Sunday, June 16, 2013

மீனவர் ஒற்றுமை ஓங்கட்டும், உரிமைகளை வெல்லட்டும்!

என்னுடைய அருமைச் சகோதரர்களே,

ஒருமுறை கன்னியாகுமரியில் சொன்னேன்:பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்ற 19 மீனவர்களை மீட்டுக்கொண்டு வராவிட்டால், இந்த 
மாவட்டத்துக்கு உள்ளே கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதுபோல, உங்களைப் பாதுகாப்பதற்கு, உங்களுக்குத் தோள் கொடுப்பதற்கு 
என்றைக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
-வைகோ 

தமிழ்நாடு மீனவர் பேரவையின் வெள்ளி விழா 7.5.2011 அன்று சென்னை இம்பி ரீயல் ஓட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் இருந்து....

அலைகடலும் ஓய்ந்து இருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
என்று, இலங்கைத் தீவுக்கும், தாய்த் தமிழகத்துக்கும் இடைப்பட்ட கடல் அலை கள் மீது, ஓடக்காரப் பெண் ஒருத்தி பாடியதாகக் கற்பனை செய்து, கல்கி ஆசிரி யர் அன்று எழுதிய வரிகள், இன்று துன்பக் கடலாக, எந்த நெஞ்சங்களிலே கொந்தளித்துப் பொங்கு கின்றதோ, அந்த நெஞ்சங்களின் நம்பிக்கைக்கு உரிய வராக, மீனவ மக்களின் ஓயாத துன்பத்தைத் தீர்ப்பதற்காக, அரசியல் கட்சி எல்லைகளையெல்லாம் கடந்து, தன்னலம் இன்றிக் கடமை ஆற்றி வருகின்ற,
தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகனார் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.

கடலோடு போராடி வாழும் மீனவ மக்களுக்காக,அலைகடலாகட்டும், பாய்ந்து ஓடுகின்ற நதிகள் ஆகட்டும், ஏரிகள் ஆகட்டும், குளங்களாகட்டும், அனைத்து மீனவர்களின் நலனையும் காப்பதற்கு,இந்த அமைப்பை உருவாக்கி இருக்கி றோம் என்று பெருமையோடு சொன்னார்களே, அந்த அமைப்பின் வெள்ளி விழா மலரை வெளியிடுகின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் மலரைப் பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக உரையாற்றிய தமிழ்நாடு நாடார் பேரவையின் தலை வர் எர்ணாவூர் நாராயணன், தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கவும், உயிர்களைக்காக்கவும், வேற்று நாடுகளில் சிறைகளில் அடைபட்ட வேளை யில், அவர்களை விடுவித்துக்கொண்டு வருகின்ற அரும்பணியைச் செய்து
வருகின்ற, இந்திய நாட்டில் மீனவ மக்களின் நம்பிக்கைக்கு உரிய கோச்சேரி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன், சென்னை விசைப்படகு
மீனவர் நலச்சங்கத் தலைவர் ரகுபதி, தென்பகுதி நாட்டுப் படகு சங்கத் தலை வர் கயஸ் பர்ணான்டோ, தேசிய மீனவர் சங்கத் தலைவர் சிவலிங்கம் மற்றும்,
மீனவர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு ஏற்க வேண்டும் என்று அன்பழகனார் அவர்கள், மறுமலர்ச்சி திமுகழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர் களோடு வந்து, அழைப்பு விடுத்தார்கள். இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சத்தைத் தூக்கி எறிந்தவனுக்கு அலைகடலும் பந்தய மைதானம் என்று கவிஞர் அல்லாமா இக்பால் சொன்ன கவிதை வரிகளுக்கு இலக்கணமாகத்
திகழ்பவர்கள் மீனவப் பெருமக்கள். அச்சம் அறியாதவர்கள், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், சீறி வரும் புயலை எதிர் கொண்டு படகைச் செலுத்தக்கூடிய தோள் வலிமையும்,மனவலியும் பெற்றவர்கள், கள்ளம் கபடம் அற்றவர்கள் மீனவர்கள். அவர்கள் இன்றைக்கு, விவரிக்க இயலாத மரண பயங்கரத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆகவேதான், மீனவ மக்களின் உயிர்களைக் காக்க வருக; சூழ்ந்து வரும் ஆபத் துகளைத் தடுக்கும் கடமையில் தவறிய இந்திய அரசைக் கண்டிக்க எழுக என் று, உணர்ச்சிகரமாக முழங்கினார் அன்புக்குரிய அன்பழகனார் அவர்கள். தான் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல என்பதை அவர் இங்கே தெளிவுபடுத்தினார். மீனவ மக்களின் துன்பத்தையும், அரசுகள் செய்ய வேண் டிய கடமையையும், பசுமரத்தாணி போல நெஞ்சில் பதியும் வகையில் எடுத் துச் சொன்னார். டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற் காக, நேற்று நண்பகலில் டெல்லிக்குச் சென்ற நான், இன்று உங்களையெல் லாம் சந்திக்க வேண்டும் என்பதற்காக, இரவிலேயே திரும்பி வந்து விட்டேன்.

இந்த விழாவை வேறு ஒரு மண்டபத்தில் நடத்திட ஏற்பாடு செய்து இயலாமல் போனாலும், அறிவித்த தேதியிலேயே இந்த விழாவை நடத்திட வேண்டும்
என்று அமைப்பின் தலைவர் விரும்பியதற்கு ஏற்ப, எழும்பூரில் இம்பீரியல் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால்,இன்று மாலையில் இங்கே ஏற்கனவே செய்யப்பட்டு இருந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண் டும் என்பதற்காக, மாலைக்குள்ளாக நாம் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டி ய கட்டாயம் ஏற்பட்டு இருக்கின்றது. எனவேதான், உரை ஆற்ற வேண்டிய பலர், தங்கள் உரைகளை இரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண் டார்கள்.

உலகத்திலேயே, இன்றைக்குத் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதைப் போன்ற, துன்பங்கள் வேறு எங்கும் ஏற்படவில்லை. மதிப்புக்குரிய மேச்சேரி அவர்கள், இங்கே வந்து இருக்கிறார்கள். அவருக்கும் நான் தெரிவித்துக் கொள் கிறேன். இந்தியாவில், கேரளா, குஜராத், ஆந்திரா, மேற்கு வங்காள மீனவர் களுக்கு ஏற்படாத துன்பம், எங்கள் தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு இருக்கின்றது.

ஆகவே, இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்களின் மீனவர் அமைப்பு களும், தமிழக மீனவர்களைக்காக்கத் தவறுகின்ற இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற வகையில், போராட வேண்டும். இதற்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அன்ப ழகனார் கேட்டார், இது எங்கள் அரசுதானா? நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானா? என்று கேட்டார்.

நீங்கள் இங்கே கேட்டதைத்தான், ஜனவரி 25 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் டாக் டர் மன்மோகன் சிங் அவர்களிடம், இப்படிக் கேட்கிறார்கள் என்று நேரடியாகச் சந்தித்து எழுத்துமூலமாகக் கொடுத்தேன். ஜெகதாப் பட்டணத்து மீனவர் பாண் டியன், ஜனவரி 12 ஆம் தேதி, இலங்கைக் கடற்படையால் கொடூரமாகக் கொல் லப்பட்டார்.

எங்கள் மீனவர்கள், எங்கள் எல்லைக்கு உள்ளேயே தாக்கப்படுகிறார்கள். இன் றைக்குச் சீனர்களும், இலங்கை கடற்படையோடு சேர்ந்து கொண்டார்கள்.எங் கள் மீனவர்களின் படகுகளை உடைக்கிறார்கள், வலைகளை அறுத்து எறிகி றார்கள், மீன்களை அள்ளிச் செல்லுகிறார்கள், எங்கள் மீனவர்களை அம்மண மாக்கிக் கடலில் தூக்கிப் போடுகிறார்கள்.ஐஸ் கட்டிகள் கொண்டு போகின்ற கித்தான் சாக்குகளைக் கட்டிக்கொண்டு போகச் சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இந்திய அரசு தமிழக மீனவர்களைக் காப்பாற்றுகின்ற கடமையில் தவறி விட் டது. இதுவரையிலும் 540 மீனவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆயிரக் கணக்கான படகுகளை இழந்து இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மீனவர் கள் துன்பத்தில் அவதிப்படுகிறார்கள். அவர்கள் வாழும் வழி என்ன? இந்த வேதனை அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது.

கடற்கரைக் கிராமங்களுக்கு நான் செல்லுகின்ற போது, அருமைத் தாய்மார் கள், அவர்களுடைய உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டுகிறார்கள். என்
கணவன், என் தகப்பன், என் பிள்ளை இந்தக்கடலுக்குச் சென்றுதானே நாங்கள் வாழ்க்கை நடத்த முடிகிறது? எங்களுக்கு வேறு வாழ்க்கை இருக்கின்றதா? நாட்டில் இருக்கின்ற விலங்குகளைப் பாதுகாப்பதற்குக் கூடச் சட்டம் போட்டு இருக்கின்றார்களே, நாங்கள் என்ன விலங்குகளை விடக் கேவலமாகப் போய் விட்டோமா? என்று கேட்கிறார்கள்.

ஆகவே, இந்த நிலைமை நீடிக்குமானால், மீனவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட் டுத் தமிழர்களும், இந்தியாவின் குடிமக்கள்தானா? என்ற கேள்வி எழுகிற போ து, இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து போகும் என்று எழுத்து மூல மாக எழுதிக் கொடுத்து இருக்கிறேன். அன்புச்சகோதரி கயல் என்கிற அங்கயற் கண்ணியை மீட்டுக் கொண்டு வருவதற்காக, பிரதமரைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டபோது, 22 ஆம் தேதி அவரிடம் எழுதிக் கொடுத்தேன்.

அப்போது பக்கத்தில் அமர்ந்து இருந்த சிவசங்கர மேனன், இப்பொழுது நடை பெற்ற சம்பவத்தை, இலங்கை அரசு மறுத்து இருக்கிறதே? என்றார். ஆத்திரத் தை அடக்கிக் கொண்டு சொன்னேன்: எந்தக் காலத்தில் அவர்கள் உண்மையை
ஒப்புக்கொண்டார்கள்? அவன்தானே தமிழர்களைக் கொன்றவன்? இந்திய அரசின் உதவியோடு தமிழ் மக்களைக் கொன்று விட்டு, நம்முடைய மீனவர் களையும் நாள் தவறாமல் சுட்டுக்கொல்லுகின்றானே, இதைத் தடுக்க என்ன
நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டேன்.

நாங்கள் இலங்கை அரசோடு பேசி, இனிமேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக் காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொன்னார். அதே இரவிலேயேதான் ஜெயகுமார் கொடூரமாகக் கொல்லப் பட்டார். புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த நம் அருமைச்சகோதரன் ஜெயகு மார் அன்று இரவிலேயே கொல்லப்பட்டார். 23 ஆம் தேதி காலையில் நான்
தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். கழுத்தில் கயிற்றைப் போட்டு சுற்றி இறுக்கி, மிகக் கொடூரமான முறையில் கொன்று இருக்கிறார் கள். உடன் சென்ற மீனவர்கள், ராஜேந்திரனும், செந்திலும் கடலில் தூக்கி எறியப் பட்டார்கள். அவர்கள், கடலில் நீச்சலடித்துக்கொண்டே இருந்திருக் கிறார்கள். ஜெயகுமாருக்குக் கை கொஞ்சம் ஊனம். இதைவிட அக்கிரமம் என்ன இருக்க முடியும்?

நேற்றைக்குத்தான் உறுதிமொழி கொடுத்தீர்கள்.ஆனால், நேற்று இரவிலேயே இப்படி நடந்து இருக்கிறதே, என்ன பாதுகாப்பு இருக்கிறது மீனவர்களுக்கு என்று கேட்டு உடனே தொலைநகல் மூலமாக 23 ஆம் தேதி கடிதம் அனுப்பி னேன். அதற்கு, 25 ஆம் தேதியே அவர் பதில் எழுதி இருக்கிறார். உரிய பாதுகாப் புக்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி,இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி. அதில் இந்தியா வெற்றி பெற்று விட்டது.இந்தியா முழுவதும் ஒரே கொண்டாட்டம். தமிழகமும் கொண்டாடியது. நான் அந்தக் கொண்டாட்டத்தைக் குறை சொல்லவில்லை. கொண்டாட வேண்டியதுதான். ஆனால், அதற்காக, எங்கள் சகோதரர்கள், நான்கு மீனவர்களுடைய உயிர்
போய்விட்டதே? இழவு விழுந்து விட்டதே? அன்றைக்குப் பகலிலேயே இலங் கைக் கடற்படைக்காரன் சொல்லி இருக்கிறான், இன்றைக்கு இந்தியா ஜெயித் தால், உங்களை ஒழித்துக்கட்டாமல் விட மாட்டோம் என்று. அதுதானே தங்கச் சிமடத்திலே நடந்தது?

விக்டஸ் அந்தோணிராஜ், ஜான் பால், மாரிமுத்து,நான்கு மீனவர்கள் கொல்லப் பட்டு விட்டார்களே, அதே நாளில்? இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நான் அந்த ஊர்களுக்குப் போனேன்.ஜான் பாலின் மனைவி சொல்லுகிறார்.வெள்ளப் பள்ளம் செல்லப்பன் எப்படிக் கொல்லப்பட்டார்? மீனவர்கள் இருந்த படகுக்கு உள்ளே வந்து கடற்படைக்காரன் குதித்தான்.மீனவர்களைக்கீழே தள்ளி, பூட்ஸ் காலால் மிதித்தான். முகத்திலேயே திரும்பத்திரும்ப மிதித்தான். காதில் இருந் து ரத்தம் வந்தது. உடன் இருந்தமீனவர்களும் தாக்கப்பட்டார்கள். நாகப்பட்டி னம் மருத்துவமனைக்குப் போய்ச் சொன்னார்கள். செய்தியை அறிந்த 24 மணி
நேரத்துக்கு உள்ளாக, நான் வெள்ளப்பள்ளத்துக்குப் போனேன். அதேபோலத் தான், இங்கேயும் நடந்து இருக்கிறது. அந்தோணிராஜ் மனைவி சொல்லு கிறார். சர்ச்சுக்குப் போவதற்கு முன்பு, என்னிடம் நன்றாகத்தான் பேசினார். இன்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்று ஜெபம் பண் ணு என்றார். இந்தியா ஜெயித்து விட்டால், கடலிலேயே எங்களைக் கொன்று
விடுவான் என்று சொல்லி இருக்கிறார்.

இதுதான் பாதுகாப்பா? அவர்கள் சென்ற படகை பக்கத்துப் படகுகளில் இருந்த மீனவர்கள் பார்த்து இருக்கிறார்கள். சற்றுத்தொலைவில் இலங்கைக் கடற் படை வந்ததையும் பார்த்து இருக்கிறார்கள். அதற்குப்பிறகு, இவர்களுடைய படகுகளைக் காணவே இல்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்களாகவே முயற்சிகள் எடுத்து,நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் து, அதன்பிறகு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று மருத்துவமனையிலே பிணக் கிடங்கில் இருந்த விக்டசின் உடலைப் பார்த்து இருக்கிறார்கள்.அப்போது ஒரு வர் சொல்லி இருக்கின்றார், இன்னும் மூன்று பிணங்கள் உள்ளே இருக்கின் றன என்று. அதற்குள் அவரைப் பேசாதே என்று சொல்லி மிரட்டி வாயை மூட வைத்து இருக்கிறார்கள். பின்னர், இரண்டு நாள்களுக்கு ஒன்றாக, ஒவ்வொரு
சடலத்தையும் கடலில் வீசி இருக்கின்றார்கள்.

மாரிமுத்துவின் வீட்டுக்கு நான் செல்கின்றபோது,அவருடைய உடல் அது வரையிலும் கிடைக்கவில்லை. பின்னர் கிடைத்தது. அவருடைய தலை துண் டிக்கப்பட்டு இருந்தது. இப்படித்தான் நான்கு பேரும், இந்த ஏப்ரல் 2ஆம் தேதி
கொல்லப்பட்டார்கள். நமது மீனவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

பேராசை காரணமாக மீனவர்கள் கடல் தாண்டிச்செல்கிறார்கள் என்கிறார் ஒரு வர். அவர்களுக்கா பேராசை? அன்றாட வாழ்க்கையே அவர்களுக்குப் போராட் டமாக இருக்கிறதே? ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம். வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு
என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். அந்த மக்களுக்கு வேறு என்ன வாழ்க்கை இருக்கிறது?

நம்முடைய கடல் எல்லையில் மட்டுமல்ல, பன்னாட்டுக் கடல் பரப்பிலும் தாக்கப்படுகிறார்கள்.கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தது காங்கிரஸ்
அரசு.

இலங்கைக் கடற்படையோடு இந்தியக் கடற்படை ஒப்பந்தம் போட்டது. 2003 ஆம் ஆண்டு நான் சிறையில் இருந்தேன். தமிழக மீனவர்களைத் தாக்கி விட்டு, அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு, ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசு முயற்சித்தது. ஆனால், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந் த மீனவர் அமைப்புகள், இன்னும் சொல்லப்போனால், அன்றைக்கு ஆண்டு கொண்டு இருந்த கட்சியின் மீனவர் அமைப்புகளும்கூட, ஒரு துளியும் இதில் உண்மை இல்லை என்று சொன்னார்கள். அது மட்டும் அல்ல, எங்களைப் பாது காத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்றும் சொன்னார்கள்.

இதையெல்லாம் கேள்வி கேட்பார் யாரும் இல்லை என்ற நிலை இருக்கிறது. எவ்வளவு பொறுமையாக இருக்கிறார்கள் மீனவர்கள்? வன்முறையில் ஈடுபடு கிறார்களா? பயந்தவர்களா? கிடையாது.எப்படி அமைதியாகவே இருக்கின்ற கடல், ஒருநாள் திடீரென ஆழிப்பேரலையாக, சுனாமியாகப் பொங்குகிறதோ, அதைப்போல இந்த மீனவர்கள், பரதவ மக்கள், மீன்பிடித் தொழிலை நம்பி வாழுகின்ற மீனவர்கள் பொங்கி எழுவார்கள். எதற்கும் ஒரு எல்லை உண்டு.

கடல் மேலாண்மைச் சட்டம், மீன்பிடித் தொழிலைக்கட்டுப்படுத்துகின்ற சட் டம் என்று சட்டங்கள் போடுகின்றீர்களே, கடலில் எல்லைக்கோடு எதுவும்
வைத்து இருக்கின்றீர்களா? இத்தனை மைலுக்கு அப்பால் போகக்கூடாது; போனால், அபராதம், சிறைத்தண்டனை என்கிறீர்களே? இவ்வளவு மீன்தான் பிடிக்க வேண்டும் என்று அளவுகோல் வைக்கின்றீர்களே, அந்தப்படிக்குத்தான் மீன்கள் வந்து வலையில் விழுமா? அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வர முயன்றார்கள். பகாசுரப் பன்னாட்டு நிறுவனங் களுக்கு உதவுவதற்காக, கடல் வளத்தை அவர்கள் கொள்ளை அடிப்பதற்காக, இப்படிச் சட்டம் போடுகிறார்கள்.

இப்போதுகூட, 45 நாள்கள் மீன்பிடிக்கப் போக முடியாதுதான். அப்படியானால், அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவது எப்படி? மீன் பிடிப்பவர்கள் மட் டும் அல்ல, மீன்களை விற்கிறார்களே அந்தச் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டும். 1076 கிலோ மீட்டர் நீண்டு கிடக்கின்ற தமிழகக் கடற்கரையோரத்து மீனவர்கள் படுகின்ற துன்பங்களுக்கு ஒரு முடிவு வர வேண்டும்.

இன்றைக்குக் காலை செய்தித்தாள்களில் பார்க்கிறேன். சீனக் கப்பலை, கடல் கொள்ளைக்காரர் களிடம் இருந்து காப்பாற்றியதாம், இந்தியக் கடற்படை. அந்தச் சீனாக்காரனும் சேர்ந்து கொண்டுதான், எங்கள் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிறான். தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இந்தியக் கடற்படை ஒரு வேட்டுச் சத்தத்தையாவது என்றைக்காவது எழுப்பியது உண்டா? இது எங்கள் நாடா?

இந்திய அரசே, தமிழக மீனவர்கள் நாதி அற்றவர்கள் என்று நீ நினைக்காதே. தமிழகத்தின் அனைத்துத்தரப்பு மக்களும் அவர்களோடு சேர்ந்து போராடு வோம். (பலத்த கைதட்டல்). அவர்களை என் உயிருக்கு மேலாக நேசிப்பவன் நான். கடலின் சீற்றத்தை அறிந்தவன் நான். அலைகள் பனைமர உயரத்துக்கு
எழும்பி வருகின்றபோது, படகிலே பயணிப்பது எப்படி என்பதை நேரில் அனுப வத்தில் கண்டவன்.

அவர்களுடைய உடல் வலுவாக இருக்கிறது, உள்ளமும் தூய்மையாக இருக் கிறது. அவர்களுடைய துன்பங்களுக்கு ஒரு விடிவு வந்தாக வேண்டும். 1991 நவம்பர் 28 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். அது வரை யிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பதிவு செய்து இருக்கிறேன்.

ஆனால், நேற்று வரையிலும் தாக்குதல் நடக்கிறது.நாளையும் தாக்குதல் நடக்கும். அது மட்டும் அல்ல. கடல் வளம் அழிக்கப்படுகிறது. ரசாயனக் கழிவு கள் கடலில் கலக்கப்படுகின்றன. அணுமின் உலைகள், அணு உலைக் கூடங் கள், மீனவ மக்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பேராபத்தை ஏற் படுத் துகிறது. தூத்துக்குடி தாமிர உருக்கு நச்சு ஆலையாம் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராகிறோம் என்றால், அதுவும், மீனவர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கத்தான்.

கடல் நமது சொத்து. அதை நாம் பாதுகாக்க வேண்டும்.சூழ்ந்து வருகின்ற ஆபத் துகளில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, அவர்களது உரிமைகளுக் காக, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பாடுபட்டு வருகிறார் அன்பழக னார்.அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துகளைச் சொல்லு கிறேன்.

உணர்ச்சிகரமான இந்த நிகழ்ச்சியில், எளியவனான என்னையும் அழைத்து, மலரை வெளியிடச் செய்தீர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை வைகோ பெற்று இருக்கிறான்.

என் பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றி என்பது, இப்படிப்பட்ட, கட்சி எல்லைகளைக் கடந்த நண்பர்களது நெஞ்சங்களில் எனக்கு ஒரு இடம் கிடைத் து இருப்பதுதான்.

ஏனெனில் எங்கள் பொதுவாழ்வு துhய்மையானது. உங்கள் துயரங்களில் பங்கு எடுக்க ஓடோடி வருகின்ற சகோதரன் வைகோ என்ற உரிமையோடு நீங்கள் அழைத்ததற்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமைப்பு இன்னும் வெற்றிகரமாகச்செயல்படும். பொன்விழா கொண்டா டுவீர்கள்.மேட்டூரில், காரைக்காலில், தூத்துக்குடியில் மாநாடுகளை நடத்தி இருக்கின்றீர்கள். இன்னும் வலுப்பெறட்டும் இந்த அமைப்பு. மீனவர்கள் அனை வரும் தங்கள் உரிமைகளைக்காக்கச் சீறி எழுகிறபோதுதான் அரசுகள் அஞ்சும்.

நாம் மீனவர்களைக் காப்பாற்றத் தவறினால்,அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதை அரசுகள் உணர வேண்டும். இதுவரை செய்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது. இனி ஒரு மீனவன் ரத்தம் சிந்தினாலும், அதற்கு இலங் கை அரசைக் குற்றம் சாட்ட மாட்டோம்; இந்திய அரசுதான் பொறுப்பு என்பதை பிரதமரிடம் தெரிவித்து இருக்கிறேன்.

தமிழன் சிந்திய கண்ணீரால் இந்தக் கடல் உப்புக் கரிக்கிறது என்றார் அண்ணா. இன்றைக்கு அதில் ஈழத்தமிழனின் இரத்தம் மட்டும் அல்ல, தமிழக மீனவர் களின் செங்குருதியும் கலந்து விட்டது. 

கடிதங்கள் எழுதுவது, தீர்மானம்போடுவது, என்றைக்காவது ஒருநாள் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டங்களை அறிவிப்பதனால், மீனவர்களை ஏமாற்றி விட முடியாது என்பதை, உங்கள் தலைவர் இங்கே சொன்னார்.

என்னுடைய அருமைச் சகோதரர்களே,

ஒருமுறை கன்னியாகுமரியில் சொன்னேன்:பாகிஸ்தான் சிறையில் அடை பட்டுக் கிடக்கின்ற 19 மீனவர்களை மீட்டுக்கொண்டு வராவிட்டால், இந்த
மாவட்டத்துக்கு உள்ளே கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று. அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதுபோல, உங்களைப் பாதுகாப்பதற்கு, உங்களுக்குத் தோள் கொடுப்பதற்கு
என்றைக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

உங்கள் குழந்தைகள் கல்வியில் முன்னேற,வாழ்க்கையில் முன்னேற, உங்க ளுக்கு எல்லாவிதத்திலும் நன்மைகள் பெருக உறுதுணையாக இருப்போம். தன்னலம் இன்றிப் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்ற மீனவர் பேரவை, நூற் றாண்டு விழா கொண்டாடுகின்ற அளவுக்கு வெற்றி பெறும்.

உங்களுக்காக உழைக்கின்ற அன்பழகனார், பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! உங்கள் ஒற்றுமை வெல்லட்டும். நீங்கள் அமைக்கின்ற போராட்டக் களங் களில், முதல் ஆளாக வைகோ வருவான். வாழ்க மீனவர் நலம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment