Thursday, June 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 29

மாநில சுயாட்சி முழக்கம்

‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பேரறிஞர் அண்ணா, நாட்டுப் பிரிவினை கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என் றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை ஒன்றே, இந் தியாவின் ஒற்றுமைக்கு தீர்வாக இருக்கும் என்று அறிஞர் அண்ணா வரை யறுத்து, அதற்காக முதல்வராக இருந்தபோது குரல் எழுப்பினார்.

அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த தலைவர் வைகோ அதே கோட் பாட்டில் நின்று,நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு இருக்கின்றார். மாநில அரசு களைப் பந்தாடும் மத்திய அரசின் போக்கை இடித்துரைத்து, பல சமயங்களில்
வைகோ ஆற்றிய உரைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.



இராஜீவ்காந்தி பிரதமராக இருந்த நேரத்தில், நாகலாந்து மாநிலத்தில் குடியர சுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்ததைக் கண்டித்து, 1988 ஆகஸ்டு 8 இல் மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய முழக்கம்:

“இந்தியாவின் ஜனநாயகத்தை சாய்க்க இராஜீவ்காந்தியின் பாசிச அரசு மேலும்
ஒரு தாக்குதலை நாகலாந்தில் நடத்தி உள்ளது.அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு எனும் ஆயுதத்தை டெல்லிப் பேரரசு ஜனநாயகப் படுகொலைகளுக்கே தொடர்ந்து பயன்படுத்துகிறது. இந்தப் பிரிவு நீடிக்கும் வரை இந்திய வரலாற் றில் கறுப்பு அத்தியாயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


புதுடெல்லியின் கங்காணிகள்

புதுடெல்லியின் கங்காணிகளாகத்தான் ஆளுநர்கள் 1952 லிருந்தே தொடர்ந்து
செயல்பட்டு வருகின்றனர். 1952 பொதுத் தேர்தலில் அன்றைய விசாலமான சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மைபெறவில்லை.

பெரும்பான்மை பெற்றிருந்த எதிர்க்கட்சிக்கு மந்திரிசபை அமைக்க அன்றைய ஆளுநர் பிரகாசா அனுமதிக்காமல் நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கை இன்றும் தொடர்ந்து வருகிறது. அதனால்தான் ஆளுநர் மாளிகைகளில் ஆகும்
செலவைக் குறைக்க வேண்டும் என்று பூபேஷ்குப்தா கொண்டுவந்த தனிநபர்
தீர்மானத்தின் மீது பேசுகையில், ஆளுநர் பதவியையே ஒழிக்க வேண்டும் என் பதுதான் கழகத்தின் கோரிக்கை என வலியுறுத்தினேன்.

நாகலாந்தில் காங்கிரசிலிருந்து பதின்மூன்று எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினார் கள். காங்கிரசின் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிக எண்ணிக்கை இருந்ததால்
தனிக்குழுவாக அமைத்துக்கொண்டு ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த நாக லாந்து ஜனநாயகக் கட்சியோடு இணைந்து பெரும்பான்மை பெற்றனர்.

உள்துறை அமைச்சர் பூட்டாசிங், நாகலாந்திற்குச் சென்று விலகிச் சென்ற எம். எல்.ஏ.க்களைப் பயமுறுத்திப் பார்த்தார். ‘நடந்தால் காங்கிரஸ் ஆட்சி. இல்லை யேல் கவர்னர் ஆட்சி’ என்று மிரட்டினார். அரசாங்கமே நடத்திய இ.காங்கிரஸ் பயங்கரவாதத்திற்கு பூட்டாசிங் தலைமை தாங்கினார்.ஆளுநர் என்ன செய்தி ருக்க வேண்டும்? காங்கிரஸ் மந்திரிசபையைக் கலைத்துவிட்டு, எதிர்க்கட்சித்
தலைவரை அழைத்து மந்திரிசபையை அமைக்கச் சொல்லியிருக்க வேண்டும்.
இவ்வளவு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்பும் ஆளுநர் கிருஷ்ணாராவ் மாநி லத் தலைநகரமான கோஹிமாவிற்கே செல்லாமல் இம்பால் நகரத்தில் பதுங் கிக் கொண்டார்.

அண்டர்கிரவுண்ட் ஆளுநர்

நாகலாந்தில் ஒரு காலத்தில் ‘அண்டர்கிரவுண்ட்’ இயக்கம் பிரசித்திப் பெற்றது. ஆகையால் ஆளுநரும் ‘அண்டர்கிரவுண்ட்’ ஆகிவிட்டார்.(சபையில் பலத்த சிரிப்பு)

கவர்னர் தந்த அறிக்கையில் எம்.எல்.ஏ.க்களை மிகக் கேவலமாகச் சித்தரித்தி ருக்கிறார். பணம் தேடுவதற்கும், பதவி சுகம் அனுபவிப்பதற்கும் எம்.எல்.ஏ.க் கள் காங்கிரசை விட்டு வெளியேறியதாக ஆளுநர் கூறியிருப்பது மிகவும் தவ றாகும்.அதனால்தான் முன்னாள் நாகலாந்து முதலமைச்சரும் பண்டித நேரு வின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றவரும் எனது நண்பருமான ஜமீர்
அவர்கள் எனக்கு முன்பு இங்கு பேசுகையில், எம்.எல்.ஏ.க்களை இழிவு படுத்தி கவர்னர் அறிக்கை தந்திருப்பதைக்கடுமையாக கண்டனம் செய்தார்.ஜமீர் இந்த அவையில் இ.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்தான்.ஆனால், புண்பட்ட அவரது இதயத்தின் கோபக்குரலை இங்கு நம்மால் கேட்க முடிந்தது.

உட்கட்சி ஜனநாயகத்திற்கு இடமில்லை என்று ஜமீர் டெல்லி அரசை தனது
பேச்சில் குற்றம் சாட்டினார். (இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்)

ஜமீர் (நாகலாந்து முன்னாள் முதல்வர்): நான் டெல்லி ஆட்சியாளர்களைக்
குறிப்பிடவில்லை.

வைகோ: என்னுடைய நண்பர் ஜமீர் அவர்களை நான் தர்ம சங்கடத்திற்கு உள் ளாக்க விரும்பவில்லை.

மீண்டும் ஆயுதப்போராட்டம்

இராஜீவ்காந்தியின் அரசு நாகலாந்தில் கட்சி நன்மைக்காக மிகவும் ஆபத்தான
தவறைச் செய்து இருக்கிறது. நாகர்கள் ஆயுதக் கிளர்ச்சி நடத்தினார்கள். ஜன நாயகத்தை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால், ஜனநாயகத்தை செயல்பட விடா மல் டெல்லி ஆட்சியாளர்கள் இந்த அக்கிரமத்தைச் செய்த காரணத்தால்,நாகர் இனத்து இளைஞர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க நேரிடும். மீண்டும் அங்கே ஆயுதப்போராட்டத்திற்கு டெல்லி பாதை அமைக்கிறது என குற்றம் சாட்டுகிறேன்.

எம்.எம்.ஜேக்கப் (நாடாளுமன்ற விவகார அமைச்சர்): நாகர்களுக்கு இம்மாதிரி
யோசனைச் சொல்லித் தராதீர்கள்.

வைகோ: நான் சொல்லித் தரவில்லை.உங்கள் நடவடிக்கைகள் அத்தகைய
நிலையை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து இராஜீவ்காந்தி அரசு ஒன்றன்பின்
ஒன்றாக பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்பு ஒரு கட்டத்தில்
காஷ்மீரம்; அதன்பின் ஆந்திரப்பிரதேசம்; பின்னர் பஞ்சாப், தமிழ்நாடு;தற்போது நாகலாந்து என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜனநாயகப் படுகொலை களை நடத்தி வருகிறது.

இ.காங் உறுப்பினர்கள்: தமிழ் நாட்டில் கூடவா?

வைகோ:குறித்த காலத்தில் ஏன் தேர்தல் நடத்தவில்லை? மத்திய ஆட்சி கை யிலிருக்கிறது என்று மாநில ஆட்சிகளைப் பந்தாடும் இ.காங்கிரசை எச்சரிக் கிறேன். டெல்லியில் இருக்கும் உங்கள் அதிகாரக் கோட்டையை வெகுசீக்கிரத் தில் இழக்கப் போகிறீர்கள்.உள்துறை அமைச்சர் கேலிபுரிந்தாரே, நேற்று தொடங்கப்பட்ட புதிய அமைப்பை, அந்தத் தேசிய முன்னணியின் பின்னால் மக்கள் திரண்டு காங்கிரசைத் தூக்கி எறியும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

(தலைவர் வைகோ தீர்க்கமாக கூறியவாறே,இராஜீவ்காந்தி அரசு பின்னர் 1989
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்டது-கட்டுரையாளர்).

வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்த பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்து, அந்த நேரத்தில் 1990 மார்ச்சு 14 அன்றுநாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த விவாதத்தில் தலைவர் வைகோ ஆற்றிய உரை.

பற்றி எரியும் காஷ்மீரம்

தேசிய முன்னணி அரசு அமைந்தவுடன் முழுக்கவனம் செலுத்தப்பட வேண் டிய பிரச்சினை பட்டியலில் தலையாய முக்கியத்துவம் காஷ்மீர் பிரச்சினைக் குத் தரப்பட்டுள்ளது. காஷ்மீரம் இன்று பற்றி எரிகின்றது. இராஜீவ்காந்தி அர சால் விளைந்த அவலங்களில் காஷ்மீர் பிரச்சினையும் ஒன்றாகும். காஷ்மீர்
பள்ளத்தாக்கில் நிலைமை படுமோசமாகிவிட்டது.

இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் பள்ளத்தாக்கில் எதிரொலிக்கின்றன.இந் தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறுவோர் எண்ணிக்கை பல்லாயிரம்,
பல்லாயிரம். ஆயிரக்கணக்கிலே பெண்களும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். வெண்மையான சல்லாத்துணியால் முகத்தை மூடிக்கொண்டு ஊர்வலம் செல் லும் பெண்கள் அதற்குத் தரும் விளக்கம் என்னவெனில் அடக்குமுறையால்
ஏற்படும் காலங்களிலிருந்து வடியும் சிவப்பு இரத்தத்தை உலகம் அறியட்டும்
என்பதுதான். வயோதிகர்கள் வாலிபர்கள், டாக்டர்கள், நோயாளிகள், மாணவர் கள், பள்ளிச் சிறுவர்கள் எழுப்பும் குரல் யாதெனில் ‘வேலை வேண்டாம், நாங் கள் கேட்பதெல்லாம் சுதந்திரம் ஒன்றுதான்.’

உபகண்டத்தில்பிரச்சினை ஏற்பட்டபோது,காஷ்மீரை இந்தியாவோடு இணைக் கின்ற முடிவை காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அறிவித்தாலும், காஷ்மீரத்து முஸ் லிம்கள் முழுமனதோடு இந்தியாவோடு இணைய விரும்பிய உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தானோடு இணைந் தால் காஷ்மீரின் தனித்தன்மையை இழக்க நேரிடும் என்று அவர்கள் அஞ்சினர். இந்தியாவுடன் சேர்ந்தால், காஷ்மீரின் கலாச்சாரமும், தனித்தன்மையும் பாது காக்கப்படும், காப்பாற்றப்படும் என நம்பினார்கள்.

ஷேக் அப்துல்லாவுக்கு காங்கிரஸ் தந்த பரிசு

காஷ்மீர் இந்தியாவோடு இணைவதில் பெரும்பங்கு வகித்த ஷேக் அப்துல்லா வுக்கு கிடைத்த வெகுமதி என்ன? காங்கிரஸ் அரசு தந்த பரிசு என்ன? சிறை வாசம். 22 ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும், காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராக ஷேக் அப்துல்லா மதிக்கப் பட்டதால், சிறையிலிருந்து விடுவித்து அவரோடு, டெல்லி ஒப்பந்தம்போடும் நேரம் ஏற்பட்டது. காஷ்மீரின் தனித்தன்மையைக் காப்பாற்றும் இலட்சியத் தைக் கொண்ட அவரது தேசிய மாநாட்டுக் கட்சி அரியணை ஏறியது.

ஐரோப்பா கண்டத்து சுவிட்சர்லாந்தைப்போல, இந்தியாவின் பூந்தோட்ட மாக வும், எழில் மயமாகவும் இருந்த காஷ்மீர் இன்று அமளிக்காடானது ஏன்? கவி ஞர் மில்டன் சுவர்க்க நீக்கம் என்று பாடினார்.காஷ்மீரம் சொர்க்க புரியாக இருந் தது ஒரு காலம். இன்றோ?அது சோதனைக் களமாக ஆகிவிட்டது.இதற்கு முழு முதல் காரணம், காங்கிரஸ் இயக்கம்தான்.

பல்வேறு கலாச்சாரங்களும்,பல்வேறு மதங்களும்,பல்வேறு மொழிகளும், பல் வேறு இனங்களும் உள்ளடக்கிய உபகண்டம்தான் இந்தியா. அவற்றின் தனித் தன்மையைக் காப்பாற்றினால்தான் , ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என் பதை உணராமல் டெல்லியில் இருந்துகொண்டு, அனைத்து மாநிலங்களையும் ஆட்டிப்படைக்கும் ஆணவப்போக்கினை காங்கிரஸ் மேற்கொண்டதுதான் கார ணமாகும். 

கட்சிகளை உடைக்கும் காங்கிரஸ்

மாநிலக்கட்சிகளில் பிளவு ஏற்படுத்தி பேதங்களை வளர்த்து, அழித்துவிடலாம்
என்ற ஒரே நோக்கதோடு காங்கிரஸ் செயல்பட்டது. ஷேக் அப்துல்லாவின்
மறைவுக்குப் பிறகு பரூக் அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். தேசிய மாநாட்டுக்கட் சியை உடைக்கும் நோக்கத்தோடு காங்கிரஸ் அக்கட்சியில் ஜி.எம்.ஷா என்ற
துரோகியை உருவாக்கியது. ஆட்சியைக் கவிழ்த்தது. அதன்பின்னர் தன்னால்
கவிழ்க்கப்பட்ட பரூக் அப்துல்லாவுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது.

அந்தச் சமயத்தில் சண்டிகரில் பஞ்சாப் நிலவரம் குறித்து நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் தி.மு.க.வின் பிரதிநிதியாக சென்ற நான் பரூக் அப்துல்லா வைச்சந்தித்தபோது, எச்சரித்தேன்.

1981 ஆம் ஆண்டில் ஷேக் அப்துல்லாவை நான் சந்தித்தபோது,அவர் ‘காங்கி ரசின் அகராதியில் நன்றிக்கும், நட்புக்கும் இடமே இல்லை’ எனக் கூறியதை யும் நினைவு படுத்தினேன். ஆனால், பரூக் அப்துல்லா காங்கிரசோடு உறவு கொண்டார்.செல்வாக்கு இழந்தார். அவர் மட்டுமல்ல,தேசிய மாநாட்டுக் கட்சி யும் தனது செல்வாக்கை இழந்தது.

காஷ்மீரத்தின் தனித்தன்மையைக் காப்பாற்றும் இயக்கம் என்று அம்மக்கள்
தேசிய மாநாட்டுக் கட்சியின் மீது வைத்த நம்பிக்கை நாசமானது.எந்தத் தெருக் களில் பரூக் அப்துல்லாவைச்சூழ்ந்து மக்கள் அன்பைக் கொட்டினார்களோ, அந்த வீதிகளில் பரூக் அப்துல்லா இப்போது வர முடியவில்லை. ஏன்? தொழு கை நடத்தக்கூட மசூதிக்கு வர முடியவில்லை ஏன்?

தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீரத்தில் பலமாக இருந்தபோது, பாகிஸ்தான்
ஆதரவு கோஷம் பள்ளத்தாக்கில் எழவில்லை.

ஆனால், அந்தக்கட்சி செல்வாக்கு இழந்தவுடன் இந்தியாவின் எதிர்ப்பு உணர்ச் சியும், பாகிஸ்தான் ஆதரவு எண்ணமும் அங்கு வளர்ந்துவிட்டன .இதற்கு முழுப்பொறுப்பு காங்கிரஸ்தான். 

கூட்டாட்சித் தத்துவமே தீர்வு 

இப்படித்தான் பஞ்சாபிலும்அகாலிதளத்தை உடைத்தார்கள்.ஆந்திரத்தில் தெலுங்கு தேசக் கட்சியில் ஒரு பாஸ்கரராவை உருவாக்கினார்கள். 

காஷ்மீரத் தின் கலாச்சாரத்தையும், தனித்தன்மையையும் காப்பாற்ற வேண் டும் என்ற நம்பிக்கையோடு ஷேக் அப்துல்லாவின் தலைமையை ஏற்றதனால் தான் இந்தியாவோடு சேர நேர்ந்தது. அதனால்தான் இன்று எல்லாம் கெட்டது என்ற ஆத்திரம் காஷ்மீரில் பரவுகின்ற சூழலைப் பார்க்கிறோம்.

ஷேக் அப்துல்லாவின் நினைவிடத்திற்கு இன்று கட்டுக்காவல் போட வேண்டி ய நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்று காங்கி ரஸ் உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றனர். இந்தியாவோடு இணைந்து இருப்ப தால், காஷ்மீரின் தனித் தன்மைக்கு பங்கம் வராது என்ற நம்பிக்கையை காஷ் மீர் மக்களின் நெஞ்சத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இனமும் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ள உலகெங் கும் போர்க்கொடி உயர்த்துவதைப் பார்க்கின்றோம்.மாற்றமெனும் காற்று கிழக்கு ஐரோப்பிய மண்டலமெங்கும் வீசுகின்றது. 

கூட்டாட்சித் தத்துவத்தை நிலை நிறுத்துவதன் மூலமே இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினைக்குத்தீர்வுகாண முடியும் என்பதை உணர்ந்துள்ள தேசிய முன்னணி அரசு தக்க முடிவுகளை எடுத்து சரியான திசையில் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.அனைத்துக் கட்சிக் குழுவினரை காஷ்மீருக்கு அனுப்பியது.
ஆனாலும், அதில்கூட ஒரு பெரிய மனிதர் மலிவான விளம்பரம் தேடும் யுக்தி களில் ஈடுபட்டார்.

ஜெயந்தி நடராசன் (இ.காங்): நீங்கள் ஜஸ்வந்த் சிங்கைக் குறிப்பிடுகின்றீர் களா?

வைகோ: நான் இராஜீவ்காந்தியின் பெயரை குறிப்பிடவில்லையே,ஆனாலும், இப்போது சொல்ல வைத்து விட்டீர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தேசிய முன் னணி அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் சார்ந்துள்ள தி.மு.கழகம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

பி.வி.நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் ஏற்பட்ட போது, காஷ்மீர் பிரச்சினை மேலும் தீவிரம் ஆகியது. பாரதிய ஜனதா கட்சியின் தலை வர் முரளி மனோகர் ஜோஷி, குமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்து, தேசியக் கொடியை காஷ்மீரில் ஏற்றப்போவதாக அறிவித்தவுடன் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல காஷ்மீரம் பற்றி எரிந்தது. அந்த நேரத் தில் 1993 மே 13 இல் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றிய விவாதத்தில் உரை யாற்றிய தலைவர் வைகோ, காஷ்மீர் பிரச்சினையின் சகல பரிமாணத்தையும்
அலசினார்; வைகோ தீர்வையும் முன் வைத்தார்... இதோ...

வெண்பனி சிகரம் காஷ்மீர்

“காஷ்மீர் என்ற பெயரை உச்சரித்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநா டு யாத்ரீகர்கள், உள்நாட்டுப் பயணிகள் நெஞ்சத்தில் அழகும் வனப்பும் கலந்து ரம்மியமான இயற்கை காட்சிகளும் வெண்பனி மூடிய இமயமலைச் சிகரங் களும், தால் ஏரியின் உல்லாசம் தரும் படகு சவாரியும் நினைவுகளை கிளர்ந் தெழச் செய்யும். காஷ்மீர் என்ற சொல் காதலர்கள் இளம் தம்பதிகள் உள்ளத் தில் தேனிலவு கற்பனைகளைத் தூண்டிவிடும்.

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து என காஷ்மீரம் வர்ணிக்கப் பட்ட காலம். அந்தக் காலம் மறைந்துவிட்டது. இன்றைய நிலையில் காஷ்மீர் என்றால் ரத்தக்களறி, காஷ்மீர் என்றால் துப்பாக்கிச் சண்டை, காஷ்மீர் என் றால், போர்க்களம் என்று பொருள்.கலகக்காரர்கள் ராக்கெட் ஏவுகிற நிலை
இருப்பதாக அமைச்சரே சற்று முன் கூறினார்.

காஷ்மீரத்தில் தேசியக் கொடியை ஒருவர் ஏற்றப்போகிறார் என்றால், அது ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி ஆகும்.

கேலிக்கூத்து யாத்திரை

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி முக்கடல் சங்கமிக் கும் குமரி முனையிலிருந்து தேசியக் கொடியுடன் ஸ்ரீநகருக்கு எழுச்சிப் பய ணம் புறப்பட்டார். எத்தனை தடை வரினும் கலங்காது பயணத்தைத் தொடரு வேன் என்று முழங்கிய கிரேக்கத்து புராண யுலீசஷைப்போல புறப்பட்ட
முரளி மனோகர் ஜோஷி, ஆங்கில இலக்கியத்தில் வரும் கோமாளி பாத்திர மான டான்குயிக்ஷாட்டைப் போல காஷ்மீரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியை கேலிக்கூத்தாக்கிக் கொண்டார். ஸ்ரீநகருக்குள் நுழையும் போது, குமரியில் இருந்து கொண்டுவந்த தேசியக் கொடியை எடுத்துச்செல்ல மறந்து பரிகாசத் திற்கு ஆளானார்.

உள்துறை அமைச்சர் ராஜேஷ் பைலட் தனது அறிக்கையில், நிர்வாகத்திற்கும்
மக்களுக்கும் உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் ஆளுநர் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திப்பதாகக்கூறினார்.அது நடக்கிற காரியமில்லை காஷ்மீரத்து மக்கள் இந்தியா என்ற அமைப்பின் மீதும், இந்திய அரசின் மீதும் கசப்பும் வெறுப்பும் கொண்டு தங்களை தனிமைப்படுத்தி சிந்திக்கிறார்கள். பாலம் அமைக்க இயலாத இடைவெளி தோன்றிவிட்டது.

காஷ்மீரத்து போலீசுக்கும் மத்திய அரசின் படையினருக்கும் மோதல். பள்ளத் தாக்கு எங்கிலும் இந்திய இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளது. ஆளுநர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். ஆனால்,தீவிரவாதிகளின் துப்பாக் கிகள்தான் அன்றாட நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன. முக்கியமானவர்களை
கடத்தல், தீவிரவாதிகளைவிடுவிக்க பணமாக்குதல், தங்கள் கோரிக்கை நிறை வேறாவிடில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து சதுக்கங்களில் சடலங்களை வீசுதல் இவையெல்லாம் காஷ்மீரத்தில் சராசரி சம்பவங்களாகி விட்டன.

பிரிவினைவாதம்

தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரசும் கூட்டணி அமைச்சரவை அமைத்த நாள் முதல் காஷ்மீரில் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் அசுர வேகத்தில் வலுப்பெற்று வளர்ந்தன.வழக்கம்போல காங்கிரஸ் பரூக் அப்துல்லாவை கை கழுவிற்று. இன்றைய காஷ்மீரின் விபரீத நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைதான் காரணம் என்று திரும்பவும் குற்றம் சாட்டுகிறேன்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தாங்களே ஆட்சி நடத்த வேண் டும், ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற காங்கிரசின் மன்பான்மையைத்தான் வடகிழக்கு பிரதேசத்தையும், பஞ்சாபையும் கிளர்ச்சி கூடாரங்களாக மாற்றி இருக்கிறது.

தேசிய இனங்களின் உரிமை

இந்தியாவில் பல்வேறு மொழிகள்,பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதங் கள் ஏன் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன.இவை அனைத்துக்கும் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கப்பட்டதால்தான் இந்தியா ஒரு நாடு என்ற அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையேல் துண்டு துண்டாக உடையும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பலராம் தனது உரையில் இந்தியாவில்
ஆங்காங்கு வாழும் மக்களிடத்தில் தங்கள் மண்டிலம், தங்கள் மாநிலம் என்ற
உணர்வு வளர்வதாகக் குறிப்பிட்டார்.தேசிய இனங்களின் புதிய எழுச்சியின்
அடையாளம்தான் இந்த உணர்வு. இந்த உணர்வுதான் சோவியத் யூனியனை 15
நாடுகளாக்கியிருக்கிறது.

இந்த உணர்வை அடக்க முனைந்ததால் தான், யுகோஸ்லோவியாவில் யுத்தம்
வெடித்துள்ளது.

திருமதி சுஷ்மா சுவராஜ் (அவைத்தலைவர்):நீங்கள் காஷ்மீரைப் பற்றி மட் டும்தான் பேச வேண்டும். யுகோஸ்லோவியாவைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்?

வைகோ: யுகோஸ்லோவியாவில் நடப்பது இந்தியாவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் பேசுகிறேன். காஷ்மீரம் ஒரு போஸ்னியா ஆகி விடக் கூடாது.காஷ்மீரின் உண்மைநிலை உணராமல் தீக்கோழி மனப்பான்மையுடன் டெல்லி செயல்படக்கூடாது.

காஷ்மீரிலிருந்து ஊருக்குத் திரும்புகிற இந்திய இராணுவ வீரர்கள் தெரிவிக் கிற செய்தி என்னவெனில், காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் இந்தியாவை
அயல்நாடாகக் கருதுகிறார்கள் என்பதைத்தான். இந்த எண்ணத்தை மாற்ற வழி என்ன? இராணுவத்தைக் குவிப்பதால், தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ளுவதால் காஷ்மீரத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியாது.

தனித்தன்மை காக்க

காஷ்மீரிகளின் மதம், கலாச்சாரம், தனித்தன்மை பாதுகாக்கப்படும். மாநில
சுயாட்சி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதிப்படுத்தினால்தான் ஒரு மைப்பாட்டை காப்பாற்றிக்கொள்ள முடியும். காஷ்மீர் கலவரத்தில் பாதிக்கப் பட்டு தங்கள் குடும்பங்களோடு வெளியேறிய இந்துக்களுக்காக நான் வேத னைப்படுகிறேன். மதவெறியைத் தூண்டுவோர் எவராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் முதல் தர விரோதிகள் எனத் தெரிவிக்கிறேன்.

ஆனால், மன்னிக்க முடியாத மாபாதகச் செயல் யாதெனில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான். மசூதியைத்தகர்த்துவிட்டோம் என்று தலை வர்கள் சிலர் மமதையுடன் மார்தட்டுகிறார்கள்.ஆனால், காஷ்மீரில் வாழும்
பெரும்பான்மை முஸ்லிம்களின் உள்ளத்தில் இந்தியாவின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இச்செயல் தகர்த்துவிட்டது என்பதுதான்
உண்மை.

இந்திய விரோத மனப்பான்மையை காஷ்மீரில் வளர்ப்பதற்கு இச்சம்பவம்
பாகிஸ்தானுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.

புதிய பரிமாணம்

சுதந்திரத்தின் திருப்புமுனையான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த நூற் றாண்டில் பிரிட்டீஷ்காரனால் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. போடாக் களின் போராட்டம், மிஜோக்களின் உரிமைக்குரல், நாகர்களின் எழுச்சி, சீக்கி யர்களின் கிளர்ச்சி, ஜார்கண்ட் கோரிக்கை இவையெல்லாம் புதிய பரிமாணங் கள். பரந்து விரிந்த இந்திய பூபாகத்தை எதேச்சதிகாரத்தால் டெல்லி அடக்கி
ஆள முடியாது. மாநில சுயாட்சியை ஏற்று அனைத்து தேசிய இனங்களையும் சம உரிமையுடன் வாழ வழி செய்தால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.”

தொடரும்........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment