Tuesday, June 4, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 4

இலங்கை-இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம்:வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் கருத்து குறித்து

பிரதமருக்கு வைகோ கடிதம் நாள் :-11.6.2005

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த ஜூன் நான்காம் நாள் தங்களை நேரில் சந்தித்து, இலங்கைத் தீவில் தற் போது உள்ள நிலைமையை விளக்கி, விரிவான கடிதத்தையும் தந்தபோது, உங் கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியதோடு, என்னுடைய கருத்துகளை மிகுந்த கனிவோடு பரிசீலித்துப் பதில் அளித்தீர்கள்.
1955ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அரசு கொடுமையான இராணுவத் தாக் குதலைத் தமிழர் பகுதிகளிலே நடத்தியதில், ஏராளமான அப்பாவித் தமிழ் மக் கள் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் தாங்களாகப் போர்நிறுத்தம் அறிவித்தபின்னரே அமைதிப் பேச்சுகள் தொடங்கின. ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தையும் கலைத்து, அமைதிப் பேச்சுகளையும் தொடர விடாமல் சந்திரிகா அரசு முடக்கிவிட்டது. இந்தியாவோடு இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்காகப் பேரினவாதச் சிங்கள அரசு, அனைத்துவிதமான பித்தலாட்ட வேலைகளிலும் ஈடுபட்டு உள் ளது. அந்த அரசு நினைக்கும் விதத்தில் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளப் படுமானால்,கேடுகளுக்கெல்லாம் கேடான பெரும் தவறான முடிவாக அது அமையும் என்று நான் தங்களிடம் தெரிவித்தேன்.

தொலைநோக்குப் பார்வையோடு தாங்கள் என்னுடைய கருத்துகளைப் பரிசீ
லித்ததுடன், இந்தியா அம்மாதிரியான இராணுவ ஒப்பந்தம் செய்யாது என்று எட்டு மாதங்களுக்கு முன்பு நீங்கள் உறுதி அளித்தீர்கள்.

அதற்குப் பிறகு நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட் டத்தில், தாங்களும், பாதுகாப்பு அமைச்சரும் மீண்டும் அதே உறுதியை அளித் தீர்கள். கடந்த ஜூன் நான்காம் நாள் நான் தங்களைச் சந்தித்தபோது, இலங்கை யோடு இராணுவ ஒப்பந்தம் ஏற்படாது என்று மீண்டும் உறுதி அளித்தபோது நான் நிம்மதி அடைந்தேன்.

ஆனால், 2005 ஜூன் பத்தாம் நாள் அன்று, கொழும்பு நகரில் செதிய்யாளர்கள் சந் திப்பின்போது,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் அவர்கள்,‘உத் தேசிக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம், இறுதி வடிவம் பெறுவதற்கான பணிகள் நடைபெறுகிறது’ என்று கூறியதை அறிந்து, மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். கொழும்பு நகருக்கும், இலங்கை அரசின் இரா ணுவ நிலைகளுக்கும் வான்வெளிப் பாதுகாப்புக்காக இந்தியா ராடார் சாதனத் தை வழங்க முன்வந்து உள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

1995 ஆம் ஆண்டிலும், 98ஆம் ஆண்டிலும் யாழ்ப்பாணத்தின் மீதும் அதன் சுற் றுப்புறப் பகுதிகளிலும் இலங்கை அரசு நடத்திய விமானத் தாக்குதலில், குண் டுவீச்சில் ஏராளமான அப்பாவித் தமிழ்  மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மிகுந்த வேதனையோடு சுட்டிக் காட்டுகிறேன்.

இன்று தமிழர்கள் உள்ளத்தில் விசுவரூபம் எடுத்து உள்ள கேள்வி இதுதான். இலங்கையின் விமானப் படை, தமிழர்கள் பகுதிகளிலே இனி வான்வெளித்
தாக்குதல் நடத்துமானால், தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு அதைத்தடுக் கின்ற அரண் ஏதாவது ஏற்படுத்தப் போகிறதா?

இரு நாடுகள் ஒத்துழைப்பு என்ற பெயரால், இலங்கைக்கு எந்த இராணுவத் தள வாடத்தையும் இந்தியா கொடுக்கக்கூடாது. அவ்விதம் இராணுவ உதவியை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்குமானால், இலங்கைத் தீவில் மட்டும் அல் ல, இந்தியாவில் வாழும் தமிழர்களின் இதயங்களிலும் ஆற்றவே முடியாத காயங்களும், வடுக்களும் ஏற்பட்டுவிடும்.

இந்தப் பிரச்சினையின் கடுமையையும், தமிழர்களின் உணர்வுகளையும் உறுதி யாகத் தாங்கள் மதிப்பீர்கள் என்று கருதுகிறேன். அதனால் இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் எதையும் இந்தியா செய்து கொள்ளாது என்றும் இன்ன மும் நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன்.

நன்றி,

தங்கள் அன்புள்ள,

வைகோ

11.6.2005

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment