Monday, April 22, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -14

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நதிகளை தேசிய மயமாக்கி இணைக்க வேண்டும் - வைகோ

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 3–வது கட்டமாக  நடைபணத்தில் ஐந்தாம் நாள் (20.04.13 ) பயணத்தில் தாராபுரம் வந்தார்.

பின்னர் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:–





நான் வரும் வழி நெடுகிலும், பெண்களின் நெஞ்ச குமுறலை கேட்டு, துன்பக் கடலில் இங்கு நிற்கிறேன். அரசியல் கட்சிகளை கடந்து நம் கவலைகளை கேட்க ஒருவர் வருகிறாரே என்று ரோட்டின் ஓரத்தில் நீண்டநேரம் காத்து நின்று,பெண் கள் தங்களது வேதனைகளை கொட்டினார்கள். டாஸ்மாக் கடைகளை மூட வையுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு என்று சொல்கிறார்கள். ஏழை மக்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வழி நெடுகிலும் எங்களை வரவேற்று மதுவின் கொடுமையில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

நான் வரும் வழி எல்லாம் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. ஒரு குடம் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம் என்கிறார்கள். ஆறு, வாய்க்கால், கால்வாய், குட்டை என அனைத்தும் வறண்டு விட்டது.

ஒரு பக்கம் மது கொடுமை. இன்னொரு பக்கம் குடிக்க தண்ணீர் இல்லை. இந்த குரல் வழிநெடுகிலும் கேட்கிறது. தண்ணீரின்றி வாய்க்கால் அனைத்தும் வறண்டு கிடக்கிறது. கேரள அரசின் வஞ்சக போக்கு நீடிக்குமானால், அமராவதி யில் தண்ணீர் வராது, கீழ்பவானியில் தண்ணீர் இருக்காது. பாம்பாறு, காலிங் கராய பாசனம் கனவாக போய்விடும்.

நேற்று மாலை தாய்மார்கள் சொன்னது. ஆனால் அது எந்த பகுதி என நான் சொல்ல மாட்டேன். டாஸ்மாக் கடையை தீயை வைத்து கொளுத்த வேண்டும் என தாய் மார்கள் சொல்கிறார்கள். இந்த கோரிக்கை இதுவரை எங்கேயாவது கேட்டது உண்டா? இது காலத்தின் எச்சரிக்கை. எந்த போராட்டமும் மக்களை திரட்டாமல் வெற்றி பெறாது. விரைவில் யுத்தம் தொடுக்கிற அறிவிப்பு வரும். அது வன்முறையாக இருக்காது. மக்கள் நினைத்தால் மலையையும் நகர்த்த முடியும். நான் நம்பிக்கை மட்டும் இழக்கவில்லை.

தமிழகத்தை கேரளம், கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வஞ்சிக்கிறது. இதனால் எதிர்கால தமிழகம் என்ன ஆகும் என்ற கவலை என்னை வாட்டு கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனமாக மாறும். விவசாயம் செய்ய முடியாது. ஐக்கிய முற்போக்கு அரசு பொறுப்பு ஏற்ற பிறகு தொடரும் வஞ்சம் தமிழகத்தை அச்சுறுத்துகிறது. அணை பாதுபாப்பு மசோதாவை சட்ட மாக கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அந்த சட்டம் நிறைவேற்றப் பட்டால் இப்போது வரும் தண்ணீர் கூட இனி வராது. இதை விட அக்கிரமங்களை கேரளம், கர்நாடகம், ஆந்திரா செய்யும். மாநிலத்தில் உள்ள தண்ணீரை தடுத் தால் என்ன செய்ய முடியும் என சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டாக அனுப வித்து வரும் தண்ணீரை தடுக்க எப்படி முடியும். எனவே அணை பாதுகாப்பு மசோதா சட்டத்தை தூக்கி எறிய வேண்டும். அணை பாதுகாப்பு சட்டம் நிறை வேற்றப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடையும். மாநிலங்கள் இடையே உள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நதிகளை தேசிய மயமாக்கி இணைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 677 சிறுமிகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்க பட்டு இருக்கிறார்கள். எனவே மதுவை ஒழிக்க வேண்டும். மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க சங்கல்பம் செய்து இருக்கிறோம். எங்களது யுத்தம் தொடரும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

Post a Comment