Wednesday, June 12, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 8

நாள் :- 02.08.2006

சிங்கள இராணுவக் கப்பலுக்கு இந்தியப் பாதுகாப்பா? 

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழர்கள் மனதில் பெருமை கவலைஅளிக்கின்ற பிரச்சினையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைத் தீவில் போர் மேகங்கள் குவிந்து உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத் தைத் திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள அரசு, தமிழர் கள் மீது தனது இனக்கொலைத் தாக்குதலைத் தீவிரப்படுத்த முப்படை களை யும் ஏவி உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்கள் குண்டு வீச்சால் கொல்லப்படுகின்றனர்.
தமிழர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உள்ளே ஊடுருவக் கூடாது என்றும், தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செய்த
எச்சரிக்கையை மீறி, இலங்கை அரசு பீரங்கித் தாக்குதலையும், குண்டுவீச்சை யும் தொடர்ந்து நடத்துவதால், தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் பாது காக்க, விடுதலைப்புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்துகின்றனர். தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத போரை இலங்கை அரசு தொடுத்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், இலங்கைக் காவல்துறையைச் சேர்ந்த 44 பேர்களுக்கு,
தமிழ் நாட்டில், கோவையில் மத்திய பாதுகாப்புக் காவல்துறைத் தளத்தில்,
இந்தியா பயிற்சி கொடுக்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக இந்தப் பயிற்சியை நிறுத்தி, சிங்களக் காவல்துறையினரை இலங்கைக்குத்
திருப்பி அனுப்ப வேண்டும்.

பன்னாட்டு ஊடகங்களின் வாயிலாகக் கிடைத்து உள்ள நம்பகமான தகவல் களின்படி, தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக 854 ஆயுதம் தாங்கிய சிங்களத் துருப்புக்களை ஏற்றிக் கொண்டு, இலங்கைக் கடற்படைக் கப்பல் செல்கிறது என்ற செய்தியை நான் அறிகிறேன்.

அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும், உதவி செய்யவும், இந்தியக் கடற்படையின் உதவியை நாடி, இலங்கை அதிபர் இராஜபக்சே, இந்தியப் பிரத மரிடம் பேசி உள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

அப்படி ஏதாவது உதவியை இந்தியா இலங்கைக்குச் செய்ய முற்பட்டால், அது மன்னிக்க முடியாத அக்கிரமமான செயல் ஆகும்.தமிழர்களுக்குஎதிரான இலங் கையின் இராணுவ நடவடிக்கைக்குத் துணைபோகும் செயலாகவே முடியும் என்பதைத் தெரிவிக்கிறேன். எனவே, தமிழர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட கொடிய தவறை இந்திய அரசு செடீநுய முற்படாது என்று நம்புகிறேன்.

இந்தியர்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் உள்ள, சிங்கள இன வாதக் குழுக்களால் ஆட்டுவிக்கப்படும் இலங்கை அரசுக்கு எந்தவிதமான உதவியையும் இந்தியா செய்யக்கூடாது என்பதை வேதனையோடு வலியுறுத்துகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

(02.08.2006)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment