக்கிரம் தாங்காததால், தீபாலபட்டி அருகே,  நாற்காலியில் சில நிமிடம் உட்கார்ந்து ஓய்வு எடுத்த பின், தளி நோக்கி நடைபயணத்தை துவக்கினார்.

No comments:

Post a Comment