கடந்த 1920 ல், பெருங்காமநல்லூரில் ரேகைச் சட்டத்தை எதிர்த்து வெள்ளை -யர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 16 தியாகிகளுக்கு வீர வணக்க கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது. அதில், கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூட்டில் இறந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். பெருங்காமநல்லூர் சம்பவத்தை ஒரு சமூகத்தினரின் போராட்டமாக பார்க்காதீர்கள்.
நமக்குள் சாதி மோதல்கள் வேண்டாம்.அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும். முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என பிரச்னை ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் கொந்தளிக்க வேண்டும்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மறைவு இன்று தமிழக மாணவர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எழுச்சியை உலகத்தமிழர்கள் வணங்குகிறார்கள்.இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் சிங்களர்கள் வடநாட்டில் இருந்து வந்த -வர்களின் வம்சாவழி, என இந்தியாவில் இருந்து கொண்டு கூறுகிறார்.
இந்திய ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தமிழக சட்டசபையில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் புலம் பெயர்ந்த தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன்.
இந்த தீர்மானம் இந்திய பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட வேண்டிய நாள் வரும். அது வராமல் இருந்தால் தமிழகத்தின் தூதர் டில்லியில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்றார்.வைகோ
No comments:
Post a Comment