Sunday, June 2, 2013

என்னுடைய ஒவ்வொரு தோழனும் கோடிப் பொன்னுக்குச் சமம்;-வைகோ

விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 18.05.2013 அன்று விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அனுமன் திருமண மண்டபத் தில் நடைபெற்றது.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி நன்கொடைச் சீட்டுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் இருந்து....

அடுத்த ஆண்டு, இதே மே 18 ஆம் நாள், நம் இயக்கத்தின் எதிர்காலம், ஒளிமய மானது என்று தீர்மானிக்கப்போகின்ற விருதுநகரில், அனுமன் மண்டபத்தில், உங்களை இந்தக்கோடையில் நான் சந்திக்கின்றேன்.இரவும் பகலும் சுழன்று வருவது போல, இன்பமும், துன்பமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து
நம் வாழ்வை முற்றுகை இடுவது போல, வெற்றிகளும், தோல்விகளும்,
இரண்டறக் கலந்ததுதான் ஒரு இயக்கத்தின் பயணம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்,இதே மே 18 ஐ எண்ணிப் பாருங்கள். நான் உள்ளம் உடைந்தவனாக, மிகுந்த மனத்துயரத்துக்கு ஆளானவனாக இருந்த அந்த நாளை நினைத்துப் பார்க்கின்றேன். 16 ஆம் தேதி வாக்குகள் எண்ணப் பட்டன. இந்தத் தொகுதியில் நாம் தோற்றுப்போனோம். அந்தத் தோல்வியின்
மனவேதனையை விட, அந்த வேளையில் ஈழத்தில் நிகழ்ந்த கொடுந்துயர் நம் நெஞ்சைப் பிளந்தது.இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட அந்தத் துன்பம் என்னை மிகவும் வாட்டி வதைத்தது.



அந்த வேதனையில் இருக்கின்ற போதுதான் செய்தி வந்தது. வத்திரா யிருப்புக் குப் பக்கத்தில் அய்யனார், சீனிவாசன், அவர்களின் மைத்துனர்.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சகோதரன், வைகோ விருதுநகர் தொகுதியில் தோற்றுப் போனான் என்று தொலைக்காட்சியில் வந்த விரைவுச் செய்தியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அப்பொழுது நான், சகோதரர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வரதராஜன் அவர்களுடைய இல்லத்தில் தங்கி இருந்தேன். தாங்க முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

நான் உடனடியாக வத்திராயிருப்புக்கு ஓடோடிச் சென்றேன். மருத்துவ மனை யில் அந்தச் சகோதரனிடம் கடிந்து கொண்டேன். நான் தோற்றால் தான் என்ன? நீங்கள் இப்படிச்செய்யலாமா?உங்கள் மனைவி மக்கள்  நிலைமை என்ன ஆகும் என்பதை நீங்கள் ஏன் யோசிக்கவில்லை? என்று கூறினேன். மருத்துவர் களிடம் கேட்டேன். 60 முதல் 70 விழுக்காடு தீக்காயங்கள் என்று சொன்னார் கள்.

நான் செய்தியாளர்களை வர வழைத்து, உதவித்தொகையாக கொஞ்சம் பணத் தைக் கொடுத்து விட்டுப் படம் எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால், நான் செய்தியாளர்களுக்குத் தகவல் தரவில்லை. அந்தத் தம்பியைக்காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையோடு, மதுரை அப்பல்லோ மருத்துவ மனையைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் அனுப்பி வைத்த அவசர மருத்துவ
ஊர்தி வருகின்றவரையிலும், நான் அங்கேயே இருந்தேன். செய்தியைக் கேள் விப்பட்டுத் தோழர்கள் வந்தார்கள். அதுவரையிலும், தேர்தல் முடிவுகள் இறுதி யாக அறிவிக்கப்பட வில்லை. அந்தத் தம்பியை மதுரை மருத்துவ மனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தோம். தொடர்ந்து பலமுறை அங்கே சென்று கவனித் துக் கொண்டேன். இரண்டரை மாதங்கள் அந்தச் சகோதரனை அங்கே வைத்து
இருந்து காப்பாற்றி இருக்கின்றோம்.(கைதட்டல்).

நான் கட்சித் தொண்டனுக்குத் துன்பம் என்றால், என்னிடம் பணம் இல்லை என்றாலும், கடன் வாங்கிச் செலவழித்து விடுவேன். அப்போது, பணத்தின் மதிப்பே எனக்குத் தெரியாது. அதை வெறும் காகிதமாகத் தான் நினைப்பேன்.
இந்த விருதுநகர் மாவட்டத்தில்,இயக்கத்தை இருபது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து வருகின்ற ஆருயிர்ச்சகோதரர் ஆர்.எம்.எஸ். அவர்கள் தலைமையில் இந்தப் பாசறைக் கூட்டம் நடக்கின்றது. இந்த அனுமன் அரங்கத்தில் எத்தனை யோ நிகழ்ச்சி களை நடத்தி இருக்கின்றோம்.வாயுவின் மைந்தன், சொல்லின்
செல்வன் என்று கம்பன் வருணித்த அனுமன் பெயரால் அமைந்து இருக்கின்ற அரங்கம் இது. அனுமன், நல்ல செய்தியைத்தான் எடுத்த எடுப்பிலேயே சொல் லுவான்.‘கண்டேன் சீதையை’ என்றுதான் சொன்னான். கெட்டிக்காரன். அது ஒரு இதிகாசம்.

‘இந்த அரங்கம், முதலில் நமக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் தேதியை மாற்றி வைத்ததால் இப்போது கிடைத்து இருக்கிறது’ என்றார் ஆர்.எம்.எஸ். இங்கே இப்போது நீங்கள் நன்கொடைச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளப் போகின்றீர்கள். அப்போது நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தி, ‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொன்னதுபோல, ‘தருகிறேன் நிதியை’ என்பதாக இருக்க வேண்டும்.
(பலத்த சிரிப்பு). அப்படித்தான் இந்த விருதுநகர் மாவட்டத் தோழர்களாகிய
நீங்கள் இருக்கின்றீர்கள்.

வாழ்க்கை, இன்பமும், துன்பமும் கலந்தது. வெற்றி ஒருபக்கம், தோல்வி ஒரு பக்கம். இவை அனைத்தையும் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருக் கின்றது. நாம் நம்பிக்கையோடு செல்வோம். நாம் கடந்து வந்த வழியில் எத்த னை இன்னல்கள், இடையூறுகள், ஏளனங்கள், ஏகடியப் பேச்சுகள்? எல்லாவற் றையும் கடந்து இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். இந்த நிலைமை யை, நீங்களும், உங்களைப் போல நாடெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான கழகக் கண்மணிகளும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கின்றீர்கள்.

கொஞ்சம் தயக்கத்தோடுதான் தேர்தல் நிதியை வசூலிக்க வருகின்றேன். தூத் துக்குடி மாவட்டத்தில் என் ஆருயிர்ச் சகோதரர் வழக்கறிஞர் ஜோயல் அவர் கள், திருச்செந்தூருக்கு அருகில் ஒரு வீடு திறப்பு விழாவுக்குச் செல்லுகின்ற வழியில், நன்கொடைச்சீட்டுகளை என் கைகளால் கொடுப் பதற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.அன்றைக்கு 51 இலட்ச ரூபாய் கொடுப்பதாக ஒப்புதல் கொடுத்து, முதல் தவணையாக ஐந்து இலட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்து
அனுப்பினார்கள். 

அதன்பிறகு, நன்கொடைச் சீட்டுகளைக் கொடுப்பதற்காக வேறு எந்த மாவட் டத் துக்கும் நான் போகவில்லை.நம்முடைய மாவட்டச் செயலாளர் அவர்கள், இது நமது சொந்த மாவட்டம். இங்கே மூன்று முறை கழகத்தை வெற்றி பெற
வைத்தவர்கள் நீங்கள்; எனவே, நீங்கள்தான் வந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.ஆனால், தில்லியில் நடைபெறு கின்ற ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின் காரணமாக, ஒப்புதல் கொடுத்து இருந்த பல நிகழ்ச்சி களை மாற்று கின்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.அதுபோல, இங்கே முன்பு ஒப் புதல் கொடுத்த நாளில் நடத்த இயலாமல், இன்று நடத்த வேண்டிய நிலை
ஏற்பட்டது.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு, விவசாயிகளுக்காக விருதுநகரில் நாம்
நடத்திய உண்ணாநிலை அறப்போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையிலும் டெல்டா பகுதிகளுக்கு மட்டுமே போய்க் கொண்டு இருந்த
அமைச்சர்கள், நமது மானாவாரி மண்ணுக்கும் வந்ததற்குக் காரணம் நமது போராட்டம்தான். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நமது போராட்டத்தில் பங்கு ஏற்றார்கள்.

காலையில் இருந்து மாலை வரையிலும் இடத்தை விட்டு அசையாமல், சொட் டுத் தண்ணீர் பருகாமல் அப்படியே அமர்ந்து இருந்தார்கள்.மக்களுடைய வேத னை களை நாம் எடுத்து உரைத்தோம். அதற்குப் பிறகு, மத்திய அரசு வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வை இடுவதற்காக அனுப்பி வைத்த குழுவினரும் இங்கே வந்தார்கள். இருப்பினும், முழுமையான நிவாரணம் கிடைத்து விடும் என்று கருத இடம் இல்லை.

அதற்கு முன்பு ஆறு நாள்கள் இந்த மாவட்டத்தின் வழியாக நாம் நடந்து வந் தோம். மதுவின் கோரப்பிடியில் சிக்கி நாசமாகிக் கொண்டு இருக்கின்ற தமிழ கத்தைக் காப்பதற்காகக் கால் கடுக்கத் தோழர்களும், நானும் நடந்து வந்தோம். அதைவிட நீங்கள் கஷ்டப் பட்டீர்கள்; நம்முடைய மாவட்டச் செயலாளர் அதற் காக ஆங்காங்கே ஒருங்கிணைப்புச்செய்து, உணவு வழங்கி, வருகின்ற வழி யெல்லாம் எங்கள் களைப்பைப் போக்கு வதற்காகக் குளிர்பானங்கள்,அவ்வப் போது சிற்றுண்டிகள் இவையெல்லாம் வழங்கி, எங்களை நீங்கள் பராமரித்து அனுப்பினீர்கள்.நம்முடைய டாக்டர் தமிழ்மணி அவர்களும், டாக்டர் ரகு அவர் களும், டாக்டர் சதன் திருமலைக் குமார் அவர்களோடு, முழுக்க முழுக்க எங் கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொண்டனர். அதன்பிறகு, காஞ்சி மண்டல நடைப்பயணத்துக்கும் வந்தார்கள், கொங்கு மண்டல நடைப் பயணத்துக்கும் வந்தார்கள்.

அந்த நடைப்பயணம் உங்களுக்குப் பெரும் பொருட்செலவை ஏற்படுத்தி இருக் கிறது என்பதை நான் அறிவேன்.அதனால்தான், மேலும் மேலும் உங்களிடம் வந்து கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. நான் உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டேன்.அதிகபட்ச கஷ்டங்களை எல்லாம் நாமே ஏற்றுக் கொள்வோம் என் பதற்காகத்தான், அதிகபட்சமாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்.எதற்கா க இவ்வளவு சிரமப்படு கின்றீர்கள்? உடல்நலம் கெட்டு விடக் கூடாதே என்ற கவலையோடு எல்லோரும் வந்து என்னிடம் கேட்கின்றார்கள்.

நான் என்ன நினைத்தேன் தெரியுமா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் போட்டி இடவில்லை; அதற்குப் பிறகு, இந்த இயக்கத்தை எப்படித் தொடர்ந்து
நடத்த முடியும் என்ற கேள்வி எழுந்த போது இந்த இயக்கத்தை இன்னும் வெற் றிகரமாக முன்னே கொண்டு போய் நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக் கின்றது; நமது தோழர்களை மேலும் கஷ்டப் படுத்தக் கூடாது என்று கருதித் தான், நான் உங்களுக்கு அதிக வேலை கொடுக்க விரும்பவில்லை.

நான் கஷ்டப்படுவதாக நினைக்க வில்லை; உழைக்க வேண்டும் என நினைக் கின்றேன். அதனால்தான், ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன். கரூர் மாநாடு முடிந்த 48 மணி நேரத்துக்கு உள்ளாக வட இந்தியாவுக்குப் படை எடுத்துச் சென்ற துணிச்சல் வேறு எந்தக் கட்சிக்கும் இருக்காது. (பலத்த கைதட்டல்).

கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து அங்கே நாம் நடத்திய போராட் டம், இந்தியாவின் மொத்தக் கவனத்தையும், ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அவனை இங்கு அழைத்து வருவது சரி அல்ல என்று, இன்றைக்கு வடபுலத்து மக்கள் சொல்லக்கூடிய நிலைமையை உரு வாக்கியது நாம் தான். அவனை மீண்டும் இங்கே அழைத்து வந்தால், பிரத மர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து, அப்படியே அந்தப் போராட் டத்தையும் நடத்தினோம்.

அதனால்தான், அன்றைக்கு தில்லியில் பிரதமரைச் சந்திப்பதாக அறிவித்து
இருந்த இராஜபக்சே-மன்மோகன் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. கட்டக் வழி யாக அவன் பீகாருக்குச் செல்லுகின்ற நிலைமையை ஏற்படுத்தியது மறும லர்ச்சி தி.மு.க.தான்.

பட்சி சோலை போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அன்றே, சேலத் தில் தீக்குளித்து இறந்த சகோதரன் வீட்டுக்குச் சென்றேன்.அக்குடும்பத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் நிதி கொடுத்தோம்.அங்கிருந்து இடிந்தகரைக்கு வந்தேன். போராட்டத்தில் இறந்த சகாயம் என்ற ஏழை மீனவர் குடும்பத்துக்கு நிதி வழங்கிவிட்டு, கடற்கரை மணலில் எங்களைப் புதைத்துக் கொண்ட போராட்டத்திலும் பங்கு ஏற்றேன்.

ஒருநாள் கூட ஓய்வு இல்லை.அடுத்தடுத்த நிகழ்வுகள். விவசாயிகள் போராட் டம், அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், மது ஒழிப்புப் போராட்டம், அதற்காக மூன்று நடைப்பயணங்கள்.ஏறத்தாழ, 1300 கிலோமீட்டர்கள் நடந்து இருக்கின்றோம்.

மூன்று தமிழர் உயிர் காக்க நடைபெற்ற பொதுக்கூட்டத்தை நாம்தான் ஏற்பாடு செய்தோம். அனைத்துத் தலைவர்களையும் வரவழைத்து நடத்தினோம். இடை யறாத நிகழ்வுகளால், இந்தக் கட்சியை நம்பிக்கை உள்ள இடத்துக்குக் கொண் டு வந்து சேர்த்து இருக்கின்றோம்.

தமிழக மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்.எனவே, மக்கள் இடையே நம் கட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது. நமது இயக் கத்தை இன்னும் உயர்ந்த இடத்துக்குக்கொண்டு செல்ல முடியும் என்ற நிலை யை ஏற்படுத்தி இருக்கின்றோம். நமது நடைப்பயணங்களில் வழிநெடுகிலும் தாய்மார்களின் வரவேற்பையும், அன்பையும் பெற்றோம். அதை உங்கள் பகுதி யில் நீங்களே பார்த்தீர்கள்.

அண்மையில் ஒரு பெரிய மனிதரைச் சந்தித்தேன். தி.மு.கழகத்தில் அரசியல்
வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு வேறு ஒரு துறைக்குப் போய்ப் புகழ் பெற்ற வர். அவர் சொன்னார்: நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். கடந்த தேர்தலில் நீங்கள் போட்டி இடாதது சரியான முடிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் உங் கள் கட்சி வளர்ந்து இருக்கின்றது என்றார்.

இந்தக் கட்டத்தில், நாம் சில அடிப்படையான செலவுகளை எதிர் கொள்ள வேண் டியது இருக்கின்றது.ராட்சச பலம் கொண்டவர்களிடம் நிதி ஆதாரங்கள் இருக்கின்றன. நம்மிடம் பணம் இல்லை. ஆயினும், நீங்கள் உடன் இருப்பத னாலே, நாடெங்கும் உங்களைப் போன்ற தோழர்கள் இருப்பதனாலே, என்னு டைய ஒவ்வொரு தோழனும் கோடிப் பொன்னுக்குச் சமம் என்ற நம்பிக்கை யில் நான் இருக்கின்றேன்.

நிதி கேட்கின்ற வேளையில்,கிராமங்களில் இருக்கின்ற விவசாயக் குடும்பங் களின் நிலைiயை எண்ணிப் பார்த்தால், மிகுந்த வேதனையாகத்தான் இருக் கின்றது.யாருக்கும் எதுவும் மிச்சம் இல்லை. தருகின்ற மனம் இருக்கின்றது; கையில் பணம் இல்லை. இருப்பினும் கூட, எத்தனைக் கட்சிக்காரர்கள் இல் லத் துக்கு வந்தாலும், உணவு தருவார்கள். இதற்கு இடையில்தான் நாம் நிதி திரட்ட வேண்டும்.

சோதனையான நேரத்தில் போய்க்கேட்கின்றோமே? யார் தருவார்கள்? என் றால், ஒன்றை நாம் சம்பாதித்து வைத்து இருக்கின்றோம். உங்களுக்கு எதற் குப் பணம்? என்று நம்மைப் பார்த்து யாரும் கேட்க மாட்டார்கள். அதுதான் நமக்குக் கிடைத்து இருக்கின்ற வெற்றி. இந்தக் கட்சி வென்றால், நாட்டுக்கு நல்லது என்ற எண்ணம் மக்கள் இடையே இருக்கின்றது. இவர்களுக்கு நாம்
கொடுக்கின்ற ஒவ்வொரு காசும், நல்ல காரியத்துக்குத்தானே பயன் படும்
என்ற நல்ல எண்ணம் இருப்பதனால், நீங்கள் போய்க் கேட்கின்றபோது முகம்
சுழிக்க மாட்டார்கள்; இயன்றதைத் தருவார்கள். எனவே, நீங்கள் அணுகுங்கள்.

இயக்கத்துக்குப் புதிய வரவாக இருக்கின்ற இளைஞர்கள், கணினிப்பொறியா ளர்கள், இணைய தளங்களில் இயங்குகிறவர்களுக்கு எல்லாம் நல்ல மனம் இருக்கின்றது.மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு நம்மைப் பற்றி நல்ல எண் ணம் இருக்கின்றது. அவர்களை அணுகிக்கேளுங்கள்; உறுதியாகத் தருவார் கள்.முறைப்படித் தேர்தல் என்றால் அது அடுத்த ஆண்டு இதே மாதத்தில் தான்
நடைபெற வேண்டும். ஒரு வேளை, மாயாவதி அல்லது முலாயம் யாரேனும்
ஒருவர் ஆக்சிஜன் டியூபைப் பிடுங்கி விட்டு விட்டால், எந்த நேரத்திலும் தேர் தல் வரலாம். குறிப்பாக, அக்டோபருக்குப் பிறகு, எந்த நேரத்திலும் தேர்த லை எதிர் கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.அதற்கான பணியாகத்தான், இங்கே இந்த நன்கொடைச் சீட்டுகளை வழங்குகின்றோம். எனவே, எவ்வளவு
முடியுமோ, அந்த அளவுக்கு நிதியைத் திரட்டித் தாருங்கள்.

இங்கே உரை ஆற்றிய நமது அருமைச் சகோதரர்கள் சிப்பிப்பாறை இரவிச்சந் திரன், ஞானதாஸ், வரதராஜன் ஆகியோர், எங்களால் எந்த அளவுக்கு நிதி வசூலில் உதவியாக இருக்க முடியுமோ, ஒன்றிய, நகர செயலாளர்கள் அழைக் கின்ற இடங்களுக்கு எல்லாம் வருகின்றோம் என்று சொன்னார்கள். அவர் களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளுங் கள். ஜூன் 18க்குள் நிதியை வசூலிக்க நான் வந்து விடுவேன். அதுவும் முதலில் விருதுநகருக்குத் தான் வர வேண்டும் என்று கருதுகிறேன்.கடைசி பத்து நாள் களில் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். ஒரு மாதம்தான், நான்கு வார காலம்தான் அவகாசம். கணக்கு வழக்குகளைச் சரியாகக் கையாண்டு,நிதியைத் தருவதுடன், மீதம் இருக்கின்ற நன்கொடைச் சீட்டு களை யும் ஒப்படையுங்கள்.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment