விடுதி கழிவு நீர் மைதானத்தில் தேங்குவதால் சுகாதார சீர்கேடுசுத்தப்படுத்த மதிமுக கோரிக்கை
இதுகுறித்து மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார்ராவ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப் பதாவது:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு திடலில் மாணவி களுக்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அந்த விடுதியில் நூற்றுக்கும் மேற் பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதி ஏற்படுத்தப்படவில்லை.
விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மைதானத்தின் ஒரு பகுதி முழு வதும் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி -யுள்ளதுடன், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மைதானத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி செய் கின்றனர். அவர்கள் இந்த துர்நாற்றத்தை சுவாசிப்பதால் பலவித சுகாதார சீர்கேடு ஏற்பாட வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக விடுதியின் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment