Thursday, June 20, 2013

மரங்கள் வெட்டுவதற்கு மட்டுமா ! நடுவதற்கு இல்லையா ?

சாலை வசதிகளுக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மீண்டும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டாமா ...

அரசு துறைகளை அதை கடைபிடிக்கவில்லை என்பது உண்மை ...

கடந்த வருடம் கோவை மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த இப்போது மாநில இளைஞர் அணி செயலாளராக செயல்படும் திரு.ஈஸ்வரன் அவர்களை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறையிடம் பல கேள்விகளை எழுப்பினார் அதற்கு நெடுஞ்சாலை துறை தந்த பதில்கள் விவரம் இதோ:-


திரு.ஈஸ்வரன் :- கோவை மாவட்டத்தில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை களின் மொத்த நீளம் எவ்வளவு ?

நெடுஞ்சாலை துறை :- கோவை (தே.நெ ) கோட்ட கட்டுபாட்டில் உள்ள சாலை தே.நெ.எண்- 209 திண்டுக்கல் -பெங்களூர் சாலை கி.மீ 100/2 - 205 /6 = 105.4

திரு.ஈஸ்வரன் :- கோவை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை களில் தற்போதுள்ள மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

நெடுஞ்சாலை துறை :- 7177 எண்ணிக்கை

திரு.ஈஸ்வரன் :- கடந்த 5 ஆண்டுகளாக சாலை அபிவிருத்தி பணிகளுக்காக கோவை மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை மரங்கள் வெட்டப்பட் டுள்ளது ?

நெடுஞ்சாலை துறை :- கடந்த மூன்று ஆண்டுகளில் மரங்கள் எதும் வெட்டப் படவில்லை. 2010 - 11 மற்றும் 2011 - 12
௦1. தே.நெ.எண் 209 - 53 மரங்கள்
2. தே.நெ.எண் 67 கி.மீ 340 / 0 - 360 / 0 - 898 மரங்கள்

திரு.ஈஸ்வரன் :-கடந்த 5 ஆண்டுகளாக மரங்கள் வெட்டப் பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு ?

நெடுஞ்சாலை துறை :- ரூ. 37,21,950/-

திரு.ஈஸ்வரன் :- கடந்த 5 ஆண்டுகளாக மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை எத்தனை மரக்கன்றுகளை நட்டுள்ளது ?

நெடுஞ்சாலை துறை :- மரக்கன்றுகள் ஏதும் நடப்படவில்லை.

திரு.ஈஸ்வரன் :- எந்தெந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளது ?

நெடுஞ்சாலை துறை :- மரக்கன்றுகள் ஏதும் நடப்படவில்லை.

திரு.ஈஸ்வரன் :- நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க கடந்த  5 ஆண்டுகளாக என்ன செலவு செய்யப்ப்பட்டது ?

நெடுஞ்சாலை துறை :- ஏதுமில்லை

திரு.ஈஸ்வரன் :- நட்ட மரக்கன்றுகள் யாரால் பராமரிக்கப் படுகிறது ?

நெடுஞ்சாலை துறை :- மரக்கன்றுகள் ஏதும் நடப்படவில்லை.

திரு.ஈஸ்வரன் :- புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு கடந்த 5 ஆண்டுகளாக என்ன செலவு செய்யப்பட்டது ?

நெடுஞ்சாலை துறை :- ஏதுமில்லை

திரு.ஈஸ்வரன் :- கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைத் துறை எத்தனை மரங்களை வெட்டியது ?

நெடுஞ்சாலை துறை :- ௦தே.நெ.எண் 209 - 53 மரங்கள் , தே.நெ.எண் 67 கி.மீ 340 / 0 - 360 / 0 - 86 மரங்கள் = மொத்தம் 139 மரங்கள்

திரு.ஈஸ்வரன் :- கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைத் துறை எத்தனை மரக்கன்றுகளை நட்டுள்ளது ?

நெடுஞ்சாலை துறை :- ஏதுமில்லை

மேலே உள்ள கேள்விகளும் பதில்களையும் பார்க்கும் போது மரங்களை வெட்டுவதில் ஆர்வம் காட்டும் நெடுஞ்சாலைத் துறை , நடுவதில் ஆர்வம் காட்டவில்லை .....

மரங்களை வெட்டி காசாக்க தெரிந்தவர்களுக்கு , மரக்கன்றுகளை நடுவதற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்க வில்லை...

இது தான் அரசு நிர்வாகத்தின் லட்சணம் .....

உண்மையை வெளி கொண்டுவந்த மதிமுகவின் இளைஞர் அணி செயலாளருக்கு நன்றி ...



ஆவணங்களை கொடுத்தவர் :-கோபாலகிருஷ்ணன் இளஞ்சேரன் (நன்றி )

No comments:

Post a Comment