Friday, June 14, 2013

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை செயற்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு! - வைகோ அறிக்கை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜூன் 12 இல் மேட்டூர் அணை யில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை எண்ணி, காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். தென்மேற்குப் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 52 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தால் தான் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியும். ஆனால், தற்போது வெறும் 3.53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் ஜூன் மாதத்தில் அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்திற்கு மிக முக்கிய மான காலமான ஜூன், ஜூலை, ஆகÞடு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங் களில், நீர்ப்பாசனத் தேவைக்காக தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் 134 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நடுவர்மன்றம் சரியான உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது.
ஆனால், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக மாநிலம் அடாவடித்தனமாக நடந்து கொண்டு இருக்கின்றது. டெல்லி யில் ஜூன் 1 மற்றும் ஜூன் 12 இல் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டங்களில், கர்நாடக மாநில அரசின் சார்பில் வைக்கப்பட்டு உள்ள கோரிக் கைகள், அரசியல் சட்டப்படி அதிகாரம் மிக்க காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உதாசீனப்படுத்துவதாக இருக்கின்றன.


ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில், நடு வர்மன்றம் இறுதித் தீர்ப்பில் அளித்த உத்தரவின்படி, ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய நீரின் அளவான 134 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்றும், 97.82 டி.எம்.சி.தான் தரமுடியும் என்றும் கர்நா டகம் அக்கிரமமான முறையில் கூறி இருக்கின்றது. மேலும், வறட்சிக் காலத் தில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள நடுவர் மன்றம் அளித்து உள்ள உத்தரவை யும் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கின்றது.

1990 ஆம் ஆண்டு ஜூன் 2 இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 17 ஆண்டுகளாக, காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பான அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட காவிரிப் பாசன மாநிலங்களின் நீர்த் தேவைகள், பற்றாக்குறை காலங்களில் நிலவும் சூழல்கள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் 2007, பிப்ரவரி 5 இல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

காவிரி நடுவர்மன்றம் சுட்டிக்காட்டியவாறு இறுதித் தீர்ப்பை நடைமுறைப் படுத்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு, அமைத்து இருக்க வேண்டும்.

ஆனால், மத்திய காங்கிரÞ கூட்டணி அரசு, ஆறு ஆண்டுகாலம் தாமதம் செய்து, உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்ட பிறகுதான், இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசு இதழில் வெளியிட் டது. அதன்பிறகும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுவை அமைக்காமல் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்காக மத்திய காங்கிரÞ அரசு, தமிழகத்திற்குத் துரோகம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு அமைத்து உள்ள காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எந்த விதமான சட்ட அதிகாரமும் கிடையாது. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயற்படுத்தாமல் இருக்க வும், காவிரியில் தமிழகத்தின் பங்கு என நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைத் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் இழுத்தடிக்கவும்தான் காவிரி மேற்பார் வைக்குழு நடத்தும் கூட்டங்களை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும்.

இதனால் பாதிக்கப்படுவது தமிழக விவசாயிகள்தான்; ஜூன் 12 அன்று கூட்டத் தில் தமிழ்நாட்டின் கோரிக்கையான 6.6 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நா டகத்திற்கு உத்தரவிட முடியாது என்று, காவிரி மேற்பார்வைக்குழு கூறிவிட் டது. இதன்மூலம் தற்போது அமைக்கப்பட்டு உள்ள காவிரி மேற்பார்வைக் குழுவின் மூலம், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப் படுத்த முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

கர்நாடகத்தில் காவிரி நீரைத் தேக்கி வைத்து உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளை, தம் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்து இரு மாநிலங்களின் தண்ணீர்த் தேவையைக் கண் காணித்து காவிரியில் நீரைத் திறந்துவிடும் சட்ட அதிகாரம் காவிரி மேலாண் மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழுவுக்கு மட்டுமே உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் வேளாண்மையைப் பாதுகாத்திட, காவிரி டெல்டா விவசாயிகளின் துயரத்தைப் போக்கிட மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்புக்குழு இரண்டு அமைப்பு களை யும் நிறுவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                                            வைகோ
சென்னை - 8                                                                                           பொதுச்செயலாளர்
14.06.2013                                                                                                  மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment