Tuesday, April 16, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 14

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


ஆயுதம் ஏந்தவும் தயார்!- வைகோ

தமிழீழ விடுதலைப்  போராட்ட பயிர் செழிக்க,வேருக்கு நீர் ஈந்த புரட்சித் தலை வர், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,1987, டிசம்பர் 24 ஆம் நாள் மறைந்தார்.புரட்சித்
தலைவரின் மறைவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், இந்திய அரசின் இராணுவ வெறியாட்டம் இலங்கைத் தமிழர் பகுதிகளில் தீவிரமாகியது. இந்திய அமைதிப்படை, புலிகள் தலைவர் பிரபாகரனைத் தேடி வேட்டை நாயாக அலைந்தது.வடக்கே சாவகச் சேரி, வடமராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளிலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக் களப்பு மாவட்டங்களிலும் அமைதிப் படை தேடுதல் வேட்டை என்ற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடினர்.



புலிகளுக்கு அரணாக இருந்த மக்கள் மீது இந்திய இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன.தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டனர். தமிழர்களின்
வீடுகளில் நுழைந்த இந்திய இராணுவம், அப்பாவி இளைஞர்களை புலிகள் என்று முத்திரைக்குத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக தமிழீழ மக்கள் பொங்கி எழுந்தனர்.

இந்திய இராணுவத்தின் எல்லை மீறலைத் தொடக்கத்திலேயே 1987 அக்டோபர் 12, 14 ஆகிய தேதிகளில் கடிதம் வாயிலாக இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்திக்கு தெரியப்படுத்திய பிரபாகரன், இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மீது தொடுத்து உள்ள யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இந்தக் கடிதங்களை பிரதமர் ராஜீவ்காந்தி அலட்சியப்படுத்தினார். இருந்த போதிலும் தம்பி பிரபாகரன் மீண்டும் 1988, ஜனவரி 13 இல் இராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் தீட்டினார்.

இராஜீவ்காந்திக்கு பிரபாகரன் கடிதம்

“நல்லெண்ண நடவடிக்கையாக அமைதிப்படையின் முகாமில் அடைபட்டு இருக்கும் எங்களது போராளிகளையும், ஆதரவாளர்களையும் விடுவிக்கும்படி
கோருகிறோம். எங்களது போராளிகளுக்கு உண்மையான பொது மன்னிப்பை வழங்குமாறு ஜெயவர்த்தனாவை வலியுறுத்துவதுடன்,அதனை அமல்படுத்த வும் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாயும் கோருகிறோம்.

தாங்கள் புதுதில்லியில் ஒப்பந்தத்துக்கு முன்பாகக்குறிப்பிட்டபடி, இடைக்கால அரசை அமைத்து,அதனை விடுதலைப்புலிகள் கோரியவாறு அளிக்க வேண்டும்
என்று   கேட்டுக்கொள்கிறோம்.    இதற்குத் தடையாக இருக்கும்     பட்சத்தில் எங்களது ஆயுதங்களைக் கீழே போடவும் தயார் என மீண்டும் உறுதி அளிக் கிறோம்.மக்கள் அமைதியுடன் வாழ, எங்களது இயக்கத்தின் ஒத்துழைப்பை நல்கவும் தயாராக இருக்கிறோம்.

இடைக்கால அரசு என்கிற திட்டம் தற்போது பாதியில் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தாங்கள் அளித்த வாக்குறுதிப்படி இவ்வாய்ப்பு வழங்கப் படும் பட்சத்தில், மாநில அளவிலான உரிமைகளுக்கும் சுயநிர்ணய ஆட்சிக்கும் உரியவற்றையும் திட்டமிட முடியும்.

தமிழீழ மக்களின் துயர்போக்க, அவர்கள் தங்களது வாழ்விடங்களில் வசிக்க போர் நிறுத்தம் அறிவித்து,பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமாறும் இதற்கான அமைதிச்சூழலை உருவாக்குமாறும் மீண்டும் கேட்டுக்கொள் கிறேன்.”

தம்பி பிரபாகரன் எழுதிய கடைசிக்கடிதத்திற்கும் செவி சாய்க்காத பிரதமர் இராஜீவ்காந்தி, புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தவும், ஆயுதப்பறிப்பை நிகழ்த்தவும் இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிட்டார். இந்திய அமைதிப் படைக்கு எதிராக கொந்தளித்த தமிழீழ மக்கள், அமைதி வழியில் போராடத் தலைப்பட்டனர்.

‘தமிழீழ அன்னையர் முன்னணி’ சார்பில் 1988 பிப்ரவரி 19ஆம் நாள் ‘அன்னம்மா டேவிட்’ என்ற தாய் இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து
திலீபன் வழியில் உண்ணாவிரத அறப்போராட்டத்தை சாகும்வரை இருக்கப் போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவக்கினார்.

இந்திய இராணுவம், அன்னம்மா டேவிட் மாமாங்கப் பிள்ளையார் கோவில் முன்பாகத் தொடங்கிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை செயலிழக்கச்
செய்திட ஊரடங்கு உத்தரவு போட்டது. ஆனாலும், தமிழீழ வீராங்கனைகள் அஞ்சாமல் அறப்போருக்கு அணிதிரண்டு வந்தனர். பெண்களையும் கைது செய்து முகாமில் அடைத்து சிறை வைத்தது இந்திய இராணுவம்.

திலீபன் உண்ணாவிரதம் போன்று,மாதரசி அன்னம்மா டேவிட் உண்ணாவிரதப் போராட்டம் பேரெழுச்சியை ஏற்படுத்தி விடுமோ எனறு அஞ்சிய இந்திய இராணுவம் உண்ணாநோன் பிருந்த அன்னம்மா டேவிட்டை வலுக் கட்டாய மாக அப்புறப்படுத்தி கடத்திச் சென்றது.அன்னை அன்னம்மா டேவிட் ஆவி யைத் தந்து தியாக தீபம் ஆனார்.

இந்திய அமைதிப்படையினரின் தமிழின விரோத அத்துமீறல்களுக்கும் வன் முறைக்கும் எதிராக தமிழீழ மக்கள் தன்னெழுச்சியாக போராடிய நேரத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ இந்திய இராணுவத்தின் நட வடிக் கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

1988 மார்ச்சு 19 ஆம் நாள் மாநிலங்க;ள அவையில் இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் நட்வர்சிங் இலங்கைப் பிரச்சினை குறித்து தாக்கல் செய்த
அறிக்கை மீதான விவாதத்தின்போது, தலைவர் வைகோ, ஈழத்தில் இந்திய அமைதிப்படை நடத்திவரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகக்
குமுறினார்.

இராஜீவ்காந்தி கூற்று தவறு

“இலங்கையில் தமிழர்களின் தலைசிறந்த விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் மீது இந்திய இராணுவம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான தாக்கு தலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு எனது முறையீட்டை இந்திய அரசுக்கு முன் வைக்கிறேன்.

தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு விட்டதாக தொடர்ந்து ஆணித்தரமாகச் சொல்லி வந்த பிரதமர் இராஜீவ்காந்தியின் கூற்று முற்றிலும் தவறு என்பதை அமைச்சரின் அறிக்கையிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமும், மாகாணக் கவுன்சில்கள் திட்டமும் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் எவற்றையும் நிறைவேற்ற வில்லை.

வடக்குமாகாணமும்,கிழக்கு மாகாணமும் இணைப்புக்கு அரசியல் சட்ட உத்திர வாதம் இல்லை. நிலம், விவசாயம், மீன்வளம், வேலை வாய்ப்பு,கல்வி போன்ற அதிகாரங்கள் மாகாணக் கவுன்சில்களுக்கு வழங்கப்படவில்லை. நாடாளு மன்றத் தில் சாதாரண ஒரு சட்டத்தின மூலமோ,குடியரசுத் தலைவரின் ஒரு பிரகடனத்தின் மூலமோ மாகாணக் கவுன்சில்களை ஒரு நொடியில் எளிதில்
கலைத்துவிட முடியும்.

தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கில் சிங்களவர்களைக் கொண்டுவந்து இலங்கை சர்க்காரே முழு வேகத்துடன் ஒப்பந்தம் போட்ட பின் னரும், குடியமர்த்தி தமிழர்களை வெளியேற்றி வரும் அக்கிரமமான போக்கை மாற்றிக் கொள்ளாததிலிருந்தே இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஜெயவர்த் தனே அரசு கிழித்தெறிந்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது என்பது ஐயத் திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.

1987 நவம்பர் 28 இல் போர் நிறுத்தத்தை இந்திய அரசு அறிவித்ததாக அமைச்சர் கூறியிருப்பது மிகப்பெரிய பொல்லாங்கான நகைச் சுவை ஆகும். இந்திய ராணு வச் சிப்பாய்கள் 18 பேரை விடுதலைப்புலிகள் நூற்றுக்கணக்கான நிருபர்கள் மத்தியில் விடுதலை செய்து, இந்தியாவின் மூக்கை உடைத்ததால் வேறு
வழியின்றி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

பிரபாகரன் கடிதத்திற்கு என்ன பதில்?

போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரியும், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் ஜனவரி 13ஆம் தேதி பிரபாகரன் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதினாரே? இந்த அரசு ஏன் அதை ஏற்கவில்லை?

மீண்டும் இம்மாதம் 9 ஆம் தேதி பிரபாகரன் இந்தியப்  பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மார்ச்சு 11 இல் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் தளபதி களில் ஒருவரான கிட்டு பிரதமருக்கு அனுப்பி உள்ளாரே! தளபதி கிட்டு கையொப்பமிட்ட அதன் பிரதியை மேற்கோள் காட்டி இப்போது நான் பேசு கிறேன்.

பிரபாகரன் தனது கடிதத்தில், “துரதிருஷ்டவசமாக எங்கள் மீது நடத்தப்படுகிற சண்டையை நிறுத்திடவும், எங்கள் மக்களின் துன்பங்களைப் போக்கும் வகை யில் அமைதியை நிலைநாட்டி போர் நிறுத்தம் அறிவிக்குமாறு எங்கள் இயக்கம் தொடர்ந்து உங்களிடம் முறையிட்டு வருகிறது. இந்தத் துயரமான யுத்தத்தை நாங்கள் விரும்பி மேற்கொள்ளவில்லை.ஆனால்,எங்கள் உணர்வுகளை இந்திய அரசு தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறது.ஈழத்தமிழர்களின் நலன்களைப்
பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயார்.
சிங்கள இனவெறி அரசு ஏற்கனவே ஒப்பந்தத்தின் விதிகளை மீறித் தமிழர் களுக்கு கேடு செய்யும் நிலையில், எதிர்காலத் தமிழர் நிலை குறித்து எங்கள்
அச்சம் நியாயமானதாகும். இந்திய அரசும்,விடுதலைப்புலிகளும் அத்தனைப்
பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் நிபந்தனையற்ற பேச்சு
வார்த்தைக்கு தயார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன்”என்று பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின்னரும் இந்திய அரசு பேச்சுக்கு இடமில்லை என்று கதவுகளைப் பூட்டுவது நியாயம்தானா?ஒப்பந்தத்தின்படி 1987 மே 25 ஆம் நாள் நிலைக்குத் திரும்பி, தங்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கியிருக்க வேண்டிய இலங்கை இராணுவம்,தமிழர்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்தி உள்ளதே! இதை இந்திய அரசு ஏன் ஆட்சேபிக்கவில்லை? 

ஜே.வி.பி.அபாயம்

இலங்கை அரசியலில் பூதாகாரமாக உருவாகி வரும் ஒரு பயங்கர சூழலை
இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரு கிறேன். “புத்தமத குருமார்களின் முழு ஆதரவுடன், சிங்கள இனவெறி யாட்டத் தின் முழு வடிவமான ஜே.வி.பி.இயக்கம் இலங்கை அரசியலை முற்றுமாக
கபளீகரம் செய்யும் புதிய ஆபத்து வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

இலங்கை இராணுவத்திலும், போலீசிலும் 70 சத வீதத்திற்கு மேல் ஜே.வி.பி.
ஆதரவாளர்கள் உள்ளனர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.விஜயகுமார ரண துங்கேயை கொன்றது இந்த ஜே.வி.பி. இயக்கம்தான்.திரிகோணமலையில் தமிழர்களுக்கு,புலிகளுக்குச் சாதகமாக இருந்த முஸ்லிம் சமுதாயத்தின்முதன் மைத் தலைவர் களைக் கொன்றதும் இந்த இயக்கம்தான்.தேர்தல் நடக்கு மானால், இலங்கை ஆட்சியை ஜே.வி.பி. கைப்பற்றும் அபாயம் நிதர்சனமாகத் தெரிகிறது.

ஜெயவர்த்தனே கட்சி தேர்தலில் வெற்றி  பெறும் நிலையில் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், விளைவுகள் விபரீதமாக அமையும். இலங்கை யில் ஆட்சிப் பீடத்தில் ஜே.வி.பி.அமருமானால், இந்தியாவுக்குப் பகை நாடாக பகிரங்கமாக இலங்கை செயல்படும். இந்தியாவின் பகை நாடுகளுடன் வெளிப் படையாக கை கோர்த்து நிற்கும்.

ஏற்கனவே பாகிஸ்தான், இஸ்ரேல் படைகளும், உளவு ஸ்தாபனங்களும் வெளி யேறவில்லை. இலங்கையில் நிலை   பெற்றுள்ளன. இந்திய இராணுவத்தை
வெளியேறுமாறு உத்திரவிடும் இலங்கை அரசு, சிங்கள இனவெறி கொலை வாளின் வீச்சுக்கு தமிழர்கள் இரையாவார்கள்.

இந்தச் சூழலில் ஈழத்தமிழர்களின் ஒரே ஒரு காவல் அரணான விடுதலைப்புலி களை நசுக்கி அழிக்க இந்தியா துடிப்பது தர்மமா? நியாயமா?தமிழர்களின் எதிர் காலத்தை ஒட்டு மொத்தமாக நாசம் செய்வதுதான் இந்தியாவின் நோக்கமா?”
அன்னம்மா டேவிட் உண்ணாவிரதம்

அண்மையில் பிரபாகரன் எழுதிய கடிதத்தின் கடைசிப்பகுதியில்,“சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னம்மா டேவிட் என்ற அன்னையின் விலைமதிப்பற்ற உயிரைக்காக்கும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டியுள்ளார்.

”அறப்போர் நடத்தும் அன்னம்மா டேவிட் மடிந்துவிட்டால், பெரும் கொந்தளிப்பு
ஏற்படும் என்று அஞ்சிய இந்திய அரசு,கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு
கேடு கெட்ட கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளது. அந்த மாதரசியை புலிகள் தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக ஒரு பித்தலாட்டப்  பிரச்சாரத்தை இந்திய அரசு
முடுக்கிவிட்டுள்ளது.மட்டக்களப்பின் மக்கள் குழுவின் தலைவரும் கத்தோலிக் க பாதிரியுமான எம்.சி.பெர்னாண்டோ என்பவர் நேற்று ஒரு அறிக்கை விடுத் துள் ளார். அந்த அறிக்கையில் நடந்த சம்பவத்தைவிளக்கியுள்ளார்.
இந்திய இராணுவத்தளபதி தார் என்பவரின் உத்தரவின்பேரில்,இந்தியராணுவம் வலுக்கட்டாயமாக அன்னம்மா டேவிட் அவர்களை உண்ணாவிரதப் பந்தலி லிருந்து அகற்றியதாகவும், அந்த அம்மையாரின் புதல்விகளைக் கைது செய்து காவலில் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.உண்ணாவிரதப் பந்தலை நொறுக்கி
சின்னாபின்னம் செய்து, அங்கு கூடியிருந்த தமிழ்த் தாய்மார்கள் மீது கண்ணீர்ப் பிரயோகம் செய்து,ஆகாயத்தை நோக்கி பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, பீதியைஉருவாக்கி, அனைவரையும் இந்திய இராணுவம் விரட்டியடித்துள்ளது.


வெட்கக்கேடு

மகாத்மா பிறந்த நாட்டை ஆளும் இந்த அரசு, இப்படி கீழ்த்தரமான - ஈனத்தன மான - ஒரு காலத்தில் நாஜி பயங்கரவாதிகள் கடைபிடித்த கொடிய தந்திரங் களைப் பின்பற்றுவது மிகவும் வெட்கக்கேடானதாகும். இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள் பெற்று,துரோக இயக்கங்கள் இலங்கையில்பேயாட்டம் போட்டு வருகின்றன.

முல்லைத் தீவினை அடுத்துள்ள அடர்ந்த காடுகளில் கடுமையான யுத்தம் நடக் கிறது. புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே உக்கிரமான போர் நடக்கின்றது.

பிரபாகரனை கொல்ல போர்

புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றொழிக்கும் நோக்கத்தோடுதான்
இந்திய இராணுவத்தின் படைப்பிரிவுகள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்து கின்றன. 48 மணி நேரத்தில் புலிகளை நிர்மூலமாக்கிவிடலாம் என்று இராஜீவ் காந்தி திட்டமிட்டார்.

ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகவும் சண்டை தொடர்கிறது.புலிகளில் பலரைக் கொன்றுவிட்டதாக ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவம் அறிவித் துக் கொண்டுதான் இருக்கிறது.விடுதலைப்புலிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு வழியில்லை.

பசி பட்டினியுடன் யுத்தகளத்தில் நிற்கின்றனர். காயம் பட்டோருக்கும் மருந்து கள் இல்லை. புதிதாக ஆயுதங்கள் பெற மார்க்கமும் இல்லை.

இத்தனை பெரிய நெருக்கடிக்கு மத்தியிலும் உலகின் நான்காவது பெரிய ராணு வத் தினரைத் திணற அடிக்கும் வீரசாகசம் சரித்திரம் சந்திக்காதது கும்.இந்திய வீரர்கள் உரிமைக்காக போராடவில்லையே? ஜெயவர்த்தனேயின் வேலைக் காரப் படையாகத்தானே களத்தில் உள்ளனர். ஆனால், புலிகளோ,தங்கள் இனத் தின் உரிமை காக்க, மானம் காக்க, மரணத்தை துச்சமாகக் கருதி போராடு கின்றனர்.

புலிக்குகையான இல்லங்கள்

ஈழத்தில் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திலும் ஒரு புலி புறப்பட்டு உள்ளான் என்பது ஈழமே புலிகளின் குகையாகிவிட்டது. பிரபாகரனைக்கொல்ல திட்டம் தீட்டிவிட்டது இந்தியஅரசு. களத்தில் பிரபாகரனைக் கொன்று விட்டு பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என்று பொய்ச்செய்தியை வெளியிட சதித் திட்டம் வகுத்துவிட்டது இந்திய அரசு.

அம்மையார் அன்னம்மா டேவிட் உண்ணாவிரதத்தை முறியடிக்க இந்திய
அரசு கையாண்ட கடைசி ரக கயமைத்தனத்திலிருந்தே பிரபாகரன் பற்றி இந்திய அரசின் சதித்திட்டத்தை எவரும் புரிந்துகொள்ளலாம்.

பிரபாகரன் பெயர் நிலைத்து நிற்கும்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விடுதலை இயக்கத்தின் தளபதியை
இந்தியா ஒரு வேளை சாகடிக்கலாம்.ஆனால், ஈழத்தமிழ் இனத்தை விடு தலைக் களத்தில் வழிநடத்தும் தீபச்சுடராக பிரபாகரனது பெயர் சாகாமல்
நிலைத்து நிற்கும்.

ஆனால், இந்த கொலைப்பழியிலிருந்து இந்தியா தப்பவே முடியாது. இந்தியா என்ற பெயர் தமிழர்களின் உள்ளத்தில் சபிக்கப்படுகிற சாபக்கேடாக மாறி விடும்.பிரபாகரனையும், புலிகளையும் அழிக்கத் துடிக்கிறீர்களே, அவர்கள் இந்தியாவுக்கு எதிராக என்ன குற்றம் செய்தார்கள்? என்ன பாவம் செய்தார்கள்?

இந்திராகாந்தி அம்மையாரை சுட்டுக்கொன்ற கொடிய பாவிகளோடு கை குலுக்கி கொண்டாடினார்களா? இந்தியாவின் போக்குக்கு முடிவே கிடையாதா?
யுத்தத்தை நிறுத்துங்கள். போர் நிறுத்தம் அறிவியுங்கள்.பேச்சுவார்த்தை நடத்துங்கள். சர்வதேச அரங்கில் மிச்சம் மீதமிருக்கிற கொஞ்சம் மரியாதையை இப்போதாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள். இல்லையேல், ஐ.நா.மன்றத்தின் சார்பில் நடுநிலையாளர் குழு இலங்கைசெல்லும் நாள் வரும். இந்திய ராணுவம் நடத்திய அக்கிரமங்களும், இந்திய அரசு செய்த பித்தலாட்டங்களும் உலகத் திற்கு வெட்டவெளிச்சமாகும்.”

மதன் பாட்டியா(இ.காங்): விடுதலைப் புலிகள்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டனர்.தற்போது அப்பாவித் தமிழர்களைக் கொல்கின்றனர்.

வைகோ:ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒப்புதல் அளித்ததாக நிரூபிக்க முடியுமா? ஓர் அத்தாட்சியை காட்டட்டும பார்க்கலாம்.தமிழினத்திற்கு கேடு செய்யும் துரோகி களுக்கு புலிகள் பாடம் கற்பிப்பதில் என்ன தவறு? என் கையில் உள்ள புகைப் படங் களை இந்த மன்றம் பார்க்கட்டும். சின்னஞ்சிறு குழந்தைகள் பெண்கள் இந்திய இராணுவத் தாக்குதலால் படுகாயப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்தியா வை எதிர்த்து ஆயுதம் ஏந்துவோம்!

மதன் பாட்டியா: ஒப்பந்தத்தை எதிர்க்கும் புலிகளை இந்திய இராணுவம் தாக்கு வதில் என்ன தவறு?

வைகோ: இலங்கையில் இந்திய இராணுவத்தால் விடுதலைப்புலிகள் அழிக்கப் படுவார்களானால்,தமிழினம் அழிக்கப்படுமேயானால், இங்குள்ள தமிழர்களே, இந்தியாவை எதிர்த்து ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும். எங்கள் உயிர்களையும் கொடுக்கத் தயார்!

மதன் பாட்டியா:: கோபால்சாமியின் கருத்து மிகவும் ஆபத்தானது. இந்தியா வின் நலன் அவருக்கு முக்கியமில்லையா? விடுதலைப் புலிகளுக்காக
இந்தியாவையே எதிர்க்க துணிகிறாரா?

வைகோ: எனது கருத்தில் உறுதியாக உள்ளேன்.இந்தியாவின் நலனுக்காக தமிழர்களின் நலன்களை காவு கொடுக்க நான் தயாராக இல்லை.

நட்வர்சிங் (வெளிவிவகாரத்துறை அமைச்சர்): தற்போதைய நிலை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. புலிகளின் நடவடிக்கையைப் பொறுத்தே போர் நிறுத்தம் செய்ய முடியும்.

வைகோ:  நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயார். ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றிப் பேசவும் தயார்.பந்து உங்கள் மைதானத்தில்தான் இருக் கிறது.கொஞ்சமாவது பெருந்தன்மை காட்டுங்கள். இந்தியா மிகப்பெரிய சக்தி. ஆனால், போக்குதான் மிகவும் அற்பத்தனமானது.

நட்வர்சிங்: இராணுவத்தை திருப்பி அழைத்தால் நிலைமை என்னவாகும் தெரியுமா?

வைகோ:அக்டோபர் 9 ஆம் தேதி நிலைமைக்குத்திரும்பட்டும்.

நட்வர்சிங்: இந்திய இராணுவத்திற்கு இப்படியெல்லாம் நிபந்தனை விதிக்க புலிகளுக்கு தகுதி கிடையாது.பால்சாமியோடு சத்தம்போட்டுப்பேசுவதற்கும்
என்னால் முடியாது.

வைகோ:உங்கள்பீரங்கிகளின் சத்தத்தோடு நாங்கள் போட்டி போடவாமுடியும்?
                                                                                                        தொடரும்..................
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment