Monday, June 10, 2013

மகாத்மா காந்தியும் மதுவிலக்கும்!

1905 களில் தென் ஆப்பிரிக்கா ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழில் ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பின் கீழ் மகாத்மா காந்தியடிகள் பல கட்டுரைகள் எழுதியுள் ளார். ஆங்கிலத்தில் எழுதிய அக்கட்டுரைகள் 1942 இல் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டன. அதில் மதுவிலக்கு குறித்து மகாத்மா காந்தியடிகள் கூறும் கருத்து கள் இதோ:

எதையும் செய்ய இயலாதநிலை

“மது வகையில், அந்நிய நாடுகளில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப் படும் பானங்களுடன் நாட்டுச்சாராயமும் கள்ளும் அடங்கும். இவை அனைத் துக்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட வேண்டும். மது அருந்திய ஒருவன் தன்னையே மறந்துவிடுகிறான்.போதை நீடிக்கும் வரையில் உபயோகமுள்ள எதையும் செய்வதற்கு அறவே இயலாதவனாக இருக்கிறான்.
குடிப் பழக்கத்தைக் கைக் கொள்ளுகிறவர்கள் தங்களையும், தங்களைச் சேர்ந்த வர் களையும் நாசத்துக்கு உள்ளாக்கு கிறார்கள். அவர்களுக்கு மட்டும் மான மரியாதை உணர்ச்சிகள் இல்லாமல் போய்விடுகின்றன.மதுபானங்களை எல் லாம் தடுக்க வேண்டியது நமது கடமை ஆகிறது.

ஆப்பிரிக்க நீக்ரோக்கள் ஆதியில் குடிப்பழக்கம் உடையவர்கள் அல்ல. மேல் நாட்டு மதுபானங்கள் அவர்களை நாசமாக்கிவிட்டன என்றே கூறலாம். ஏராள மான நீக்ரோ தொழிலாளர்கள் தங்கள் சம்பாத்தியத்தை எல்லாம் குடியில் பாழாக்குவதைக் காணலாம்.அதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கை இருள் மூடிப் போய்விட்டது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத்திரும்பிய பிறகு குடியின் கேடு கள் சம்பந்தமாக எனக்கு அதே போன்ற வேதனைமிக்க அனுபவமே ஏற்பட்டது. அநேக சுதேச மன்னர்கள் மதுபானங்களால் பாழாகியிருக்கிறார்கள்.பாழாகிக் கொண்டும் இருக்கிறார்கள்.

உடம்பும் உயரிய பண்பும் அழியும்

பணக்கார வாலிபர்கள் கதையும் இதுதான்.குடியினால் தொழிலாளர்கள் அடைந்துள்ள நிலையும் பரிதாபகரமானது. இப்படிப்பட்ட கசப்பான அனுபவங் களால் நான் மதுபானங்களுக்குப் பரம எதிரியாக இருப்பது வாசகர்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணாது. சுருக்கமாகச் சொன்னால்,குடி ஒருவனுடை ய உடம்பையும், ஒழுக்கத்தையும், அறிவையும், ஆக்கத்தையும் நாசமாக்கு கிறது. (மகாத்மா காந்தி நூல்கள் 4 ஆவது பகுதி 1959, பக் 35-38)

மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 7 சமூக சீர்திருத்தம் பற்றியது. 1961 இல் தமி ழில் வெளியான இந்த நூலில் மூன்றாம் பாகம் குடி, போதை வஸ்துகள், சூதாட் டத்தீமைகள் என்ற பகுதி 661 ஆவது பக்கம் முதல் தொடங்கி 788 ஆவது பக்கம்
வரை உள்ளது. அதில் அண்ணல் காந்தி மதுவிலக்கு பற்றி கூறியுள்ள அரிய
கருத்துகளில் சில இதோ:

நான் ஒரு மணி நேரம் சர்வாதிகாரியானால்

‘எங் இந்தியா’ இதழில் 25.6.1931 இல் காந்தி எழுதுகிறார். ‘பரிபூரணமான மது விலக்கில் எனக்குள்ள நம்பிக்கையை மீண்டும் அறிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஒரு மணி நேரத்திற்கு இந்தியா பூராவுக்கும் என்னை சர்வாதிகாரியாக நியமித்தால் முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? நஷ்ட ஈடு கொடுக்காமல் எல்லா கள்ளுக்கடைகளையும் மூடி விடுவேன். எனக்குக் குடிப் பழக்கமே கிடையாது. ஆகையால் நான் ஒரு மணி நேரம் சர்வாதிகாரியாக
இருந்தால்கூட நிதானம் தவறாமலே இருப்பேன்.

குடியினால் இழக்கும் வருமானத்தை ஈடு செய்வதற்காக இராணுவச் செலவை
உடனடியாகக் குறைத்து விடுவேன்.புதிய நிலைமைக்கேற்றவாறு சேனாதிபதி எப்படியாவது சரிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். காந்தியின் ஆங்கில வரிகள் இதோ:

Young India 25.6.1931

“If i was appointed dictator for one hour for all India, the first thing i would do would be to close without
compensation all the liquor shops,....For the loss of revenue from drinks, I would straight way cut down the
military expenditure and expect the Commander - in - Chief to accommodate himself to the new condition in the best way he can” (The collected works of mahatma Gandhi.Volume 47 (1971) page 54)

முழு மதுவிலக்கு

முழு மதுவிலக்கு என்பதன் பொருள் என்ன? அதன் அளவு என்ன? பூரண மது விலக்கு என்பது போதை தரும் பானங்கள், பொருள்களின் விற்பனையை அடியோடு தடை செய்வதாகும். (ஹரிஜன் 31.7.1937)

குடும்ப வாழ்வின் அமைப்புக்கே ஆபத்து

18.9.1937 ஹரிஜன் இதழில் காந்தியடிகள் ஜான் பார்னபாஸ் என்பவரது கட்டுரை யில் இருந்து மேற்கோள்காட்டும் பகுதி இதோ:

‘குடித்தீமை குடிப்பவருடன் நின்று விடுவதில்லை.அது கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய குழந்தைகளுக்குப் பரவுகிறது. குடும்பத்தில் ஸ்திரமற்ற ஒரு நிலைமை ஏற்படுகிறது.அவனுடைய பொருளாதாரத்தையே அது குலைத்து விடுகிறது. குழந்தைகள் கருவிலேயே பாதிக்கப்பட்டு விடுகின்றன. சிகாகோ வில் கோர்ட்டுக்கு வந்த சிறுவர்களில் 75 சதவிகிதம் பேரின் குற்றங்களுக்கு காரணம் அவரது பெற்றோர்கள் குடிகாரர்களாக இருந்தது தான். குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதோடு மட்டுமில்லை. குடும்ப வாழ்வின் அமைப்புக் கே ஆபத்து வந்து விடுகிறது. மதுபானத்தினால் வறுமை ஏற்படுகிறது.வறுமை யினால் குற்றங்கள் ஏற்படுகின்றன.குற்றங்களினால் குடும்பங்கள் சீரழி கின்றன.

தமிழர் தலைவர் வைகோ

குடிபோதையில் குடும்பங்கள் சீரழிவதைத் தடுத்திட, ‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்று தமிழர் தலைவர் வைகோ நடைப்பயண பிரச்சாரத்தை மேற் கொள்கிறார். நாளும் நாளும் தமிழர் நலனில் அக்கறை கொண்டு ஓய்வறியா மல் உழைத்து வரும் தலைவர் வைகோவின் தூய நோக்கம் வெற்றி பெற்றே தீரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் வந்தே தீரும்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment