மதிமுக விவசாய அணி கூட்டம்
நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் மதிமுக விவசாய அணி கூட்டம் நடந்தது. ஒன்றிய விவசாய அணி தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் நம்பிராஜன் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது:
தமிழக முதல்வரால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 12 மணி
நேர மும்முனை மின்சாரம், 6 மணி நேரமாக மாற்றி இப்போது 4 மணி நேரம் கூட கொடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பல ஊராட்சிகளில் குடிநீர் தொட்டிக்கு நீர்த்தேக்கம் செய்வதற்குகூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் வழங்கப்படுகிற மின்சார பகுதிகளான செம்பனார்கோவில், திருச்சம்பள்ளி, பொன்செய், கீழையூர், மேலப்பாதி, கிடாரங்கொண்டான் பகுதிகளில் காலை 12 மணியிலிருந்து 3 மணி வரை மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் விவசாயிகள், பொதுமக்களை ஒன்று திரட்டி மின்வாரியம் முன் மதிமுக சார்பில் வருகிற 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment