வறட்சி நிவாரனம் பற்றி வேளாண்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கத் திற்கு மறுப்பு அறிக்கை.
கி.வே.பொன்னையன்-அமைப்பாளர்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்.
13/06/2013 அன்று வேளாண்துறை அமைச்சர் மாண்பு மிகு தாமோதரன் அவர்கள் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் பற்றி விவசாயிகள் சார்பில் நாங்கள் சில உண்மைகளை தெரிவிக்க விரும்பிகிறோம்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல பகுதிகளில் வறட்சி நிவாரணம் கொடுத் துள்ளது வரவேற்க்கத்தக்கது. ஆனால் வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம் முழு மையான வகையில் இல்லை என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக ஈரோடு மாவட்டத்தில் சக்தி,கோபி,பவானி,அந்தியூர், பெருந் துறை, ஈரோடு ஆகிய 6 வருவாய் வட்டங்கள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம் ரூ 25 கோடியாகும். இதில் பெருந்துறை தாலூக்காவிற்கு மட்டும் சுமார் 20 கோடியை வழங்கி விட் டனர். மீதியுள்ள 5 தாலூக்காவிற்கும் சேர்த்து ரூ 5 கோடிதான் வழங்கப்பட் டுள்ளது..
வறட்சி நிவாரணம் முறையாக பயிர் செய்தது பற்றிய வருவாய்த்துறைக் கணக்கீடுகளிலிருந்து கொடுக்கப்பட்டதாக வேளாண்துறை அமைச்சர் கூறு கிறார். ஆனால் இவ்வாறு நடக்கவில்லை வருவாய்த்துறை மேலதிகாரிகள் ஒரு கணக்கை தயாரித்துக் கொடுக்க வேண்டி கிராம நிருவாக அலுவலர் களுக்கு வழிகாட்டல் தந்து மேலதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் அவசர, அவசரமாக ஓரிரு நாட்களில் கணக்குகள் உருவாக்கப்பட்டு அதனடிப் படை யில் தான் வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான மதிப்பீட்டு அடிப்படையில் வறட்சி நிவாரணம் வழங்க்கப்படவில்லை என்பதுதான் உண்மையாகும்.
மேலும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெட்ட வெளிச்சமாக ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 9 லட்சம் விவசாயிகள் விவ சாயத் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர் என்று தெரிவிகின்றது. விவ சாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டதனால் இனியும் நிலத்தை நம்பி வாழ முடியாது என்று வேளாண் தொழிலை கைவிட்டவர்கள்தான் இதில் மிக அதிகமாக இருக்கின்றார்கள்.
ஆனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறி யுள்ளனர் என்று வேளாண்துறை அமைச்சர் கூறுகிறார். அப்படியானால் விவ சாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 10 லட்சம் அதிகரித்துள்ளது. எப்படியெனில் விவசாயத்தை விட்டு நிலத்தை இழந்து விவ சாயிகள் விவசாயக் கூலிகளாக மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப் படையான உண்மையாகும். வேளாண்துறை அமைச்சர் தெரிவிப்பதைப் போல் பெரும்பான்மையான விவசாயிகள் தொழில்துறை வளர்ச்சியினால் உள்வாங் கப்பட்டிருக்கிறார்கள் என்பது தவறானதாகும்.
திரு வைகோ அவர்கள் வறட்சி நிவாரணம் பற்றியும் இன்றைய வேளாண் தொழில் நெருக்கடி பற்றியும் கூறியுள்ள செய்திகள் மனம் போன போக்கில் கூறியவை அல்ல . உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறியதாகும்.

வேளாண் அமைச்சர் உண்மைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத் தால் அது விவசாய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாறாக வைகோ அவர்கள் கூறியுள்ள கருத்தை அவதூறு செய்வது சரியல்ல ஜனநாயக மரபும் அல்ல என்பதை உழவர்கள் சார்பில் வேதனையுடன் தெரிவித்துக் கொள் கின்றோம்.
முறையாக கணக்கெடுப்புகள் செய்து விடுபட்டுள்ள அனைத்து விவசாயி களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டு மாய் கேட்டுக் கொள்கின்றோம்..

No comments:
Post a Comment