Tuesday, April 30, 2013

தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் -மதிமுக வழக்கு

இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதால், ஜம்மு காஷ்மீர் போல, தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, ம.தி.மு.க., தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மதுரை ம.தி.மு.க.,தொண்டரணி செயலாளர் பாஸ்கரசேதுபதி தாக்கல் செய்த
பொது நல மனு: இந்தியாவில், இந்தி பேசாத மாநில மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். வடமாநில மீனவர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது, சர்வதேச கோர்ட் மூலம் 450 வழக்கு களை மத்திய அரசு தாக்கல் செய்து, நியாயம் கோரியது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இப்பிரச்னைக்கு சர்வதேச கோர்ட்டை, மத்திய அரசு நாடவில்லை.



ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதும், இத்தாலி கடற்படையினரால், கேரள மீனவர்கள் தாக்கப்பட்ட போதும், மத்திய அரசு தலையிட்டது. பிஜி தீவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மகேந்திர சவுத்திரியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, மத்திய அரசு தலையிட்டது. இலங்கையில் தனி ஈழம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு இல்லை. இலங்கை ராணுவத்திற்கு, இங்கு பயிற்சி அளிக் கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் போல, தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய கேபினட் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளருக்கு 2011 மார்ச் 21 ல் மனு செய்தேன். மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், என குறிப் பிட்டார். நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா பெஞ்ச் விசாரணையை, ஜூன் 5 க்கு தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment