இலங்கைத் தமிழர் பிரச்சினை: வைகோவிடம் பிரதமர் உறுதி
நாள் :- 04.06.2005
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
இலங்கைத் தீவில் நடைபெற்றுவரும் கவலைக்குரிய நிகழ்வுகளைத் தங்கள்
பார்வைக்குக் கொண்டு வருகின்றேன். இப்பிரச்சினையில், தாங்கள் அக்கறை யுடன் தலையிட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
இலங்கைத்தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், அந்த மண்ணின் பூர்வீ கக் குடிகளான தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு, அந்தத் தீவை ஆண்டுவரும் சிங்கள அரசு, கடந்த 50 ஆண்டுகளாக,வாழ்வியல் உரிமை களை மறுத்து வருகிறது. இதனால், தமிழர்கள் விவரிக்க முடியாத துயரங்க ளுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.
கடந்த காலங்களில் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, இலங் கை அரசு அலட்சியப்படுத்தி காற்றில் பறக்க விட்டு உள்ளது. தமிழர்கள் அடிப் படை உரிமைகளுடன், மானத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்திட,எழுபதாம் ஆண்டுகள் வரை அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.1957 மற்றும் 1965-இல், தமிழர்களுக்குக் கூடுதலான உரிமைகள் வழங்குவதற்காக, இலங் கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட இரண்டு ஒப்பந்தங்களை, இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது.
இலங்கை அரசின் இராணுவத்தால் தமிழர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலில்
இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக, இளைய தலைமுறைத் தமிழர் கள் ஆயுதம் ஏந்திப் போராட நேர்ந்தது. இதுபோன்ற உரிமைப்போராட்டங்கள் உலகின் பல பகுதிகளில் நடந்து வருகின்றன.
இந்தியப் பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்கள், ஈழத்தமிழர்களைக் காக் க, தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் கள். அம்மையாரின் எதிர்பாராத மறைவினால், இந்தப் பிரச்சினை வேறு வடி வங்கள் பெற்றன.
1998-இல் இலங்கை அரசு, தமிழர்கள் மீது முப்படைத் தாக்குதலைத் தொடர்ந் தது. இலட்சக்கணக்கான மக்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியில், விமானங் களில் இருந்து குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர்.ஐந்து இலட்சம் தமிழர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
அந்தச் சூழ்நிலையில், இந்தப் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசு கவலைப் பட்டது. அன்றையப் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் தலைமையில், அனைத் துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ‘இந்திய அரசு இலங் கை அரசுக்கு ஆயுதங்கள் தருவது உட்பட எந்த வகையிலும் உதவக்கூடாது’ என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம், 2001 டிசம்பரில் போர் நிறுத்தத்தைத்
தானே முன்வந்து அறிவித்தது. 60 நாள்கள் கழித்துத்தான், இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. நார்வே அரசால் அமைதிக்கான செயல்திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய இலங்கைப் பிரதமர் இரணில் விக்ரமசிங்கே அவர்கள் தலைமையில், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஐந்து சுற்றுப் பேச்சுகள் நடந்தன.
இந்த அமைதிப் பேச்சுகளை, இலங்கை அரசின் அதிபர் திருமதி சந்திரிகா குமா ரதுங்கா சீர்குலைத்தார். இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.அமைதித் தீர்வை முழுமையாக எதிர்க்கிற ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட சிங்கள இனத் தீவிரவாத அமைப்புகளோடு கை கோத்துக் கொண்டார்.
பாகி°தான் மற்றும் சீனாவிடம் இருந்து, இலங்கை அரசு ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்து வைத்து இருக்கிறது.
அண்மையில், இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், வடக்கு மற் றும் கிழக்கில் வாழும் தமிழர்கள், தங்கள் பிரதிநிதிகளை விடுதலைப்புலிகளின் ஆதரவோடு தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.
இலங்கையில் வாழும் தமிழர்கள், இந்தியாவில் வாழும் தமிழர்களோடு தொப் பூழ் கொடி உறவு கொண்டவர்கள்; இந்தியாவோடு நல்லெண்ண உறவை என் றும் கடைப்பிடிப்பவர்கள். இந்தியாவின் ஆதரவையும், ஆறுதலையும் இலங் கைத் தமிழர்கள் எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கம், அங்கே உள்ள நிலைமைகளைத் தவறாகப் படம்பிடித் துக் காட்டி, இந்தியாவை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.இலங்கை அரசு இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போடுவதற்கு, இந் தியா ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்க, அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.
மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் இந்தப் பிரச்சனையைத் தங்களி டம் முறையிட்டபோது, என் கருத்துகளைப் பரிவோடு கவனிப்பதாகச் சொன் னீர்கள். மேலும் தாங்கள், ‘இலங்கை அரசோடு இந்தியா எந்தவிதமான இராணு வ ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடாது’ என்று எனக்கு உறுதி அளித்தீர்கள்.
இருப்பினும், இலங்கை அரசு இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத் துவதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை. அதற்காக பல்வேறு முறை யற்ற வழிகளைக் கையாண்டு வருகிறது. இலங்கை அரசோடு செய்து கொள் கின்ற எந்த இராணுவ ஒப்பந்தமானாலும், அதற்கு என்ன காரணம் சொல்லப் பட்டாலும், அந்த ஒப்பந்தம், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தி யா நேரடியாக உதவுகிறது என்ற நிலையையே ஏற்படுத்தும் என்ற கருத்தைத் தங்களிடத்தில் நான் பதிவு செய்யவில்லை என்றால், என் கடமையைச்செய்வ தில் இருந்து நான் தவறிவிட்டதாக ஆகிவிடுவேன்.
இந்திய அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால்,தமி ழர்களின் இதயத்திலும்,மனதிலும் ஏற்படுத்தப்படும் ஆழமான காயங்கள் எந்தக் காலத்திலும் ஆறாமல் போய்விடும்.
அண்மையில், இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்களைச் சந்திக் கிற வாய்ப்பைப் பெற்றேன். இந்தியாவும், மற்ற நாடுகளும் இலங்கைக்கு நன் கொடையாக அளித்த சுனாமி மறுவாழ்வு உதவிகளை, சுனாமியால் கடுமை யாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுக்க வில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்தப்பகுதியைப் பார்வையிட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பி னர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் பகுதியில் சுனாமி நிவாரண நடவடிக்கை களுக்கான கூட்டுச் செயல்திட்டத்தை நான் மனமார வரவேற்கின்றேன்.
தமிழர்களின் நீண்ட காலக் கனவான பேரறிஞர் அண்ணாவின் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது.இதனால், தமி ழகம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்திடும்.
ஆனால், கொழும்பு துறைமுகம் தன் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்ற
ஒரே காரணத்துக்காக, இந்தத் திட்டத்தை இலங்கை அரசு,1960 ஆண்டில் இருந் து எதிர்த்து வருகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு என்ற போர்வையில், குறுகிய நோக்கத்தோடு இலங்கை அரசு இதை எதிர்க்கின்றது.இது குறித்த இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளை, இந்தியா முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையும், இந்திய அரசும் கூட்டாக வெளியிட்டு இருக்கிற அறிக்கையில்
குறிப்பிடப்பட்டு உள்ள போர் நிறுத்த மீறல் மற்றும் வான்வெளித்தட மீறல்
குறித்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன். இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு
ஆபத்து இருப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்குகிற திட்டமிட்ட முயற்சி கள், சில உள்நோக்கம் கொண்ட சக்திகளால் உருவாக்கப்படுகிறது.தமிழ்ப் போராளிகள் வசம் இருக்கிற சிறிய விமானங்களால் வலிமையான இந்தியா வின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
இலங்கை அரசின் போர்நிறுத்த மீறல் குறித்த செய்திகளை உங்கள் கவனத்துக் குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
உலகளாவிய மரியாதைக்கு உரிய, பத்திரிகை ஆசிரியர் திரு.தர்மரத்தினம் சிவ ராமன் என்கிற தராக்கி அவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பு கொழும்பு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டது, இலங்கை அரசின் போர் நிறுத்த மீறலுக்குப் பளிச்சி டும் சான்று ஆகும். இந்தப் படுகொலை, இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் உளவுப் பிரிவின் சதித்திட்டமே ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இடையில் ஒரு பிரிவினை யை உருவாக்கிட, இலங்கை அரசும், இராணுவமும், கருணா என்பவரைத் தங் கள் கைவசப்படுத்திக் கொண்டு உள்ளது.
இலங்கைத் தீவில் அமைதித் தீர்வுக்கு, இந்தியா எல்லா வகையிலும் உதவ முயற்சி செய்யும்’ என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச
செயல் திட்டத்தில் ஒப்புக் கொண்டது. இந்நிலையில், நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ இலங்கைக்கு இராணுவ உதவி அல்லது பாதுகாப்பு உதவி யை இந்தியா தந்தால், அது தமிழர்களுக்கு எதிரான, நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை ஆகும். மதிப்பிற்கு உரிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் வகுத்த வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் இருந்து, இந்தியா வில கிச் செல்வதாக அமையும்.
தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு இந்தியா உதவி செய்வதாகக்குற் றம் சுமத்தப்படும் சூழ்நிலை உருவாகும். இது இலங்கைத் தீவில் வாழும் தமிழர் களிடம் வருத்தத்தையும், வேதனையையும் விதைக்கின்ற செயலாக முடியும்.
இலங்கையில், அமைதித் தீர்வு வெற்றிகரமாக ஏற்பட வேண்டும் என்று நான்
உளமாற விரும்புகின்றேன். உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நடைபெறுகிற நாடான இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் உறுதி பூண்டு இருக்கிறோம்.
நம்மைச் சுற்றி நிகழ்கின்ற அரசியல் நடவடிக்கைகளை மனதில் கொண்டு,
தொலைநோக்கோடு இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு நான் எழுதுகின்றேன்.
எனவே,இலங்கை அரசுக்கு எந்த வகையான இராணுவ உதவியையும் இந்தியா தரக்கூடாது என்று மிகுந்த பணிவோடு முறையிடுகின்றேன்.
தமிழர் சமுதாயம் தங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டதாக இருக்கும்.
தங்கள் உண்மையுள்ள
வைகோ
4.6.2005
ம.தி.மு.க. செய்திக்குறிப்பு:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர் கள், இன்று (4.6.2005) மாலை 6.50 மணிக்கு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு டாக் டர் மன்மோகன் சிங் அவர்களை, புதுடெல்லியில் சந்தித்தார்.இந்தச் சந்திப்பு 30 மணித்துளிகள் நீடித்தது.
வைகோ அவர்கள், பிரதமர் அவர்களிடம் இலங்கைத் தீவில் தற்போது உள்ள
நிலைமைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி கடிதம் அளித்தார்.
பிரதமர் அவர்கள் அனைத்தையும் பரிவுடன் கேட்டதாகவும், இலங்கைத் தமி ழர்களுக்குப் பாதகம் ஏற்படுகின்ற எந்தச் செயலிலும் இந்தியா ஈடுபடாது; இலங் கைக்கு இராணுவ உதவி செய்யாது; இலங்கையோடு இராணுவ ஒப்பந் தம் செய்து கொள்ளாது என உறுதி அளித்ததாகவும், இந்தச் சந்திப்பு தமக்கு மிக வும் நிறைவு அளித்தது என்றும் வைகோ அவர்கள் தெரிவித்து உள்ளார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment