Tuesday, June 11, 2013

தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்! பகுதி 2

அன்புச் சகோதரர்களே,

பல்வேறு துறைகளில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு அரசியல் எண்ணங் கள் இருக்கலாம். பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அது அவரவர் விருப் பம். ஆனால், நம்முடைய இலக்கு, நம்முடைய வாழ்நாளில், தமிழ் ஈழத்தைக் கட்டமைப்பதற்கு நாம் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.-வைகோ 



முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

அன்னை பார்வதி அம்மையார் புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களின் புகழ் அஞ்சலிக் கூட் டம், 21.02.2011 அன்று, சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

இயக்குநர் கெளதமன் நேரடியாகக் குற்றச்சாட்டைத்தொடுத்தார். ஆத்திரப்பட வேண்டாம் முதல் அமைச்சர் அவர்களே, சரித்திரத்திலே இந்தக் குற்றச்சாட்டு தான் உங்கள் மீது பதிந்து இருக்கிறது. அவர்களது உள்ளம் சல்லடைக் கண் களாகத் துளைக்கப்படுவதற்கு உங்கள் உத்தரவுதான் காரணம்.
எதற்காக எங்களுக்கு இந்தக் கொடுமையைச்செய்கிறார்கள்? என்று அந்தத் தாய் கேட்டார்.நெடுமாறனும், வைகோவும் விமான நிலையத்துக்குப் போன தால்தான், இந்தப் பிரச்சினை வந்து திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று அறிக் கை விட்டார் முதல் அமைச்சர். நாங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு போயிருந்தால், மாவீரர் திலகம் பிரபாகரன் வாழ்க என்ற முழக்கம் விண் அதிர எழுந்து இருந்தால், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்கு, அவரது தாயாரை அழைத்துக்கொண்டு வந்து இந்த வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சுமத்துவீர் கள் என்று யோசித்துத்தான், நானும், அண்ணன் நெடுமாறனும், காருக்கு உள்ளேயே அமர்ந்து இருந்தோம்.

ஆனால்,நாங்கள் வந்தது உங்களுக்குத் தெரியும்.அந்தத்தாயை இங்கே இறங்க விடக்கூடாது என்று நீங்கள் திருப்பி அனுப்பியது எங்களுக்குத் தெரியும். முடி யாதா உங்களால்? ஒரு முதல் அமைச்சர் நினைத்தால்,மத்திய அரசிடம், நோய் வாய்ப்பட்டு வருகிறார். வயது முதிர்ந்த ஒரு தாய். சிகிச்சைக்காக வருகிறார். அவரை இங்கே அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாமே? இந்திய அரசிடம் முறையாக விண்ணப்பித்து,அவர்களும் பரிசீலித்து அனுமதிபெற்றுத் தானே இங்கே வந்து இருக்கிறார்? இல்லை அவர்கள் முடிவை மாற்றிக்கொண் டார்கள் என்றால், அந்த நேரத்திலேயே நீங்கள் மத்திய அரசைத் தொடர்பு கொண்டு அனுமதிபெற்றுக் கொடுத்து இருக்க முடியும்.தணி.சேரன் அவர் களை சென்னை விமான நிலையத்தில் தடுத்தபோது, மத்திய அரசைத்தொடர்பு கொண்டு, அனுமதி பெற எங்களால் முடிந்ததே? நான் பெரிய பதவியிலும் இல்லை, அன்று.



நீங்கள்தான் திருப்பி அனுப்ப வைத்தீர்கள். அதன்பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி அன் று, அண்ணன் நெடுமாறன் அவர்கள் தலைமையில், பல்லாயிரக்கணக்கா னோர்உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினோம்.தா.பா. அவர்கள், நிறைவு செய்ய வந்தார்கள். தமிழ் உணர்வாளர்கள், கலைஞர்கள் வந்தார்கள். நெஞ்சம் வெடிக்க உரை ஆற்றினார்கள். இத்தனைக்குப் பிறகும், நீங்கள் என்ன சொன்னீர்கள்?

பார்வதி அம்மையார் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவர் இங்கே யாரையும் சந்திக்கக்கூடாது; எந்த அரசியல் கட்சித் தலைவரையும்
சந்திக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தால், அதைப் பரிசீலிக்கலாம் என்ற ஏற்பாட்டைச் செய்வோம்
என்று சட்டமன்றத்தில் கூறி, அடிப்படையிலே ஈன ஜென்மங்களான இந்தியத் தூதரக அதிகாரிகள்,எங்கள் தாயைச் சந்தித்து, அவர்கள் உடல்நலக்குறைவால் நினைவு தவறுகிற வேளையில், அவரது விரல் ரேகையை, நீங்கள் தயாரித் துக் கொடுத்த கடிதத்தில் பதிய வைத்தீர்களே? அயோக்கியத்தனத்துக்கு எல்லையே கிடையாதா? இதைவிடக் கொடுமை உண்டா?

அவர் விரல் ரேகையை நீங்கள் பதிய வைத்தீர்கள். அவர் விரும்பவில்லை.தன் மானத்துக்கு அடையாளமாக இருக்கின்ற, கணைக்கால் இரும்பொறையின் புகழ் பாடக்கூடிய எங்கள் தாயா மன்றாடுவார் இந்திய அரசிடம்? அப்படி ஒரு கடிதம் வருவதற்கு, நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள்.

அப்படி என் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நான் தமிழ்நாட்டுக்கு வர எண்ணினேன். ஆனால், இந்திய அரசாங்கத்திடம் மடிப் பிச்சை ஏந்தத் தயாராக இல்லை என்று சொன்னார்.

வீரனைச் சுமந்த வயிறு அல்லவா? வீரனைச் சுமந்த தாய் அல்லவா? திலீபன் ஆவி அடங்கிய தன் மண்ணுக்கே திரும்பிச் சென்றார். கிட்டுவின் தாய் உயிர் அடங்கிய தங்கள் ஊருக்கே சென்றார். வேல்மயில் வாகனன் என்ற அந்த அரசு மருத்துவ அதிகாரி, ஓய்வு பெற்றதற்குப்பிறகு, இப்போது, நம் தாயைக் கவனிப் பதற்காகவே வந்து சிகிச்சை அளித்தார்.

தங்கை கயல்விழி அங்கயற்கண்ணி, பாவேந்தர் ஏறுவின் பேத்தி, இங்கே உரை ஆற்றிய இறைக்குருவனார் அவர்களின் மகள், வழக்கறிஞர் கயல்விழி, தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்ற அந்த வீரத் தங்கை, அங்கே சென்று வந்த செய்தியை, இறைக்குருவனார் அவர்கள் இங்கே சொன்னார்கள். அந்தத் தங்கை, என்னிடமும் கூறினார்.

தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்ன உடனே, அவரது கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து ஓடியது. நல்ல நினைவு இருக்கிறது. உணரும் சக்தி இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட் டார்கள்.

கலைஞர் கருணாநிதி செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. இதோ, யுத்த பேரிகை முழங்கி விட்டது.படைகள் புறப்பட்டு விட்டன. என் வில்லில் இருந்து
இப்போது அம்புகள் புறப்படப் போகின்றன. அதற்கு முன்பாக, குழந்தைகளே வெளியேறி விடுங்கள்.பெண்களே வெளியேறி விடுங்கள். தாய்மார்களே வெளி யேறி விடுங்கள். வயதில் மூத்தோரே வெளியேறி விடுங்கள், நோயுற்ற வர்களே வெளியேறி விடுங்கள் என்று அறிவித்து விட்டுக் களத்துக்குச் சென் றான் தமிழ் மன்னன் என்று, புறநானுhறு சொல்லுகிறது.

அப்படிப்பட்ட தமிழகத்தில், வயது முதிர்ந்த எங்கள் தாயாரை, இந்தத் தமிழ் மண்ணிலேயே கால் எடுத்து வைக்க விடாமல் திருப்பி அனுப்பிய பாவத்துக்கு
மன்னிப்பே கிடையாது. கலைஞர் கருணாநிதி அவர்களே!உங்களால் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த படுகொலைக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து, ஆயுதங்களை அளித்து, உலக வல்ல ரசுகளின் ஆயுத பலம் கொண்டுஅவர்களைத்தாக்கி, போர்க்களத்தில் அவர் களுக் குத் தற்காலிகமாகப் பின்னடைவை ஏற்படுத்தியது இந்திய அரசு. அதற் குப் பக்கபலமாக இருந்து கங்காணி வேலை பார்த்தது கலைஞர் கருணாநிதி அரசு. இந்தத் துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது.

எங்கள் தாயின் உடல் இப்போது வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டு இருக் கிறது. அண்ணன் நெடுமாறன் அவர்கள், நமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கே இராணுவத்தின் அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வந்தது.நாளை அடக்கம் நடைபெறப் போகிறது.

தாயே, உங்களுடைய காலடிகள் எங்கள் மண்ணில் படுகின்ற பாக்கியம் எங் களுக்குக் கிடைக்கவில்லை. வெட்கித் தலைகுனிகிறோம். இப்படி ஒரு நிலை மை ஏற்பட்டதற்காக. உங்கள் திருவடிகள், 1997 ஆம் ஆண்டிலே என் இல்லத் தில் பதிந்து, என் பேரப்பிள்ளையை உங்கள் மடியிலே தூக்கி வைத்து, பிரபா கரன் என்று பெயர் சூட்டினீர்கள். உங்கள் திருவடிகளிலே, வேலுப்பிள்ளையின் திருவடிகளிலே என் மகனும், மருமகளும் திருமண நாளில் உங்கள் தாள் பணிந்து வாழ்த்துப் பெற்றார்கள்.

அன்னை பார்வதி அம்மையார், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு விட்டார் என்ற செய்தியை, அடைக் கலம் இரவு ஒரு மணிக்கு என்னிடம் சொன்னபோது, விடியற்காலை ஐந்து மணிக்கு உள்ளாக நான் அங்கே ஓடோடி வந்தேன், கோயம்புத்தூரில் இருந்து. பின்னர் முசிறியில் மருத்துவர் ராசேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் மும்முறை பார்த்தேன்.

தாயே! உங்களைக் காண அன்றைக்கு எவ்வளவோ ஆசையோடு வந்தேன். கவிஞர் காசி ஆனந்தனும் பக்கத்திலேயே இருந்தார். உங்கள் காலைத் தொட் டுக் கும்பிட வேண்டும் என்று ஆசையோடு வந்தேன்.எங்களுக்கு அந்த பாக்கி யம் கிடைக்கவில்லை.என்னுடைய தாயாரின் காலடியில் எப்போதும் விழுந்து
ஆசி பெறுவேன்.

எரிகிறது எங்கள் நெஞ்சிலே நெருப்பு. ஒன்று மட்டும் சொல்லுகிறேன். நம்மு டைய இளைஞர் கூட்டத்துக்கு, தமிழ் உணர்வாளர்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு குறுந்தட்டிலே இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை இரண்டு நிமி டம் அதைப் பார்க்க முடியவில்லை என்று துடிக்கிற உள்ளங்களுக்குச் சொல் லுவேன், சகோதரர்களே, இன்னும் சில காட்சிகள் இருக்கின்றன. அதைப் பார்த் தால் நெஞ்சு வெடித்து விடும். கூட்டம் கூட்டமாகப் பெண்கள் சிங்கள இராணு வத்தினரால் கற்பழிக்கப்படுகின்ற காட்சிகள் இருக்கின்றன. அதைக் காட்ட முடியாது என்று சேனல் 4 நிர்வாகிகள் சொல்லுகிறார்கள். அதை ஐரோப்பிய
நாடுகளில் ஆவணங்களாக வைத்து இருக்கிறார்கள்.

இவ்வளவு கொடுமைகளையும் செய்து,இன்றைக்குத்தமிழர் குடியிருப்புகளைச் சுற்றிலும் நிற்கிறது சிங்களஇராணுவம். கயல்விழி சொன்னார். தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களர்கள் குடியேறுகிறார்கள். தமிழர்களின் ஆலயங் களுக்கு உள்ளே, பெளத்த விகாரங்கள், புத்தர் சிலைகள். தமிழர்களை முழுமை யாக அழிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.எங்கும் பசி, பட்டினி. முகாமில் இருந்த ஒரு நான்கு வயதுக் குழந்தையிடம் சாப்பிட் டாயா? என்று கேட்டாராம் கயல்விழி. நேற்று காலையில் சாப்பிட்டேன் என்று
சொன்னது அந்தக் குழந்தை என்றார்.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று அட்சய பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் காவியம் பாடிய நாடா இந்த நாடு?

இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும். அது எப்படி வெடிக்கும்? புரட்சி சொல்லிக்கொண்டு வராது.முன்கூட்டி அறிவித்துக் கொண்டு வராது. அது ஒரு கந்தகக் கிடங்கு. உரிய வேளையில் ஒரு பொறி அதில் விழுகிற போது தான் அது வெடிக்கும். தன்மானத் தமிழர்களின் உள்ளம், இன்றைக்குக் கந்தகக் கிடங்காகத் தகித்துக் கொண்டு இருக்கிறது.

நம்முடைய வாழ்நாளிலேயே தமிழ் ஈழம் மலரும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

இதோ, தெற்கு சூடான் புதிய நாடாக மலர்ந்து விட்டது.ஜூலை 9 இல் அறிவிக் கப்பட இருக்கிறது.அந்தத் தெற்கு சூடான்,தனி நாடாக இருக்க முடியாது;பொரு ளாதார அடிப்படையில் வடக்கு சூடானைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றார்கள். எத்தனை இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? தெற்கு சூடானி லே, டர்புரிலே? அவர்கள் நம்பிக்கை இழந்தார்களா? இல்லை.இன்றைக்கு உல கத்தின் மனசாட்சி அவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அதே கட்டத்துக்குக் கொண்டு வருவோம். நாம் ஏழு கோடிப் பேர் இருக்கிறோம்.

தந்தை செல்வா அவர்கள், தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று வட்டுக்கோட்டை யில் தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு, அன்றே வாக்கெடுப்பு நடந்து விட்டது. மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமானால், தமிழ் ஈழ மண் ணில் இருந்து, சிங்களர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்பட வேண்டும். சிங்கள இராணுவ முகாம்கள், காவல் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். அது ஒரு முறை.

இன்னொரு முறை, ஆயுதத்தின் மூலமாகத் தமிழ் ஈழத்தை நிறுவுவது. அது, உலகம் பார்த்து இருக்கின்றது பல நாடுகளில். போரிலே தோற்று விட்டார் களே? என்கிறார்கள்.

1939 இல் போலந்து தோற்கவில்லையா? ஐரோப்பிய நாடுகள் தோற்கவில்லை யா? அடால்ப் ஹிட்லர் கொட்டமடிக்கவில்லையா? நாஜிப் படைகள் ஜெயிக்க வில்லையா? இனி, ஹிட்லரை யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லவில் லையா? அபிசீனியாவில் முசோலினியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்ததே? அது நிரந்தரமானதா? நின்றதா அந்த வெற்றி? எல்லாம் இடிந்து சாம்பல் மேடா கி விட்டது என்று சொன்னார்களே, அதில் இருந்து அவர்கள் எழவில்லையா? வெற்றி பெறவில்லையா? கொடியவன் ஹிட்லர் அழியவில்லையா?

அதேபோலத்தான், ஒரு ராஜபக்சே போனாலும், இன்னொருவன் வருவான். ஆனால், ராஜபக்சேக்களுக்கு இதுதான் முடிவு என்று ஏற்பட்டபிறகு, எவன் வர
முடியும்? எங்கள் மீனவன் ஜெயக்குமாரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற அதே கயிற்றில், அவனைத் தொங்கவிட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

ஆற்றல் உண்டு, அறிவு உண்டு, மதிநுட்பம் உண்டு, வீரம் உண்டு. எல்லாம் உண்டு. ஆகவே, நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை. ஒரு நாட்டின் விடு தலைக்கு அத்தனை பேரும் போராடி விட மாட்டார்கள். போராடும் உணர்வு உள்ளவர்கள் மூலமாக அனைவரும் திரண்டு வருவார்கள். அந்த வீர உணர்ச்சி யை நெஞ்சில் ஏந்துவதற்காகத்தான், அன்னை பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற வேளையில், தாயே, தமிழர் சரித்திரம் இருக்கின்ற வரையில், எங்கள் அன்னையே உங்கள் பெயர் இருக்கும். உங்கள் மணிவயிற் றில் பத்து மாதம் சுமந்த எங்கள் மாவீரர் திலகத்தைப் போல உலகத்தில் எந்தப் புரட்சியாளனும் தோன்றியது இல்லை. அவருக்கு நிகர் எவருமே இல்லை.இது தற்பெருமை அல்ல. எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், வல்லரசுகளின் துணை கொண்டு ஆதிக்கக்காரன் அழிக்க முயன்றபோது, தரைப்படை, கடற் படை வான்படை அமைத்தவன் எங்கள் பிரபாகரன். உலகத்தில் வேறு யாரும் இல்லை.அவனைப் பெற்ற தாயே, நீங்கள் உயிர் அற்ற சடலமாக இருக்கலாம். ஆனால், எங்கள் உள்ளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கின்ற திசை நோக்கி
நாங்கள் வணங்குகின்றோம்.

இந்த வேளையில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம் தாய்த்தமிழகத்து வாலிபர்களை, தமிழ் இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
நம் கண் முன்னாலேயே தமிழ் ஈழ நாடு, இரத்தமும், சதையுமாக நம்முடைய நெஞ்சில் நிறைந்து இருக்கின்ற தமிழ் ஈழம் மலர வேண்டும். சிந்திய இரத்தம்
வீண்போகாது. கொடுக்கப்பட்ட உயிர்களின் தியாகம் வீண்போகாது. இன்றைக் கு அங்கே சுற்றி நிற்கின்ற சிங்கள இராணுவத்தை வெளியேற்றுகின்ற காலம் வரும்.

ஏ இந்திய அரசே! தொடர்ந்து துரோகம் செய்கிறாய்.தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்கிக் கொண்டே இருக்கிறாய். உன்னுடைய துரோகத்துக்கு ஒரு போதும் மன்னிப்பு கிடையாது. தமிழ் ஈழத்தை அமைப்பதற்குத் தடை விதித்து இருக்கின்ற நிலையில், தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தனிநாடு ஆக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்து நீ தடை விதித்து இருக்கி றாய். தாய்த் தமிழகத்து மண்ணையும் சேர்க்க வேண்டும் என்று பிரபாகரன் ஆசைப்படவில்லை. தமிழ் ஈழ விடுதலைக் களத்தில் அவர்கள் அதைக்கோரிக் கையாக வைக்கவில்லை. நீயாகச் சொல்லுகிறாய். தடை விதிக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னாய். எதிர்காலத்தில் அது உண்மையாவதற்கு நீயே வழி வகுத்து விடாதே. (பலத்த கைதட்டல்).

கடல் நம்மைப் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு,அன்னை பார்வதிக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்நாங்கள் வீர சபதம் பூணுகிறோம்.நிறைவாக இருக் கும் வரை எங்கள் தலைவன் மறைவாக இருக்கிறான். அவனே, விடுதலைப் போரை இயக்குகின்ற சக்தி. தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் சக்தி. அதன் பெயர் தான் மாவீரர் திலகம் பிரபாகரன். அவரை ஈன்ற எங்கள் தாயே, உன் புகழ் நீடு வாழ்க!

தமிழ் ஈழம் மலர உறுதி எடுத்துக் கொள்கிறோம். அதுவே எங்கள் கடமை.

அன்புச் சகோதரர்களே,

பல்வேறு துறைகளில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு அரசியல் எண்ணங் கள் இருக்கலாம். பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அது அவரவர் விருப் பம். ஆனால், நம்முடைய இலக்கு, நம்முடைய வாழ்நாளில், தமிழ் ஈழத்தைக் கட்டமைப்பதற்கு நாம் தோள் கொடுப்போம், துணை நிற்போம்.

தமிழ் ஈழம் மலர்வதையும், நம் வாழ்நாளிலேயே காண்போம். வணக்கம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment