Monday, April 22, 2013

அடுத்த கட்ட நகர்வு என்ன? எனத் திக்குத் தெரியாத நிலையில் திகைத்து நின்றபோது, வழிகாட்டியவர் வைகோ!- கொளத்தூர் மணி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில், கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற மாநாட்டிலும், தஞ்சை வழக்குரைஞர் மன்றத்திலும் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பு, இங்கே நூலாகவும், குறுந்தட்டாகவும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்
ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்துகின்ற வகையில், இந்த வெளி யீடு கள் அமைந்து இருக்கின்றன.

தமிழர்களுக்குச் சிக்கல்கள் நேருகின்ற பொழுதெல்லாம் முகம் கொடுக்கின்ற
ஒரு போராளி, மதிப்பிற்கு உரிய அண்ணன் வைகோ அவர்கள், இன்றைய சூழலில், நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருக்கின் றார்.



நாளை, புரட்சியாளர் அம்பேத்கருடைய பிறந்தநாள். ஒரு பெரிய தத்துவ ஆசிரி யராக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, உயர்வுக்காக, வாழ்நாள் முழு வதும் போராடியவர் அம்பேத்கர்.ஒரு அரசியல் களத்தில் நின்று,பல அழுத்த மான பதிவுகளை அவர் செய்து இருக்கின்றார். நாக்பூர் மாநாட்டில்,தன்னுடைய தொண்டர்களுக்கு,தோழர்களுக்கு அவர் ஒரு செய்தியைச் சொன்னார்.

நாம் நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்காக,சில செய்திகளைச் சொன்னார்.அங்கேதான் அவர் சொன்னார்:Educate, Unite, agitate; கற்பி-ஒன்று; சேர்-புரட்சி செய்; போராடு.

‘முதலில் நீங்கள் செய்திகளை மக்களுக்குக் கற்பியுங்கள். அவர்களை ஒன்று படச் செய்யுங்கள்; கிளர்ந்து எழச்செய்யுங்கள், போராடச் செய்யுங்கள்.அதன் வழியாக நம் கோரிக்கைகளை வென்றெடுங்கள்’ என்றார்.

அதைத்தான், தமிழகத்தில் அண்ணன் வைகோ அவர்கள் தொடர்ச்சியாகச் செய்து வந்து இருக்கின்றார்கள். (பலத்தகைதட்டல்).

முல்லைப்பெரியாறு சிக்கலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக ஒரு குறும்
படத்தைத் தயாரித்து, ஒரு வெளியீட்டு நிகழ்ச்சியை அமைத்து,அந்தத் துறை யில் தேர்ந்தவர்களை அழைத்து வந்து, செய்திகளைப் பரிமாறச் செய்து, மக்க ளுக்கு அதன் தேவைகளை,நியாயங்களை உணர்த்தி, அந்தப்போராட்டத்துக்கு வலுச் சேர்த்து இருக்கிறார்.

மூவர் உயிர் காக்கும் போரில், மரண தண்டனைக்கு எதிரான வாதங்களை, மரண தண்டனை கூடாது என்பதற்கான வாதங்களை, தூக்கு மேடைக்கு முன்பு
நிறுத்தப்பட்டு இருக்கின்ற இந்த மூவருக்கு ஏன் மரண தண்டனை கூடாது என்பதற்கான வாதங்களை,அழுத்தமாகப் பதிவு செய்து, அந்தப் போராட்டத்துக் கும் மக்களைத் திரட்டினார்.

ஈழப்பிரச்சினையில், தொடக்கத்தில் இருந்தே அந்தப் பணியை அவர் செய்து
வந்து இருக்கின்றார். அதில் ஒன்றாகத்தான், இந்த நிகழ்ச்சியை நாம் பார்க் கிறோம்.

பொது வாக்கெடுப்பு குறித்துப் பெரிதும் பேசப்படுகின்ற இந்த வேளையில், நான் காம் கட்ட ஈழப்போர் ஒரு பின்னடைவைச் சந்தித்த பிறகு, அடுத்து எந்தத் திசை யில் செல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்ற வேளையில், ஒரு அரசியல் பூர்வமான நகர்வு என இந்தப் பொது வாக்கெடுப்பை முன்மொழிந்து, இந்த உரை களை நிகழ்த்தி, அவற்றை நூலாகத் தொகுத்தும் தந்து இருக்கின்றார்.

பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் ஆற்றிய உரை,அங்கே பேசப்பட்ட செய்திகள், அப் போது வெளியிடப்பட்டு இருந்த ஐ.நா. மூவர் குழு அறிக்கை தாங்கி இருந்த செய்திகளுள் முக்கியமான இடங்களை, அவர்களுக்கு எடுத்துக் காட்டி, சுட்டிக் காட்டி, அதன் விடையாக,அதற்குத் தீர்வாக, நாங்கள் எதை எதிர்பார்க்கிறோம்? எது எங்களுக்குத் தீர்வாக இருக்க முடியும்? என்பதையெல்லாம் மிக அழுத்த மாகப் பதிவு செய்வதாக, அந்த உரை அமைந்து இருந்தது.

இப்போது, ஈழத்தமிழர்களின் உரிமைக் காக நாம் என்ன செய்வது?

2009 இல், உலகின் பல நாடுகள்,ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திரண்டு இருந்தன. உலகம் முழுவதும் சிதறி வாழ்வதில் இருக்கின்ற துன்பங்களை அறிந்த இஸ்ரேல் நாட்டின் யூத மக்கள்,தங்களுக்கான ஒரு நாட்டை அமைப்பதற்காக எவ்வளவு துன்பங்களை எதிர் கொண்டு இருப்பார்கள்? என்றாலும், ஈழத்தமிழர் களுக்கு எதிரான போரில்,அவர்கள் இலங்கை அரசுக்கு உதவிகள் செய்தார்கள்.

நம்முடைய எல்லையில் எதிரும் புதிருமாக நிற்கின்ற இந்தியாவும், பாகிஸ் தானும், ஈழப்போரின் போது ஒன்றாக நின்று, நமது எதிரிக்கு உதவிகள் செய்து இருக்கின்றார்கள்.

ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருகின்ற தத்துவங் களைப் படைத்த கார்ல் மார்க்சைப் பின்பற்றுகின்ற சோசலிச நாடுகள், குறிப்பாக சீனா, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை எல்லாம் இலங்கை அரசுக்குக் கொடுத்ததாகச் செய்திகள் வருகின்றன.




இப்போது நாம் என்ன செய்வது?

இன்றைக்கு ஈழத்தில் வாழுகின்ற தமிழர்கள், தங்கள் அன்றாட வாழ்க்கைப் பாட்டுக்கே துன்பப்படுகின்ற நிலையில்,அவர்கள் எந்தப் போராட்டத்தை முன் னெடுக்க முடியும்?

புலம் பெயர்ந்து வாழுகின்ற மக்கள்,அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டுத் தான் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்த முடியும்.இருந்தாலும், இந்த ஜன நாயகக் கோரிக்கையை முன்வைக்கின்றபோது,யாரும் இதற்கு எதிராக நிற்க முடியாது;எந்த அரசும், இதைச் சட்டத்துக்கு எதிரானது என்று சொல்லவும் முடியாது.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்குப் பின்னர், உலகம் முழுமையும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டு இருந்தது; அது, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது. அந்தச் சொல்லைத்தான்,சிங்களம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

இப்போது, உலகம் முழுவதும் ஏற்படுத்தி வைத்து இருக்கின்ற கருத்து, தேர்தல்
ஜனநாயகம். மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி இயங்குகின்ற ஜன நாயகம். அதை, ஈழத்தமிழர் களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற முயற்சி யாகத்தான், இந்தப் பொது வாக்கெடுப்பை நாம் முன்மொழிந்து இருக்கின்றோம்.

ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் முற்போக்கானது; அறவழிப் போராட்டங்கள் பிற்போக்கானது;அல்லது அச்ச உணர்வுகளின் வெளிப்பாடு என்றோ சொல்லத் தேவை இல்லை. அது தாங்கி நிற்கின்ற அரசியல் உள்ளடக்கம்தான் முக்கிய மானதே தவிர, எடுத்துச் செல்லுகின்ற வழிமுறைகளை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளே தமிழர்கள் வாழ முடியாதா? என்று, இப்போதும் சிலர் கேட்கிறார்கள். 

போரின்போது சிக்கிக்கொண்ட சின்னஞ் சிறு குழந்தைகள் கொல்லப்படுவது என்பது வேறு; ஆனால்,பிடித்து வைத்துச் சுட்டுக் கொன்ற செய்தி வந்த பின்னா லும், அவர்கள் அப்படிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பிணக்கு என்பது மிக விரைவாக வந்து விடும்.து தனி மனிதர்களுக்கு இடையே என்றாலும், நாடுகளுக்கு இடையே என்றாலும் மிக விரைவாக வந்து விடும். ஆனால், பிணைப்பு என்பது உடனே வந்து விடாது.

தமிழர்களுக்கும்,சிங்களர்களுக்கும் இடையேயான பிணக்கு ஏற்பட்டு,65 ஆண்டு கள் ஆகி விட்டன. இதை,பிணைப்பாக மாற்ற வேண்டும் என்றால்,குறைந்தது, 650 ஆண்டுகள் ஆகும்.

எப்படி அவர்களோடு இணைந்து வாழ முடியும்?ஆனாலும் அவர்கள் சொல்லு
கிறார்கள்.தங்கள் மூளை நிரம்பி காது வழியாக வழிந்து கொண்டு இருக்கின்றது என்று சொல்லுகின்ற மார்க்சியவாதிகள் சொல்லுகிறார்கள்,ஒன்றுபட்ட இலங் கைக்கு உள்ளே ஒரு தீர்வு என்று. அதை, இன்றைக்கும் பேசிக்கொண்டே இருக் கின்றார்கள்.

நீங்கள் யார் அதைச் சொல்லுவதற்கு? பாதிக்கப்பட்ட மக்கள், அல்லது தீர்வை
எதிர்நோக்கி இருக்கின்ற மக்கள் அதை முடிவு செய்யட்டுமே? அதை எப்படி
நீங்கள் மறுக்க முடியும்? அதைத்தான் பொது வாக்கெடுப்பு என்று நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம். 

இலங்கையின் விடுதலைக்காக, தமிழர்களும், சிங்களவர்களும் சேர்ந்து போராடினார்கள். அதை, வட்டுக்கோட்டை தீர்மானத்திலும் அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.‘இலங்கையின் விடுதலைப்போராட்டத்தைத் தமிழர்கள்தான்
முன்னின்று நடத்தினார்கள் என்றாலும்’என்கின்ற அந்தச் சொல்லைப்போட்டுத் தான் தீர்மானத்தை வடித்து இருக்கின்றார்கள். ஆனால்,சிங்களவர்கள் நன்றி உணர்வைக் காட்டவில்லை.

எப்படியோ அந்த நாடு விடுதலை பெற்றது. அதற்குப் பின்னர், பல சிக்கல்கள் வந்தன. தமிழர் தலைவர்கள்,அறவழிப் போராட்டங்களை நடத்தினார்கள். கோரிக்கைகள் விடுத்தார்கள்,ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்கள்,பல முயற்சி களைச் செய்தார்கள். இனி ஒன்றும் முடியாது என்ற நிலையில் இயற்றப்பட் டது தான், வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

அப்படித் தீர்மானம் நிறைவேற்றியது மட்டும் அல்ல; ‘தமிழ் ஈழம்தான் இனி
தீர்வு என்பதை ஏற்றுக் கொள்கின்ற வர்கள் எங்களுக்கு வாக்கு அளியுங்கள்’
என்று கேட்டு, அதற்கு ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களின் ஆதரவும் இருக்கின் றது என்பதை அறிந்து கொண்டார்கள்.

விருப்பம் இல்லாத மக்களை அடக்கி ஆண்டு கொண்டு இருந்தது சிங்களம். அவர்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத தமிழர்கள், 1977 நாடாளுமன்றத் தேர்தலிலேயே, ‘நாங்கள் தனித்துச் செல்லுகிறோம்’ என்று,தங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் கூட சிங்களர்கள் ஈழத்தமிழர் களை ஆண்டார்கள் என்றால், விருப்பம் இல்லாத மக்கள் மீது அவர்கள் அடக்கு
முறைகளைக் கட்டு அவிழ்த்து விட்டு,அடக்கி ஆண்டு கொண்டு இருந்தார்கள்
என்பதுதான் பொருள். சரி, காலம் கடந்து விட்டது என்றாலும் கூட, உலக நாடு கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், 77 ஆம்
ஆண்டில் இருந்தே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை, இன்றைக்கு உலக நாடுகளுக்கு இயல்பாக மாறி இருக்கின்றது.

தங்கள் கருத்தை ஏற்கனவே அந்த மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள் என்பதை அறிந்த பின்னால், அதற்கான பாதுகாப்பைத் தர வேண்டும். ஐ.நா.மன்றத்தில் எத்தனையோ சட்டங்களை இயற்றுகின்றார்கள். காப்பதற்காகத் தங்களுக்கு இருக்கின்ற பொறுப்புகள் குறித்து, ஐ.நா.மன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றது.இறையாண்மை என்ற பெயரால், ஒருஇனம் அழிவுக்கு உள்ளா கின்ற போது தலையிடலாம் என்பதுதான், அந்தத்தீர்மானத்தின் முதன்மைக் கூறு ஆகும்.

அப்படியானால், இலங்கையில் அவர்கள் ஏன் தலையிடவில்லை? அதற்குப்
பின்னால் இருந்தது என்ன? 

உலகம் முழுவதும், பிரிவினைவாதம் என்றால் அது பயங்கரவாதம் என்று
சொல்லிக் கொண்டு இருந்தவர்களுக்கு,பிரிவினைவாதக் குரலை எழுப்பியவர்
களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்களுக்கு, இல்லை;
பிரிவினை என்பதும் ஜனநாயகம்தான் என்று காட்டுவதுதான்,பொது வாக் கெடுப்பு. அது உலகில் எங்கெல்லாம் நடந்தது என்பதை,அண்ணன் வைகோ அவர்கள், இந்த நூலில் மிக விரிவாகச் சொல்லி இருக்கின்றார்.

இந்த நூலில் அவர் குறிப்பிட்டு உள்ள சில செய்திகளை மட்டும், நான் இங்கே
எடுத்துச் சொல்ல வேண்டும்.நமது இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள், காஷ்மீரைப் பற்றி இங்கே சொன்னார்கள்.அதைப்பற்றி,மிக விரிவாக அண்ணன் வைகோ அவர்கள்,இந்த நூலில் எடுத்து விளக்கிஇருக்கின்றார். அதுகுறித்து, இங்கே வெளியிடப்பட்டு இருக்கின்ற ‘தன்னாட்சி உரிமை’ என்ற மற்றொரு
நூலில் விரிவாக விளக்கி இருக்கின்றார்.

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவோம் என்றும், மக்கள் விருப்பத்தின்படி நடந்து கொள்வோம் என்றும், தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே வந்து இருக்கின்றார்கள்.காஷ்மீர் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்; ஒரு கட்டத் தில், 1951 ஆம் ஆண்டு, தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வெளியேறிய போது,   அவர் பல காரணங் களைச்சொன்னதைப் பற்றி, பெரியார் அவர்கள், ஒரு நீண்ட கட்டுரையை விடுதலை ஏட்டில் எழுதுகிறார்.

அம்பேத்கர் சொன்ன காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவைதான். கமிட்டி
களுக்கு அவரை அழைப்பது இல்லை;திட்டக்குழுவில் அவரது கருத்துகளைப்
பரிசீலிப்பது இல்லை. உண்மைதான்,சுயமரியாதை உள்ள ஒரு மனிதனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று,ஏற்றுக் கொள்ளக்கூடிய செய்திகளைச்
சொல்லிவிட்டு, ஏற்றுக் கொள்ள முடியாத செய்திகளையும் சொல்லுகிறார்.

இஸ்லாமியர்கள் வாழுகின்ற பகுதிகளை பாகிஸ்தானோடும், இந்துக்களும்,
பெளத்தர்களும் வாழுகின்ற பகுதிகளை,இந்தியாவோடும் இணைத்து விடு வோம் என்றும் சொல்லி இருக்கின்றார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய
வில்லை. காஷ்மீர் என்பது,இந்தியாவுக்கும் சொந்தம் அல்ல,பாகிஸ்தானுக்கும் சொந்தம் அல்ல; அது காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது. அதை அவர்கள்தானே தீர்மானிக்க வேண்டும் என்று, தன்னோடு முழுக்க முழுக்க ஒத்துப் போகின்ற தலைவர்களோடுகூட,அந்த இடத்தில் வேறுபடுகிறார் பெரியார்.

காஷ்மீர் பிரச்சினையில் தொடர்ச்சியாக இவர்கள் என்ன சொல்லி வந்தார்கள்
என்பதையெல்லாம் வைகோ இந்த நூலில் சொல்லுகிறார்.கடைசியாக,1964 ஆம் ஆண்டு, இந்தியாவின் கல்வி அமைச்சர் எம்.சி. சாக்ளா,ஐ.நா.மன்றத்தில் என்ன பேசினார் என்பதையும் குறிப்பிடுகிறார்.அதுவரைக்கும் பொது வாக்கெடுப்பு என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.இந்திய நாடாளுமன்றத்தில் சொன்னது
மட்டும் அல்ல, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிக்கு எழுதிய கடிதத்தில்,
இங்கிலாந்துப் பிரதமர் அட்லிக்கு எழுதிய கடிதத்தில், உலக நாடுகளின் செய்தி யாளர்களிடம் ஒப்புக்கொண்டு,இப்படி எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாகப் பண்டித நேரு சொல்லி வந்த நிலையில், 64 ஆம் ஆண்டில், அதை அப்படியே மாற்றிப் பேசுகிறார் சாக்ளா.

‘பொது வாக்கெடுப்பா? காஷ்மீரில்தான் நாங்கள் மூன்று பொதுத் தேர்தலை
நடத்தி விட்டோமே? அதுதான் பொதுவாக்கெடுப்பு. அவ்வளவுதான். முடிந்து
போய்விட்டது’ என்கிறார்.

அதை எடுத்துக் காட்டி விட்டு வைகோ சொல்லுகிறார்: அப்படியானல், 77 ஆம்
ஆண்டுத் தேர்தல் முதல், அதற்கு அடுத்தும் எத்தனைத் தேர்தல்களில், ஈழத் தமிழர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டார்களே? என்கிறார்.

நீயாவது, காஷ்மீரில் யாரை முதல் அமைச்சராகக் கொண்டு வர வேண்டும்
என்பதற்காகத் தேர்தல் நடத்தினாய்;ஆனால், தமிழ் ஈழம் என்ற கருத்தை முன் வைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு மக்கள் வாக்கு அளித்து இருக்கின்றார் களே?

அது, 77 தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்காக இருந்தாலும் சரி, 83 ஆம் ஆண்டில் புலிகளின் கோரிக்கையை ஏற்று, உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக இருந்தாலும் சரி,அல்லது, 2004 நாடாளுமன்றத்தேர்தலோ, 2005 குடியரசுத் தலைவர் தேர்தலில் புறக்கணிப்பு என்பதோ,எல்லாமே தொடர்ச்சியாக, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் தெரிவித்த கருத்துதானே என்று ஒப்பிட்டுக் கேட்கிறார் வைகோ.

காஷ்மீரில் நடந்த வெறும் சட்டமன்றத் தேர்தலையே நீ பொது வாக்கெடுப்பு
என்கிறாயே, அப்படியானால், ஈழத்தில் எத்தனை முறை பொது வாக்கெடுப்பு
நடந்து விட்டதே, இன்னும் ஏன் இதை நீ ஆதரிக்கத் தயங்குகிறாய்? என்று கேட் கிறார் வைகோ.

அது மட்டும் அல்ல தோழர்களே,சோவியத் ஒன்றியத்தில், செஞ் சீனாவில், பர்மாவில், எந்தெந்தக்கட்டங்களில் எல்லாம் பிரிந்து செல்லுகின்ற உரிமையை ஒப்புக்கொண்டு இருக்கின்றார்கள்? பின்னர் எப்படிப் பறித்தார்கள்? எப்போது
மாறுகிறார்கள்? என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ரஷ்யா எப்போதும் மாற வில்லை. சீனா முதலில் பேசுகிறது,பின்னர் விட்டுவிடுகிறது என்கிறார். பர்மா வும் பின்னர் மாற்றிக் கொண்டது.

தமிழகத்தில் அண்ணா அவர்கள் வலியுறுத்திய திராவிட நாட்டை, இன்றைக் கும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதை விவரம் தெரியாமல் விமர் சிக்கின்ற அறிஞர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்.

அண்ணா என்ன சொன்னார்?

நாம் மொழி வழியில் தனித்தனி நாடுகள் தான்; தமிழ்நாடு.ஆனால், இன வழி யில் கூடி ஒரு கூட்டு ஆட்சி என்றுதான்,திராவிட நாட்டைச் சொல்லுகிறார்.அது வும், பிரிந்து செல்லுகின்ற உரிமையோடு கூடிய கூட்டு ஆட்சியாகத்தான் திராவிட நாடு என்று சொன்னார். அவர் நாடாளு மன்றத்தில் ஆற்றிய உரையை யும் வைகோ சுட்டிக் காட்டுகிறார்.

சீனத்துக்கும் சரி, இலங்கைக்கும் சரி,எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருப் பது இந்தியாதான். இவர்கள் 16 ஆவது சட்டத்திருத்தத்தின் வழியாக,பிரிவினை கேட்பதைத் தடை செய்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுபவர் கள், இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம் என உறுதி மொழிந்து, கையெழுத்துப் போட்டால்தான், தேர்தலில் போட்டியிடமுடியும் என்றார்கள்.

இதைப் பார்த்துவிட்டுத்தான், 84 ஆம் ஆண்டு, அவன் ஒரு சட்டம் கொண்டு வரு கிறான். இலங்கை அரசியல் சட்டத்தில், 6 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரு கிறான். யாராவது தனிநாடு என்று பேசினால், அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நீடிக்க முடியாது என்ற சட்டத்தை அவனும் கொண்டு வந்து விட்டான்.

87 இல் இந்திய அமைதிப்படை செய்த அத்தனை அட்டூழியங்களையும்தான்,
அவன் அதற்குப் பின்னால் செய்தான். செய்தி நிறுவனங்களைத் தாக்குவது,
பத்திரிகை அலுவலகங்கள் மீது குண்டு போடுவதை, இந்திய அமைதிப் படை யின் நடவடிக்கைகள் தொடங்கிய அக்டோபர் பத்தாம் நாளே செய்தார்கள்.
அக்டோபர் 21 ஆம் நாள் மருத்துவ மனையின் மீது குண்டுகளை வீசினார்கள்.
அதற்கு, புலிகள் உள்ளே இருப்பதாகக் கருதிப்போட்டு விட்டோம் என்று பதிலும் சொன்னது இந்தியா.அதைத்தான், இறுதிப் போரில் அவன்செய்தான். அவனுக்கு வழிகாட்டிய நாடு,இந்தியாதான். போர்க்குற்றங்களுக்கு மட்டும் அல்ல, இப்படிப் பட்ட உரிமை மீறல்களுக்கும்,எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் வழிகாட்டி.


மூவர் தூக்கு- ம.தி.மு.க. தீர்மானம்


தோழர்களே, இன்றைய நிலையில் சில செய்திகளைப் பேசியாக வேண்டும். தேவேந்திர பால் சிங் புல்லருக்குஉறுதி செய்யப்பட்டு இருக்கின்ற மரண தண்ட னையை ஒட்டி, ஒரு அருமையான தீர்மானத்தை வடித்து இருக்கிறது மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.ஏறத்தாழ இதுபோன்ற ஒரு வழக்கில் நின்று கொண்டு இருக்கின்ற நம்முடைய மூன்று தமிழர்களைப் பற்றி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வடித்து இருக்கின்ற தீர்மானத்தில் விரிவாகச் சொல்லி இருக்கின்றார்கள். அதைப் பற்றி, அண்ணன் வைகோ
அவர்களும் இங்கே மிக விரிவாகப் பேசுவார்கள் என்றுகருதுகிறேன்.

ஏப்ரல் 30; எல்லோரும் வாருங்கள்

நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது என்னவென்றால்,எந்தச் சட்டமாக இருந் தாலும், மக்கள் கருத்தை ஏற்றுத்தான் தீர வேண்டும். மக்கள் கருத்து நான்கு கால் பாய்ச்சலில் போனால், சட்டமும் அதைப் பின் தொடர்ந்து வரும் என்று சொல்லு வார்கள். நான்கு கால் பாய்ச்சலில் போக நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.அதற்கு முன்னோடியாகத்தான், மூன்று தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம், வருகின்ற ஏப்ரல் 30 ஆம் நாள் நடத்த இருக்கின்ற அந்தப் பொதுக் கூட்டத்தை, எந்தக் கட்சி அடையாளங்களும் இல்லாமல்தான் நடத்துவதாகத் தீர்மானித்து இருக்கின்றார்கள்.

எப்போதும் போல் அவர்கள்தான் நடத்தப் போகிறார்கள் என்றாலும்கூட, அங்கே எந்த அடையாளமும் இல்லாமல், தங்களுடைய கட்சி, கொடி என்ற எந்த அடை யாளமும் இல்லாமல், மூன்று தமிழர்களுடைய உயிர்காப்பு என்பதை மட்டுமே முன்வைத்து, அதற்காக நாம் கொடுக்க வேண்டிய அரசியல் அழுத்தத்தை,
மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக,விதைப்பதற்காக, ஏற்கனவே இருந்த எழுச்சி சற்றே மறைந்து போயிருக்கின்ற நிலையில், அதை நினைவூட்டுவதற் காகவும், ஒன்று திரட்டுவதற்காகவும்,எடுக்கின்ற முயற்சியில்,நாம் அனைவ ரும் ஆதரவாக ஒன்றுதிரண்டு இருப்போம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிப்பட்ட ஒரு தொகுப்பைப் பற்றி, பொதுவாக இதைப்பற்றி, இப்போது இருக் கின்ற தலைமுறை அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இப்படி ஒரு தீர்வு இருக் கின்றது என்பதையும், இனப்படுகொலைக்குற்றம் என்பதை நாம் பலமுறை சொல்லி இருக்கின்றோம், பல நேரங்களில் நாம் குரல் எழுப்பி இருக்கின்றோம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் குறித்தும் கூட, இந்த நூலில் அழகாகச் சொல்லி இருக்கின்றார்கள். அதை இந்த நேரத்தில் நாம் சொல்வோம். அந்தத் தீர்மானத் தைத் தொடங்குகின்றபோதே, நாங்கள் ஏன் இந்த முடிவுக்கு வந்தோம்? என்று சொல்லி, அதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டும் அல்லவா,அதையும் சொல்லி இருக்கின்றார்கள்.

அவர்கள் சொல்லுகிறார்கள்: ஐரோப்பியர் களால், தமிழ் அரசு வீழ்த்தப்பட்டது. அதுவரையிலும் அங்கே தனித்தனியாக இருந்து வந்த தமிழ், சிங்கள அரசுகளை
வீழ்த்திய பிரிட்டிஷ்காரர்கள்,பின்னர் தங்கள் அலுவல் வசதிகளுக்காக, ஒன்றாக இணைத்து ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். ஆனால்,திரும்பிக் கொடுத்துவிட்டுப் போனது சிங்களவன்கையில். இங்கே 56 தனித்தனித் தேசங் கள் இருந்தன என்று நம்ம ஊர் கூத்துக் கலைஞர்கள் பாடுவார்கள்;அப்படி இருந்த நாடுகளை எல்லாம் ஒன்றாக இணைத்து ஆண்டுவிட்டு, வடவர்கள் கையில் கொடுத்து விட்டுப் போனதைப் போல, அங்கே சிங்களவன் கையில் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

வைகோவின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இளையோர் அமைப்பு ஒரு செய்தியை முன்வைத்தார்கள். அதை மீண்டும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு வரலாற்று அடிப்படையில் தனி இறையாண்மை இருந்தது. (Historical Sovereignty) அது சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், தமிழரின் இறையாண்மையை மீண்டும் வென்று எடுத்தார்கள். தங்களுக்கான நாடு,தங்களுக்கான எல்லைகள், வங்கிகள், காவல்நிலையங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் உருவாக்கி வைத்து இருந்தார்கள். அதை, Earned
Sovereignty வென்று எடுத்த இறையாண்மை என்றார்கள்.

இப்போது நாம் பேசிக்கொண்டு இருப்பது நிகழ்ந்து விட்ட அழிவுகளுக்கு, ஈழத் தமிழர்கள் மீது இழைக்கப் பட்ட கொடுமைகளுக்குத் தீர்வாக, நாம் இந்தப் பொது
வாக்கெடுப்பின் வழியாகக் கேட்கின்ற இறையாண்மை,இது Remedial Sovereignty.. தீர்வுக்கான இறையாண்மைக்காகப் பேசப்படுகின்ற இந்தப் பொது வாக்கெடுப்பு வழியையும், நாம் தமிழர்கள் மத்தியில்,இந்தியர்கள் மத்தியில், உலக சமுதா யத்துக்கு எடுத்துச் செல்வோம்.

தொடர்ச்சியாக அந்தப் பணிகளை ஆற்றிக் கொண்டு இருக்கின்ற, தமிழ்நாடு முழுவதும் நான் பேசிக் கொண்டு இருக்கின்றேன், வைகோ அவர்கள், நீதி
கேட்டுத்தான் சாஞ்சிக்குப் போனார்கள், தில்லியில் போராட்டம் நடத்தினார்கள், பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் பேசினார் என்கின்ற அந்த வழிமுறை களில், நாமும்
அவருக்குத் துணையாக நின்று, ஈழத்தமிழர் விடிவுக்கு நம்மால் இயன்ற பணி களை ஆற்றுவோம் என்று சொல்லி, தொகுத்துக் கொடுத்த நூல் ஆசிரியர்
அண்ணன் வைகோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மன்னிக்க வேண்டும், ஒரு செய்தியைச் சொல்ல மறந்து விட்டேன். மாணவர் போராட்டத்துக்குத் தாங்கள்தான் காரணம் என்று பல பேர் சொல்லிக் கொள்கின் றார்கள்.ஆனால், என்னைப் பொறுத்த வரை, வைகோ அவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் நின்று,இலட்சக்கணக்கான குறுந்தகடுகளை மாணவர் களின் கைகளில் கொடுத்ததனால் விளைந்து இருக்கின்ற நிலைமை இது. (பலத்த கைதட்டல்).

கொளத்தூர் மணி இவ்வாறு உரை ஆற்றினார்

நன்றி :- சங்கொலி 

No comments:

Post a Comment