Wednesday, April 24, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -20

பூரண மதுவிலக்கு அமலில் வரும் வரை 
எங்கள் போராட்டம் தொடரும்.-வைகோ

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 8 வது நாள் பயணத்தில் நேற்று(23.04.13)  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து, ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள ஒத்தக்கடைக்கு வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார். இரவு 8 மணி அளவில் ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் குழந்தை வேலு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி வர வேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–


ராஜாஜி, காமராஜர் காலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. விற்பனை வரி மூலம் வருவாயை பெருக்கி ஆட்சி நடத்தினார்கள். பின்னர் படிப்படியாக மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. மதுவால் ஏழை, எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். காவிரி, அமராவதி போன்ற ஆறுகள் வற்றிவிட்டன. மக்கள் குளிக்க கூட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மதுக்கடைகள் பெருகியதால் சிறுவர்கள் கூட மதுப்பழக்கத் திற்கு ஆளாகிவிட்டனர். பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளைகள் அதிக ரித்துவிட்டன. நடைபயணம் நெடுகிலும் வரவேற்கும் பொதுமக்கள் மதுவை ஒழிக்க ஒத்துழைப்பு தருகிறோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமலில் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். 

அதைத்தொடர்ந்து அ.கணேசமூர்த்தி எம்.பி., திருப்பூர் மாரியப்பன், நாமக்கல் மாவட்ட செயலாளர் குருசாமி, கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம் உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் ஆறுமுகம் வைகோவிற்கு பொன்னாடை போர்த்தினார்.



அதைத்தொடர்ந்து (24.04.13) இன்று காலை 11 மணி அளவில் வைகோ தொண்டர்களுடன் நடைபயணமாக சிவகிரிக்கு சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வைகோவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதன்பின்னர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் பஸ்நிலையம் அருகே ம.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து பேசினார். தேர்வீதி வழியாக அண்ணா மேடைக்கு சென்றார். அங்கு இருந்த சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்றார். அப்போது உடன் வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.நடைபயணத்தில் கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட கழக அவைத்தலைவர் குழந்தைவேல், சிவகிரி ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, சிவகிரி பேரூர் செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.நடைபயணத்தின் போது, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment