Saturday, June 8, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 7

பிரதமருடன் வைகோ சந்திப்பு!

இன்று (19.7.2006) காலை 10.30 மணி அளவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தில்லி பிர தமர் அலுவலகத்தில் சந்தித்தார். 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங் கைத் தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார். பிரதமரிடம் அவர் அளித்த கோரிக்கை, இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது:-

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, இலங்கை அரசால் ஏவி விடப்பட்டு உள்ள, ஆயுதப் படையின் திட்டமிட்ட இனப்படுகொலைத் தாக்கு தல்களால், இலங்கை வாழ் தமிழர்கள் சொல்லொணத் துயரத்துக்கும், துன்பத் துக்கும் ஆளாகி உள்ளனர். இதுகுறித்த நிகழ்வுகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
2001-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் விடுதலைப்புலி கள் போர் நிறுத்தத்தைத் தாங்களாகவே அறிவித்தார்கள்.அதற்குப் பின்னர், இலங்கை அரசு 2002- ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, அந்த முடி வை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுகளை நார்வே
அரசு முதலில் தொடங்கியது. ஆனால், மூன்று சுற்றுகள் பேசியதற்குப் பிறகு
இலங்கை அரசு அமைதிப் பேச்சுகளைச் சீர்குலைத்தது.

இலங்கை அரசின் இராணுவம், கடற்படை,விமானப்படை ஆகிய மூன்று படை களும் அங்கு வாழும் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதலைக்கட்டவிழ்த் து விட்டதன் விளைவாக, அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள். 2005-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 16-ஆம் நாள் 16 வய துடைய தர்ஷிணி என்ற தமிழ் பள்ளி மாணவி இலங்கைஇராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடுமை யை எதிர்த்துக் குரல் கொடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள் உயிர் இழந்தார்கள்.

2005 ஆம் ஆண் டு டிசம்பர் திங்கள் 24 ஆம்நாள் பேரதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்தநாட்டில் மிகவும் பிரபலமான ஜோசப் பாரராஜசிங்கம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், தேவாலயத்துக்கு உள்ளே கிறிஸ்துமஸ் பண் டிகை வழிபாடு செய்துகொண்டு இருந்தபோது, இராணுவ வீரர்களால் மிருகத் தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இலங்கை அரசு பொய்யான தகவல்களைச் சொல்லி, உலக நாடுகளைத் திசைதிருப்பி தன் வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இனவாத சிங்கள அரசுகள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்களுக்கு அடிப் படை மனித உரிமைகளைத் தர மறுத்து வருகிறது. வடக்கு-கிழக்கு மாகாணங் களில் வாழுகின்ற தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

சிங்கள அரசுக்கும், தமிழர்களுக்கும் இடையே 1957, 1965, 1987 ஆகிய ஆண்டு களில் ஏற்பட்ட அனைத்து உடன்பாடுகளும், அந்த நாட்டு அரசால் ரத்து செய் யப்பட்டன. இத்தகைய தமிழர் விரோதச் செயல்தான், தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளியது.

இராஜபக்சே அரசு முழுக்க முழுக்க புத்த பிட்சுகளின் கட்டுப்பாட்டிலும், சிங்கள மதவெறி இயக்கங்களான “ஜனதா விமுக்தி பெரமுன, சிகல உறுமய” ஆகிய, தமிழர்களோடு அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற இயக்கங்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும், அடிப்படை உரிமைகளோடு, கண்ணிய மாக வாழ ஏங்குகின்றனர். சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தரப் போவதாக நயவஞ்சகமாகப் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்து, உண்மை நிலை யையும், தங்கள் உள்நோக்கத்தையும் மறைத்து, பொய்யான வாக்குறுதி தந்து, இந்தியாவையும், உலக நாடுகளையும் ஏமாற்ற முயற்சிக்கிறது. இந்தியா இந் தச் சதிவலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இலங்கை அரசின் முப்படைத் தாக்குதல்களால், குண்டுவீச்சால், அப்பாவித்
தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருக்கி றார்கள். அவர்கள் பாதுகாப்பாக வந்து சேரவும், தக்க மனிதநேய உதவிகள் செய்யவும், இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நான் கடந்த ஓராண்டுக் காலமாகத்தங்களிடம் ஒரு கோரிக்கையை வலியுறுத் தி வந்து உள்ளேன். ஈழத்தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ்நாடாளு மன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வந்து, தங்களைச் சந்தித்து, அங்கு உள்ள நிலைமையை நேரில் விளக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் மூலம், அங்கு உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது நம்பிக்கை ஏற்பட வழி காண வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ள, இலங்கை அர சின் கைக்கூலியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு, இந்திய அரசு பரிவு காட்டி, இந்தியாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கச் செய்தது, எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத செயல் ஆகும்.

வரலாற்றுப் பிழையாக அமைய இருந்த இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு
ஒப்பந்தந்தத்தை இந்தியா செய்யக்கூடாது என்ற எனது வேண்டுகோளைக்கனி வோடு ஏற்று, அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினீர்கள். ஆனால்,இலங் கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக அந்த ரேடார்களை இந்திய அரசு திரும்பப்
பெற வேண்டும். இல்லையேல், தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும்
சிங்கள அரசுக்கு இந்திய அரசு உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்.

இலங்கைக்கு, இந்தியா எந்தவிதமான இராணுவ உதவிகளும் அளிப்பது இல் லை; இராணுவத் தளவாடங்களை விற்பதும் இல்லை என்று, 1998 இல் அனைத் துக்கட்சிக் கூட்டத்தில் இந்திய அரசு எடுத்த முடிவை, உறுதியாகவும், உண்மை யாகவும் செயல்படுத்த வேண்டும்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

(இவ்வாறு,பிரதமரிடம் அளித்த கடிதத்தில்,வைகோ கேட்டுக்கொண்டு உள்ளார்.)

மேலும் பிரதமரிடம் வைகோ நேரில் தெரிவித்ததாவது:

தமிழ் நாட்டில் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக இருப்பவரும், சிங்கள
அரசின் ஏஜெண்டாகச் செயல்படுபவருமான டக்ளஸ் தேவானந்தா, அண்மை யில் இந்தியாவுக்கு வந்து, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அவர் களையும், வெளியுறவுச் செயலர் சியாம் சரண் அவர்களையும் சந்தித்ததோடு, செய்தியாளர்கள் கூட்டத்தையும் கூட்டி, அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

இந்திய அரசு இதை எப்படி அனுமதித்தது?

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுகிறது என்ற எண்ணத்தை யே இந்த நடவடிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க அனுமதிக்கக் கூடாது என்று வைகோ கூறினார்.

இதற்குப் பிரதமர், ‘இந்தப் பிரச்சனை இதுவரை தன் கவனத்துக்கு வரவில்லை’
என்றும், இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல, சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படுகின்ற ஓரிருவர், தமிழ் நாட்டில் அகதிகள் முகாமிலும், கடலோரப் பகுதிகளிலும், சிங்கள அரசுக்கு ஆதரவான கைக்கூலிப் படைக்கு, பணம் கொடுத்து ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், அப்படிப்பட்ட ஒரு நபர் அண்மையில் பெங்களூரில் கைது செய்யப்பட்டு, உடனே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசு இந்தப் பின்னணியில் செயல்பட்டதாகவும் வெளியாகி உள்ள செய்தி கவலை அளிப்பதாக வைகோ பிரதமரிடம் கூறினார்.

“இதுமாதிரியான நடவடிக்கைகளுக்கு அரசு உறுதியாக இடம் அளிக்காது என் றும், இதுகுறித்து உடனடியாக தகுந்த முறையில் விசாரிக்கிறேன்” என்றும்
பிரதமர் உறுதி அளித்தார்.

நளினி-முருகன் ஆகியோரின் மகள் அரித்ரா, மனிதாபிமான அடிப்படையில்
தமிழ் நாட்டுக்கு வந்து தன் பெற்றோரைப் பார்க்கவும், இந்தியாவில் கல்வி பயி லவும் இந்திய நுழைவு உரிமை கொடுக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டபோது, “இதைக் கவனிக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், “உங்களுக்குத்தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் செய்து தரு கிறேன்” என்று பிரதமர் கூறியபோது, “எனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம்; நான் பொதுமக்களுள் ஒருவனாக நடமாடிக் கொண்டு இருப்பவன். உங்களு டைய பரிவுக்கு நன்றி” என்று வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் வைகோ, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் திரு
எம்.கே. நாராயணன் அவர்களைச் சந்தித்து, இலங்கை நிலவரம் குறித்துப்
பேசினார்.

‘தாயகம்’ தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment