Thursday, June 20, 2013

பி.எஸ். குமாரசாமி இராஜாவும் மதுஒழிப்பும்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் இராஜபாளையம் பகுதி ஒரு முக்கியப் போராட்டக் களமாக விளங்கியது. காரணம் இராஜபாளையம் பகுதியில் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் பொதுமக்களே போராடினார். இராஜபாளையம் ஈன்றெடுத்த தலைவர் பி.ஸ்.குமாரசாமி இராஜா. இவர் தென்னக காந்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இவர் இராஜபாளையம் நகர மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவ ராகவும் தமிழக முதல்வராகவும் கவர்னராகவும் இருந்து பொதுவாழ்வில் பாடு பட்டார். இவர் அமைச்சரவையில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தார்.
1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் பி.எஸ். குமாரசாமி இராஜா அவர் களின் முயற்சியால் 25 மாவட்டங்களிலும் பூரண மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டது.

பூரண மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களைச்
செயல்படுத்தினார். மதுப்பழக்கம் என்னும் சீர்கேட்டை மக்களால்தான் அப்பு றப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார்.மேலும், குடியினால் ஏற்படும் தீமைகளையும், அன்றாட வாழ்வின் சீர்கேடுகளையும் மக்களிடத்தில் எடுத் துக்கூற வழிவகை செய்தார். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் இத்திட்டம் வெற்றிபெற முடியும் என்று திடமாக நம்பினார்.

அரசாங்கம் எத்தனை திட்டங்கள் போட்டாலும் மக்கள் அதை கடைபிடித்தால் தான் வெற்றி அடையும் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் இத்திட்டத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், மது அடிமை மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் சேர்ந்து அதன் மூலம் புதுவாழ்வினை பெற்றுக் கொண்டிருக்கும் மக்களால் தான் வெற்றி அடைந் துள்ளது என்று கூறினார்.

பூரண மதுவிலக்கு திட்டத்தை ஆதரித்துப் பேசிய கவர்னர் ஜெனரல் ராஜாஜி இந்தியாவிலேயே சென்னை மாகாண அரசுதான் இந்தச் செயற்கரிய செயலை முதன்முதலில் வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. இது பி.எஸ். குமாரசாமி
இராஜா அவர்களின் மேல் மக்கள் கொண்டுள்ள அன்பினையும் அபார நம்பிக் கையையும் காட்டியுள்ளது. மேலும், என்னால் கொண்டு வரப்பட்ட மதுவிலக் கை விட துணிச்சலாக பி.எஸ். குமாரசாமி இராஜாவால் மட்டுமே முடியும்
என்று இராஜாஜியே ஒப்புக்கொண்டார்.

இந்தத் திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அர சுக்கு வருமானம் குறைந்துவிடும் என்றும் இந்தத் திட்டத்தால் எந்தப் பய னும் கிடைக்காது என்றும் கூறினார்கள். மேலும், வருமான இழப்பீட்டின் காரணமாக பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் கூறினார் கள். அதற்கு பி.எஸ்.குமாரசாமி இராஜா அவர்கள் பதில் கூறும்போது, ஒருசில நல்ல விசயங்களையும்,திட்டங்களையும் கொண்டு வரும்போது ஒருசில தியாகங்கள் செய்ய வேண்டி வரும்.மேலும், ஒருசில நலன்களை இழக்க வேண்டி வரும். இதனை பொருட்படுத்தக் கூடாது என்று கூறினார்.

மக்கள் முன்னேற்றம், மதுவினால் ஏற்படும் தீமை இவற்றையெல்லாம் கணக் கில் எடுத்துக் கொண்டால் மதுவிலக்கை அமல்படுத்தியாக வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் கலாச்சாரம் குறிப்பாக தமிழ் மாகாண மக்கள் முன் னேற்றத்தை நாம் பார்க்க வேண்டும். மக்கள் நலன் தான் அரசின் வேலை.இது வியாபாரம் அல்ல. மக்கள் சேவை என்றும் கூறினார். மேலும் இந்தத் திட்டத் தின் மூலமாக கள், சாராயம் மேல்நாட்டு மதுவகைகள், கஞ்சா மற்றும் போதைப் பொருள் எல்லாவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டு அதனை கண்கா ணிக்க சிறப்பு அமலாக்கப்பிரிவும், மதுவிலக்குப் பிரிவும் கொண்டு வரப்பட் டது. இவற்றை கண்காணிக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது 1949 அக்டோபர் 2 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது எனக்கூறினார்.

இதை மீறி யாரேனும் மது விற்பனை செய்யவோ, மது வாங்கவோ அல்லது மது அருந்துவதோ கூடாது. மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை செய்தார்.

மேலும் சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மாற்றுத் தொழில் தொடங்க கூட்டுறவு அமைப்பு மூலம் நிதிஉதவி செய்தார். இத்திட்டம் 1952 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த காரணத்தால் மக்கள் மது வினை அறவே வெறுத்து ஓரளவு மது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட் டது. இந்த மது ஒழிப்பினை மக்கள் சமூக உணர்வோடு பார்க்கத் தொடங்கினர். மக்களிடமும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் மத்தியில்
பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், குடியினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி வானொலி, நிகழ்ச்சிகள், திரைப்படம், நாடகம், பத்திரிகைகள் மூலம் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களுக்கு கருத்தை தெரிவித்து வந்தது. மேலும் மதுவிற்கு செலவு செய்யும் பணத்தை சிறுசேமிப்புகளை தொடங்கச் செய்து சேமிக்கும் மனப்பான்மையை மக்களிடத்தில் ஏற்படுத்தினார். குமாரசாமிரஜா, இத்திட்டத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் பெருகியது. கூட்டுறவு சங்கங்கள் கொடுத்த பணமும் திரும்ப வந்தது.

குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்பியது. இத்திட்டத்தை செயல்படுத்தியதன் காரணமாக பி.எஸ்.குமாரசாமி இராஜா அவர்களின் நிர்வாகத் திறமைக்கு இந்திய அளவில் மதிப்பு ஏற்பட்டது.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- உடுமலை ரவி

வெளியீடு :- சங்கொலி

1 comment: