Tuesday, April 23, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -17

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தில் 7 ஆம் நாள் பயணமாக நேற்று (22.04.13) இரவு வெள்ளக்கோவிலில் வந்த வைகோ.




வெள்ளக்கோவிலில் நடந்த பூரண மதுவிலக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

எனது நடை பயணத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கின்றனர். நாங்கள் மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறோம். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வறட்சி, தண்ணீர் இல்லை. கேரளம், கர்நாடகம், ஆந்திரா அரசுகள் நம்மை வஞ்சிக்கின்றது.

மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்ற கூட்டத்தில் நிறை வேற்றினால் ஒவ்வொரு மாநில அரசும் நினைத்தாற்போல் அணைகளை அமைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். இதற்காகவே நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும்.

இந்த நடை பயணத்தின் போது சிலர் மது அருந்தி விட்டு வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். மதுவிற்கு அடிமையாகிவிட்டனர். அவர்களால் விட முடியவில்லை. இதற்கு ஒரே வழி மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த மதுவினால் தான் 7 வயது 8 வயது குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். குற்றங்கள் அதிகமாகிறது.

அரசு இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்கிறது. உடனே மதுக் கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு நடைபயணத்தின் போது அதிமாக பெண்கள் ஆதரவு கிடைக்கிறது.

நாங்கள் மதுவின் பிடியில் இருந்து காக்க துடிக்கிறோம். நாட்டுக்காக ம.தி.மு.க. போராடி வருகிறது. போராடும் ம.தி.மு.க.வின் கரங்களை வலுப்படுத்துங்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

Post a Comment