Wednesday, June 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 5

யாழ் பல்கலை மாணவர்கள்,பேராசிரியர்கள் மீது தாக்குதல்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

17.12.2005 அன்று யாழ்ப்பாணத்தில், தர்ஷணி என்ற இளம்பெண் இலங்கைக்
கடற்படையினரால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு
உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு, நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இப்படுகொலையால், தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின்
உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராககாட்டுமிராண்டித்தனமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை எதிர்த்து, அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமை யில், ‘இலங்கை மானிடரிங் மிஷன்’ (Sri Lanka Monitoring Mission)  என்ற அமைப் பிடம் மனு கொடுக்க ஊர்வலமாகச்சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு, பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பேராசிரி யர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக் கிறார்கள்.

கூட்டத்தினரை எச்சரிப்பதற்காக வானில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இலங் கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் துப் பாக்கிச் சூட்டால் காயம் ஏற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு மிகவும் கவலை அளிக்கக் கூடியது ஆகும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை இராணுவம்,பல்கலைக் கழக வளாகத்துக்கு உள்ளே நுழைந்து, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது.

போர்நிறுத்தத்தை மீறிச் செயல்படும் இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்கள்
மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் குற்றம் சுமத்தி,வெளி உலகுக் கு ஒரு தவறான தகவலை, தோற்றத்தை அளிக்க முற்படுகிறது.

1995-ஆம் ஆண்டு இலங்கை அரசு இராணுவத்தாக்குதல் நடத்தியபோது பலாலி விமானதளம் பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பகுதிகளில் வானில் இருந்து இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது. அப்பாவித் தமிழர்களும்,ஆண் களும், பெண்களும், சிறு குழந்தைகளும் ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப்பட் டார்கள். சுமார் ஐந்து இலட்சம் தமிழர்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, யாழ்ப்பாணத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேறினார்கள்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, அன்றைய போப் இரண்டாம் ஜான் பால் அவர் களும், அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் திரு.புத்ரோ ஸ்காலி அவர்களும் தங்களது வேதனையையும், கண்டனத்தையும் வெளிப் படுத்தினர்.

2004-ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்தியாவுடன் பாதுகாப்புக் கூட்டு ஒத்து ழைப்பு உடன்பாடு ஒன்றுக்கு முயன்றபோது, தாங்கள் எங்களது கருத்தைப் பரி வோடு ஏற்றுக் கொண்டு, அந்த உடன்படிக்கையைத் தவிர்த்தீர்கள்.

அந்தச் சமயத்தில், அக்டோபர் 2004-இல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில்,
‘பலாலி விமானதளத்தையும், ஓடுதளத்தையும் சீரமைப்பதற்கும், பழுது பார்க் கவும் இந்தியா எந்த வகையிலும் உதவக் கூடாது’ என்று குறிப்பிட்டு இருந் தேன். ஆனால் யு.என்.ஐ. செய்தி நிறுவனம் அண்மையில் வெளிப்படுத்திய செய்தி, பேரதிர்ச்சியைத் தந்தது.

இலங்கை விமானப்படைத் துணைத்தளபதி டொமினிக் பெரைரா, 9.12.2005
அன்று வெளியிட்ட செய்தியில், ‘யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானத்
தளமும் ஓடுதளமும் இந்தியப் பொருளாதார உதவியோடு கடந்த ஆறு மாத
காலமாகச் சீரமைப்புப் பணிகளும், மராமத்துப் பணிகளும் நடைபெற்று வருகி றது; இந்திய நிபுணர்கள் இதுதொடர்பாகக் கூட்டாக விவாதிக்க விரைவில் வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்தச் சூழலில், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் முதன்முதலாக இலங்கை
இந்தியக் கடற்படைகளின் முழுக் கூட்டுப் பயிற்சி, பெரிதும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக உள்ளது. தங்களுக்குச் சாதகமாக இந்திய அரசு இருப்பதாக இலங் கை அரசு செய்தியைப் பரப்பி வருகிறது.

போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுகள் தொடர்பாக இலங்கையில் நிலவுகின்ற
சூழல் கவலை அளிப்பதாக உள்ளது.

நார்வே அரசு, முழு ஈடுபாட்டோடு அமைதிப் பேச்சுகளுக்காகத் தொடர்ந்து
முயற்சி எடுத்து வருகிறது.

இத்தகைய பின்னணியில், இலங்கைத் தீவில் தமிழர்கள் படுகின்ற துன்ப துய ரங்களைத் தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவே இக் கடிதத்தை எழுதி உள்ளேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

23.12.2005

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment