Sunday, June 30, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 2

இன்பச் சிலிர்ப்பு!

நெருக்கடி காலத்தில் சிறைச்சாலையின் உயர்ந்த மதில் சுவர்களுக்கு உள்ளே 12 மாத காலம் நான் அடைபட்டுக் கிடந்த 1976 ஆம் ஆண்டில், காற்றின் அலை களோடு தவழ்ந்து வந்த ஒரு பாடல் என் செவிகளில் மோதியபோது, என் உடலில் இன்பச் சிலிர்ப்பும், பரவசமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதிலும், மாலையில் பறவைகள் மரங்க ளைத் தேடி ஓடுகிற வேளையிலும், அந்தத் திரை இசைப்பாடல் தொலைவில் இருந்து வர வர, இந்தப் பாடலைத் தந்தவர் யார்?இசை அமைத்தவர் யார்? கிராமத்து மணம் கமழுகின்ற இந்த இசை எங்கோ வயல் வெளிகளில் ஒலித் தத் தெம்மாங்குச் சத்தம் போல் கேட்கிறதே, அது ஒரு வித்தியாசமாகப் படு கிறதே என்று நான் திகைத்தேன். அந்தப் பாடல்தான்

‘மச்சானைப் பார்த்தீங் களா? 
மலை வாழைத்தோப்புக்குள்ளே’ 

எனும் பாடல்! ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்களில் தன்னைக் கால் பதித்துக் கொண்ட இளையராஜா அவர்களின் பரம இரசிகனாகிவிட்ட நான் அவரை விட்டுப் பிரிந்ததே இல்லை.

ஆம். மோனமான இரவுகளில், நெடுந்தொலைவுக் கார் பயணங்களில் இரவி லும், பகலிலும் நான் விரும்பிக் கேட்கக்கூடிய, திரை இசைப் பாடல்களில் என்றைக்கும் நான் மறக்க முடியாத பாடல்களை இசை அமைத்துத் தந்தவர் அல்லவா?

காதல் ஓவியம், 
அலைகள் ஓய்வ தில்லை, 
கடலோரக் கவிதைகள், 
16 வயதினிலே, 
முதல் மரியாதை, 
முள்ளும் மலரும், 
ஆறிலிருந்து அறுபது வரை, 
நாயகன், 
மூன்றாம் பிறை, 
கேளடி கண்மணி, 
கவிக்குயில், 
இராஜபார்வை, 
கரகாட்டக்காரன், 
சின்னக்கவுண்டர், 
சின்னத்தம்பி, 
நீங்கள் கேட்டவை, 
சிந்து பைரவி, 
இளமை ஊஞ்சலாடுகிறது, 
பயணங்கள் முடிவதில்லை, 
உதயகீதம் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

840 திரைப் படங்களுக்கு இசை அமைத்து, காலத்தை வென்று இருக்கக்கூடிய பாடல்களாகவே அமைத்து இருக்கிறார். அது மின்மினியைப் போல் மறை கின்ற பாடல்கள் அல்ல. இன்னும் நூறு, நூறு ஆண்டுகளுக்கு ஒலிக்கின்ற சாதகப் பறவைகளின் கானங்கள்தான் அவை. 1993 - ஆம் ஆண்டு இலண்டன் நகரத்தில் ‘ 'Royal Philharmonic Orchestra ’ குழுவினரின் இசைக் கருவிகளுக்கு நடு வில், நம்முடைய இளையராஜா அவர்கள் சிம்பொனி இசை அமைக்கிறார் என்ற செய்தி, மேலை உலகத்தைத் திடுக்கிடச் செய்தது. ஐரோப்பாக் கண்டமே அவரை உற்றுப் பார்த்தது.

இது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. அவர் போற்றுகின்ற ‘வான் லுட்விக் பீத்தோவன்’ ஜெர்மனியில் பிறந்த அந்த மகா இசை மேதை ஒன்பது சிம்பொனி அமைத்து இருக்கின்றார். அது மூன்றாவது சிம்பொனி. Eroica  ' இரோய்க்கா’ என் கின்ற நெப்போலியனின் படையெடுப்புகளில் அவனது போர் வெற்றிகளைக் குறித்த சிம்பொனி. அந்தப் பீத்தோவனைச் சின்னஞ்சிறு வயதில் பார்த்த மொஸார்ட், ‘Watch this young fellow, he is going to create a stir in the musical world ’ ‘இந்த இளைஞனைப் பார். இவன் சங்கீத உலகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தப் போகிறான்’ என்று மொஸார்ட் பாராட்டினாரே அந்தப் பீத்தோவன். 

அவர், ‘எந்தச் சிம்பொனி இசையை ‘நான் அர்ப்பணிக் கின்றேன். போர்க்களங் களில் வெற்றியை ஈட்டியதால் அந்த வெற்றிகளுக்கு வீரத்துக்கு இலக்கண மான நெப்போலி யனுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று சொன்னாரோ, அதே நெப்போலியன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டு தான்தான் பிரெஞ்சு தேசத்தின் சக்கரவர்த்தி என்று அறிவித்தபோது, கொஞ்சம் கூட அச்சம் இன்றி He did tore that dedication அந்த அர்ப்பணிப்புத் தாளைக் கிழிந்து எறிந்து நான் எதிர்க்கிறேன் என்று சொன்ன உணர்வு பெற்ற பீத்தோவன். 

அவர் கொஞ்சம் கொஞ்சமாகச் செவிப்புலனை இழந்து, கேட்கின்ற வலிமை இழந்து, அடுத்தவர்கள் பேசுவதும் கேட்காத வேளையில், எட்டாவது, ஒன்பதா வது சிம்பொனி அமைத்து, அந்தச் சிம்பொனி அமைத்தபிறகு, அந்தக் கருவி களின் இசை பரவுகிறபோது, இங்கே திரண்டு இருப்பதைப்போல அங்கே திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பியபோது, அந்தப் பாராட்டு ஒலிகள்அவரின் காதுகளில் விழாததால், அவருடைய அந்த வாத்தியக் கருவியின் மீது விழுந்து கண்ணீர் விட்டாரே அந்தப் பீத்தோவன் படைத்த சாதனையை நம்முடைய இளையராஜா படைத்து இருக்கிறார்.

தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment