காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், மத்திய
காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்ததன் காரணமாக
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இடைக்கால ஏற்பாடாக ‘மேற்பார்வைக் குழு’ ஒன்று மே 24 ஆம் தேதி மத்திய அரசால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ‘மேற்பார்வைக் குழு’ அமைக்கப்பட்டதால் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் செயற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

காவிரி நடு வர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியா னது. ஆறு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி இறுதி தீர்ப்பு அரசிதழில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் வழங்கி ய இறுதி தீர்ப்பில், மிக தெளிவாக, எவ்வாறு நடுவர்மன்ற உத்த ரவை நடை முறைப் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். பக்ரா-பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன் மாதிரியாகக் கொண்டு, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத் தை அமைக்க வேண் டும் என்று வரையறுத்து நடுவர்மன்றம் ஆணையிட்டது.
நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடனே யே மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்குமுறைக்குழு ஆகி ய அமைப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும்.அப்படி உருவாக்கி இருந்தால் காவிரி நீரை தேக்கி வைக்க கர்நாடகத்தில் கட்டப்பெற்ற அணைகளான கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி கபினி மற்றும் ஹேரங்கி ஆகியவை கர்நா டக மாநிலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து காவிரி மேலாண்மை அணையத்தின் அதிகாரத்திற்கு வந்திருக்கும்.

தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடக அணைகளி லிருந்து காவிரியில் நீரை திறந்துவிட ஒழுங்கு முறைக் குழு நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், மத்திய அரசு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங் கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், காவிரி மேலாண் மை ஆணையம்,ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் தமிழ்நாட் டிற்குத் துரோகம் செய்தது. இதன் விளைவாக தற்போது காவிரி நடுவர் மன்றத் தின் இறுதித் தீர்ப்பை முழுமையாக, சட்டப்பூர்வ மாக நடைமுறைப்படுத்துவ தில் மீண்டும் காலதாமதத்திற்கு வழி வகுக்கப் பட்டிருக்கிறது. முப்பது ஆண்டு காலப் போராட்டம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்குமு றைக் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க மத்திய அரசும் உத்தரவிட வேண் டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக் கு கடந்த மே 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி லோதா, குரியன்ஜோசப் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அர சின் சார்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்திடம் கருத் து கேட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தது.காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை யே உதாசீனப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ள கர்நாடக மாநிலத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலிநாரிமன் ஒரு வஞ்சகமான கருத் தை முன்வைத்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க காலதாமதம் ஆகலாம். “அதுவரை, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்கலாம். இடைக் கால ஏற்பாடாக அந்தக்குழு செயல்படட்டும்” என்று உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
கர்நாடக மாநிலத்தின் சார்பில் வழக்கறிஞர் நாரிமன் எடுத்து வைத்த உள்நோக் கம் நிறைந்த இந்த ஆலோசனையை எதிர்த்து வாதாட, தமிழக அரசின் சார்பில்
நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அன்று உச்சநீதிமன்றத்திற்கு வரவில்லை.
உச்சநீதிமன்றமும் ஒருதலைபட்சமாக கர்நாடகத்தின் வழக்கறிஞர் கூறிய
யோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, இடைக்கால ஏற்பா டாக மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி மத்திய அரசு ‘தற்காலிக காவிரி நீர் இறுதித் தீர்ப்பு அமலாக்கத் திட்டம்’ ஒன்றை மே 24 ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்தத்
திட்டத்தின்படி, காவிரி நீர் மேற்பார்வைக்குழு மத்திய நீர்வளத்துறைச் செய லாளர் தலைமையில் அமைக்கப்பட்டது.
காவிரி மேற்பார்வைக் குழுவில் காவிரி பாசன மாநிலங்களான தமிழ்நாடு, கர் நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர் களும், மத்திய நீர் ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களாக செயற்படு வர். மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் இந்தக்குழுவின் உறுப் பினர் - செயலாளராக இருப்பார். இக்குழுவின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் வரை இது முற்றிலும் தற் காலிக நடவடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.காவிரி நடுவர் மன்றத் தின் இடைக்காலத் தீர்ப்பை செயற்படுத்திட காவிரி ஆணையத்தை 1998 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. காவிரி கண்காணிப்புக் குழுவும் அமைக்கப் பட்டது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக, காவிரி ஆணையமும் கண்காணிப் புக் குழுவும் சில தடவைகள் மட்டுமே கூடியது. அப்போது தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம், அதைத் தட்டிக்கழித்தது.
உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது கர்நாடகம் ஏற்க மறுத்து அடாவடித் தனமாக காவிரியில் தண்ணீர் விட மறுத்துவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ஆறு ஆண்டுகள் காவிரி ஆணை யம் கூடவே இல்லை என்றால் அந்த அமைப்பின் லட்சணம் இதன் மூலம் தெளிவாகிறது. காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்கே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொட ர வேண்டிய மோசமான நிலைதான் இருந்தது.
இப்படி இருக்கும்போது தற்போது அதிகாரம் ஏதுமற்ற,சொல்லப்போனால் ‘பல் லில்லாத’ ஒரு மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டதின் மூலம், கர்நாடகம்
பணிந்துவிடும் என்றோ, தமிழகத்தின் தண்ணீர் தேவையை அறிந்து உடனே
காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடும் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது.மேலும் கர்நாடகத்திலும், டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி அரசு களே கோலோச்சுவதால் இடைக்கால ஏற்பாடாக அமைக்கப்பட்ட மேற்பார் வை குழுவையே, நாளடைவில், நிரந்தர ஏற்பாடாக மாற்றும் அபாயமும் இருக் கிறது.

மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக எதையும் செய்யும் என்பதை கடந்த
காலங்களில் தமிழகம் உணர்ந்து இருக்கின்றது.
வரலாறு காணாத வறட்சியில் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பருவமழை பொய்த்தது மட்டுமல்ல, காவிரி நீர் உரிய அளவுக்கு கர் நாடக மாநிலத்தால் திறந்து விடப்படாததும் காரணம் ஆகும். மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 20.830 அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி; மொத்த நீர் கொள்ளளவு 93.470 டி.எம்.சி. ஆகும். கடந் த பிப்ரவரி 25 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாகவும், நீர் இருப்பு 9.214 டி.எம்.சி ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக் குப் பருவமழை பொய்த்ததால், அணைக்கு நீர்வரத்து கடுமையாகச் சரிந்தது.
காவிரிப் பாசனப்பகுதியின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 600 கன அடி நீர்
வெளியேற்றுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மே 18 ஆம் தேதி நீர் மட்டம் 20.830 அடியாகவும், நீர் இருப்பு 4.346 டி.எம்.சி ஆக வும் இருந்தது. கடந்த மூன்று மாதங்களில் நீர்மட்டம் 14 அடியும், நீர் இருப்பு 5 டி.எம்.சி.யும் குறைந்துள்ளது.
1996 ஜனவரி 28 இல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடு வதை நிறுத்தியபோது, நீர் இருப்பு 4.632 டி.எம்.சி. ஆக இருந்தது. மீண்டும் 17
ஆண்டுகளுக்குப் பின், நடப்பு ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு 4.346 டி.எம்.சி. ஆக குறைந்துவிட்டது. அணையிலிருந்து காவிரி டெல்டா குறுவைச் சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்கப்படும், குறுவைக்கு நீர் திறக்க அணையில் குறைந்தபட்சம் 52 டி.எம்.சி. நீர் இருக்க வேண்டும்.
குறுவைக்கு நீர் திறக்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் மேட்டூர் அணை யின் நீர் இருப்பு 4.346 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. தற்போதைய நிலை யில் காவிரி பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்கு மட்டுமே தன்ணீர் இருப் பு உள்ளது. இன்னும் மூன்றுவார காலத்திற்குள் தென்மேற்கு பருவமழை தீவி ரம் அடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தாலும், ஜூன் 12 ஆம் தேதிக்குள் நீர் இருப்பு 52 டி.எம்.சி. ஆக உயர்வது கடினம்.
கடந்த 10 ஆண்டுகளில் 2006, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ஜூன் 12
ஆம் தேதி திட்டமிட்டவாறு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. மற்ற ஆண்டுகளில் தாமதமாக நீர் திறந்த தால் டெல்டா மாவட்டங்களில் குறுவை மட்டுமின்றி சம்பா சாகுபடியும் பாதித்தது.
இந்த சூழ்நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலொழிய மேட் டூர் அணையை இந்த ஆண்டு ஜூன் 12 இல் திறக்க முடியாது. விவசாயத்திற்கு
மட்டுமின்றி குடிநீருக்குக்கூட தண்ணீர் இன்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான
மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன. கால்நடை களைப் பராமரிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அல்லல்படும் பரி தாப நிலையே எங்கும் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக் கும்போது, மத்திய அரசு ஒரு சிறு துளி அளவேனும் தமிழகத்தின் துயர்நிலை யை கவனத்தில் கொள்ளாமல், காவிரிப் பிரச்சினையில் அரசியல் நாடகங் களை அரங்கேற்றி துரோகம் இழைத்து வருகிறது.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை ஆணையம்,காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகிய சட்டப்பூர்வ மான அமைப்புகளை உடனடியாக மத்திய அரசு அமைத்தாக வேண்டும். இடைக்காலமாக உருவாக்கப்பட்டுள்ள மேற்பார்வைக்குழு என்பது மோசடி யான, தமிழ்நாட்டிற்கு பாதகமான ஏற்பாடாகும். தமிழக விவசாயிகள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
நமக்கு தேவை, நியாயமான, சட்ட அதிகாரம் மிக்க, கர்நாடக அணைகளை தம்
பொறுப்பில் ஏற்றுக்கொண்டு தண்ணீரை திறந்துவிடும் உரிமை பெற்ற அமைப்பே தவிர, கண்துடைப்புக்குழு அல்ல.

No comments:
Post a Comment