Tuesday, July 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 30

குடியரசுத் தலைவர் மாளிகை காங்கிரஸ் சதி ஆலோசனை சபையா?

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி,பாரதிய ஜனதா கட்சியினால் கவிழ்க்கப்பட்டப் பிறகு,டெல்லி ஆட்சி பீடத்தில் நடைபெற்றவை ஜனநாயகத் தை கேலிக் கூத்தாக்கிவிட்டன.

இந்திய நாட்டு சரித்திரத்தில் இல்லாத வகையில், மத்தியில் 54 நாடாளுமன்ற
உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, சந்திரசேகர் -காங்கிரஸ் கட்சியின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தார்.ராஜீவ்காந்தியின் ஜனநாயக விரோத நடவடிக்கை கள் அனைத்தும் குடியரசுத்தலைவர் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன்ஆதரவு டன் நடைபெற்றது.
கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கத்தக்க இடமான குடியரசுத் தலை வர் மாளிகை, அரசியல் சதுரங்கமாக மாறி சகுனிகள் வலம் வரும் இடமாக
ஆனது.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில்தலைவர் வைகோ, குடியரசுத்தலை வர் ஆர்.வி. மீது கடும் தாக்குதல் தொடுத்து ஆற்றிய உரை, அப்போது பரபரப் பாகப் பேசப்பட்டது.


1991 மார்ச் 5 ஆம் நாள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் வைகோ ஆற்றிய கண்டன உரை வருமாறு:

“இந்தியாவின் குடியரசுத்தலைவர் நாடாளுமன்ற இரு அவைகளின்  கூட்டத் தில் ஆற்றிய உரை, வஞ்சகம், பாசாங்குத்தனம், மோசடித்தனமான சதித்திட் டம், ஏமாற்றுக்கலை அனைத்தும் உள்ளடக்கிய உரை ஆகும்.

கட்சி மாறுதலைத் தடுக்கும் சட்டத்தை இந்திய அரசியல் சட்டத்தின் 10 ஆவது
அட்டவணையில் இடம்பெறச் செய்த பின்னர் 54 பேர்களை, கட்சிமாறிகளைக்
கொண்ட ஒரு கும்பலிடம் இந்தியாவை ஆளும் அதிகாரத்தை ஒப்படைத்த
செயல், உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத ஜனநாயக மோசடி ஆகும்.

543 பேர் கொண்ட மக்களவையில் கோரம் கூட காட்ட முடியாத இச்செயல்
இந்தியாவின் 80 கோடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கீழ்த்தரமான மோசடி யாகும்.

சூழ்ச்சிக்கும் துரோகத்திற்கும் பிறந்த கள்ளக் குழந்தை

மோசடி சூழ்ச்சிக்கும்,நயவஞ்சகமான துரோகத்திற்கும் பிறந்த கள்ளக்குழந்தை
தான் சந்திரசேகர் அரசாங்கம்.அந்த அரசு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இடமான குடியரசுத் தலைவரின் மாளிகையில் முற்றவெளியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மகாத்மா காந்தியும், பண்டித நேருவும் தங்கள்கல்லறைக்குள்ளே நடுக்கம் அடைந்திருப்பார்கள். உலக அரங்கில் இது வரை இந்தியாவுக்கு இருந்த மதிப்பு எல்லாம் மிகப்பெரிய ஜனநாயக நாடு என் பதுதான். ஆனால்,ஜனநாயகத்தை உயிராக மதிக்கும் மக்கள் உலகில் எங்கெல் லாம் இருக்கின்றார்களோ அவர்கள் கண்களுக்கு முன்னால் இந்தியாவெட்கித் தலைகுனியும் படியாக ஏளனத்திற்கும்,பரிகாசத்திற்கும்,கேலிக்கும் உரிய தாகி விட்டது.ஜனநாயகத்தைக்கொன்ற குற்றவாளி யார்? இந்தியக் குடியரசுத்தலை வரை நோக்கி என் குற்றம் சாட்டும் விரலை நீட்டுகின்றேன்.

(குடியரசுத் தலைவரைக் குறித்து வைகோ சொன்ன சில வார்த்தைகள் சபைக்
குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன)

சாணக்கியன் மிகப்பெரிய மனிதன் ஆயிற்றே! டெல்லிப் பட்டணத்தில் வெளி நாடுகளின் தூதராலயங்கள் அமைந்துள்ள பகுதிக்கு சாணக்கியபுரி என்று தானே பெயர் சூட்டப்பட்டுள்ளது.ராஜீவ்காந்தியின் பினாமியான எடுபிடிஅரசை ஆட்சியில் அமர்த்திவிட்டு, கூட்டணி ஆட்சியின் சிறப்புகளைப் பற்றி இந்தியக் குடியரசுத் தலைவர் கருத்துகளைச் சொன்னது மிகப்பெரிய தவறாகும். ஐரோப் பிய நாடுகளை உதாரணம் காட்டி கூட்டணி ஆட்சி ஏற்படுவது நல்லது என்று
குடியரசுத் தலைவர் பேசலாமா?

மரபுகளை மீறியக் குடியரசுத் தலைவர்

இதுவரை எந்த ஒரு ஜனாதிபதியாவது இந்தியாவில் இப்படி ஒரு தவறைச் செய்தது உண்டா? இது மட்டுமா; சந்திரசேகர் அரசு மீதமுள்ள நான்கு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று பதவிப்பிரமாணம் முடிந்தவுடன் குடியரசுத் தலை வர் நிருபர்களிடம் கூறியது மிகப்பெரிய குற்றம் அல்லவா? இப்படிச் சொல்ல குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டா? அத்தகைய கருத்தைச் சொல்ல
அரசியல் சட்டம் அவரை அனுமதிக்கிறதா? இப்படிச் சொல்ல அவருக்கு அதி காரம் உண்டா? சட்டம், மரபு அனைத்தையும் மீறி குடியரசுத்தலைவர் இன்னும் நான்கு வருடத்திற்கு சந்திரசேகர் அரசு நீடிக்கும் என்று நற்சாட்சி பத்திரம் தந்தது சரி என்று யாராவது வாதிட முடியுமா?

முரசொலிமாறன் : சந்திரசேகர் அரசு இப்பொழுது நொறுங்கிக் கொண்டிருக் கின்றது.

வைகோ : ஆம்! அதன் ஆட்சியின் ஆயுள் நாட்கள் எண்ணப்படுகின்றன. இல் லை. ஆயுட்காலம் மணிக்கணக்கில் கணக்கிடப்படுகின்றது. நடப்பது மார்ச் மாதம். மார்ச்சு மாதத்தின் ஆபத்தான நாள் சந்திர சேகரை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது.நான் பேசிக் கொண்டு இருக்கும் இதே நேரத்தில் இந்த நாடாளு மன்றக் கட்டடத்தின் ஒரு அறையில் நான்கு சுவர்களுக்குள் சந்திரசேகர் அரசுக்கு சமாதி கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சந்திர சேகரை தூக்கியெறிந்து விட்டு ராஜீவ்காந்தி அந்த நாற்காலியில் உட்கார சூழ்ச்சி நடக்கின்றது. தேர்தலில் வெற்றிபெறாமல் மக்கள் தீர்ப்பு இல்லாமல்
அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் அமர இந்திரா காங்கிரஸ் துடித்துக்
கொண்டிருக்கிறது.

காங்கிரசின் சதித் திட்டங்கள்

இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற் பட்டுள்ளதாக தனது உரையில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீ ரத்திலே மத்திய அரசின் அதிகாரம் செல்லுபடியாகின்றதா? இல்லை. பஞ்சா பிலே செல்லுபடியாகின்றதா? இல்லை. அஸ்ஸாமிலே செல்லுபடியா கின்ற தா? இல்லை. பிரம்மாண்டமான இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்ளே உட் கார்ந்து கொண்டு காஷ்மீரத்திலும், பஞ்சாபிலும், அஸ்ஸாமிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகின்றோம். என்ன பயன்? அங்கெல்லாம் இராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

மத்திய அரசின் ஆட்சி அதிகாரம் அங்கே செல்லுபடியாகவில்லை. காஷ்மீரத் திலே இன்று பயங்கரமான நிலைமை. தனது மாநிலம் இந்தியாவோடு இணை யட்டும் என்று கர்ஜித்த சேக் அப்துல்லா, அப்பள்ளத்தாக்கின் சிங்கமாக உலவி னார். ஆனால், இன்று அவரது கல்லறையை இராணுவம் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.காரணம் என்ன? அவரது தேசிய மாநாட்டுக் கட்சி யைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாத காங்கிரஸ், தனது வழக்கமான தந்தி ரத்தைக் கையாண்டது.நண்பனாக நடிப்பது; உறவாடுவது; அதன்பின் முதுகில் குத்தி ஒழிப்பது -இதுதான் காங்கிரசின் தாக்குதல் தந்திரம். விளைவு என்ன?

ஆயுதத்தில் நம்பிக்கை வைக்கும் தீவிரவாதம் காஷ்மீரத்தை ஆட்டிப்படைக் கின்றது. பஞ்சாபிலும் அதே தீவிரவாதம். இதற்கு அடிப்படைக்காரணம் ஒன்று தான். தங்கள் மாநிலத்தை யார் ஆள வேண்டுமென்று அம்மாநில மக்கள் வாக் குச்சீட்டின் மூலம் வழங்கிய தீர்ப்பைடெல்லி தர்பாரிலேயிருந்த காங்கிரஸ் மிதித்துத் தள்ளியது. அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு என்ற கொடுவா ளைப் பயன்படுத்தியது. மாநில அரசுகளைக் கலைத்தது. வாக்குச்சாவடிகளின்
தீர்ப்பை விட 356 ஆவது பிரிவு சக்தி வாய்ந்தது என்று எண்ணி, இம்மாநிலங் களின் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். 356 ஆவது பிரிவை வாக்குச்சீட்டின் மூலம் முறியடிக்க முடியாது.

ஓட்டு முறையும், வேட்டு முறையும்

மகாபாரதத்திலே கூட நீதி கிடைப்பதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட, குருஷேத்திர யுத்தகளம்தான் நீதியை நிலைநாட்டியது என்றுஎண்ணிய வாலி பர்கள், டெல்லி தர்பாரை எதிர்த்து தீவிரவாதிகள் ஆனார்கள். ஓட்டு முறை பயன் தராது என்று வேட்டு முறையில் நம்பிக்கை வைத்தார்கள்.டெல்லி தர் பார் என்றால் என்ன?

டி.ஆர்.பாலு : அதுதான் மத்திய அரசாங்கம்.

இராஜ்மோகன் காந்தி : டெல்லி தர்பாரின் ஆதிக்கம் இப்போது அழிந்து கொண் டிருக்கின்றது.

வைகோ : தேசபக்தியின் பெயரால், ஒருமைப்பாட்டின் பெயரால் மத்திய அரசு மாநில உரிமைகளை நசுக்கி, மாநிலக் கட்சிகளை அழிக்க நினைத்தனால்தான்,
திமுக அரசை தமிழ்நாட்டில் கலைத்தார்கள். இந்த ஜனநாயகப் படுகொலை செய்த சந்திரசேகர், தன்னை ஆச்சாரிய நரேந்திரதேவின் மாணாக்கன் என்றும், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சீடன் என்றும் சொல்லிக் கொள்கின்றார். ஒரு
மாமனிதனின் சீடன் என்பதனால் சீடர்கள் எல்லாம் உத்தமர்கள் என்று கருத முடியாது. எனக்கு முன்பு பேசிய சிக்கந்தர் பக்த் தன் உரையில் ஏசு கிறித்து வைப் பற்றிக் குறிப்பிட்டார்.பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள சில வாசகங் கள் என் நினைவுக்கு வருகின்றன.

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு முதல் நாள் ஏசு கிறித்து, தனது 12
சீடர்களோடு அமர்ந்து, அவர்கள் புசிப்பதற்காக அப்பத்தைப் பகிர்ந்து கொடுப்ப தற்கு முன்பு அவர்களைப் பார்த்து, உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார். ஏசுவை கொலை பாதகர்களுக்கு காட்டிக் கொடுத்த சீட னான யூதாஸ் காரியத், ஏசுவை நோக்கி, ‘ரபி, அது நான்தானோ?’ என்று கேட் டான். அதற்கு ஏசு, ‘நீ சொன்னபடியேதான்’ என்றார். யூதாஸ் அவ்விதம் செய்ய மாட்டேன் என்றான்.ஆனால், யூதாஸ் பின்னர் காட்டிக்கொடுத்தான்.

மனசாட்சி இல்லாதவர்

தேசாதிபதியின் விசாரணை மன்றத்தில் ஏசுவுக்கு மரணதண்டனை அளிக்கப் பட்டவுடன் யூதாஸின் மனசாட்சி அவனை சித்திரவதை செய்தது. காட்டிக்
கொடுப்பதற்கு கைக் கூலியாக வாங்கிய 30 வெள்ளிக் காசுகளையும் தேவால யத்திற்குள் வீசியெறிந்துவிட்டு யூதாஸ் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து மடிந்தான். இந்த உதாரணத்தைச் சொல்வதனால் யூதாஸ் யாரோடும் நான் இங்கே ஒப்பிடவில்லை; அதன் மூலம் யூதாஸ் இழிவுபடுத்தவும் நான்
விரும்பவில்லை.

ஏனென்றால், யூதாஸீக்காவது மனசாட்சி இருந்தது.ஜெயப்பிரகாசர் போற்றிய நெறிகளைக் கொன்றுவிட்ட இவர்களுக்கு மனசாட்சி கிடையாது.

தமிழ்நாட்டில் திமுக அரசு கலைக்கப்படுவதற்கு பத்துநாட்களுக்கு முன்னால், இந்தியாவின் மிகப்பெரிய தலைவர் ஒருவர், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து எட்டு ஆண்டுகள் சிறையில்வாடிய அந்தத்தலைவர், சென்னையில் ஒருவிழா வில் கலந்துகொண்டு பேசும்போது,‘தமிழகம் எங்கும் அமைதித் தென்றல் தவழ் கின்றது’இந்தியாவிலுள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாட் டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது.அமைதிப் பூஞ்சோலையாகத் திகழ் கிறது. இதனை மறுத்து மாறாக பேசுகின்றவர்கள் வெளிச்சத்தில் இருட்டைத்
திணிக்க முயல்கின்றார்கள் என்றுதான் கருத வேண்டும் என்றார்.

யார் அந்த மாபெரும் தலைவர்? அவர் வேறுயாரும் இல்லை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள்தான்.அவர் என்ன திமுகவைச் சேர்ந்தவரா? இல்லையே.

இதற்கு நான்கு நாட்கள் கழித்து இந்தியாவின் மதிப்புமிக்க இன்னொரு தலை வர் கோயம்புத்தூரிலே ஒரு திரு மண விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, ‘கடவுளின் கிருபையால் தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சி நடக்கின் றது’ என்றார். யார் அவர்? வேறு யாருமல்ல இந்தியாவின் முன்னாள் குடியர சுத்தலைவரான ஜெயில்சிங் அவர்கள்தான். ஆனால், சந்திரசேகரின் அரசாங் கம் அவரது எஜமான் ராஜீவ்காந்தியின் கட்டளைக்கு கீழ்படிந்தது. அது மட்டு மல்ல; ராஜீவ்காந்தியும், சந்திரசேகரும் தென்னிந்தியாவின் பமீலா போர்டஸ் வீட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்தார்கள். எதற்காக? அந்தப் பெண்மணியின் உத்தரவைப் பெறுவதற்காக.

கடந்த டிசம்பர் மாதம் இந்த மன்றத்தில் நான் பேசும் போது, சேக்ஸ்பியர் நாட கத்தில் வரும் நாசக்காரியான சீமாட்டிமேக்பெத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது, “இந்திய அரசியலில் யார் அந்த சீமாட்டி? என்று சிலர் கேட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த பெயரை நான் ஏன் கூறவேண்டும் என்றேன்.

மேக்பத்திற்கு நேர்ந்த கதி

மேக்பத் சீமாட்டியின் தூண்டுதலாலும்,சதித் திட்டத்தாலும்தான் அரசன் கொ லை செய்யப்பட்டான். ஆனால், அந்தக் கொலையைச் செய்தபின் சீமாட்டி மேக்பெத் சொன்னாள், “இந்தக் களங்கத்தை கழுவுவதற்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும்” என்று.அதன்பின் அவளுக்கு பைத்தியம் பிடித்தது. தூக்கத் தில் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.பிதற்ற ஆரம்பித்தாள்.அரேபியாவின்ஆயிரம் வாசனைத் திரவியங்களாலும் இந்தக் கரங்களை இனி சுத்தப்படுத்த முடியாது என்று புலம்பினாள். கடைசியில் தற்கொலை செய்துகொண்டாள்.

அவளது யோசனையைக் கேட்ட ஆசை மணாளனும் அழிந்தான்.அவளாலும் அவள் கூட்டத்தாலும் தூக்கியெறியப்பட்டவர்கள் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றினர். ஆட்சி பீடத்தில் அமர்ந்தனர். தமிழ்நாட்டிலும் இப்போது அது தான் நடக்கப் போகின்றது. தேர்தலில் திமுகழகம் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும்.

இன்றுவரை சந்திரசேகர் தனது எஜமானர் ராஜீவ்காந்தியின் உத்தரவுகளை நிறைவேற்றினார். நாளைக்கு சந்திரசேகர் ஆட்சியில் இருப்பாரா? என்பது கேள்விக்குறி. நாளைக்கே தூக்கியெறியப்படுவார். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.காங்கிரசின் அத்தியாயம் முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை
இந்திய அரசியலில் ஆயிரம் அடிக்கு கீழ் குழி தோண்டிப் புதைத்தார் என்று சரித்திர ஏடுகளில் எழுதப்படும் பெருமை ராஜீவ்காந்திக்கு கிடைக்கும்”.

ஃ ஃ ஃ

மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அதிகம் வாதாடிய தென்னகத் துத் தலைவர் வைகோ என்பதை நாடாளுமன்ற பதிவேடுகளைப் புரட்டும் போது தெளிவாகத் தெரிகிறது. காஷ்மீர்,பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் அரசி யல் சூழல்களை மாநிலங்களவையில் மிகத் துல்லியமாக அலசி ஆராய்ந்து
உரையாற்றிய வைகோ அவர்கள்,அஸ்ஸாம் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்ததைக் கடுமையாகக் கண்டித்தார்.

1991, மார்ச் 12 இல், அஸ்ஸாம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான மசோதா மீது தலைவர் வைகோ ஆற்றிய உரை:

“அஸ்ஸாமில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்ஸாம் கணபரிஷத் ஆட்சி யைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்த செயல் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். களங்கம் நிறைந்த இக்கொடும் செயலை கொத்தடிமை சந்திரசேகர் சர்க்கார் செய்தது. நேற்று வரை இருந்த எஜமானின் கட்டளையை எடுபிடி அரசு செயல் படுத்தியது.

சிவசங்கர் (இ.காங்) : கோபால்சாமி பேச்சைத் தொடர அனுமதிக்காமல் மசோ தாவை உடனே நிறைவேற்ற வேண்டும். உடனே வாக்கெடுப்பு நடத்த வேண் டும்.

டி.ஆர்.பாலு : கோபால்சாமி பேச எழும் போதெல்லாம் காங்கிரஸ்காரர்கள் ஏன் இப்படி பயப்படுகின்றீர்கள்?

வைகோ : தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை செய்தீர்கள். அஸ்ஸாமில்
அராஜகம் நடத்தினீர்கள். அங்கே இப்போது அதன் பலனை இ.காங்கிரஸ் அனு பவிக்கின்றது. உல்பா இயக்கத்திற்கு முன்பு பொதுமக்கள் ஆதரவு இல்லை. அந்த இயக்கத்தின் செயலாளர் இதுபற்றி தந்துள்ள அறிக்கையில் “மக்கள் ஆதரவு முன்பு இல்லை.

ஆனால், எங்கள் மாநிலத்துக்குள் இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்த மத்திய அரசுக்கு ஒரு வகையில் நாங்கள் நன்றி கூற வேண்டும். அஸ்ஸாமில் நுழைந்த இராணுவம் பயங்கரமான கொடுமைகளை, நாசத்தை விளைவித்தது.
அப்பாவி மக்களைக் கொன்றது. அதனால் எங்கள் இயக்கத்திற்கு மக்களிடம் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இப்படித்தான் முன்பு இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழர் களைக் கொன்று குவித்தார்கள்.இப்பொழுது அஸ்ஸாமில் கோரச் செயல் களை நடத்திடச் செய்து இராணுவத்துக்கு களங்கத்தைத் தேடித்தந்துள்ளீர்கள்.

எம்.ஏ.ஜேக்கப் (இ.காங்) : இராணுவத்தைக் குறித்து கோபால்சாமி கூறிய
குற்றச்சாட்டுகளை அனுமதிக்கக்கூடாது.

சைக்கியா (அஸ்ஸாம் கண பரிஷத்) : உண்மையைத்தானே அவர் கூறு கின்றார்.

சுப்பிரமணியசாமி (மத்திய அமைச்சர்) : இராணுவத்தைப் பற்றி விமர்சனம்
செய்யக் கூடாது.

டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்.பிக்கள் : துரோகி நீ பேசாதே;

நஜ்மா ஹெப்துல்லா (அவைத் துணைத் தலைவர்) : இராணுவத்தைப் பற்றி
விமர்சிப்பது நல்ல மரபல்ல. வை.கோபால்சாமி இதற்கு மேலும் இதுபற்றி பேசினால் அது அவர் விருப்பம்.

இராணுவம் புனிதமானதல்ல

வைகோ : இராணுவம் என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதமான ஒன்றா?

இந்திய நாட்டு மக்களின் தன்மானம், கெளரவம், உயிருக்கும், உடைமைக்கும்
உள்ள உரிமையை விட இராணுவத்தின் மதிப்பு உயர்ந்ததல்ல. அக்கிரமம் செய் தால் குற்றம்சாட்ட வேண்டியது எங்கள் கடமை.

அஸ்ஸாமில் இன்று ஏற்பட்ட நிலை அபாயகரமானது. இதற்கு காங்கிரஸ் தான் காரணம். இ.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி விட்டதாக பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவது மட்டுமல்ல. உல்பா இயக்கத் தலைமை அலுவலகத்துக்கும் தங்கள் விலகல் கடிதங்களின் பிரதி களை அனுப்பி வைக்கின்றார்கள்.

(இ.காங்கிரஸ் எம்.பிக்கள் கூச்சல், குறுக்கீடுகள்)

அஸ்ஸாமில் குடியரசுத்தலைவர் ஆட்சியை நீடிக்கக்கூடாது. உடனே சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத்துக்கு உடனே தேர்தல் நடக்கும் என்று நம்புகின்றேன்.காங்கிரஸ் கட்சி தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டு தவிக்கின்றது. சந்திரசேகர் அமைச்சரவையில் சில
அரசியல் புரோக்கர்கள் தேர்தல் வராமல் தடுக்க தகிடு தத்தங்கள் செய்ய
முனைகின்றார்கள்.

டி.ஆர்.பாலு : அந்த அரசியல் கோமாளியின் அயோக்கியத்தனம் செல்லுபடியா காது.

வைகோ : நாடெங்கும் தேர்தல் முறையாக நடக்க வழிவகுத்துக் கண்காணிக் கும் அமைப்புதான் தேர்தல் கமிஷனாகும். அதன் கமிஷனராக ஆற்றல் நிறைந் தவர்கள். நடுநிலை தவறாதவர்கள் விருப்பு வெறுப்பின்றி அங்கே அமர்ந்து தேர்தலை நடத்தினார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக தற்போது இந்தியாவின்
தலைமை தேர்தல் கமிஷனர், ராஜீவ்காந்தி வீட்டுக்குச் சென்று தினமும் காத் துக்கிடப்பது வெட்கக்கேடு மட்டுமல்ல; தேர்தலில் தில்லுமுல்லுகளை காங் கிரஸ் நடத்தப் போகின்றது என்ற ஐயத்தை வலுப்படுத்துகின்றது.

ஜெயந்தி நடராஜன் (இ.காங்) : தலைமைத் தேர்தல் கமிஷனரைப் பற்றி இங்கே பேசக்கூடாது.

வைகோ : பெரும் தவறுகள் நடக்கக்கூடும் என்பதால் இம்மன்றத்தின் கவனத் துக்கு கொண்டு வந்துள்ளேன், முன் எச்சரிக்கை செய்வதற்காக.

தொடரும்....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

நன்றிகள் 


கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment