மதுகடைகளை நிரந்தரமாக மூடினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என்று கணியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கூறினார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 3–வது கட்ட நடைபயணத்தில் 4–வது நாளன்று (19.04.13) காலை உடுமலையில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். பாலப்பம்பட்டி, கிருஷ்ணாபுரம், மடத்துக்குளம் வழியாக இரவு கணியூரை அடைந்ததார். அங்கு நடந்த பொது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டபிள்யூ.என்.கே. ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.
பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–
ஆமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி கேரள அரசு தடுக்க நினைத்தபோது அதை எதிர்த்து எனது கட்சியினருடன் நான் ஊர்வலமாக இந்த கணியூர் பகுதிக்கு வந்துள்ளேன். சில பெண்கள் என்னிடம் இந்த மது விலக்கு நடைபயணம் மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது கணவர் குடிப்பழக்கத்தை விட்டுள்ளார் என்று கூறியுள்ளனர். மதுகடையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே மதுவை ஓழிக்க முடியும். இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை நிரந்தரமாக காப்பாற்ற முடியும்.
பல தாய்மார்கள் என்னிடம் கண் கலங்கி அவர்களின் கணவர் மது குடித்து சம்பாதிக்கும் பணத்தை இழப்பதை கூறி என்னிடம் அழுகின்றனர். கணவனை பார்த்து பிள்ளைகளும் மது பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்களே என்று பயப்படுகிறனர். மது பழக்கம் வளர்ந்து விட்டால் நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாது. பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியாது. எனவே மதுவில் இருந்து அனைவரும் விடுபடவே இந்த நடைபயணத்தை நான் மேற்கொண்டு இருககிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:
Post a Comment