Tuesday, June 4, 2013

காயிதே மில்லத் - ஜீவா குரல்களில் மதுவிலக்கு!

உமையம்மை - பட்டம்பிள்ளை தம்பதியரின் மகனாக பூதப்பாண்டியில் 21.8.1906 இல் பிறந்த சொரிமுத்து 1922 இல் 17 ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத் தில் பங்கேற்று அரசியல் வாழ்வைத்தொடங்கினார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டார். 1930 இல் ஈரோட்டிலும், 1931 இல் விருதுநகரிலும், இரண்டாவது,
மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றார்.

1931 இல் காரைக்குடி - கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.இக்காலங்களில் மதுவிலக்குப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். (பகுதி உ.பக்கம் 1709,ப.ஜீவானந்தம்)
1937 நவம்பர் 6 ‘ஜனசக்தி’ காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சி வார இதழாக வெளி வந்தது. 1939 இல் இதழ் தடை செய்யப்பட்டது. 1942 ஆகஸ்ட் 9க்குப் பிறகு தனது
பிரச்சாரத்தின் மூலம் மக்களைத் தட்டி எழுப்பியது.1942-1945 ஆம் ஆண்டுகளில் ஜனசக்தி தமிழகத்தில் தனி முத்திரை பதித்தது. 1963 சனவரி 18 இல் ஜீவா மறைந்தார். 1964 முதல் கம்யூனிஸ்ட் கட்சியும் இரு அமைப்புகளாக செயல் படத் தொடங்கின 1937-1963 காலச் செயல்பாடுகளின் ஆவணமாக ஜனசக்தி யின் தலையங்கங்கள் அமைந்துள்ளது.

8.12.1943 ஜனசக்தி தலையங்கம்

‘புதுவருஷப்பரிசு’ என்ற தலையங்கத்தின்; மதுவிலக்கை வற்புறுத்தி பொது வுடைமை இயக்கத்தலைவர் ப.ஜீவானந்தம் கூறியுள்ள கருத்துகள் இதோ...

“உங்களுக்குப் பாவம், சாப்பாட்டுக்குப் பொருட்கள் கிடைப்பதில்லை; அதற்குப்
பதிலாக நல்ல புஷ்டியான போதை கிடைக்கும்; கொஞ்சம் உடலில் வலிமை
ஏற்படும்; உற்சாகமாய் ஆடுவீர்கள்; பாடுவீர்கள் என்று பதிலளித்துவிட்டு நவம் பர் மாதம் 16 ஆம் தேதி இந்தப் புனிதமான காரியத்தை 1944 புதுவருஷப் பிறப் பன்று அமுலுக்குக் கொண்டு வருவதாக வெளியிட்டனர்.அட்வைஸ் சர்க்கார் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் மக்களுக்குத்தான் பெரிய நன்மை செய்து விட்டதாக எண்ணியது என்று நம்புவது பகுத்தறிவுக்கு மாறாகும்.

மக்களின் துன்பங்களையும், துயர்களையும் பயன் படுத்திக் கொண்டு சுயநலத் தைக் கருதி கொள்ளை லாபம் அடிக்கும் கயவர்கள்தான் அதிகாரவர்க்கத்தின்
செய்கையை வரவேற்பார்கள். சித்தூரில் 50 கள்ளுக் கடைகள் ஏலத்துக்கு 409 பேர் வந்தனராம்.

ஏழை எளியவர்களையும் பொது ஜனங்களையும் சுரண்டிக் கொள்ளையடிக்கும் கொழுத்த பணக்காரர்கள், உணவைப் பறித்து ஒளித்துவைத்து, அதிக விலைக் கு விற்றுக் கொள்ளை லாபமடித்துக் கொழுத்துக்கொம்மாளங் கொட் டிக் கொண்டிருக்கும் பண மூட்டைகள் இத்துறையிலும் கொழுக்கலாம் என்று
முன் வருவார்கள். மதுவிலக்குச் சட்டத்தைப் பொதுஜனப் பிரதிநிதிகள் சட்ட சபையில் இருந்த காலத்தில் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து நிறைவேற் றின. இன்று இந்த மதுவிலக்கு ரத்து உத்திரவை எதிர்த்து நடக்கும் கிளர்ச்சி யிலும் அனைவரும் ஒன்று திரண்டு வருகின்றனர்.

அனைவரும் ஏகோபித்து இதைக் கண்டிக்கின்றனர்.இந்த விஷயத்தில் ஏற்ப டும் மக்களின் ஒற்றுமை அதிகாரவர்க்கத்தைப் பணியவைக்கும் என்பதே நமது நம்பிக்கை.

மதுவிலக்கு ரத்து இன்று நாட்டு மக்களின் நிலைமையையே மோசமாக்கி விடும்; வாழ்க்கையைத் தாழ்த்தி மன உறுதியையும் குலைக்கும், மதுவிலக்கு
ரத்து உத்தரவை வாபஸ் கோர வேண்டும்; எங்கெல்லாம் கூட்டங்கள் போட முடியுமோ, அங்கெல்லாம் எல்லா ஸ்தாபனங்கள் ஸ்தல அரசியல் கட்சி களும் இதைக் கண்டித்துக் கூட்டங்கள் போட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்; வீடு வீடாகச் சென்று மகஜர்களில் கையொப்பம் வாங்கி அதிகாரி களுக்குப் பொது ஜனங்களின் எண்ணத்தைத் தெரியப்படுத்த வேண்டும். 4.15 கோடி சென்னை மாகாணத்து மக்கள், இதர மாகாணத்திலுள்ள கோடிக்கணக் கான மக்கள் இப்பிரச்சினையில் ஒன்று படுவது இதில் வெற்றி அளிக்கும்;
மதுவிலக்கு ரத்து ஒழிக;

8.12 1943 இல் ப.ஜீவானந்தம் மதுவிலக்கை வலியுறுத்தி எழுதிய தலையங்கத் தின் பகுதிகள் இவை.

1952 இல் சென்னை வண்ணாரப் பேட்டையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர் வு செய்யப்பட்டார் ப.ஜீவானந்தம். மதுவிலக்குச் சட்டம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பி.இராம மூர்த்தி திருவெட் டுப் பிரேரணை கொண்டு வந்தார். அதன் மீது ப.ஜீவானந்தம் பேசியதின் சில பகுதிகள் இதோ.

16.7.1952

“மதுவை நாட்டை விட்டு ஒழிக்க வேண்டுமென்று மகாத்மாகாந்தி சொன்னார்.

‘துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்றும்
ஏஞ் சுண்பார் கள்ளுண்பவர்?

என்பதாக கள் சாப்பிடுகிறவர்கள், விஷத்தைச் சாப்பிடுபவர்கள் போல் ஆவார் கள். 

அதாவது எப்படி விஷத்தைச் சாப்பிட்டால் இறந்துபோய் விடுவானோ, அதைப் போலவே கள்ளைக் குடிப்பவர்கள் அழிந்தே போய்விடுவார்கள் என்று உப தேசம் செய்து வந்திருக்கிறது.

இன்றைக்கு நேற்றைக்கல்ல 2000 ஆண்டுகளாகவே மதுவை ஒழிக்கவேண்டு மென பிரசாரம் இந்த நாட்டில் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த நாட்டில்
மட்டுமல்ல நமக்குத் தெரிந்த எல்லா நாடுகளிலேயும் மதுவை ஒழிக்க வேண் டுமென்று பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்று 16.7.1952 இல் தமிழக
சட்டமன்றத்தில் முழங்கியவர் தோழர் ஜீவா.

காயிதேமில்லத்

1896 ஜூன் 5 ஆம் நாள் கே.டி.மியாக்கான் ராவுத்தர் -முகையத்தீன் பாத்திமா அம் மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில்சாஹிப்.
திருநெல்வேலி பேட்டையில் பிறந்த இவர்களது மார்க்கம் இஸ்லாம் மதுவை முற்றிலும் ஒழித்திடவும் தடைசெய்தும் ஆணைப்பிறப்பித்து உள்ளது. 1946-
1952 சென்னை சட்டசபை உறுப்பினராகப் பணி ஆற்றியவர். 1952 முதல் 1958 வரை மாநிலங்களவை உறுப்பினர். 1962 முதல் 5.4.1972இல் அவர்கள் இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தது வரை மஞ்சேரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னராகவும் பணி ஆற்றினார்.

6.3.1947

சென்னை சட்டசபையில் 6.3.1947 அன்று நிதிநிலைஅறிக்கை விவாதம் தொடங் கியது; அதில் பங்கேற்ற காயிதேமில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் பகதூர்
17.3.1947 இல் ஆற்றிய உரையில் மதுவிலக்கை வலியுறுத்திய கருத்துகள் இதோ,

சபாநாயகர் அவர்களே, என் நண்பர் சீதிசாஹிப் கூறியதை ஒட்டிச் சில வார்த் தைகளைக் கூற விரும்புகிறேன்.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் அதிகமாக மது அருந்து கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எத்தகையத் தீங்கும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. அங்கெல்லாம் மதுவிலக்குக் கொள்கை தோற்று விட்டது. குறிப் பாக அமெரிக்காவில் மதுவிலக்குக்கொள்கை முழுமையாகத் தோற்றுவிட்டது என்றும் வாதிடப் பட்டது.

அமெரிக்காவில் மதுவிலக்குக் கொள்கையை அரைமனதோடு கொண்டு வந் தார்கள். மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்துவதற்கு சீரிய முறையில் அவர்கள் பாடுபட வில்லை. உள்ளூர் மதுவிலக்கு வெற்றி பெறுவதை அவர் கள் விரும்பவில்லை அதுதான் மதுவிலக்குக் கொள்கை தோற்றதற்குக் காரணம்.

குடிப்பது சமூகக்கேடு

மற்றுமொரு உண்மையை நான்மனதில் பதியவைக்க வேண்டும். மேலை நாட் டில் மதுவிலக்கு என்பதை தமது உரிமைப் பறிப்பாகவும் வாழ்க்கை வசதி குறைப்பாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவேதான் மதுவிலக்கை அங்குள்ளோர் எதிர்க்கிறார்கள்.

ஆனால், நமது நாட்டின் நிலை முற்றிலும் வேறுபட்ட தாகும். இங்கு மது அருந்
துபவர்கள்கூட தாங்கள் குடிப்பதை பெருமையாகக் கருதவில்லை. நலனுக் காகக் குடிப்பதாகவும் எவரும் நினைப்பதில்லை. அதோடு குடிப்பது ஒரு சமூ கக்கேடு என்பதை நம் நாட்டு மக்கள் அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள். ஆகவேதான் நமது நாட்டில் மதுவிலக்கு வெற்றிபெற வேண்டும்.வெற்றி பெறு வதற்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின் றோம்.

மதுவிலக்கால் அரசுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்படும் என்பதுதான் மது விலக்கை எதிர்த்துப் பேசியவர்களின் வாதமாகும்.

வருமானம் இழப்பு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்,எந்த ஒரு அரசாங்கமும் மக்களின் தீய பழக்கங்களையும் சமுதாயக் கேடு களையும் தனது வருமானத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவுபடுத்து கிறேன்.

எவ்வளவு வருமானம் வந்தாலும் அல்லது வருமானத்தை இழந்தாலும் மக் களின் மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்கின்ற தீயப் பழக்கத்தை ஒழித்துக் கட்டுவ தற்கு எந்த அரசாங்கமும் தயங்கக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றேன்” என்று சட்டப் பேரவையில் காயிதே மில்லத் முழங்கினார். (காயிதே மில்லத் பேசுகிறார் சட்டமன்றச் சொற்பொழிவுகளில், பக் 51-54)

தமிழர் தலைவர் வைகோ

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழர் தலைவர் வைகோ மூன்றுகட்ட நடைப்ப யணங்களை மேற்கொண்டு 1200 கி.மீ. தூரம் நடந்தே சென்று கோடிக்கணக் கான மக்களைச் சந்தித்து, மதுவிலக்குப் பிரச்சாரப்பயணத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரது எண்ணம் நிச்சயம் வெற்றி பெற்றே தீரும். தமிழகத் தில் இருந்து மது ஒழியும் நாள் தொலைவில் இல்லை

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment