மத்திய அரசுக்குச் சொல்கிறேன்: நீ ஊழல் மட்டும் செய்யவில்லை. ஏ.... மத்திய அரசே! மன்மோகன் சிங் தலைமையிலான அரசே! கேடுகெட்ட அரசே! தமிழ் இனத்தை அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்த அரசே! உனக்கு மன்னிப்பே கிடையாது.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
இது அல்ல என் கேள்வி. சிங்கள இராணுவத்துக்கு தமிழர் தாயகப் பகுதியில் இனி என்ன வேலை? நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து இருக்கிறான். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் தாயகப் பகுதியில், யாழ்ப்பாணத்தில், கிளி நொச்சியில், மன்னாரில், வவுனியாவில், வல்வெட்டித்துறையில், மட்டக்களப் பில் இப்படி எல்லா இடங்களிலும் நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து
இருக்கிறான். இராணுவ முகாம்களை வைத்து இருக்கிறான்.இதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.
விடுதலைப்புலிகளைத் தடைசெய்யக் கோரி இந்திய அரசு தீர்ப்பாயத்தில் தாக் கல் செய்ததை - விடுதலைப்புலிகளைத் தடை செய்ய வேண்டும் என வெளி யிட்ட பிரகடனத்தில் - ஏறத்தாழ அது நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது என்று பொருளல்ல. ஏறத்தாழ நிர்மூலமாக்கப்பட்டு விட் டது என்று தீர்ப்பாயத்தில் சொன்னதற்குப் பிறகு, தமிழர் பகுதிகளில் சிங் கள இராணுவத்தை நூறு மீட்டருக்கு ஒரு காவல் அரணை வைத்து, எந்த வீட் டுக்குள்ளும் இரவு வேளையிலே இராணுவக்காரன் நாலு பேர் முன் வாயில்
வழியாக வருகிறான். பின் வாயில் வழியாக வருகிறான்.இது நடக்கிறது இன் றைக்கு. தமிழர் பகுதிகளில் - எல்லாத்தெருக்களிலும் இராணுவம் இருக்கிறது. அப்படியானால், இரண்டாம் உலகப் போரில் மன்னிக்க முடியாத மாபாதகமாக ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. அது மாபாதகச் செயல்.மன்னிக்க முடியாத பாதகச் செயல்.ஆயினும் கூட நாங் கள் சரணடைந்தோம் என ஜப்பான் அறிவித்தது. ஜப்பான் போரிலே இல்லை. ஜெனரல் மக்கார்தரும் ஜப்பான் நாட்டின் பிரதமர் டோஜோவும் ஒப்பந்தத்திலே
கையெழுத்துப் போட்டார்கள்.
நான் கேட்கிறேன். ஜப்பான் நாட்டுக்குள்ளே அமெரிக்கா காரன் இராணுவத் தைக் குவித்து வைத்திருந்தானா? இரண்டே இரண்டு இராணுவப் பிரிவுகளை ஜப்பானின் இரண்டு தீவுகளில் அமெரிக்காகாரன் வைத்திருந்தானே தவிர, அவன் நாகசாகியையும் - ஹிரோஷிமாவையும் அழித்தது மாபாதகச் செயல். டோஜோ கையெழுத்துப் போட்ட பிறகு ஜப்பான் நாட்டுக்குள்ளே அமெரிக்க
இராணுவம் இருந்ததா? அப்படியானால், ஈழத் தமிழர் பகுதகளில் இவ்வளவு இராணுவம் குவித்து வைத்திருப்பது எதற்காக?
எங்களுடைய கோரிக்கை என்ன? எங்களுடைய பிரகடனம் இராணுவத்தை வெளியேற்று முதலிலே. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள இராணு வத்தை வெளியேற்று. உலகம் பூராவிலும் இது எழுப்பப்பட வேண்டிய குரல். பன்னாட்டு அரங்கத்தில் எழுப்பப்பட வேண்டிய குரல். மனிதநேய உணர்வாளர் களிடம் எழுப்பப்பட வேண்டிய குரல்.இராணுவம் வெளியேற்றப்பட வேண் டும், தமிழர் பகுதிகளில் இருந்து. இல்லையேல், எங்கள் பெண் களுக்கு, எங்கள் சகோதரிகளுக்கு, எங்கள் தங்கைகளின் கற்புக்குப் பாதுகாப்பு இல்லை. எங்கள் பிள்ளைகளுக்குப்பாதுகாப்பு இல்லை.எங்கள் இனத்துக்குப்பாதுகாப்பு இல்லை. நீ தான் அழித்து விட்டதாகச் சொல்கிறாயே. நீதான் பன்னாட்டு அரங்கத்திலே சொல்கிறாயே.எல்.டி.டி.ஈ.யை முடித்து விட்டோம் என்று.
இராஜ பக்சே சொல்கிறான். சிங்களவரைக் குடியேற்றுவது. “தமிழன் கொழும் பிலே இருக்கிறபோது, நாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் சிங்களவனைக் குடி யேற்றக் கூடாது?” என்று கேட்கிறான். தமிழன் கொழும்பிலே வசிக்கிறபோது, வல்வெட்டித் துறையிலே- தொண்டைமானாற்றிலே - மன்னாரிலே - யாழ்ப்
பாணத்திலே சிங்களவனை நாங்கள் கொண்டுபோய்க் குடியமர்த்துவதில் என்ன தவறு? என்று கேட்கிறான் இராஜ பக்சே. நாதியில்லை என்று நினைத் தாயா? கொலைபாதகன் இராஜ பக்சேவுக்குச் சொல்லுகிறேன். நாதியில்லை என்று நினைக்காதே! கடலுக்கு அப்பாலே ஆறரை கோடி தமிழர்கள் வாழ்கி றார் கள், மறந்து விடாதே! எல்லாக் காலமும் இப்படியே இருக்காது. கருணாக் களின் - கருணாநிதிகளின் பரிபாலனம் எல்லாக்காலத்திலும் இருக்கும் என்று கருதாதே! (கைதட்டல் -ஆரவாரம்) நிலைமை தலைகீழாக மாறும்.
என்னைப் போல் இப்படி ஆவேசமாகப் பேசிக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள் வருங்கால இளைஞர்கள். தமிழ்நாட்டின் வரலாறே ஆயுதம் ஏந் திய வரலாறுதான், மறந்து விடாதே! (கைதட்டல்) வாளோடு தோன்றிய மூத்த முன்குடி. நான் வன்முறையை இன்றைக்கு ஆதரிக்கவில்லை. நாங்கள் மெக் காலேவின் ஆங்கிலத்தைப் படித்து விட்டு குமாஸ்தா உத்தியோகத்துக்கு வந்த வர்கள் என்று கருதி விடாதே! நாங்கள் மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் தோட்டங்களிலே வேலை செய்து வந்த கூலிக் கூட்டம் என்று நினைத்து விடா தே! நாங்கள் பர்மியக் காடுகளில், இலங்கைக்காடுகளில் மலேயாக் காடு களில் கூலி வேலைக்கு வந்தவர்கள் என்று கருதி விடாதே!
மண்வெட்டி கூலி தின்னலாச்சே - நம்
வாள்வலிவும் தோள்வலிவும் போச்சே
என்று பாரதி அதற்காகத்தான் சொன்னான். நாங்கள் படை நடத்திய வரலாற் றுக்கு உரியவர்கள். நாடுகளை வென்றவர்கள். கடல் கடந்தவர்கள். ஆம்! பழந் தீவுகள் பன்னீராயிரம் அங்கே பறந்தது புலிக்கொடி. கடாரத்திலே புலிக்கொடி. எங்கும் சோழப் பேரரசின் புலிக்கொடி. நான் சொல்லவில்லை. பண்டித ஜவகர் லால் நேரு, தன் மகள் பிரியதர்ஷிணி இந்திராவுக்கு எழுதுகிறபோது, சோழர் களிடம் மிகப் பெரிய கடற்படை இருந்தது. அதைக்கொண்டு கீழ்த் திசை நாடு களில் கடற்கொள்ளையரை அடக்கினார்கள் என்றார். இது எங்கள் வரலாறு.
நான் பிரிவினை பேசுகிறவன் அல்ல. ஆனால்,கேட்கிறேன். இந்தியாவில் எவ னுக்கு இந்த வரலாறு உண்டு, எங்கள் மூதாதையரைத் தவிர. (ஆரவாரம் -கை தட்டல்) மெளரியர்களுக்கு உண்டா?சந்திரகுப்த மெளரியனுக்கு உண்டா?சமுத் திரகுப்த மெளரியனுக்கு உண்டா? ஹர்ஷவர்த்தனனுக்கு உண்டா? கனிஷ்க ருக்கு உண்டா? எவனுக்குண்டு?
தில்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது,அன்றைக்குப் பிரதமர் வாஜ் பாயிடம் ஆவேசத்தோடு, பெரியார் மையத்தை இடிப்பதா என்று கேட்டுவிட்டு,
நான் அவரிடம் சொன்னேன். எங்கள் நெஞ்சிலே பழைய வெறுப்பை நீங்கள் எழுப்பிவிட்டு விடாதீர்கள். நாங்கள் இப்போது இந்தியா ஒன்று என்ற எண்ணத் தோடு இருந்து கொண்டு இருக்கிறோம். பெரியார் கடைசியாக, இதே தியாக ராய நகரில் பேசிய பேச்சு - தந்தை பெரியார் கடைசியாக ஆற்றிய உரை - இந்த தியாகராய நகரிலே ஆற்றிய உரை. அன்றைக்கு ஆற்றிய உரையில், டில்லிக்
காரனுக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். உனக்கும் எனக்கும் என்னடா உறவு என்று டில்லியைப் பார்த்துக் கேட்டார். இன்றைக்கு அவரது பேரப் பிள்ளை வைகோ இப்படிக்கேட்கிறானே என்று நினைக்கிறீர்களா? இதை விட வேகமாகக் கேட்பான் என்னுடைய பேரப் பிள்ளை. (ஆரவாரம்) இது வெறும் உணர்ச்சிக்காகப் பேசுகின்ற பேச்சு அல்ல.
இந்திய நாட்டில் இவ்வளவு பெரிய பச்சைத் துரோகத்தைச் செய்த மன்மோகன் சிங் அரசுக்குக் சொல்கிறேன். கடல்கடந்த நாடுகளுக்குச் சென்று, அந்த நாடு களை வென்ற இனம் எங்கள் இனம். இந்தோனேசியாவிலே - வியட்நாமிலே - கம்போடியாவிலே - எங்கள் சோழர் காலத்துக் கோவில்கள் இருக்கின்றன.இன் னும் அங்கே எங்கள் நாகரிகம் இருக்கிறது. நாங்கள் அனுப்பி வைத்த துணி களைத்தான் ரோமாபுரியில் வாங்கினார்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலே. இதை எங்களுக்கு அண்ணா கற்றுத்தந்தார்; அண்ணா சொல்லித் தந்தார். அதனால்தான் பெரியாரின் திருவுருவப் படத்தையும் அண்ணாவின்
திருவுருவப் படத்தையும் வைத்திருக்கிறேன். எந்தக்காரணத்தை முன்னிட்டும் என்னுடைய படத்தை வைக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். எங்கா வது தப்பித் தவறி அந்தத் தவறைச் செய்து விடாதீர்கள்.அவர்கள் என்றென்றும் தலைமுறைகளுக்கு வழிகாட்டுகிறவர்கள். நான் அவர்கள் காட்டிய வழியில்
போகிற ஓர் ஊழியக்காரன், அவ்வளவுதான்.
நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு விட்டோம்.தேசஒருமைப் பாட்டை ஏற்றுக் கொண்டு விட்டோம். நீ வழக்குகளைப் போட்டு எங்களை மிரட்ட முடியாது. இறையாண்மை என்று சொல்லி ஏற்கனவே இரண்டு வழக் குகள் போட்டிருக்கிறீர்கள், முதலமைச்சர் அவர்களே! இந்திய நாட்டின் இறை யாண்மைக்கு எதிரான பேச்சு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமான பேச்சு -இப்படி இரண்டு வழக்கு போட்டு இருக்கிறீர்கள். 124- ஏ என்று போட்டிருக்கிறீர்கள். அந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் ஆயுள்தண்டனை கொடுக்கலாம். அப்படி இரண்டு வழக்கு என்மீது போட்டிருக்கிறீர்கள்.நான் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. காரணம், நான் இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை. நான்
ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசவில்லை. இப்படிச் சொல்லி எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று வைகோ பேசுகிறான் என்று கருதுகிறீர்களா? ஒருகாலும் இல்லை. நான் நீதிமன்றத்திலேயே சொன்னேன்.
நான் நேற்றைக்கும் புலிகளை ஆதரித்தவன்.இன்றைக்கும் புலிகளை ஆதரிப்ப வன். நாளைக்கும் புலிகளை ஆதரிப்பவன் என்று நீதிமன்றத்திலேயே சொன் னேன். (கைதட்டல்) நீதிபதிதான் கொஞ்சம் திணறிப் போனார். நேற்றும் ஆதரித் தவன் என்று சொன்னவுடன், “ஒரு நிமிடம் யோசித்துச்சொல்லுங்கள்,” என் றார். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் ஒரு முடிவெடுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆயிரம் ஆண்டு களா வாழப் போகிறோம்? நூறு ஆண்டுகளா வாழப் போகி றோம்? இல்லை....ஆனால், இந்த வாழ்க்கை புகழுக்குரிய வாழ்க்கையாக -
இலட்சியத்துக்கான வாழ்க்கையாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் மாவீ ரர்கள் பெயராலே இந்த நெருப்பின்மீது ஆணையிட்டுப் பேசுகிறோம். வாழ்க் கை நீர்க்குமிழியைப் போன்றது.
“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”
என்றான் வள்ளுவன். அதனால்தான்,
“புகழ்எனின் உயிரையும் கொடுப்பர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொளலர்”
கலைஞர் கருணாநிதி அவர்களே! இவற்றை எல்லாம் ஒரு காலத்தில் எழுதி னீர்கள்; பேசினீர்கள்; அனல் தெறிக்கப் பேசினீர்கள். உங்கள் பேச்சினால் கவரப் பட்டு கைதட்டி அந்தக் கூட்டத்திலே, காளிமுத்துவைப் போல-என்னைப்போல லயித்துப் போனவர்கள் எத்தனையோ பேர்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற அற்புத மான தீபத்தை - அண்ணா உருவாக்கிய தீபத்தை - கோடானுகோடி மக்களின்
இதயத்திலே ஏற்றி வைத்தார். கலைஞர் அவர்களே! இன்றைக்கு நீங்கள் எவ் வளவு பெரிய பழியைச் சுமந்து கொண்டு நிற்கிறீர்கள்? நீங்கள் இந்த இனத்துக் கு துரோகம் செய்தீர்கள். அதற்குக் கொடுக்கப்பட்ட கையூட்டுத்தான் அதற்காக நீங்கள் கொள்ளையடிப்பதற்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ்தான் ஸ்பெக்ட் ரம் ஊழல்.
நான் இந்தியாவின் தலைமை அமைச்சரைக்கேட்கிறேன்: 1 இலட்சத்து 76 ஆயி ரம் கோடி ஊழல். எனக்குத் தெரிந்து வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வள வு பெரிய ஊழல் நடந்தது இல்லை. ஜெயா தொலைக்காட்சியில் இரண்டு நாட் களுக்கு முன்னர் என்னைப் பேட்டி கண்டபோது சொன்னேன். நம்முடைய
மக்களிலே பல பேருக்கு மூன்று வேளை சோறு கிடையாது. பிள்ளைகளுக்கு நல்ல வைத்திய வசதி கிடையாது. நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஆதாரம்
கிடையாது. வாழ்க்கை முழுவதும் வறுமையுடன் போராட்டம். ஆனால், இவர் களோ ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளையடிக்கிறார்கள். பல பேருக்கு ஆயிரத்துக்கே சைபர் போடத் தெரியாது.
நூறுக்கே சைபர் போடத் தெரியாது. ஒரு இலட்சத்துக்கு எத்தனை சைபர் போட வேண்டும் என்று பல பெரியவர்களுக்குத் தெரியாது. ஒரு இலட்சத்து எழுபத் தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளை என்று சொன்னால் - அதிலே சம்பந்தப் பட்டவர் தி.மு.க. அமைச்சர் ஆண்டிமுத்து இராசா. 2007-லே ஆண்டிமுத்து
இராசா இந்தத் துறையில் இருந்து, லைசென்ஸ் கொடுப்பதிலே மிகப் பெரிய முறைகேட்டைச் செய்து, முதலில் வந்தவர்களுக்கு முதலிலே கொடுக்கப்
போகிறோம் என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு, அந்தக் கடிதம் வந்தவு டன் நவம்பர் 2-ஆம் தேதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதே அமைச்சர் இராசாவுக்குக் கடிதம் எழுதுகிறபோது, இதிலே வெளிப்படையாகவும்,மக்கள் கவனத்துக்குச் செல்லும் விதத்திலும் இந்தப் பிரச்சினை கையாளப்பட வேண் டும் என்று எழுதிய பிரதமர் அவர்களே!2007 நவம்பர் 2-இல் நீங்கள் இப்படி எழுதி யதற்குப் பிறகு, அதே ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி நான் எடுத்த முடிவின் படியே லைசென்ஸ் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டன. முதலில்
வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில் லைசென்ஸ் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டன என்று அமைச்சர் இராசா உங்களுக்குக் கடிதம் எழுதினார்.
உங்கள் மந்திரி சபையிலே இருக்கின்ற ஒரு மந்திரி -பிரதம மந்திரிக்கு - நான் இந்த முடிவை எடுத்தாயிற்று என்று உங்களது கன்னத்தில் அறைந்தாற்போல தகவல் சொன்னார். பகத்சிங் பிறந்த பரம்பரையில் பிறந்தவரா நீங்கள்? நான் சீக்கிய இனத்தை மதிப்பவன். நான் மிகுந்த வேதனையோடு கேட்கிறேன். உங் கள் செவிகளில் அறைந்தாற்போல இந்தக் கடிதத்தை அனுப்புகிறார், தி.மு.க. அமைச்சர் ஆண்டிமுத்து இராசா.நீங்கள் ஜனவரி 3-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு
அவருக்குப் பதில் எழுதுகிறீர்கள், “உங்கள் கடிதம் கிடைத்தது” என்று. அதில் எந்தக் கருத்தையும் நீங்கள் தெரிவிக்கவில்லை. அப்படியானால் வெளிப்படை யாக இருக்க வேண்டும்; நேர்மையாக இருக்க வேண்டும் என்று 2007 நவம்பர் 2-ஆம் தேதி கடிதம் எழுதிய நீங்கள், இப்போது கடிதம் கிடைத்தது என்று மட்டும் சொல்லி விட்டு, நீங்கள் எடுத்த முடிவு தவறென்றோ, நீங்கள் லைசென்ஸ் கொடுத்தது தவறென்றோ எதுவுமே சொல்லாமல், விட்டு விட்டீர்கள். இந்தப் பிரச்சினையில் உங்களது கைகளைக் கட்டிப் போட்டது யார்?
இதுதான் என்னுடைய கேள்வி. நீங்கள் இந்த முடிவெடுக்க விடாமல், தி.மு.க. அமைச்சர் எத்தனை இலட்சம் கோடி கொள்ளையடித்தாலும் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் என்று சொல்லக் காரணம், ஒன்று - உங்கள் கட்சிக்கு - நீங்கள் தலைமை தாங்குகிறீர்களே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - அதற்குத் தலைமை தாங்குகின்ற காங்கிரஸ் கட்சிக்கு அதில் பெரும் பங்கு
கொடுக்கப்பட்டு விட்டதா? இந்த இரண்டே கேள்விதான். உங்கள் கட்சி பெரும் பங்கு பெற்று விட்டதா? காங்கிரஸ் தரப்பிலே பெற்று விட்டதா?
வெறும் 65 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டிலே திருவாளர் பரிசுத்தம் என்று, அன்றைக்குச் சொல்லப்பட்ட இராஜீவ் காந்தியை இந்த நாட்டு மக்கள் தூக்கி எறிந்தார்கள். வெறும் இரண்டு இலட்சம் ரூபாய் குற்றச்சாட்டுக்காக டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியை இராஜினாமா செய்துவிட்டுப் போனார்.
ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது நடுங்க வைக்கின்ற ஊழல். இந்த ஊழலில் பிரதம அமைச்சர் இப்படிப் பேசாமல், இதைக் கண்டுகொள்ளா மல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும். ஒன்று காங் கிரசின் கஜானாவுக்கு இதிலே பெரும் பங்கு போய்ச் சேர்ந்து விட்டது. அத னால் பேசாமல் இருக்கிறார்கள் என்பது காரணமா? அல்லது நமக்கு வேறு வகை யிலே பணம் வந்து கொண்டு இருக்கிறது. இதிலே வேண்டாம். கோபால புரங்களுக்கும், சி.ஐ.டி. நகர்களுக்கும் இது போவதென்றால் போகட்டும்.நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். காரணம்,இலங்கையிலே - ஈழத்திலே, தமிழ் மக் களைப் படுகொலை செய்வதற்கு, ஈழத் தமிழினத்தை அழிப்பதற்கு, இராஜ பக்சேவுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்தது மட்டுமல்ல;
அங்கே தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது, இந்திய இராணுவத்தின் முப்படைத் தளபதிகள் போய் ஆலோசனை சொல்கிறபோது, ராடார்களை இயக்குகிறபோது, குண்டுகள் விழுகிறபோது, எங்கள் குழந்தைகள் செத்து மடி கிறபோது, செஞ்சோலையில் எங்கள் குழந்தைகள் துடிக்கத் துடிக்கக்கொல்லப் பட்டபோது, எங்கள் தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது --
இவ்வளவு கொடுமைகளும் நடக்கிறபோது -- 1965-இல் வடபுலத்தில் இருந்து வருகிற ஒரு மொழியின் ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம் என்று, சிவலிங்கம்,
சின்னசாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து என்று தீக்குளித்ததோடு மட்டுமல்ல; எல்லைப் புறத்தைக் காக்க வேண்டிய இந்திய
இராணுவத்தை எதிர்த்து இந்த நாட்டுத் தமிழ் இளைஞன் திருப்பூரிலே துப்பாக் கிக்கு முன்னால் போய் நின்றான்.போலீஸ் ஸ்டேஷனைப் போய் கைப்பற்றி னான்.இரயில்வே ஸ்டேஷனைக் கைப்பற்றினான். ஆரணியிலே - திருப்பூரி லே - திருச்செங்கோட்டிலே - மதுக்கரை காடுகளிலே அன்றைக்குத் தமிழக இளைஞர்கள் இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள்.
அப்படிப்பட்ட தமிழ்நாடு - ஒரு மொழி ஆதிக்கத்தை எதிர்த்தே இப்படிப் போராடி னார்கள். அலைகடலுக்கு அப்பால், அவர்களின் தீனக்குரல் எங்கள் செவிகளில்
விழுகிறபோது, எங்களது தொப்புள் கொடி உறவுகள் இப்படிக் கொல்லப்படுகிற போது, முத்துக்குமார் தீக்குளித்தபோது எடுத்து வைத்த நெருப்பு, இலட்சோப
இலட்சம் இளைஞர்கள் நெஞ்சிலே பற்றி எரிகிறபோது, தமிழகம் போர்க்கள மானால், தமிழகம் எரிமலையாக வெடித்தால், அதைத் தாக்குப்பிடிக்க முடி யாது என்பதற்காக, அதைத் தடுப்பதற்காக கலைஞர் கருணாநிதி பழைய வச னங்களை எழுதியும் பேசியும் ஏமாற்றியும் - அ.தி.மு.க. உடன்பட்டு போட்ட
தீர்மானத்தை டெல்லியில் உங்கள் வீட்டு வாசலில் இராஜபக்சே காலில் போட் டு மிதித்தபோதும் கண்டுகொள்ளாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக
மருத்துவ மனையில் போய்ப் படுத்துக் கொண்டார்.போராடிய வழக்கறிஞர் களின் கபாலங்களை உடைத்து, இப்படிப்பட்ட சோகத்தைக் கோபாலபுரத்துக் கருணாநிதி செய்ததற்காக - ஸ்பெக்ட்ரம் கொள்ளையடிப்பதற்கு நீங்கள் கொடுத்த அனுமதியா? இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
தமிழகம் பொங்கி எழுந்திருந்தால் - அனைத்துக்கட்சிகளும் ஒன்றாக நின்றன - மொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்திருந்தால்,இவர் அதனை நடத்த முடியாது. ஆகவே, இந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் ஒரு இலட்சத்து எழுபத் தாறாயிரம் கோடிக்கு இந்த ஊழல் நடைபெறுவதற்கு இவ்வளவு பெரிய தவ றைச் செய்வதற்கு, இந்திய அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது. சவுக்கால் அடித் தது சுப்ரீம் கோர்ட். இனியும் எதற்காக மந்திரியாக வைத்திருக்கிறீர்கள் என்று
கேட்டார்கள். அமைச்சர் பதவியா? இராஜினாமா செய்கிற பேச்சுக்கே இட மில்லை என்று சொன்னார் ஆண்டிமுத்து இராசா, விமான நிலையத்தில். இவர்
கோபாலபுரத்திலே, இராஜினாமாவா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இவர் டில்லிக்குப் போய் விமானத்தில் இருந்து இறங்கக்கூட இல்லை. அண்ணன்
சொன்னதுபோல, இராஜினாமா செய்யாவிட்டால், டிஸ்மிஸ் செய்வார்கள். ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்.இப்பவும் போக வேண்டியது இருக்கும். அதிலே ஒன்றும் பிரச்சினை கிடையாது. அவர் மட்டும் போவாரா? பின்னால் மூலஸ்தானத்தையும் சேர்த்துப் பிடுங்கிக் கொண்டு போவார்களா?
மத்திய அரசுக்குச் சொல்கிறேன்: நீ ஊழல் மட்டும் செய்யவில்லை. ஏ.... மத்திய அரசே! மன்மோகன் சிங் தலைமையிலான அரசே! கேடுகெட்ட அரசே! தமிழ்
இனத்தை அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்த அரசே! உனக்கு மன்னிப்பே கிடை யாது. மன்மோகன் சிங் அவர்களே! இந்தப் பதவி அவ்வளவு பெரிதா? உங்க ளைச் சந்தித்து கைகளைப் பற்றிக் கொண்டு, இந்த எளியவன் மன்றாடி இருக் கிறேன், 2004-இல், 2005-இல், 2006-இன் தொடக்கத்திலே! இந்தப் பாவத்தைச்செய் யாதீர்கள்; ஆயுதம் கொடுக்காதீர்கள்; எங்கள் இனத்தை அழித்து விடுவான் கொலைபாதகன் இராஜபக்சே என்று சொன்னோமே! நீங்கள் ஆயுதம் கொடுத் தீர்கள்.
இப்போது நினைவுக்கு வருகிறது. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி நினைவிழந்த நிலையிலே மருத்துவ மனையிலே இருக்கிறார். எனக்கு நல்ல நண்பர். இன் னும் அவர் கோமா நிலையில்தான் இருக்கிறார். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி
சொன்னார்: “வைகோ! நீங்கள் இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது என்று சொல்லிவிட்டுப் போன பிறகு, மன்மோகன் சிங் என்னை தனி யே அழைத்துக் கேட்டார். இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்பதற்கு நேற்று ஒரு மெமோரண்டம் வைகோ கொடுத்தார். இந்த ஒப்பந்தம் போடலாமா என்ன? என்று கேட்டார்.
தொடரும் ........
No comments:
Post a Comment