நாள் :- 30.08.2006
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சி. கிருஷ்ணன், சிப்பிப்பாறை இரவிச் சந்திரன் ஆகியோர், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, இன்று பகல் 1.00 மணி அளவில் தில்லியில் - பிரதமர் அலுவலகத்தில் சந்தித் தனர். அப்போது அவர்கள் பிரதமரிடம் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் பின் வருமாறு :
அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈழத்தமிழர்கள் அனுபவித்து வருகின்ற கொடுமைகளைத் தங்கள் கவனத்திற் குக் கொண்டு வர விழைகிறோம். இலங்கையின் சிங்கள அரசாங்கம், தமிழர் கள் மீது இனப்படுகொலைத் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 14.08.2006 அன்று, உலக நாட்டு மக்களின் இதயத்தை உறையச் செய்கின்ற வகையில், ‘செஞ்சோலை’ என்ற இடத்தில் அமைந்து உள்ள, தாய்- தந்தையை இழந்த, ஆத ரவு அற்ற குழந்தைகள் காப்பகம் மீது விமானங்களில் இருந்து குண்டு களை வீசி, 61 பெண் குழந்தைகளைப் படுகொலை செய்து உள்ளனர். 170 க்கும் மேற் பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல்களில், இந்தக் குழந்தைகளின் பெற் றோர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எனவே, ஆதரவு அற்ற இந்தக் குழந்தை களைப் பரிவுகாட்டிப் பராமரிப்பதற்காக, விடுதலைப் புலிகள் அமைப்பினர், இந்தக் காப்பகத்தை அமைத்து இருந்தனர். போர்க்களத்தில் காயம் அடைந் தோருக்கு முதல் உதவி அளிப்பதற்கான பயிற்சிகளைப் பெறுவதற்காக, சுமார் 200 பள்ளிக்குழந்தைகள் அந்த இடத்தில் இருந்தனர்.அந்த வேளையில், சிங்கள விமானப்படை, இஸ்ரேல் நாட்டின் கிஃபர் ஜெட் விமானங்களில் இருந்து குண்டு களை வீசியது.
தாங்கள் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று இலங்கை அரசாங்கம்
பொய்யான அறிக்கையை வெளியிட்டது. ஆனால், இலங்கையில் உள்ள யுனி செஃப் அமைப்பினரும், இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்று உள்ள ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும், இலங்கை விமா னப் படையின் குண்டுவீச்சால்,அப்பாவித் தமிழ்ச் சிறுமிகள் சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
மிருகத்தனமான இந்தப் படுகொலைகளைக் கண்டித்து,தமிழ்நாடு சட்டமன்றம், 17.8.2006 அன்று ,ஒரு தீர்மானத்தை ஒரேமனதாக நிறைவேற்றி உள்ளது. இலங் கை விமானப்படையினரின் மனிதத் தன்மை அற்ற செயலை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கண்டித்து உள்ளனர்.
‘கற்பனையாகப் புனையப்பட்ட, தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழ் நாடு சட்டமன்றம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாகக்’ குறை கூறி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் 17.8.2006 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இலங்கை அரசு தனது கருத்துகளைத் தூதரகத்தின் வழியாகத்தான் இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். எனவே, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம், தனது செயல் வரம்பு எல் லையை மீறி, தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தைக் குறை கூறி இருக் கிறது. இவ்வாறு குறை கூறுவதற்கு துணைத் தூதருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரை, உடனடியாகக் கொழும்புக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள் கிறோம்.
இலங்கை அரசு, பாகிஸ்தானிடம் இருந்து, நவீன ஆயுதங்களை மிகப்பெரும்
அளவில் வாங்கிக் குவித்து இருப்பது கவலை அளிக்கிறது. கடந்த ஆகஸ்ட்
14 ஆம் நாள், இரண்டு பெரிய கப்பல்களில் பாகிஸ்தான் நாட்டு ஆயுதங்கள்
இலங்கைக்கு வந்து சேர்ந்து இருப்பதாகத் தெரிகிறது.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை அமைப்பினர், இலங்கையில்தற்போது செயல்பட்டு வருகின்ற னர். இந்தியாவின் தென்பகுதியில், குறிப்பாகத் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டி, அமைதியைச் சீர்குலைக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இலங் கையில் உள்ள பாகிஸ்தான் தூதர் அஸ்லம் செளத்திரி,பாகிஸ்தான் கடற்படை யில் ஏர்-வைஸ்-மார்ஷலாகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர். பணியில் இருந்த காலத்தில் சீனா, வட கொரியா ஆகிய நாடுகளில் இருந்து, பாகிஸ்தான் இரா ணுவத்துக்காக ஏவுகணைகளைப் பெறுவதில் முதன்மையான பங்கு வகித்த வர்.
தற்போதைய இலங்கைக் குடி அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே, ஒன்றுபட்ட இலங்கை அரசியல் அமைப்புக்கு உள்ளே, தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கப்போவதாகக் கூறி இந்தியாவையும், உலக நாடுகளையும் ஏமாற்ற முயன்று வருகிறார். அதிகாரப்பகிர்வு குறித்து, இந்திய அரசாங்கம் சில கருத் துகளைத் தெரிவித்து இருப்பதாக அறிகிறோம்.
கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கின்றபோது, இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கின்ற உணர்வோடும், ஒட்டு மொத்த மாக ஏமாற்றுகின்ற நிலைப்பாட்டையும் மட்டுமே கடைப்பிடித்து வருகின்றது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கைத் தீவு, ‘தமிழ்த்தேசம், சிங்கள தேசம்’ என்ற இரண்டு தேசங்களைக்
கொண்டது ஆகும். தமிழர்கள், இலங்கைத் தீவின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். இந்த வரலாற்று உண்மை, மறைந்த இந்தியப் பிரதமர் திருமதி
இந்திராகாந்தி அவர்களால் இந்திய நாடாளுமன்றத்திலே பிரகடனம் செய்யப் பட்டு இருக்கிறது. போர்த்துக்கீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இலங் கைத் தீவில் கால் வைப்பதற்கு முன்பாக,அங்கே தமிழர்கள் மன்னர் வழி ஆட்சி யை நடத்தி வந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் 1948 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவைவிட்டு வெளியேறிய
போது, ஆட்சி சிங்களவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிங்கள இனவெறி அரசு,
தமிழர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைப் பறித்து அடிமை களைப்போல் நடத்தியது.
எனவே,தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதியான வழியில் அற வழிப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சிங்களக் காவல்துறையாலும், இராணுவத்தாலும், கண்மூடித்தனமா கத் தாக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். சிங்கள அரசின், மக்கள் ஆட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கைளால், பத்து இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் நாடு அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
இலங்கை அரசு அதிகாரப்பரவல் குறித்துத் தமிழர்களோடு ஏற்படுத்திய எந்த
உடன்படிக்கையையும் இதுவரை மதித்து நிறைவேற்றவில்லை.
1. பண்டாரநாயக-செல்வநாயகம் ஒப்பந்தம் (1957):
இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்த வட்டார ஆட்சி முறையைப்
புத்த துறவிகள் எதிர்த்ததால், குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டது.
2. டட்லி சேனநாயக-செல்வநாயகம் ஒப்பந்தம்(1965)
மண்டல ஆட்சிமுறையைக் கூறிய இந்த ஒப்பந்தமும், இலங்கை அரசால்
கிழித்து எறியப்பட்டது.
3.1976 ஆம் ஆண்டு , தமிழர்களும் அங்கு உள்ள அரசியல் இயக்கங்களும் ஒன்று கூடி, ‘ஈழத்துக் காந்தி’ என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் தலைமையில், 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வட்டுக் கோட்டையில், பண்ணாகம் என்ற இடத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். (வட்டுக்கோட்டை தீர்மானம்)
செஞ்சோலைப் படுகொலை!
பிரதமரிடம் வைகோ அளித்த கோரிக்கை !

‘தமிழர்கள் சுதந்திரமாக வாழ, சிங்களர்களின் பிடியில் விடுபட்டு தனி நாடு தேவை. அது தமிழ் ஈழமாகத்தான் இருக்க முடி யும் ’ என்ற தீர்மானத்தை நிறை வேற்றினார்கள். அந்த மாநாடு, ‘இளைய தலை முறையினர்,தமிழ் ஈழத்தைப் பெறுவதற்கான இலட்சியத்தை நோக்கிப் பய ணிக்க வேண்டும்’ என்று வேண் டுகோள் விடுத்தது.
இந்தக் கொள்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு-
கிழக்குப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களும், பொது வாக்குப்பதிவு என்ற அடிப்படையில், தமிழ் ஈழம்தான் தீர்வாக இருக்கமுடியும் என்று தீர்மா னித்து, தங்களுடைய பிரதிநிதிகளை ஏகோபித்த ஆதரவோடு தேர்ந்து எடுத்த னர்.
4. இலங்கை அரசாங்கம், இராணுவத்தின் துணையோடு, தமிழ் இனத்தை ஒழிக் கின்ற நடவடிக்கைகளிலே ஈடுபட்டார்கள். கொலை, கற்பழிப்பு, கொள்ளைய டித்தல், இலங்கை இராணுவத்தின் அன்றாட நடவடிக்கைகளாக ஆகிவிட்டன. 1981 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப்பெரிய தமிழ் நூலகம் தீயிட் டுக் கொளுத்தப்பட்டது. தமிழர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தமி ழர்கள் வழிபடும் தலங்களின் புனிதத் தன்மையைக் கெடுத்து அழித்தனர். 1983 ஆம் ஆண்டு வெளிக்கடைச் சிறையில், கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தாக்குதலை, படுகொலையை,இரத்தம் உறையச்செய்யும் வகை யில் இலங்கை அரசு அரங்கேற்றியது. 57 தமிழ் சிறைக் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள்தாம், தமிழர் களின் இளைய தலைமுறையை ஆயுதப்போராட்டத்துக்குத் தள்ளியது. ஆயு தப்போராட்டம் மூலம்தான் நீதி கிடைக்கும்; தனி ஈழம் கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது.
இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்தை நயவஞ்சகமாகச் சிக்க வைக் கின்ற விதமாக, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அப்பொழுது இலங்கைக் குடி அரசுத் தலைவர் திரு.ஜெயவர்த்தனே அவர்கள், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மையின் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே, அதில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு எதி ராக நடந்துகொண்டார். இலங்கை அரசாங்கமோ அல்லது அந்த உடன்படிக்கை யோ, தொன்றுதொட்டுத்தமிழர்கள் வாழ்ந்து வருகிற பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அரசு சார்பாக சிங்களவர்களைக் குடி அமர்த்துகின்ற அநீதியைத் தடுக்க முயலவில்லை. மாறாக, சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தியது.
இலங்கை அரசாங்கம் வஞ்சகமான திட்டத்தோடு, இந்திய அமைதிப்படையை, (IPKF) தமிழர்களோடு குறிப்பாக விடுதலைப் புலி களோடு மோத விடுகின்ற பணியிலே வெற்றி கண்டது. ஆற்ற முடியாத காயங்களும், வடுக்களும், துயர மான சம்பவங்களும் அடங்கிய நிகழ்வாக அந்தத் தாக்குதல் அமைந்தது.
இலங்கையின் குடி அரசுத் தலைவராக திரு.மகிந்த ராஜபக்சே அவர்கள் பதவி
ஏற்றவுடன், ‘இலங்கை ஒன்றுபட்ட நாடு; இங்கே கூட்டு ஆட்சிக்கு இடம் இல் லை; தமிழர்கள் தனித் தேசிய இனம் என்ற கொள்கையை ஏற்க முடியாது’ என் று அறிவித்ததில் இருந்து, ராஜபக்சேவின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள லாம். 1987 இல் கையெழுத்தாகிய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூட, தமி ழர்களின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது.
1971 இல் இலங்கையில் ஜே.வி.பி.யின் கொலைவெறியை ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, இந்தியா தனது இராணுவத்தை இலங் கைக்கு அனுப்பியது. ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா- பங் களாதேஷ் போரில் ஈடுபட்டு இருந்தபோது, இலங்கை அரசாங்கம் பாகிஸ்தா னுடைய போர் விமானங்களுக்கு கொழும்பில் அனைத்து விதமான உதவி களை யும் செய்து கொடுத்தது.
இன்று உண்மை நிலை என்னவென்றால், இலங்கைத் தீவில் தமிழர்கள் விடு தலைப் புலிகளின் பின்னால்தான் அணிவகுத்து நிற்கின்றார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்துதான், பெருவாரி யான எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்கு அகதிகள் வந்து கொண்டு இருக்கிறார் கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து யாரும் அகதிகளாக வரவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலை, தமிழர்கள் விடுதலைப்புலிகளின் மூலமாக எதிர்கொள்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா எந்தவித மான இராணுவ உதவியும் வழங்கக்கூடாது, ஆயுதங்களையும் விற்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், இலங்கையில் பாகிஸ்தான் எந்தவித மான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு இடம் தரக்கூடாது.ஏனெனில், அத்த கைய நடவடிக்கைகள், இந்தியாவின் பூகோள அரசியல் சூழ்நிலைக்குப் பாதகத் தை ஏற்படுத்தும்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்கள் உண்ண உணவு இல்லாமல்,மருத்துவ வசதிகள் இல்லாமல்,சொல்ல முடியாத இன் னல்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி இருக்கின்றார்கள்.2004 டிசம்பர் மாதம் சுனாமியால் பெரும் பாதிப்புக்கு ஆளானபோது, ஈழத்தில் 25,000 தமிழர்கள் அந்த இயற்கைச் சீற்றத்தில் அழிந்து போனார்கள்.ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும் பங்கள் தங்களது வீடுகளை இழந்தார்கள்.இந்தியாவும் மற்ற நாடுகளும் மறு வாழ்வுக்குச் செய்த உதவிகள், தமிழர்களைச் சென்று அடையவில்லை.
பிரெஞ்சு நாட்டின் சுனாமி மறுவாழ்வு முகாமில் பணியில் ஈடுபட்டு இருந்த 17 தமிழ் இளைஞர்கள் , இலங்கை இராணுவத்தினரால் காட்டுமிரண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி, கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். 17 இளை ஞர்களின் தலையிலும் குண்டுக்காயங்கள் இருந்தன.இந்தக்கொடூரக் கொலை யை இலங்கை இராணுவம் செய்தது எனும் உண்மையை, ஆஸ்திரேலிய வல் லுநர் குழு அறிவித்து உள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளின் உதவியுடன், பாதிப்புக்கு ஆளாகி உள்ள தமிழர்களுக்கு உணவும், மருந்துகளும் வழங்குவ தற்கு, இந்திய அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணி வுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பாக் நீரிணையின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு வருகின்ற அகதிகளின் அவலம்
நெஞ்சைப் பிழிகிறது. பாதிப்புக்கு உள்ளான தமிழர்கள்,தமிழகக்கரையை அடை வதற்கு முன்பாக மோசமான வானிலையாலும், கடல் வழிப் பயணத்திற்குப் பொருந்தாத படகுகளாலும், ஜலசமாதி ஆகின்ற துயரமான நிகழ்வுகள் நடக் கின்றன.
எனவே, இந்தியக் கடற்படை நமது எல்லைக்கு உட்பட்ட தனுஷ்கோடி முனை யில் அகதிகளை இறக்குவதற்கும், அந்தப் படகுகள் மன்னார் தீவுக்குத் திரும்பு வதற்கும் வழி ஏற்படுத்தித்தர வேண்டும். இங்கு வந்து சேருகின்ற அகதிகளுக் கு அவர்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை,முதல் உதவி போன்ற வசதிகளை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்குப் போதிய நிதியை வழங்குவதோடு, அகதிகளுக்கு வழங்குகின்ற உதவித் தொகை யையும் இந்திய அரசு உயர்த்த வேண்டும்.
இலங்கை இராணுவம், தமிழர்கள் மீது நடத்துகின்ற வெறித்தனமான தாக்கு தலை உடனடியாக நிறுத்த, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நார்வே அரசின் உதவியோடு நார்வேயில் நடந்த பேச்சுகளின்போது,இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டபடி நடந்து கொள்ள இந்தியா வலியுறுத்த வேண் டும். அமைதிப் பேச்சுகள் மட்டுமே ஒரு முடிந்த முடிவு அல்ல. அது தீர்வைக் காண்பதற்கு ஒரு வழிதான்.
தமிழ் இனப் பிரச்சினையில் காணப்படுகின்ற எந்தத் தீர்வாக இருந்தாலும், 50 ஆண்டுகளாகத் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடியதாக அமைய வேண்டும். தமிழர்கள் மீது எந்தவிதமான தீர்வையும், வற்புறுத்தியோ, ஆசை வார்த்தைகளாலோ திணிக்க முடியாது. இந்திய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங் கைக்கு அனுப்பி, அங்கு உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இலங்கைத் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்களைச் சந்தித்து, அவர்களுடைய கருத்தைத் தெரி விப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவில் உள்ள சூழ்நிலையை இலங்கையோடு ஒப்பிடுவது சரியான நிலை அல்ல. இலங்கையில் நிலவுகின்ற சூழலும் சம்பவங்களும் முற்றிலும்
வேறானது. இலங்கை அரசாங்கம் நடத்துகின்ற இனப்பாகுபாடு அடக்குமுறை, இன அடிமை நிலை அல்லது அரசே ஒரு இனத்தின் மீது நடத்துகின்ற தீவிர வாதத் தாக்குதல், இந்தியாவில் இல்லை.
எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவின் ஒற்று மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எழுத்தாலும், செயலா லும் உறுதியாக இருக்கின்ற இயக்கம். நாட்டுப்பற்றில், நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
இலங்கையில் பாதிக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு ஆறுதலும், பாதுகாப்பும்
அளிக்கின்ற வகையில், தேவையான நடவடிக்கைகளைத் தாங்கள் உடனடி யாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
‘தாயகம்’

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment