Sunday, April 7, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 7

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு  வரலாமே


“இந்தியா என்ற அடிமை வலைக்குள் சிக்கிக் கொண்டோம்! "


இலங்கைத் தமிழர் சிக்கல் குறித்து சரியான புரிதலும் அணுகுமுறையும்  இல்லாமல், இந்திய அரசின் கொள்கையே சிங்களவனுக்கு ஆதரவு தருவதே என்ற வகையில் நடந்துகொண்ட பிரதமர் ராஜீவ்காந்திக்கு, நாடாளுமன்றத்தில்
தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழின மக்களைக் கொன் றொழிக்கும் சிங்கள ஜெயவர்த்தனே வலையில் விழுந்த ராஜீவ்காந்தி தமிழர் களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்தார்.அது    குறித்து 1985, டிசம்பர் 12 ஆம் நாள் மாநிலங்களவையில் வைகோ பேசியபோது, பிரதமரின்
அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.




“இன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியின் துரைத்தனத்தில் இலங்கைத் தமிழர் களுக்கு முற்றிலும் விரோதமான கேடுதரும் கொள்கைதான் கொடிகட்டிப்
பறக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு முற்றிலும் மாறுபாடான சிங்கள
வெறியர்களுக்கு ஆதரவான போக்கு தலைதூக்கியுள்ளது. அண்மையில்
பிரதமர் ராஜீவ்காந்தி அள்ளித் தெளித்த சில வாசகங்கள் தமிழர்களின் தலை யில் நெருப்பைக் கொட்டியுள்ளது. பிரதமர் சொன்னார், “பந்து தமிழர்களின்
மைதானத்தில்தான் கிடக்கிறது. தமிழர்கள்தான் பொறுப்பாளிகள்” என்று
அக்கிரமமான கருத்தைச் சொன்னார்.

இதனை சிங்கள அரசு பெரிதாக வரவேற்று, சிங்களப் பத்திரிக்கைகளில் எட்டு காலச் செய்தியாக வெளியிட்டனர்.ஜெயவர்த்தனே இதனையே சுட்டிக்காட்டி தனது கொலை வெறியாட்டத்திற்கு திரை காட்டியுள்ளார். பிரதமர் ராஜீவ்காந்தி
மேலும் இலங்கை அரசு பிரச்சினைக்குத் தீர்வுகாணத் திட்டங்கள் தந்துள்ள தாக வும் தமிழ் போராளிகள் தரவில்லையென்றும் கூறி உள்ளார்.ஜெயவர்த்தனே தந்த திட்டங்கள் என்ன? யோசனைகள் யாவை? பிரதமர் இந்தப் பிரச்சினையின் சரித்திரமே உணரவில்லையா?இதன் பின்னணியைப் பற்றி ஏதும் அறிய வில்லை போலும்.

பித்தலாட்டக்காரன் ஜெயவர்த்தனே

இதே திட்டங்களைத்தான் 1957 இல் வட்டார கவுன்சில்கள் என்று சொல்லி செல்வா-பண்டாரநாயகா ஒப்பந்தம் போட்டனர். அந்த ஒப்பந்தம் குப்பைக்
கூடைக்குப் போனது. அதே திட்டத்தை மாவட்டக் கவுன்சில்கள் என்ற பெயரில்
1965 இல் செல்வா-சேனநாயகா ஒப்பந்தம் என அரசு அறிவித்தது. சிங்கள அரசே அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது.

வாக்குறுதிகளைத் தருவதில், தந்த பின் அதனைத் தூக்கி எறிவதில் ஏமாற்றுக்
கலையில், பித்தலாட்டத்தில் கொடியவர் ஜெயவர்த்தனேவை மிஞ்ச உலகி லேயே ஆள் கிடையாது. ஜெயவர்த்தனே இதுவரை ஏதாவது ஒரு வாக்கு உறுதி யையாவது காப்பாற்றி இருப்பாரா?

அவர் தற்போது சொல்லும் திட்டத்தைக்கூட செயல்படுத்துவார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட பின்னும் தமிழர்களை ஆயிரக்கணக்கில்
சிங்கள அரசு கொன்று குவிக்கிறதே? இதுகுறித்து இந்தியா ஏன் கொதித்து
எழவில்லை?

அண்மையில் லண்டன் நகருக்குச் சென்று ஜெயவர்த்தனே “தமிழ்ப் போராளி களை பூண்டோடு அழித்து விட்டுத்தான் மறு வேலை” என்று கொக்கரித்துள் ளார். ஏன் இந்தியப் பிரதமர் கண்டனம் செய்யவில்லை?”இந்த இதழ் ‘இந்தியா டுடே’யில் ஜெயவர்த்தனே பேட்டியைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது. கேள்வி களுக்குப் பதில் அளிக்கையில் ஜெயவர்த்தனே “இந்திராகாந்தி அம்மையாருக் குத் தமிழ்நாட்டில் தேர்தல்களை சந்திக்க வேண்டியிருந்ததால் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அணுகுமுறை வேறாக இருந்தது. தற்போது ராஜீவ் காந்திக்கு அந்த அவசியம் இல்லை. அதனால் அணுகுமுறையும் வேறாக உள்ளது.” என்கிறார்.

மேலும் சொல்கிறார், “தமிழ்ப் போராளிகளை அழித்துவிட்டுத்தான் மறுவேலை - அரசியல் தீர்வுக்கு இடமே இல்லை. இராணுவத்தீர்வுதான் ஒரே வழி.அதற்காக நான் பலமான நடவடிக்கை எடுத்து வருகிறேன். இஸ்ரேல் எனக்கு நட்பு நாடு. தமிழர்களை ஒடுக்க இஸ்ரேல்படை உதவி எனக்குக்கிடைக்கிறது.முழு அளவில் ராணுவத்தளவாடங்களைப் பல நாடுகளிடமிருந்து நாங்கள் பெறு கிறோம்” இப்படி பகிரங்கமாக ஜெயவர்த்தனே சொல்கிறார்.

இலங்கையைக் கண்டிக்க இந்தியப் பிரதமர் தயங்குவது ஏன்?

இந்த அரசாங்கத்தைப் பார்த்து நேரடியாக ஒரு கேள்வி கேட்கிறேன்.சுற்றி வளைக்காமல் நேரடியாக அமைச்சர் பதில் கூற வேண்டும். “தென் ஆப்பிரிக்க தேசத்தோடு எந்த நாடும் அரசியல் ரீதியாகவோ பொருளாதாரத்துறையிலோ வணிகத் தொடர்போ எந்த உறவோ கொள்ளக் கூடாது என்று ராஜீவ்காந்தி உபதேசிக்கிறாரே? அப்படியானால் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இலங்கை
ஆயுதங்களை வாங்குகிறதே!

இதனைக் கண்டித்து ராஜீவ்காந்தி பேசினாரா? காமன்வெல்த்தில் இலங்கை
ஓர் அங்கம்தானே! இப்பிரச்சினை குறித்து ராஜீவ்காந்தி பேசினாரா இல்லையா?
என்பதை மந்திரி இன்று இச்சபையில் அறிவிக்க வேண்டும்.

தமிழர்களைக் கருவறுக்க ஜெயவர்த்தனே உலகம் பூராவும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். இந்த ஆண்டு மட்டும் 700 கோடி ரூபாயில் இலங்கை ராணுவத்திற்குச் செலவழித்திருக்கிறது.கேட்டால் ராஜீவ்காந்தி சென்னையில்
நிருபர்களிடம் கூறுகிறார்,“ஆயுதங்களைக் குவிப்பது அந்தந்த நாட்டின் சொந்த உரிமை; நாம் தலையிடமுடியாது”. எவ்வளவு பொறுப்பற்ற வகையில் ராஜீவ் காந்தி அலட்சியமாகப் பேசுகிறார்.

இலங்கையின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதி களில் குண்டு மாரி பொழிந்து தமிழர்களைக் கொன்று குவிக்கின்றன. நான் பேசுகிற இந்த நேரத்தில் கூட குண்டு வீச்சுகள் நடந்துகொண்டுதான் இருக்கும். இந்திய அரசே! உன் கண்கள் குருடாகி விட்டனவா? உன் காதுகள் செவிடாகி விட்டனவா? 

இலங்கைத் தமிழ்ப் போராளிகள் ஆயுதப் போராட்டம் நடத்து கின்றனர். மானத் தோடு வாழ, உரிமையோடு வாழ, அடிமைகளாக வாழ்வதைவிட போராடி
மடிவது மேல் என்ற புனித இலட்சியத்தால் வீரப்போர் புரிந்து சாகின்றனர்.

இதோ என் கையிலிருப்பது இன்றைய ‘இந்து’ நாளிதழ். டாக்கா சென்று திரும்பிய பிரதமர் ராஜீவ்காந்தியிடம், ஜெயவர்த்தனேயிடம் தமிழர் விடுதலை
முன்னணி தங்களிடம் சமர்பித்தத் திட்டம் குறித்து விவாதித்தீர்களா? என்று
நிருபர்கள் கேட்டபொழுது, அந்தத் திட்ட விவரங்களை நான் பார்க்கவில்லை
என்று எகத்தாளமாகச் சொல்கிறார்.பிரதமர் ராஜீவ்காந்தி தமிழர்களைக் கேவல மாக மதிக்கிறாரா?

டாக்காவில் ஜெயவர்த்தனேயுடன் கை குலுக்கிவிட்டுத் திரும்பியுள்ளார். தமிழர் களின் ரத்தம் தோய்ந்த கைதான் ஜெயவர்த்தனேயின் கை.

காட்டிக் கொடுக்கும் இந்தியா 

தமிழர்களின் நலன்களை இந்தியா காலில்போட்டு மிதிக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறேன். தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தை இந்தியா தயக்க மின்றி செய்கிறது எனக் குற்றம் சாட்டுகிறேன். இலங்கையின் இனப்படு கொலை யை பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் கண்டனம் செய்ய பிரதமர் தயாரா?

தென்னாப்பிரிக்க நீக்ரோ கவிஞன் பெஞ்சமின் மலாய்ஸ் தூக்கிலிடப்பட்டது
குறித்து இம்மன்றத்தில் இந்திய அரசு கண்டனமும் கண்ணீரும் கொட்டியதே!
நானும் கூட அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்பவன்தான்.

ஆனால், இதைவிடக் கொடூரமான வெலிக்கடைச் சிறையில் ஐம்பதுக்கும்
மேற்பட்ட தமிழர்களைக் குரூரமாக வெட்டிச் சிதைத்தார்களே!  சிறைக் குள்ளேயே ரத்தம் ஆறாக ஓடியதே! அது குறித்து இன்றைய பிரதமர்ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் இதுவரை ஒருவார்த்தை - கண்டனம் கூட அல்ல, அனுதாபமாவது தெரிவித்தது உண்டா? அப்படியானால் இந்திய அரசு நடத்து வது பித்தலாட்டம். மோசடி. வேறு என்ன?

இந்தியாவுக்கு இராணுவம் ஒரு கேடா?

வெளிவிவகார அமைச்சர் அவர்களே! இந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள், இதே அவையில் இந்தியப் பிரஜைகளாக உள்ள இந்திய மீனவர்கள் தமிழ் நாட்டி லிருந்து கடலில் மீன் பிடிக்கச் செல்கையில் இலங்கையின் கப்பற்படை யின ரால் எத்தனை முறைத்தாக்குதலுக்குள்ளாயினர் என்ற கேள்விக்கு நீங்கள் தந்த பதிலில், 1985 ஜனவரி 1 ஆம் தேதிக்குப்பின் இதுவரை 58 தடவை தாக்குதலுக்கு உள்ளாயினர்” என்றும், 1983 ஜூலையிலிருந்து கணக்கிட்டால் 96 தடவைகள்
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குள்ளாயினர் என்றும் கூறி உள்ளீர்கள்.

இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் 96 தடவை கடலில் தாக்கினர் என்று வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டீர்களே! இந்தியாவுக்கு இராணுவம் ஒரு கேடா? கடற்படை ஒரு கேடா? 10,000 கோடி ரூபாயில் ராணுவத்திற்கு செலவழிக்கிறீர்களே, நானும் வரி செலுத்துகிறேன் என்ற வகையில் கேட்கிறேன். தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரையா? இறுதி யாகக் கேட்கிறேன், தமிழர்களின் விடுதலை இயக்கத்தை அங்கீகரியுங்கள். தமிழ் ஈழத்தை அங்கீகரியுங்கள். நீங்கள் அங்கீகரிக்க வில்லை  யென்றால் வரலாறு அங்கீகரிக்கத்தான் போகிறது. விடுதலைப் போராளிகளை ராஜீவ் காந்தி பையன்கள் என்றார். இந்தப் பையன்கள் வீரச்சமர் புரியும் தியாகிகள். தமிழ் நாட்டில் உள்ள நாங்கள் இப்போராளிகளுக்குத் துணை நிற்போம். களத் திற்கும் செல்லத் தயாராவோம். 

இந்திய அரசே! இலங்கைக்கு எச்சரிக்கைக் கெடு விதிக்க முன்வரவேண்டும். ராஜீய உறவுகளை முறிக்க வேண்டும். விடுதலை இயக்கங்களுக்கு பூரண உதவி செய்ய முன்வர வேண்டும். இல்லையேல், இந்திய அரசைத் தமிழர்கள்
தலைமுறைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.”
ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பேற்ற இரு ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் கொலைவெறித் தாக்குதல்களையும்,
இனப்படுகொலையையும் தடுக்கக்கோரி மாநிலங்களவையில் தலைவர் வைகோ தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தார்.(யாழ்ப்பாணம், தாவாடிப் பகுதி யில் சிங்கள விமானப்படை மூலம் குண்டுவீசப்பட்டது. வானூர்தியிலிருந்து
நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத்தாக்குதலில் தமிழர்கள்,தப்பி ஓடமுடியாமல் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை பொழிந்தான் ஜெயவர்த்தனே).

ஆனால், ராஜீவ் அரசு இதுகுறித்து கவலைப்படத்தயாராக இல்லை.1986 பிப்ரவரி மாதத்தில் குடியரசுத் தலைவர் உரையில், தமிழீழ மக்கள் பிரச்சினை இனப்படு கொலைகள் குறித்து ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை. வெகுண்டெ ழுந்த வைகோ அவர்கள், 1986 மார்ச்சு 4 ஆம் நாள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் கனல் தெறிக்க உரையாற்றினார்.

மயான பூமிகள், இரத்த ஆறுகள்

“குடியரசுத் தலைவரின் உரை பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையையும்
அளிக்கிறது. நான் பேசுகின்ற இந்த நேரத்தில் இலங்கையில் தமிழர்கள் வசிக் கின்ற பகுதிகளில் விமானங்கள் குண்டுகளை வீசி தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றன. தமிழினமே பூண்டோடு அழியும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு வினாடி நேரத்தைக்கூட வேறு பிரச்சினையைப்
பேசி வீணாக்க விரும்பவில்லை. 

இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி இராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்த 1 இலட்சத்து 25 ஆயிரம் தமிழ் அகதி களைப்பற்றி ஒரு வார்த்தைகூட இந்த உரையில் இல்லை. நாடற்றவர்கள் நாதியற்றவர்களாக அபயக்குரல் எழுப்பும் இந்திய வம்சாவளியினரைப் பற்றி ஒரு வார்த்தைகூட இந்த உரையில் இல்லை. 1983 ஜூன் முதல் இதுவரை நமது எல்லைக்குள்ளேயே இலங்கைக்
கடற்படையால் 96 தடவைகள் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் துன்பநிலை குறித்து ஒரு வார்த்தைகூட இந்த உரையில் இல்லை.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மயானபூமிகளாக மாறுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இரத்தம் ஆறாக ஓடுகிறது. தமிழர்கள் தங்கள் பூமியில் சடலங்களாய் சாய்கின்ற இவ்வேளையில் இலங்கை அரசு இந்திய அரசைப் பார்த்து எக்காளமிட்டு எச்சரிக்கை செய்கிற அளவுக்கு துணிச்சல் பெற்று வசைபாடுகிறது. இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று மக்கள் சபையில் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அரசிடமிருந்து புதிய திட்ட அறிக்கை வந்துள்ளதாகவும் அது பழைய அறிக்கையைவிட பயனுள்ளதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால், 1986, மார்ச்சு 2 ஆம் தேதி ‘இந்து’ பத்திரிக்கை யில் மிகச்சிறந்த அரசியல் பார்வையாளரும் கட்டுரையாளருமான ஜி.கே. ரெட்டி புதிய அறிக்கையேதும் இலங்கை அரசிடமிருந்து வரவில்லையென்றும்
அலுவல் நெருக்கடியில் பிரதமர் தவறுதலாகக் கூறிவிட்டார் என்றும் தெரிவித் துள்ளார். பிரதமர் ராஜீவ்காந்தி சொல்வது உண்மையா? இல்லை. ஜி.கே.ரெட்டி சொல்வது உண்மையா?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அலட்சியப் போக்கை ஏனோ தானோ மனப்பான்மையை தமிழர்கள் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற எண்ணத்தையேதான் பிரதமரின் பதில் தெரிவிக்கிறது.

”சுவர்களுக்கு பேசுகின்ற சக்தி இருந்தால்..

இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த பல ஆண்டு களாக ஏற்பட்டு வரும் அழிவைக் குறித்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை எங்கள் இதயக் குமுறலைக்
கொட்டியிருப்போம். எத்தனை முறை இந்திய அரசிடம் மன்றாடியிருப்போம்?
எத்தனை முறை பதறித்தவித்து இந்திய அரசின் தயவை நாடி இருப்போம்?
இவையெல்லாம் இந்திய அரசின் செவிகளில் ஏறவேயில்லை. இந்திய அரசின் இதயத்தைத் தொடவே இல்லை.

மாநிலங்களவையின் சுவர்களுக்கு பேசுகின்ற சக்தி இருக்குமானால், இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து இந்த மன்றத்தில் நாங்கள் எடுத்து ரைத்த கனல் தெறிக்கும் நியாயமான கருத்துகளைச் சொல்லும். ஆறாத ரணத் துடன் துடித்த எங்கள் நெஞ்சத்தின் புலம்பலைச் சொல்லும். அத்தியாயம்
அத்தியாயமாகச் சொல்லும். ஒவ்வொரு முறை தமிழர்கள் தாக்கப்பட்டபோதும்
இந்த மன்றத்திலே முறையிட்டோம்.

தமிழர்களின் ஆலயங்கள் சூறையாடப் பட்டபோதும் முறை இட்டோம்.தமிழர் களின் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாக்கப்பட்டபோதும் முறை இட்டோம். எங்கள் சகோதரிகள் மானபங்கப்படுத்தப்பட்டபோதும் முறையிட்டோம். இராஜிய உறவுகளை முறியுங்கள். தக்க நடவடிக்கை எடுங்கள் என்று மன்றா டினோம். இந்திய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

பேச்சுவார்த்தை என்ற பெயரால் ஜெயவர்த்தனே ஆயுதங்களைக் குவிக்கிறான். தமிழர்களைக் கொன்று குவிக்க திட்டமிடுகிறான். சூழ்ச்சிக்குப்பலி ஆகாதீர்கள் என்று பலமுறை எச்சரித்தோம். இந்திய அரசு அதைப்பொருட்படுத்தவே இல்லை. விளைவு என்ன?
இந்தியப் பிரதமர் இன்றைய ‘சேம்பர்லின்’னாக காட்சி அளிக்கிறார்.இட்லரிடம் சேம்பர்லின் ஏமாந்ததுபோல ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்தார். இந்திய அரசாங்கத்தின் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் திட்டவட்டமான,ஆணித் தரமான குற்றச்சாட்டுகளை நான் இந்த மன்றத்திலே வைக்கிறேன்.தீர யோசித்தே குற்றச்சாட்டுகளைத் தொடுக்கிறேன்.

கடமை தவறிய ராஜீவ்காந்தி

இலங்கைத் தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் மனிதாபிமானத் தின் அடிப்படையில் பாதுகாக்க கடமைப்பட்டுள்ள இந்திய அரசு, தனது கடமை யிலிருந்து தவறிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன். இரத்த வெறிபிடித்த சிங்கள அரசின் நட்புறவைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்து காமன் வெல்த் மாநாட்டிலும், நடுநிலை நாடுகளின் மாநாட்டிலும், ஐ.நா. மன்றத்திலும்
திட்டமிட்டே, வேண்டுமென்றே பிரச்சினையை எழுப்பாமல் இந்தியப் பிரதமர் தவிர்த்துக்கொண்டார் என்று குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு கருவறுக்கத் திட்டமிட்டு இலங்கை அரசு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, யுத்தக் கப்பல்கள்,போர் விமானங்கள்,
விஷவாயுக் குண்டுகள்,இராணுவத்தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவிக்கிறது. இதற்கு இந்திய அரசு எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் வழி வகுத்துக்கொடுத்தது என்று குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் மீது இந்திய அரசுக்கோ, இந்தியப் பிரதமருக்கோ கடுகள வும் அனுதாபம் கிடையாது என்று குற்றம் சாட்டுகிறேன். அப்பாவித்தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் குண்டுவீச்சு நடக்கிறதே; ஜெனீவாவில் உலக நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் கொடுமை அல்லவா இது? இத்தகைய விமானத் தாக்குதல் உலகின் எந்தப் பகுதியிலேயும் நடந்ததில்லையே! பாலஸ் தீனத்தில் நிகழவில்லையே! ஈரான், ஈராக்கில் நிகழவில்லையே! தென்னாப் பிரிக்காவில் நடக்கவில்லையே! இந்த அக்கிரமத்தைத் தடுக்க இப்போதாவது
இந்தியா முன்வர வேண்டாமா? நாலாபுறத்திலும் இலங்கையில் தமிழர்கள் மரண பயங்கரத்தால் வளைக்கப்பட்டு விட்டார்கள். ஒருபக்கம் கடல் நெடுக யுத்தக் கப்பல்கள் -நிலமெங்கும் கொடிய இராணுவத்தின் முற்றுகை, ஆகாயத் திலிருந்து குண்டு வீச்சுகள் தமிழர்கள் மீன் பிடிக்கச்செல்ல முடியாது. பசி, பட்டினியால் தமிழர்கள் சாகட்டும் என சிங்கள அரசு திட்டம் தீட்டிவிட்டது.
ஸ்பார்ட்டாவின் வீர இளைஞர்கள்

வீரத்தமிழ் இளைஞர்கள் போதிய ஆயுதமின்றி சமர்க்களத்தில் மானத்திற்காகப் போராடி மடிகின்றனர். மடிவார்களே தவிர சரணடைய மாட்டார்கள். இலட்சக் கணக்கான படை வீரர்களோடு பாரசீக சக்கரவர்த்தி செர்சஸ், ஸ்பார்ட்டாவின் மீது படை எடுத்தபோது அந்த சைனியத்தை ஸ்பார்ட்டாவின் வீர இளைஞர்கள் 300 பேர் லியோனிதாஸ் தலைமையில்‘தெர்மாபிளே’என்ற கணவாயில் தடுத்து
நிறுத்திய சாகசம் சரித்திரத்தில் புகழ் பெற்றது.

‘நாமோ சிலர்; பகைவரோ பலர்;ஆனால் நாமும் ஒரு தெர்மாபிளேயைப்
படைத்துக் காட்டுவோம்’

என்ற ஆங்கிலக்கவிஞனின் வாசகங் களுக்கு இலக்கணமாக இலங்கைத்
தமிழர்கள் போராடுகிறார்கள். வியட்னாமில் வியட்காங் கொரில்லாக்கள் போராடிய போது, வட கொரியாவில் செஞ்சீனாவும், சோவியத்நாடும் உதவிக்கு ஆயுதங்களை அனுப்பி வைத்தன.
“இது தமிழர்களின் பிரச்சினை அல்ல; இந்தியாவின் பிரச்சினை என்று சொல்லு கிற வடநாட்டு உறுப்பினர் களைக் கேட்கிறேன்” எங்கள் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள். விமானத்தாக்குதலை உடனே நிறுத்துங்கள். இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்துங்கள்.உங்களைக் கெஞ்ச வேண்டிய நிலைக்கு ஆளாகிப் போனோம்.

பண்டித ஜவகர்லால் நேரு உலக சரித்திரத்தை தனது கடிதங்களில் எழுதினார். “சோழ சாம்ராஜ்யத்தில் பலமான கடற்படை இருந்தது, போர் யானைகளையும் கொண்டு செல்லக்கூடிய மரக்கலங்கள் இருந்தன” என்று எழுதினார்.

அந்தக் காலத்தில் தமிழர்கள் கிழக்காசிய நாடுகளெங்கும் தங்கள் வெற்றிக்
கொடியைப் பறக்க விட்டார்கள். இன்றோ தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் ஏதும்
செய்ய இயலாமல் கை பிசைந்து நிற்கின்றனர்.

இந்தியா என்ற அடிமை வலைக்குள் நாங்கள் சிக்கியதே காரணமென்று இளைஞர் கள் கொதித்துப் போய் உள்ளனர். ஏனென்றால், இந்தியாவின் பலம் பொருந்திய கடற்படை, தரைப்படை, விமானப்படை நமக்காக இல்லை. தமிழ் இனமே அழிந்தாலும் அவை அசையாது என்ற எண்ணமே தலைதூக்கி நிற்கிறது.

இந்தியாவின் ஒற்றுமையில் அக்கறை மிக்கவர்களே! இறுதிப்போர்க்களத்தில்
பலிபீடத்தில் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனே
நடவடிக்கை எடுங்கள். இல்லையாயின் இலங்கைத் தமிழர்களுக்காக இறுதி
அஞ்சலிக்கும், இரங்கல் தீர்மானத் திற்கும் தயாராகுங்கள்”.
                                                                                                           
                                                                                                                        தொடரும்...
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment