Saturday, June 22, 2013

என்.எல்.சி. பங்குகள் விற்பனை- வைகோ கண்டனம்

என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை: வைகோ கண்டனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச் சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
ஆண்டுக்கு ரூ.1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு களை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரÞ கூட்டணி அரசின் உண்மையான நோக் கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான். மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின் சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும்.

நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி, இன்னும் பல்வேறு ஊழல் களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக்கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும்.

‘தாயகம்’                                                                                                     வைகோ
சென்னை - 8                                                                                    பொதுச்செயலாளர்
22.06.2013                                                                                            மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment