Tuesday, April 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 9

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

இந்திய - இலங்கை ஒப்பந்தம்...
தமிழர்களின் முதுகில் குத்திய ராஜீவ்காந்தி!

தமிழீழப் போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கி வருவதைக் கண்ட
அதிபர் ஜெயவர்த்தனே அதிர்ச்சி அடைந்தார். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக மண்ணில் புலிகளின் நிர்வாகம் மேலோங் கியது.சிங்கள இராணுவத்தின் தோல்விகள் பல போர்முனைகளில் விடுதலைப் புலிகளின் படை பலத்தை வெளிப்படுத்தின.

இந்நிலையில்தான் நயவஞ்சக நரியான ஜெயவர்த்தனே அதுவரை இராணுவத் தின் மூலம் புலிகளை அழித்துவிடலாம் என்று திட்டம் தீட்டியவன், தனது வீழ்ச்சி தன் கண்முன்னே தெரியத் தொடங்கிய உடன், இந்தியப் பிரதமர் ராஜீவ்
காந்திக்கு வலைவிரித்தான், 1987 இல் போபர்ஸ் பீரங்கி ஊழலில் சிக்கி,ராஜீவ் காந்தி அமானப்பட்ட நேரம்.



இந்தியா முழுவதும் ராஜீவ்காந்தியை, ஊழல்பேர்வழி என்று எள்ளி நகையாடிய
நேரம், ஜெயவர்த்தனே அப்பொழுது ராஜீவ்காந்தியிடம் சரணடைந்தான்.

போபர்ஸ் ஊழலிலிருந்து மக்களை திசை திருப்ப தருணம் பார்த்துக் கொண்டி ருந்த ராஜீவ்காந்தி,இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்து வைத்து, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்தார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவுடன் செய்து கொள்வது; அதற்கு விடுதலைப்புலிகளின் ஆதரவை மிரட்டிப் பணிய
வைப்பதன் மூலம் பெறுவது என்று புதுடெல்லியில் திட்டமிடப்பட்டது.இத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1987,ஜூலை 19 இல் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி,யாழ்ப்பாணம் சென்று விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒரு ஒப்பந்தம் போடப்போவதாகவும்,அதனை புலிகள் இயக்கம் ஏற்க வேண்டும் என்றும் கூறினார். ஒப்பந்த விபரங்களை பிரபாகரன் கேட்டபொழுது, அதைத் தெரிவிக்காத இந்தியத் தூதர் பூரி உடனடியாக பிரபாகரன் டில்லி சென்று பிரதமர் ராஜீவ்காந்தியைச் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் மிரட்டல்

இந்திய அரசின் ஒப்பந்தம் குறித்த முழு விபரங்களையும் தெரிவிக்காமல் இந்தியத் தூதர் பூரி, பிரபாகரனை டில்லிக்கு கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார். புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் டில்லி சென்று இந்தியப் பிரத மரை சந்திக்க ஒப்புதல் கொடுத்ததும், தயாராக இருந்த தனி விமானத்தில் பிர பாகரன்,தளபதி யோகி இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் சென்னையில் இருந்த புலிகளின் ஆலோ சகர் பாலசிங்கம் டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்திய அரசின் சார்பில் புதுடெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரன், பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.அசோகா ஓட்டலின் 513 ஆம் எண் கொண்ட அறையில் பிரபாகரன் தங்கவைக்கப்பட்டார். அசோகா ஓட்டல் முழு வதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.பிரபாகரன் உள் ளிட்ட தலைவர்கள் தங்கியிருந்த தளத்தில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பிரபாகரன் தங்கி இருந்த அறையின் நுழைவாயி லில் காவல் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அசோகா ஓட்டலுக்கு வந்தார் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித். பிரபாகரன், பாலசிங்கம் இருவரையும் சந்தித்த தீட்சித், இந்திய-இலங்கை ஒப் பந்தம் நகலை கொடுத்துவிட்டு,இதை நீங்கள் ஏற்றாக வேண்டும்.பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துவிட்டார். இந்த ஒப் பந்தத்தை ஏற்காவிட்டால் நீங்கள் இங்கேயே சிறைப்படுத்தப்படுவீர்கள் என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.

டில்லியில் பிரபாகரனுக்குச் சிறை

விடுதலைப் புலிகளின் அனுமதி பெறாமலேயே ஒரு ஒப்பந்தம் இந்திய அரசின் பிரதிநிதிகளால் உருவாக்கப் பட்டு, அதற்கு பிரபாகரனின் ஒப்புதலைப் பெறு வதற்கு, நயவஞ்சகமாக அவரை டில்லி அழைத்துவந்து, அசோகா ஓட்டலில் சிறை வைத்துவிட்டு மிரட்டத் தொடங்கினார்கள்.தாம் ஏமாற்றப்பட்டு விட் டோம் என்பதை உணர்ந்த பிரபாகரன், இந்தத் தகவலை வெளி உலகிற்கு அறி விக்க வேண்டும் என்று துடித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணத்தி லிருந்த பழ.நெடுமாறன் அவர்கள் பிரபாகரனை தொடர்பு கொண்டு பேசினார். இந்திய அரசின் மோசடியை அறிந்த தலைவர் வைகோ அவர்கள் தம்பி பிரபா கரனுடன் தொலை பேசியில் பேசும்போது, ராஜீவ்காந்தி அரசாங்கத்தின் சதித் திட்டத்தை தெரிந்துகொண்டார். 1987 ஜூலை 26ஆம் தேதி புதுடெல்லி அசோகா ஓட்டலுக்கு விரைந்த தலைவர் வைகோ இராணுவ கட்டுக்காவலைத் தாண்டி, பிரபாகரன் சிறை வைக்கப்பட்டு இருந்த 518ஆம் அறையின் நுழைவாயில் வரை சென்றுவிட்டார்.ஆனால்,இராணுவ அதிகாரிகள் துப்பாக்கிப்படையுடன் விரைந்து வந்து தலைவர் வைகோ, பிரபாகரன் அறைக்குள் செல்வதைத்தடுத்து விட்டனர். ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பிரபாகரன் -வைகோ விடம் தொலைபேசியில் பேசினார். 35 நிமிடங்கள் நீடித்தது இந்த உணர்ச்சி உரை யாடல். நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் ராஜீவ் காந்தி அரசின் செயலை தலைவர் வைகோ அம்பலப்படுத்தி அறிக்கை தந்தார்.பிரபாகரன் டில்லி அசோகா ஓட்டலில் சிறை வைக்கப்பட்ட செய்தி வைகோ மூலம் வெளி உலகிற் குத் தெரிந்தது.

தமிழ் ஈழ மக்கள் கொதித்து விட்டனர்.தமிழ்நாடும் கொந்தளிக்கத் தொடங்கி யது. இந்நிலையில் மத்திய அரசு, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை டில்லிக்கு அழைத்து,அவர் மூலம் பிரபாகரன் ஒப்புதலைப்பெற ஏற்பாடு செய்தது. புலிகள் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம் இருவரையும்  சந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தியா தயாரித்துள்ள ஒப்பந்தம், தமிæழ மக்களுக்கு எதிரானது என்று புலிகள் இயக்கம் கூறுவது நியாயம் என்பதை உணர்ந்தார்.

ஒப்பந்தம் கூறுவது என்ன?

இந்தியா தயாரித்துள்ள ஒப்பந்தம் கூறுவது என்ன?

1. இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு நிலை நிறுத்துதல்.

2. தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண சுயாட்சி.

3. இந்தியாவின் பூகோள நலன்கள் பாதுகாக்கப்படுதல்.

4. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு

5. வடக்கு - கிழக்குப் பகுதிகளை இணைப்பதற்கு மக்களிடம் பொது வாக்கெடுப்பு.

மேற்கண்ட அம்சங்களைக் காட்டிலும் கொடுமையானதுஎன்னவெனில், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையொப்பம் ஆனபிறகு, 72 மணி நேரத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

விடுதலைப் போர்க்களத்தில் ஆயிரக் கணக்கான இளம் தமிழ் வீரர்களும் வீராங் கனைகளும் தங்கள் உயிரை தாரை வார்த்துக் கொடுத்தது, இலங்கையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவா? கேட்பது சிங்கள ஆட்சியிலிருந்து பரிபூரண விடுதலை. சுதந்திர தமிழ் ஈழம். ஆனால், இந்தியா ஒப்புக்கொள்வதோ நகரசபை அதிகாரம் கூட இல்லாத மாகாண கவுன்சில்.தன் வாழ்நாளெல்லாம் தமிழர் களுக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து இனவெறியை கக்கிய ஜெய வர்த்தனே வடக்கு -கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு பொது வாக்கெடுப்பு
என்பதை எப்படி நிறைவேற்றுவான்?

சிங்கள இராணுவத்தின் கொலைப்படைகளை எதிர்த்து களம் காண,விடுதலைப் புலிகள் சிறுகச் சிறுகச் சேர்த்த ஆயுதங்களை, 72 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டுமாம்! தமிழர்களின் பாதுகாப்பு புலிகளின் துப்பாக்கியில் அல்லவா இருக்கிறது?

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கிழித்து எறியப்பட வேண்டிய ஒன்று. ஏற்கவே
முடியாது என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக தெரிவித்து
விட்டதை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ராஜீவ்காந்திக்கு தகவல் கூறிவிட்டு
சென்னை திரும்பினார்.

பிரதமர் ராஜீவ்காந்தி - பிரபாகரன் சந்திப்பு

அதன் பின்னர், வெளியுறவுத்துறை அதிகாரிகள் டில்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த பிரபாகரன்,பாலசிங்கம் இருவரையும் நள்ளிரவில் எழுப்பி,பிரதமர் ராஜீவ்காந்தி இல்லத்திற்கு அழைத்துச்சென்றனர். 1987 ஜூலை 28 ஆம் தேதி நள்ளிரவு பிரதமர் ராஜீவ் காந்தியை அவரது இல்லத்தில் பிரபாகரன்,பாலசிங்கம் இருவரும் சந்தித்தனர். அப்போது இந்திய புலனாய்வுத்துறை இயக்குநர் எம்.கே.
நாராயணனும் அங்கிருந்தார்.

பிரதமர் ராஜீவ்காந்தியிடம் பிரபாகரன் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் ஒன் றைக் கூட ஏற்க முடியாது. அவை தமிழீழ மக்களுக்கு பாதகமானது என்பதைத் தெளிவுபடுத்தினார்.ஜெயவர்த்தனே நம்ப முடியாத மனிதர் என்பதையும் கூறி னார்.பிரபாகரன் கூறியதையெல்லாம் கேட்ட ராஜீவ்காந்தி விடுதலைப் புலி களின் எந்த முடிவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்ல வில்லை என்றும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், புலிகள் இயக்கத் தலைவர்கள் தங்கள் கருத்தில் உறுதியாக இருந்தனர்.

இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது

அசோகா ஓட்டலுக்கு திரும்பிய பிரபாகரன், பாலசிங்கம் இருவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் அறைகளில் இருந்த தொலை பேசி இணைப்புகளும் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுவிட்டன.பலத்த இராணுவ முற்றுகையில் பிரபாகரனை சிறை வைத்துவிட்டு,பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைப் பயணமானார்.

1987 ஜூலை 29 ஆம் நாள் பிரதமர் இராஜீவ்காந்தி,சிங்கள அதிபர் ஜெயவர்த் தனே, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எதிர்ப்பையும், தமிழீழ மக்களின் விருப்பங்களையும் அலட்சியப்படுத்தி விட்டு பிரதமர் ராஜீவ்காந்தி,
ஜெயவர்த்தனேவுடன் “தமிழர் களுக்கான” உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

சிங்கள எதிர்க்கட்சித் தலைவரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஜே.வி.பி. போன்ற அமைப்புகள் ஜெயவர்த்தனே தமிழ் மக்களுக்கு இந்த ஒப்பந்தம் மூலம்
சலுகை தருகிறார் என்று பிரச்சாரம் செய்து சிங்களவர்களைத் தூண்டி விட்டனர். வன்முறைகள் வெடிக்கத் தொடங்கிவிட்டது.

ஒப்பந்தம் போட்டுவிட்டுத் திரும்பும் போது இந்தியப் பிரதமருக்கு சிங்களக்கடற் படை இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டே வரும்போது, சிங்கள இராணுவச் சிப்பாய் விஜயமுனி விஜிதா ரோகண டி சில்வா என்பவன், தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால் ராஜீவ் காந்தியின் பின் தலையில் தாக்க முயன்றான்.ராஜீவ்காந்தி சுதாரித்துக் கொண்ட தால்,அடி அவர் தோளின் மீது விழுந்தது. ஒரு மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை, சிங்கள சிப்பாய் ஒருவன் தாக்கியதை இந்திய அரசு ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்பதுதான் வேதனை.

தமிழ்ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து,புலிகள் தங்கள் சுதந்திர
தாயகமாம் ஈழத்தை பிரகடனப்படுத்தும் நிலைமை இருந்த நேரத்தில், இந்திய
அரசு தலையிட்டு ஜெயவர்த்தனேவுக்கு ஆதரவாக தமிழர் விரோத ஒப்பந்தம்
போட்டது. தமிழ் மக்களைப் பாதுகாக்கப்போகிறோம் என்று இந்தியாவின் படை கள் தமிழீழப்பகுதிகளில் குவிக்கப்பட்டன. பிரதமர் இராஜீவ்காந்தியின் தான் தோன்றித் தனமான போக்கைத் தட்டிக்கேட்டு நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ எழுப்பிய போர் முழக்கம் இன்னமும் எதிரொலித்துக்கொண்டே இருக் கின்றது.

1987 ஜூலை 29 இல் ராஜீவ்காந்தி -ஜெயவர்த்தனே கையொப்பமிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்து, 1987 ஆகஸ்டு 17 அன்று மாநிலங்களவையில் தலைவர் வைகோ விவாதத்தைத் தொடங்கி வைத்து,இந்திய அரசின் மோசடி யை அம்பலப்படுத்தினார்.

மன்னிக்க முடியாத மாபெரும் மோசடி

“இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நமது பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கைக் கடற்படை சிப்பாயின் தாக்குதலுக்கு உள்ளாவதிலிருந்து தப்பி, பாது காப்பாக வந்து சேர்ந்ததில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிர்ச்சி தரத்தக்க இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா
உடனடியாக அளித்த விளக்கம் யாதெனில், கடற்படை சிப்பாய் கடும் வெயில் காரணமாக மயக்கமடைந்து பிரதமர் மீது சாய்ந்து விட்டான் என்பதாகும். ஜெய வர்த்தனேவின் சுயரூபம் இதிலிருந்து வெளிப்படுகிறது. இருபதாம் நூற்றாண் டில், இதுவரை போடப்படாத ஒப்பந்தம் என்று பிரதமர் ராஜீவ்காந்தி மார்தட்டு கிறார். வரலாறு காணாத ஒப்பந்தம் என்பதை நானும் ஒரு வகையில் ஒப்புக் கொள்கிறேன்.ஏனெனில் இது ஆக்கிரமிப்பாளனுக்கும் மத்தியஸ்தம் பேசி யோர்க்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு போடப்பட்ட ஒப்பந்தம். ஈழ
விடுதலைப்போராளிகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரவில்லை..இந்திய அரசு அவர்கள் சம்மதத்தையும் பெறவில்லை. இலங்கைப் போராளிகள் அமைப் பில் வலிமைவாய்ந்த ஈழவிடுதலைப் புலிகள் இயக்கம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசு ஏமாற்றி, டெல்லிக்கு
அழைத்து வந்து, அசோகா ஓட்டலில் சிறைவைத்தது, சூலை 29 ஆம் நாள் நான் அசோகா ஓட்டலுக்குச் சென்றேன்.கறுப்புப் பூனை அதிரடிப்படையினர் காவல் புரிந்தனர். நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று உறுதிப்படுத்தியும்,பிரபாக ரனைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சி வலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். தங்களை வஞ்சித்து இந்திய அரசு முதுகிலே குத்திவிட்டதாக போராளிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணத் தில் பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் பேசுகையில் இந்திய - இலங்கை நாடுகள்
தங்கள் சொந்த லாபத்துக்கென போட்டுக்கொண்ட ஒப்பந்தம் எனவும்,தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நயவஞ்சகன் ஜெயவர்த்தனே

தென்கிழக்கு ஆசியாவிலேயே நயவஞ்சகத்தனம் நிறைந்த, சொன்ன வார்த்தை யைக் காப்பாற்றாத, எந்த வகையிலும் நம்ப முடியாத நபர் யாரெனில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேதான். 1957 இல் தமிழர் நலனுக்கு எனப் போடப்பட்ட ஒப்பந் தத்தை எதிர்த்து ஆள்திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவரே ஜெயவர்த்தனே தான்.சிங்கள இனவெறிக்கே 30 வருடங்களாகத்தூபமிட்டு வந்த ஒரு நபர்,தமிழர் களை எதிர்த்து கொலைவெறி தாண்டவத்திற்கு பாதை அமைத்த ஒரு நபர், தமிழர் மீது யுத்த பிரகடனம் செய்த ஒரு நபர்,போராளிகளை ஒழித்துக்கட்டி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என கொக்கரித்த ஒரு நபர், திடீரென அகிம்சா மூர்த்தியாக சமாதானத் தூதுவராக காட்சி அளிப்பதன் மர்மம் என்ன? கெளதம புத்தருக்குக்கூட ஞானம் பெறுவதற்கு பல ஆண்டுகள் அலைய வேண்டிஇருந்தது. இரத்த தாகம்கொண்ட இனவெறி அரசின் அதிபர் திடீரென்று
சமாதானம் போதிக்கும் காரணம் என்ன? தமிழ்ப் போராளிகளை அழிப்பதற்கு
முப்படைகளையும் ஏவிவிட்டார்.அழிக்க முடியவில்லை.போராட்டத்தை நசுக்க
முடியவில்லை. இந்நிலையில் போராளி களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க
கபட நாடகம் ஆடி ஒப்பந்தம் எனும் சதித்திட்டம் தீட்டினார்.இந்தியஅரசு அதற்கு உடன்பட்டது.

தமிழ்ப் போராளிகள் திம்பு பேச்சு வார்த்தையின்போதும்,தொடர்ந்தும் வலி யுறுத்தி வந்த அடிப்படை இலட்சியங்களை இந்த ஒப்பந்தம் ஏற்கவில்லை.வட கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்ற அடிப்படைத் தத்து வத் தையாவது இந்த ஒப்பந்தம் ஏற்கிறதாவெனில் இல்லை.
பிரித்தாளும் சூழ்ச்சி

பூர்வீகத் தாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஒப்பந்தம் போட்ட மறு நாளே ஜெயவர்த்தனே கூறிவிட்டார்.ஆகஸ்டு 6 ஆம் தேதி ஜெயவர்த்தனே
வானொலியில் பேசுகையில் “வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பென்பது தற் காலிகமான பேச்சுதானே தவிர கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம் களும் தமிழர்களை விட அதிகமாக இருப்பதால் ஒரு வருடம் கழித்து நடக்கும் வாக்கெடுப்பில் இணைப்புத் திட்டத்தை நிராகரிக்கலாம்.வாக்கெடுப்பு முடிவு பற்றி சிங்களவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.இணைப்புத் திட்டத் திற்கு எதிராக நானே பிரச்சாரம் செய்வேன்” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.ஜெயவர்த்தனேயின் சுயரூபம், உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசின் ஏற்பாட்டின்படி சிங்களவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமாகக் குடி அமர்த்தப்பட்டு, அவர்களின் கொடும் தாக்கு தலால் தமிழர்கள் அங்கிருந்து பெருமளவு விரட்டப்பட்டு ஜனத்தொகை விகி தாச் சாரமே மாற்றப்பட்டுவிட்டது. 97 சதவிகிதமாக இருந்த சிங்களவர்கள் 24
சதவிகிதமாக அதிகரிக்கவும் தமிழர்கள் வீடு வாசலை விட்டு ஓடியதால் 20 சத விகிதம் குறையவும் ஆன நிலை ஏற்பட்டது.
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி போல இந்து-முஸ்லிம் மதத்தவர்களிடம்
பிரித்தாளும் சூழ்ச்சியை ஜெயவர்த்தனே தொடர்ந்து நடத்தி வருகிறார். 6 ஆம்
தேதி வானொலிப் பேச்சில்கூட முஸ்லிம் மக்களைப் பிரித்துப்பேசுகிறார்.முஸ் லிம் களும் தமிழர்கள்தான். முஸ்லிம் இளைஞர்கள்பலர் போராளிகள் இயக்கத் தில் சேர்ந்து போராடுகின்றனர்.வாக்கெடுப்பில் குறைந்த அளவு மெஜாரிட்டி இருந்தால்கூட போதுமானது என்று ஒப்பந்தம் கூறுகிறது. இந்திய அரசுக்கு தமிழர் நலனில் சிறிதளவு அக்கறை இருந்திருந்தால்கூட 1958 க்குப்பின்னர் கிழக்கு மாகாணத்தில் குடி ஏறியவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையாவது ஒப்பந்தத்தில் சேர்த்திருக்கலாம். ஆனால், அந்த அக் கறைதான் கிஞ்சித்தும் இல்லையே

தமிழர்களுக்கு அநீதி

இன்னும் வேதனைத் தரத்தக்க நிலைமை என்னவெனில், 1986 மே மாதம் 4 ஆம்
நாளிலிருந்து டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை களில் சொல்லப்பட்ட யோசனைகளை ஏற்றுக்கொள்வதைப்பொறுத்து ஒப்பந்தம்
அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு என்ன அதிகா ரங் கள், என்ன உரிமைகள் கிடைக்கும் என்பதெல்லாம் பற்றிய விளக்கம் ஒப்பந் தத்தில் இல்லை.1986 டிசம்பர் 19 இல் சொல்லப்பட்ட யோசனைகளை தமிழர் விடுதலை முன்னணியினரான மிதவாதிகள் உட்பட போராளிகள் அனைவரும் நிராகரித்துவிட்னர்.கிழக்கு மாகாணத்தை மூன்று துண்டாடுவது பற்றி டிசம்பர் 19 இல் சொல்லப்பட்டது.இதனை தமிழர்கள் ஏற்கவில்லை. ஆனால், இந்த யோச னைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டால்தான் ஒப்பந்தம் அமுலாக்கப்படுமஎன்ற நிபந்தனை ஒப்பந்தத்திலேயே உள்ளது. இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட Annexure C திட்டத்தை விட இந்த ஒப்பந்தம் இலங்கைத்  தமிழர்களுக்கு எவ்வகையிலும் சிறந்தது அல்ல.இலங்கைத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு உத்திரவாதம் என்ன?மாநில அதிகாரங்கள் என்ன? அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டதால் தானே தமிழர்கள் போராட ஆரம்பித்தனர். இழந்த அந்த உரிமைகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் எந்த உத்தரவாதமும் இல்லையே! வெந்த புண்ணில் வேல் பாய்ச் சுவது போல் இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு அம்சம் யாதெனில் இரண்டு லட்சம் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை இந்தியா வாழ வைப்பதுதான்.

மனைவி மக்களைப் பறிகொடுத்து -உற்றார், உறவினர்களை இழந்து -சொத்து சுகம் அனைத்தும் இழந்து -இலங்கையிலிருந்து தப்பி ஓடிவந்து தஞ்சம் புகுந்த ஒன்றரை இலட்சம் அகதிகளைத் திரும்ப இலங்கை அனுப்புவதென்றும் இரண்டு இலட்சம் தமிழர்களை இலங்கையிலிருந்து இந்தியா வரவழைப்பது எனவும் ஒப்பந்தத்தில் முடிவு செய்திருப்பது மன்னிக்க முடியாத,கொடுமை யான துரோகம் ஆகும்.

அகதிகளைப் பொறுத்தமட்டில், சொத்து சுகமெல்லாம் இழந்து நாங்கள் எங்கள்
மண்ணுக்குப் பிச்சைக்காரர்களாகத்தான் திரும்ப முடியும். சென்றபின்பு எங்கள்
உயிருக்கும் உடைமைக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற புலம்பு கிறார் கள். இந்தியா ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் இரண்டு இலட்சம் தமிழர்களின் பின்னணி என்ன?

சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்த துரோகம்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில்
இருந்து பிரிட்டீஷ் தோட்ட முதலாளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்கள் இந்தத் தமிழர்கள்.தங்கள் உழைப்பை உரமாக்கி உதிரத்தை வேர்வையாக்கி இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு உழைத்து வாழ்ந்த அந்தத் தமிழர்களை 1948இல் காட்டு மிராண் டித் தனமான சட்டத்தின் மூலம் நாடற்றவர்கள் ஆக்கியது இலங்கை அரசு.
1964 இல் சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தப்படி இந்தத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு பயங்கரமான துரோகம் விளைவித்தது.

1964 ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா வந்த இலங்கைத் தமிழர்களுக்கு இங்கே வாழ்க்கை நரகமாகிவிட்டது. 1981 லேயே இந்திராகாந்தி அம்மையார் இனிமேல் இலங்கையிலிருந்து தமிழ் மக்களை நாங்கள் ஏற்க வேண்டியது இல்லை. அவர் களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு என்று முடிவெடுத்தார்.

இரண்டு இலட்சம் தமிழர்களை இங்கு வரவழைக்க உங்களுக்கு என்ன உரிமை
இருக்கிறது? இலங்கை அரசல்லவா அவர்களுக்கு குடியுரிமை தரவேண்டும்?
மொத்தத்தில் தமிழர்களைக் காவு கொடுத்து விட்டீர்கள்”
                                                                                                    
                                                                                                                 -தொடரும்.....


நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment