தமிழகத்து இளைஞன்,கரிகாலன் வழி வந்தவன்,இராஜராஜன் வழி வந்த வன், பராந் தகன் வழி வந்தவன், இராஜேந்திரன் வழி வந்தவன், வருண குலத்தான் வழி வந்தவன், உன் நாட்டின் மீது படையெடுத்து வென்ற இனத்துக்காரன், உன்னைத் தேடி வந்து உதைக்கிற காலம் வரும்.-வைகோ (6.2.2011 )
உப்புக்கடல் சூழ்ந்த இந்த உருண்டை உலகத்தில்,ஒரு தீபகற்பமாகக் கருதப்படு கின்ற இந்தியத் துணைக்கண்டத்தில், 1076 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடற் கரையைக் கொண்டு இருக்கின்ற தாய்த்தமிழகத்தில், இந்த அலைபாயும் கட லோ ரத்தில்தான் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. கொற்கைத் துறைமுகம் இருந்தது. நாகையிலும் துறைமுகம் இருந்தது.
கடல்கடந்த நாடுகளுக்கு இங்கே இருந்து நாவாய்கள் சென்றன.சீனத்தில்இருந் தும், யவனத்தில் இருந்தும், எகிப்தில் இருந்தும், ரோமாபுரியில் இருந்தும் மரக் கலங்களில் பொருள்கள் வந்து குவிந்தன. இங்கு விளைந்த மிளகை, அகிலை, யானைத்தந்தத்தை,தமிழகம் வாரிக்குவித்த பொருள்களை, அந்த மரக்கலங் களில் தூர தேசங்களுக்குத் தமிழர்கள் அனுப்பி வைத்தார்கள். கடலுக்குள் புதைந்து கிடக்கின்ற சிப்பிகளுக்கு உள்ளே இருந்து முத்துகளை அள்ளி எடுத் தார்கள். மன்னர்களின் மணிமகுடங்களை, மங்கையரின் அழகு சங்குக் கழுத்து களை அலங்கரிக்கின்ற முத்துகளை அகிலத்துக்கே தந்தார்கள்.
இத்தனைச் சிறப்புகளையும் கொண்டு இருந்த தமிழர்களுக்கு வலுவான கப்பல் படையும், கடல்படையும் தேவை என்று, இந்த நாகை உள்ளிட்ட பகுதியை ஆண்டு கொண்டு இருந்த சோழ மன்னர்கள் தீர்மானித்தர்கள்.அப்படி அவர்கள் அமைத்த கடல்படை, கப்பல் படை மிகுந்த வலிமை வாய்ந்தது என்று பண்டித ஜவஹர்லால் நேரு,தமது பிரிய மகள் இந்திராவுக்கு,அஹமத் நகர் கோட்டைச் சிறையில் இருந்தும், நைனிதால் சிறையில் இருந்தும் எழுதிய கடிதங்களில் சொல்லுகிறார்.
தெற்கே வலுவான ஒரு பேரரசு இருந்தது; அதுதான் சோழப்பேரரசு; யுத்தத்துக் குப் பயிற்றுவிக்கப்பட்ட போர் யானைகளையும் சுமந்து செல்கின்ற அளவுக்கு, மிக வலிமை வாய்ந்த அவர்களுடைய கப்பல்கள் திகழ்ந்தன என்று அவர் எழு திய அழியாத இலக்கியம், ‘ உலக சரித்திரக் கடிதங்கள்’ என்று பெயரிடப்பட்டு, இன்றைக்கு உலகத்தின் அத்தனை நூலகங்களிலும் வைக்கப்பட்டு இருக் கின்றது.
ஏன், நான் பண்டித நேருவின் வாதத்தை சாட்சியத்துக்கு அழைத்தேன் என் றால், நான் தமிழர்களின் தற்பெருமை பேசுவதாக எவரும் கருதிவிடக் கூடாது. அத்தகைய பலம் வாய்ந்த கப்பல் படையைக் கொண்டு இருந்த சோழர்கள், கடல் கொள்ளைக்காரர்களை அடக்கினார்கள்.தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாதுகாத்தார்கள் ஆப்பிரிக்கக்கண்டத்தின் நன்னம்பிக்கை முனையில் இருந்து, ஆஸ்திரேலியக் கண்டம் வரையிலும், புலிக்கொடி தாங்கிய சோழர்களின் போர்க்கப்பல்கள், கடல் கொள்ளைக்காரர்களை நடமாட விடவில்லை.
இத்தகைய சரித்திரப் பெருமை வாய்ந்த தாய்த்தமிழகத்து மீனவன், இன்றைக்கு இந்தக் கடலில் நாதி அற்றவனாகச்சுட்டுக் கொல்லப்படுகிறான். அம்மணமாக் கப்பட்டுக் கடலில் துhக்கி எறியப்படுகிறான். இந்த நிமிடம் வரையிலும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கேள்வி கேட்பார் இல்லை என்ற
எண்ணத்தில் இந்திய அரசு இருக்கிறது. கொலைபாதகன் ராஜபக்சே படை களை ஏவுகிறான்.
தமிழக மீனவர்களின் கண்ணீருக்கு அளவே இல்லாமல் போயிற்று. இங்கே
உரை ஆற்றிய ஊராட்சி மன்றத்தலைவி,மீனவ சமுதாயத்தைச்சேர்ந்த அன்புத் தங்கை ஆகட்டும்,இராமேஸ்வரத்தில் இருந்து வந்து இருக்கின்ற மீனவர்
அமைப்புகளின் தலைவர் ஆகட்டும், நாங்கள் வாழவே முடியாதா? கடலை நம்பித்தானே வாழ்கிறோம்? எங்களுக்குப் போக்கிடம் ஏது? எங்கள் வயிற்றுப் பசியைத் தணிக்க வழி ஏது? என்று, கொதித்தார்கள்.
தம்பி, தமிழன் வடித்த கண்ணீரால்தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது என்று அண்ணா சொன்னதை, திராவிட இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறார்கள். அண்ணா அவர்களே, இதே கடல் அலை களின் ஓசை எழுகின்ற வங்கக்கடற்கரையில்தான் நீங்கள் மண்ணுக்கு உள் ளே, சந்தனப் பேழையில் புதைந்து இருக்கிறீர்கள். அண்ணா அவர்களே, இன்று
தமிழனின் கண்ணீர் மட்டும் அல்ல, தாய்த் தமிழகத்து மீனவனும், ஈழத்தமிழர் கள் சிந்திய செங்குருதியும் இந்தக் கடலில் கலந்து விட்டது.
இந்தக் கொடுமையைத்தடுத்து நிறுத்த,அடுத்த களங்களுக்கு ஆயத்தமாக, நாதி அற்றுப் போய்விடவில்லை தமிழகத்து மீனவர் குலம், நாங்களும் உங்கள் துய ரத்தில் பங்கு ஏற்கிறோம் என்பதற்காகத்தான்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம், இங்கே அறப்போர்க்களம் அமைத்து இருக்கிறது. இந்தப் போராட் டம் இத்தோடு முடிந்து விடாது. இது வெறும் எச்சரிக்கை செய்வதற்காக.
நான் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தபோது,அனைத்திந்திய அண் ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், அருமைச் சகோ தரி டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள், அந்த நிமிடத்திலேயே, எங்கள் மீனவர் அணியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் கலைமணி அவர்களை நான்
அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.அதன்படி,இந்த அறப்போரை நிறை வு செய்து வைக்க அவர் இங்கே வந்து இருக்கிறார்.
இந்தக் கடற்கரை ஓரத்தில் இருந்து, இலட்சக்கணக்கான மீனவ மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம், தோள் கொடுக்கிறோம் என்ற செய்தியைச் சொல் லுவதற்கு ஏற்ற வகையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெற்றி கரமாகச் செய்து தந்து இருக்கின்ற நாகை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்,ஆரு யிர்ச் சகோதரர் அரிமா மகாலிங்கம் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக் கிறேன்.
இன்று காலையில், இந்த அறப்போரைத் தொடங்கி வைத்த அன்புத் தோழர் தா. பாண்டியன் அவர்கள், சிந்தனையைக் கூர் தீட்டக் கூடிய வகையில் அரியதோர்
உரை ஆற்றி விட்டுச் சென்றார். பொது உடைமை இயக்கத் தோழர்கள், இங்கே திரளாக வருகை தந்து இருக்கின்றார்கள். தோழமை உணர்வோடு, கைத்தறி
ஆடைகளை அணிவித்து, மார்ச்சிஸ்ட் தோழர்களும் வாழ்த்தினார்கள். மீனவ சமுதாயத்தினரும் பெருமளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.
இன்று காலையில் இருந்து பங்கேற்று தங்களை வருத்திக்கொண்டு இருக்கின் ற அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். நேற்று பொன்னமராவதி
முத்தமிழ் மன்றத்தில், ‘நெஞ்சை அள்ளும் சிலம்பு’ என்ற தலைப்பில், இரண்டு மணி நேரம் உரை ஆற்றிவிட்டு, நடுநிசி வேளையில் பயணித்து, புலவர் செவந் தியப்பன் அவர்கள் உடன்வர, சீர்காழி மார்கோனி அழைத்து வர,விடியற்காலை மூன்றரை மணிக்கு, இந்த மைதானத்துக்கு வந்தேன்.
நான் வருகிறபோது, மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர் மகாலிங்கம் அவர்களும், நகரச்செயலாளர் அபிராமி கனகசபை அவர்களும், அருமைத்தம்பி கள் ரகு, ஸ்ரீதரன், முகுந்தன், கார்த்திக்,பால்ராஜ் உள்ளிட்ட கழகத்தின் கண்மணி களும், நம்முடைய தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் குருநாதன்
அவர்களும், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச்செய்கின்ற பணிகளில் ஈடு பட்டுக் கொண்டு இருந்தார்கள். கொடிகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். தோரணங்களை அமைத்து, மேடையை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தார் கள். அதற்குப் பின்னரும்கூட,அவர்கள் ஓய்வு எடுத்து இருக்க வாய்ப்பு இல் லை. நான் அதன்பின்னர், இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்து, ஆறு மணியில் இருந்து செய்தித்தாள்களைப்படித்து விட்டு, 8.15 க்கு இந்த மேடைக்கு வந்தேன்.
நம்முடைய தோழர்களும், மீனவ சமுதாயத்தின் சகோதர,சகோதரிகளும் திரண்டு வந்து இருக்கிறார்கள். பந்தல் போதாதே என்று கருதினேன். ஆனால், இயற்கை அன்னை எங்களுக்கு ஒத்துழைக்கின்ற வகையில்,வானமே கூரை யாக, நம்மீது வெயிலின் உக்கிரம் பாய்ந்து விடாதபடிக்கு, மஞ்சுக்கூட்டம் பாது காப்பாக நின்று, இந்த நிகழ்ச்சிக்கு இயற்கையாக ஒத்துழைப்புத் தந்து இருக் கிறது. காலையில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து செல்லாத என் தங்கை களைப் பார்க்கிறேன்.
உங்களைப் போன்ற ஒரு தங்கை கயல்விழி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனா ரின் பேத்தி, இதோ அலைகடலுக்கு அப்பால் இருக்கின்ற நம் சகோதரர்களை, சகோதரிகளை, முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றார்களே, அவர்களைச் சந்தித்து விட்டு வந்து என்னிடம் சொன்னார்.அண்ணா பட்டினி போட்டுக் கொல்லுகிறார்கள் அண்ணா. ஒரு நான்கு வயதுக் குழந்தை ரொம்ப சோர்வாக இருந்தது. எங்களை யாருடனும் பேச விடவில்லை. இராணுவமும், போலீசும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டு இருந்தார்கள். அந்தப் பச்சைக்குழந்தையிடம், சாப் பிட்டாயா? என்று கேட்டேன். நேற்றுக் காலையில் சாப்பிட்டேன் என்று

சொன் னது.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொ டுத்தோரே என்று அட்சய பாத்திரத்தை ஏந்திய மணிமேகலை பிறந்த தமிழ்க் குலமா? செந்நெல் வயல்கள் செழித்துக் கிடந்த சோழத் திருநாடா? ஆசியக்கண் டத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சைத் தரணியா? இன்றைக் குத் தமிழன் பட்டினி கிடக்கிறான். சோறு கிடையாது, பால் கிடையாது, காயங் களுக்கு மருந்து கிடையாது. நாதி இல்லை. தமிழர்களின் வீடுகளில், சிங்கள வர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகிறான்.
தங்கை கயல்விழி மேலும் கூறும்போது,“மருத்துவமனைக்குச் சென்றேன், நம து தலைவரின் தாயார் அன்னை பார்வதி அம்மையாரைப் பார்க்கப் போனேன். அவர்களுக்கு நினைவு இல்லை என்றார்கள்.நாங்கள் அருகில் சென்றோம். நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன், தலையை நிமிர்ந்து எங்களைப் பார்த்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வடித்தார்” என்று சொன்னார். நேற்று அண்ணன் நெடுமாறன் அவர்கள்,என்னைத்தொலை பேசியில் அழைத்து, வைகோ, அம்மா மிகவும் உடல் நலிந்துவிட்டார்கள்என்று சிவாஜிலிங்கம் சொன்னார் என்றார்.
தங்களை நாடி வந்தவர்களை மனிதநேயத்தோடு வாழ வைத்தவர்கள் நமது முன்னோர்கள். அந்தத் தாய் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு அனுமதிக்க வில்லை கருணாநிதி கூட்டம். வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினார் கள். அவர்களைச் சந்தித்து விட்டு வந்த சகோதரி கயல்விழியை, சிங்கள இரா ணுவம் கைது செய்தபோது, பிரதமரிடம் தொலைபேசியில் பேசி, பத்திரமாக மீட்டுத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். மறுநாள் பிரதமரைச் சந்தித் தபோது, தமிழக மீனவர்கள் அடுத்தடுத்துத் தாக்கப்படுகிறார்கள். ஆயிரம் தட வைகளுக்கு மேல் தாக்கி விட்டார்கள் என்று நான் சொன்னபோது, நமது மீன வர்களும் எல்லை கடந்து போகிறார்களே? என்றார் பிரதமர்.
நான் உடனே கேட்டேன், ‘கடலில் ஏதாவது கோடு கிழித்து வைத்து இருக்கிறீர் களா? மிதவைகளைப் போட்டு ஒளிரச் செய்து எல்லை வகுத்து இருக்கிறீர்

களா? குஜராத் மீனவர்களும் எல்லை தாண்டிப் போகிறார்களே?’ என்றேன்.
உடனே சொன்னார், ‘அவர்களையும்தான் பாகிஸ்தான் கடற்படை கைது செய் கிறதே?’ என்றார்.
பாகிஸ்தான் கடற்படை அவர்களைச் சுட்டதா? என்று கேட்டேன். அடித்தானா? துன்புறுத்தினானா? இல்லையே. எங்கள் தமிழக மீனவர்களை, ஆயிரம் தட வை களுக்கு மேல் அடித்து விட்டான். 500 க்கும் மேற்பட்டவர்களைச் சுட்டுக் கொன்று விட்டான்.இந்தியக் கப்பல் படைக்கு நாங்களும் வரி கொடுக்கிறோ மே? அது எங்கள் மீனவர்களைப் பாதுகாக்கவில்லையே? என்று கேட்டேன்.
இந்தக் கேள்வி, தமிழகத்து மீனவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, இளைஞர்கள் உள்ளத்திலும் எழுந்து விட்டது.‘நாங்கள் இந்தியாவின் குடிமக்களா? என்று கேட்கிறார்கள். இந்தியக் கடற்படை எங்கள் கடற்படையா?
எச்சரிக்கிறேன் இந்திய அரசை. வருங்காலத்து இளைஞர்கள் என்னைப் போல இப்படி கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். உன்னுடைய ஒருமைப்பாடு தூள்தூளாகிப் போய் விடும். இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற ஆயுத உதவி செய்தோம் என்று சொன்னார்கள். இந்திய ஒருமைப்பாட்டைப்
பலியிட்டு விடாதீர்கள் என்று சொன்னேன்.
இன்றைக்கு அதுதானே நிலைமை?இங்கே மீனவ சகோதரர்களோடு வந்த ஒரு தம்பியைப் பார்த்து, நீங்கள் பாடி பில்டரா? என்று கேட்டேன். அவர், இல்லை
அண்ணா. நாங்கள் கடல் தொழிலுக்குப் போகிறவர்கள் அண்ணா, மீன்பிடிக் கிறோம், கடலில் படகு செலுத்துகிறோம், துடுப்புப் போடுகிறோம் அண்ணா
என்றார். அப்படி இரும்பை விட வலிய கரங்கள் மீனவர்களின் கரங்கள். தெரிந் து கொள்ளுங்கள்.அவர்களுடைய உடலிலும் வலு உண்டு, உள்ளத்திலும் உரம் ஏறியவர்கள். சூறைக்காற்றுக்கு அஞ்சாதவர்கள், சுறா மீன் தாக்குதலைக் கண் டு பயப்படாதவர்கள்.பனைமர உயரத்துக்கு அலைகள் எழுந்தாலும், மரணத் தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். கவிஞர் அல்லாமா இக்பால் சொன்ன தைப் போல, அலைகடல் அவர்களுக்குப் பந்தய மைதானம்.
அப்படிப்பட்ட எங்கள் மீனவர்களை, நீ நாள்தோறும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாய். ஜெகதாப்பட்டினம் பாண்டியன், 12 ஆம் தேதி இலங்கைக் கடற் படையால் படுகொலை செய்யப்பட்டார்.நான் பிரதமரைச்சந்தித்தபோது சொன் னேன். அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் அருகில் இருந்தார். அவர் உடனே சொன்னார், பாண்டியனை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுக்கிறதே? என்றார். அவர் மீது எனக்கு இருந்த
கோபத்தையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டு சொன்னேன், இலட்சக்க ணக்கான தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, அதையே மறைக்கப் பார்க் கிறானே? அவனைக் கொண்டு வந்து விருந்து வைக்கிறீர்கள்? எப்போது அவர் கள் உண்மை பேசினார்கள்? என்று கேட்டேன்.
மீனவர்கள் படுகொலைக்கு இந்திய அரசுதான் பொறுப்பு.இந்தியக் கடற்படை அவர்களைப் பாதுகாக்கவில்லை,கடமையைச் செய்யவில்லை என்று சொன் னேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டேன்.உடனே பிரத மர், நாங்கள் என்ன செய்ய முடியுமோ, இலங்கை அரசோடு பேசி உடனே நட வடிக்கை எடுக்கிறேன் என்றார். இது 22 ஆம் தேதி.
மறுநாள் காலையில் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். புஷ்பவனத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார் என்பதைக்கண்டு பத றிப் போனேன்.அவரோடு மீன் பிடிக்கச் சென்ற செந்தில், இராஜேந்திரனும் கட லில் குதித்துத் தப்பினார்கள். உயிர் இழந்த பரிதாபத்துக்குரிய தம்பி ஜெயக் குமார், சுனாமியால் பாதிக்கப்பட்டதில், கையில் ஊனம் ஏற்பட்டு நீந்த முடியா தவர். எனவே, கையெடுத்துக் கும்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்தக் கொலை காரர்கள் அவரது கழுத்தில் சுருக்குக் கயிறைக் கட்டி, அவர்களது படகில் இருந்து சுற்றிப் பிடித்து இழுக்கிறார்கள். உயிர் போய்விட்டது. அங்கேயே போட்டுவிட்டுப் போய் விட்டார்கள். நீந்திக்கொண்டு இருந்த இராஜேந்திரனும்,
செந்திலும், கடற்கரைக்குக் கொண்டு வந்தார்கள்.
கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துக் கொல்லுகின்ற மமதை, துணிச்சல் அவர் களுக்கு எப்படி வந்தது?
இரண்டு கிராமங்களுக்கு இடையில் தகராறு வந்தால், சமாதானம் பேசுகின்ற வரையில் அடுத்த ஊருக்குச்செல்ல மாட்டார்கள்.பதிலுக்கு அடிப்பார்கள்என்று
தெரியும். பெரியவர்கள் உட்கார்ந்து சமாதானம் பேசி, வெற்றிலை பாக்கு மாற் றி, அபராதம் போட்டு,கோவிலுக்குத்தேங்காய் விடலை போட்டு இப்படித் தான் முடியும் விவகாரம். ஏனென்றால் நான் பட்டிக் காட்டுக்காரன். எனவே, இதெல் லாம் எனக்குத் தெரியும்.(பலத்த கைத்தட்டல்) ஆனால், அவனுக்கு எவ் வளவு குளிர் விட்டுப் போயிருந்தால், அங்கே நம்முடைய தொப்புள் கொடி உறவு களையெல்லாம் படுகொலை செய்து விட்டு, இங்கேயும் வந்து நம்மைத் தாக்கு கிறான்.
இதை நாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று நினைக்கின்றாயா? தமி ழகத்து இளைஞன்,கரிகாலன் வழி வந்தவன்,இராஜராஜன் வழி வந்தவன், பராந் தகன் வழி வந்தவன், இராஜேந்திரன் வழி வந்தவன், வருணகுலத்தான் வழி வந் தவன், உன் நாட்டின் மீது படையெடுத்து வென்ற இனத்துக்காரன், உன்னைத் தேடி வந்து உதைக்கிற காலம் வரும்.
இன்றைக்கு என்ன செய்தி தெரியுமா? நேற்று இரவு நடந்து இருக்கிறது. இரா மேஸ்வரத்துக்கு அருகில்,ஓலைக்குடா என்ற இடத்துக்குப் பக்கத்தில், இரண் டாம் தேதி நமது மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச்சென்று இருக்கிறார் கள். திரும்பி வருகின்றபோது,இலங்கைக் கடற்படை வந்து தாக்கி இருக்கி றான். வலைகளை அறுத்து இருக்கிறான். படகைச்சேதப்படுத்தி இருக்கிறான். செல்போன்களைக் கடலில் துhக்கி வீசி இருக்கிறான். ஐஸ் கட்டிகளையும் தூக் கிக் கடலில் போட்டு விட்டான். பிடித்து வைத்து இருந்த மீன்களையெல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு போய்விட்டான். மீனவர்களையும் தூக்கிக் கடலில்
போட்டு விட்டான். அந்தோணிதாஸ், அகஸ்டின், மற்றொருவர். இவர்கள் மூவ ரையும், நமது கடல் எல்லைக்கு உள்ளேயே தாக்கி இருக்கிறார்கள்.இது நேற்று இரவு நடந்த சம்பவம். இன்றைக்கு இங்கே வந்து இருக்கின்ற இராமேஸ்வரம் தோழர்களுக்குக்கூட இது தெரியாது.அவர்கள் நேற்று இரவே அங்கிருந்து புறப் பட்டு இங்கே வந்து இருக்கிறார்கள்.
நான் பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு, அவர் எனக்குப் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. 22 ஆம் தேதி என்னைச்
சந்தித்தபோது மீனவர் பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்திய அர சின் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா முயற்சிகளையும் செய்து, இந்திய மீன வர்களைத் தாக்குவதைத் தடுக்கின்ற நடவடிக்கையை எடுப்போம் என்று உங் களுக்கு நான் உறுதி கொடுத்தேன். இந்தியாவின் வெளி உறவுச் செயலாளரை
இலங்கைக்கு அனுப்பி, அந்த அரசோடு பேசி, அதற்கு உரிய வழிவகை செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்று, 25 ஆம் தேதி எனக்கு எழுது கிறார்.
தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளையும், இந்திய அரசு அதிகாரிகளையும், அந்தக் குழுவில் அனுப்புவோம் என்று எழுதி இருக்கிறார். இங்கே செய்தியாளர்கள் வந்து இருக்கிறார்கள். இப்போது என்னுடைய கேள்வி, ஏன் தமிழ்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் போகவில்லை? ஒன்று, பிரதமர் எடுத்த முடிவை மாற்றிக்கொண் டீர்களா? நான் குற்றம் சாட்டுகிறேன். கலைஞர் கருணாநிதிதான், இப்போது எங்கள் அதிகாரிகள் போக வேண்டாம் என்று அனுப்பவில்லை. அவ்வளவு ஏளனமாக, கிள்ளுக் கீரை யாகத் தமிழக மீனவர்கள் வாழ்க்கை ஆகி விட்டதா?

இங்கே காலையில் அண்ணன் தா.பாண்டியன் அவர்கள் அழகாகப் பேசினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தமீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றாலும், வங்க தேசக் கடல்படையால் தாக்கப்படுவது இல்லை. ஒரிசா மீனவர்கள், குஜராத் மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை.தமிழக மீனவர்கள் மட்டும் தாக்கப்படுவ தற்கு என்ன காரணம்? ஆறுகாட்டுத்துறையில் இருந்து இங்கே மீனவர்கள் வந்து இருக்கிறார்கள். 1997 ஆம் ஆண்டு, அந்த ஊருக்கு நான் சென்றேன். நம் முடைய கடல் எல்லைக்கு உள்ளே நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை இலங்கு ஊர்தியில் (ஹெலி காப் டரில்) வந்து குண்டு வீசினான். படகுகள் வெடித்துச் சிதறின. ஆறு பேர் களுடைய உடல்களும் துண்டுதுண்டாகச் சிதறிப் போயின. கை, கால் கூட அடையாளம் காண முடியவில்லை. தகவல் கிடைத்ததும் நான் ஓடி வந்தேன்.
அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
ஐயா, நாங்கள் கடலோரக் காவல்படையிடம் புகார் செய்யப் போனோம். நாங் கள் சொன்னதையே கேட்கவில்லை. எங்களை விரட்டி அடித்து விட்டார்கள்.
தண்ணி அடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்தார்கள் என்றார்கள். நான் மறுநாளே டெல்லிக்குச்சென்றேன். பிரதமர் குஜ்ரால் அவர்களைச் சந்தித் து ஒரு கடிதம் கொடுத்தேன். இந்தியக் கடற்படை நொண்டி வாத்தைப் போல உட்கார்ந்து இருக்கிறது என்று எழுதி இருந்தேன். படித்துவிட்டு அவருக்குக் கடுமையான கோபம். நேராகவே அவரிடம் கொடுத்தேன்.
இதே ஐரோப்பிய நாடுகளாக இருந்தால், ஒரு குடிமகனைக் கொன்றாலும்கூட, யுத்தம் வந்துவிடும். அதைத்தான் மார்கரெட் தாட்சர் செய்தார். லிபிய நாட்டுத்
தூதரகத்துக்கு எதிராகத் திரண்ட கிளர்ச்சியாளர்களைத் தடுக்க முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த பிரிட்டிஷ் பெண்மணி சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு உள்ளாக, லிபியாவோடு உறவுகளை முறிக்கி றோம் என்றார் தாட்சர். இங்கே இவ்வளவு பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அன்றைக்குச் சொன்னேன்.
1991 நவம்பர் 25. நாடாளுமன்றத்தில் நான் நட்சத்திரக் கேள்வி ஒன்றைத் தொடுத்தேன். என்னுடைய கேள்விதான் முதல் கேள்வி. தமிழக மீனவர்கள்,
இதுவரையிலும் எத்தனை முறை இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டார் கள்? பாதுகாக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மேலும் சில துணைக்
கேள்விகளைக் கேட்டு இருந்தேன்.
கோவாவைச் சேர்ந்த எட்வர்டோ ஃபலைரோ என்பவர் தான் அப்போது வெளியு றவுத்துறை இணை அமைச்சராக இருந்தார். என் கேள்விகளுக்கு மழுப்பலாகப் பதில் சொன்னார். நான் விடவில்லை. அப்போது அவைத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா. அவர் அமைச்சரைப் பார்த்து, ‘உறுப்பினரின் கேள்விக்குச்
சரியாகப் பதில் சொல்லுங்கள். மழுப்பாதீர்கள்’ என்றார்.அப்படியும் அமைச்ச ரால் பதில் சொல்ல முடியவில்லை.இந்திய அரசிடம் விவரங்கள் இல்லை. ஏனென்றால், தமிழக மீனவர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
கடைசிக்கெடுவாக எச்சரிக்கின்றோம். இனியும் பொறுப்பதற்கு இல்லை. அப் படியானால் என்ன வழி? இங்கே இருக்கின்ற கங்காணி அரசு, கருணாநிதி அரசு
தூக்கி எறியப்பட வேண்டும். கொள்ளைக் கூட்டம் தூக்கி எறியப்பட வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்த ஆண்டின் இறுதி வரையிலும் நீடிக் காது. இந்த உண்ணாநிலை அறப்போர் உடனே உங்களைப் பாதுகாத்து விட முடியாது. ஆனால், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த அறப்போர். உங்களுடைய துன்ப துயரங்களைப்பகிர்ந்து கொள்கின்றோம். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நான் புஷ்பவனம் ஜெயக்குமார் வீட்டுக்குத்தான் போகிறேன். அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன். அதற்குப்பிறகுதான் இரவோடு இரவாக வேலூருக்குப் பயணிக்க வேண்டும்.மீனவர்களுக்குத் தெரிவிக்கிறேன். மொத்தத் தமிழகமும்
உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
கடல்தான் உங்களுக்கு வீடு, அதுதான் வாழ்க்கை. நீங்கள் பாதுகாப்பாக வீடு திரும்பினால்தான் உங்கள் மனைவி, பிள்ளைகளுக்கு நிம்மதி.எந்தக் கயிற்றை ஜெயக்குமாரின் கழுத்தில் போட்டு இழுத்தானோ, அதே கயிற்றில் ராஜபக்சே யும் அவனது சகோதரர்களும், பன்னாட்டுக்குற்றவியல் நீதிமன்றத்தில் தண்ட னை பெற்று, தூக்கில் இடப்படுகின்ற வரையிலும் எங்கள் பணி தொடரும்.
அதற்கு மக்களைத் திரட்டுவோம்.
ஒரு ட்விட்டரில், ஒரு ஃபேஸ்புக்கில், ஒரு அல் ஜஸீரா தொலைக்காட்சியில் ஒரு புரட்சியையே கொண்டு வந்து விட்டார்கள் எகிப்து நாட்டில். ஒருவனுக் குப் பிடித்த சனி அடுத்தவனையும் பிடித்துக் கொண்டது என்பது போல், டுனீ ஷியா நாட்டுச் சர்வாதிகாரி பென் அலியை மக்கள் விரட்டி அடித்தார்கள். பிரான்சில் அடைக்கலம் கேட்டான், கொடுக்கவில்லை. எகிப்து அடைக்கலம்
கொடுத்தது. அந்தப் புரட்சி இங்கேயும் எழுந்தது. அது மட்டும் அல்ல, ஏமன், ஜோர்டானிலும் கிளர்ச்சிகள் வெடித்து உள்ளன, ஜனநாயகத்தைக் காக்க. அது போல, உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களின் உள்ளத்தில் வேதனைத் தீ அணையாது. அது ஊழித்தீயாகக் கிளர்ந்து எழும். தமிழ் ஈழம் மலருவதற்காக, எங்களை நாங்கள் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு உள்ளோம்.
ஊடகத்துறையை ஒடுக்கி, செய்திகள் வராமல் தடுத்தான் நைல் நதிக்கரை யில் ஹோஸ்னி முபாரக். முப்பது ஆண்டுகளாக அந்த நாட்டைத் தன் உடும் புப் பிடிக்குள் வைத்து இருந்தான். இன்றைக்கு அங்கே புரட்சி வெடித்துவிட்டது. இவன்தான் வாரிசுத்தலைவன் என்று எவனுக்கு முடி சூட்டினார்களோ, அந்த ஹோஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக், தப்பித்தோம், பிழைத்தோம் என்று 200 சூட்கேஸ்களோடு, தனி விமானத்தைப் பிடித்து லண்டனுக்குப் பறந்து ஓடி விட்டான்.
‘முபாரக் வேண்டுமா? எகிப்து வேண்டுமா?’ என்பதுதான்,இன்றைக்கு எகிப்தி லே கெய்ரோவில், அலெக்ஸாண்ட்ரியாவில் எழுகின்ற முழக்கம்.அதே போல, ‘ஒரு குடும்பமா? தமிழ்நாடா?’ என்ற முழக்கம் இங்கேயும் கேட்கும்.கேட்கச் செய்வோம்.
ஒரு குடும்பத்தின் காலடியில் ஒரு இனம், அண்ணா கண்ட இயக்கம், அன் னைத் தமிழகம் அனைத்துமே பாழாவதா கருணாநிதியின் குடும்பத்துக்காக? இந்தக் கேள்விக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தல் விடை அளிக்கும். மக்கள்
நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:
Post a Comment