1998-99 ஆம் ஆண்டு 94.12 இலட்சம் மெ.டன் உணவு உற்பத்தி அடைந்த தமிழகம் படிபடியாக குறைந்து உள்ளது , நீங்கள் அமைச்சரான பின் 83.51 இலட்சம் மெ.டன் இருகிறதே ?...
வைகோவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உங்களின் அறியாமையை சுட்டி காட்டவும் புள்ளி விவரங்களோடு இந்த பதிவை தருகிறேன் ...
வைகோ தனது அறிக்கையில், 'விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வா தார மாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவ சாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயி கள் வாழ்வு பாலைவனமாகி விடும்' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கூற்று ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு முதல்-அமைச்சர் அம்மாவின் அரசு செயல்பட்டு வருவதன் காரணமாக, தொழில் வளர்ச்சி பெருகி, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர். இது தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அதே சமயத்தில், இதன் காரணமாக, விவசாயம் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் அம்மா எடுத்துள்ளார்கள் என்பதையும், வைகோவுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் என்ற கற்பனை வாதத்தை வைகோ கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வைகோவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளீர்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உங்களின் அறியாமையை சுட்டி காட்டவும் புள்ளி விவரங்களோடு இந்த பதிவை தருகிறேன் ...
வைகோ தனது அறிக்கையில், 'விவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வா தார மாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவ சாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால் விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயி கள் வாழ்வு பாலைவனமாகி விடும்' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கூற்று ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு முதல்-அமைச்சர் அம்மாவின் அரசு செயல்பட்டு வருவதன் காரணமாக, தொழில் வளர்ச்சி பெருகி, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர். இது தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அமைச்சரின் கூற்று தொழில் துறை முன்னேற்றியதால் தான் கிராமத்தில் இருந்து மக்கள் நகருக்கு வருவதாக சொல்லுகிறார், அப்படி எனில் கிராமத்தில் இவ்வளவு காலம் சும்மா பொழுது போக்கினார்கள் என சொல்ல வருகிறாரா அமைச்சர் ,மேலும் கிராமங்களில் வாழ வழி இல்லை என்பதை அமைச்சரே ஒத்து கொண்டு உள்ளார் ...
விவசாய தொழிலாளர்கள்
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி - 1,52,21,542 பேர் (மொத்த மக்கள் தொகை-6,24,05,679 )
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி - 1,38,55,004 பேர் (மொத்த மக்கள் தொகை-7,21,47,030 )
ஏற்கனவே விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் விவசாயத்தை விட்டு விலகிய வர்கள் பத்து ஆண்டுகளில் 13,66,538 பேர்
மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாயம் செய்பவர்கள் அதிகரிக்கவில்லை என்றா லும் குறைந்து வருகிறார்கள் என்பது புள்ளி விவரம் காட்டுகிறது.
மேலே வைகோ விவரத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவுக்கும் பொது எந்த வித புள்ளிவிவரங்களும் தரவில்லை , மாறாக உலக அமைப்புகளும் ஐ.நா வும்
உணவு பஞ்சம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு உள்ளது அதை பெற்று படித்து கொள்ள அமைச்சரை வேண்டுகிறேன்.
தொழில் பெருகியது என்பதைவிட விவசாயம் சுருங்கியது என்பது அடுத்து வருகிற புள்ளி விவரம் உணர்த்தும் ...
விவசாயம் குறைந்தது போனதற்கு இதோ எடுத்து காட்டு ...
கீழ் வரும் விவரம் உணவு தானிய உற்பத்தி மட்டுமே மாறாக பணபயிர் உற் பத்தி கணக்கில் எடுக்கவில்லை ( எண்ணெய் வித்து ,பருத்தி ,கரும்பு போற்ற வை)
1998-99 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 36.76 இலட்சம் எக்டர்
உற்பத்தி அளவு - 94.12 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 81.41 இலட்சம் மெ.டன்
1999-00 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 36.33 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 88.42 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 75.32 இலட்சம் மெ.டன்
2000-01 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 35.01 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 86.17 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 73.66 இலட்சம் மெ.டன்
2001-02 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 34.51 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 76.89 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 65.84 இலட்சம் மெ.டன்
2002-03ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 27.92 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 44.61 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 35.77 இலட்சம் மெ.டன்
2003-04 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 28.37 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 43.12 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 32.23 இலட்சம் மெ.டன்
2004-05 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 32.87 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 61.46 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 50.32 இலட்சம் மெ.டன்
2005-06 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 38.63 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 74.14 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 61.27 இலட்சம் மெ.டன்
(இந்த 2005-06 ஆண்டு விவரங்களில் இலக்கு அளவுகள் தான் கிடைத்து , இறுதியான அளவுகள் கிடைக்கவில்லை )
2006-07 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 41.6 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 95.4 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 78 இலட்சம் மெ.டன்
2007-08 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 42 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 95 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 78 இலட்சம் மெ.டன்
(இந்த 2007-08 ஆண்டு விவரங்களில் இலக்கு அளவுகள் தான் கிடைத்து , இறுதியான அளவுகள் கிடைக்கவில்லை )
2008-09 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 39.63 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 91.1 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 64.61 இலட்சம் மெ.டன்
2009-10 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 38.95 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 95 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 71.5 இலட்சம் மெ.டன்
2010-11 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 31.74 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 85.35 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 57.92 இலட்சம் மெ.டன்
2011-12 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 32.11 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 105.52 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 74.59 இலட்சம் மெ.டன்
2012-13 ஆண்டு
உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 32.97 இலட்சம் எக்டர்
மொத்த உணவு தானிய உற்பத்தி அளவு - 83.51 இலட்சம் மெ.டன்
நெல் மட்டும் - 54.84 இலட்சம் மெ.டன்
அமைச்சர் அவர்களே மேலே உள்ள ஆண்டு வரியான கணக்குகளை பாருங் கள் அளவுகள் குறைந்து வந்துள்ளது தெரியும். 1998-99 ஆம் ஆண்டே உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்ட பரப்பு - 36.76 இலட்சம் எக்டர் இருந்த போது நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 2011-12 ஆம் ஆண்டில் 32.11 இலட்சம் எக்டர் ஆகவும் ,2012-13 ஆம் ஆண்டில் 32.11 இலட்சம் எக்டர் 32.97 இலட்சம் எக்டர் குறைந்து போனதற்கு காரணம் தாருங்கள் ....
1998-99 ஆம் ஆண்டு 94.12 இலட்சம் மெ.டன் உணவு உற்பத்தி அடைந்த தமிழகம் படிபடியாக குறைந்து உள்ளது , நீங்கள் அமைச்சரான பின் 83.51 இலட்சம் மெ.டன் இருகிறதே ?...
1998-99 ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன ? இன்றைய மக்கள் தொகை என்ன இதே நிலவரம் நீடித்தால் பஞ்சம் வரமால் என்ன செய்யும் அமைச்சர் அவர் களே ....
அரிசி உற்பத்தியின் வீழ்ச்சி
1998-99 ஆம் ஆண்டு 81.41 இலட்சம் மெ.டன் ஆக இருந்த அரிசி உற்பத்தி ,2012-13 ஆம் ஆண்டு 54.84 இலட்சம் மெ.டன் குறைந்து போனதே இது தான் நீங்கள் நிர்வாகிக்கும் திறனா ?
ஒருவேளை அரிசிக்கு பதில் தமிழர்கள் உணவு முறையை மாற்றி கொள்ள வேண்டும் போல !......
மேலும் கடந்த ஆண்டு உற்பத்தி அளவு 120 இலட்சம் மெ.டன் இலக்கு வைக்க பட்டது ( அதை அடையவில்லை என்பது இருக்கட்டும் ) , அது ஏன் திரு . தாமோதரன் அவர்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆன பின் இலக்கு வைப்பது கூட சுருங்கி விட்டதே .... 2013-14 ஆண்டு உற்பத்தி அளவு 112 மெ.டன் இலக்கு
இது உங்களின் முதல் அமைச்சருக்கு தெரியுமா ... தெரிந்தால் வேளாண்மைத் துறைக்கு வேறு ஒருவர் அமைச்சர் ஆவர் ...
இதற்கு மேல் நிவாரண தொகை குறித்து எல்லாம் அறிக்கையில் சொல்லி இருகிறேர்கள் அதை எல்லாம் விட்டுவிட்டேன் ... இதில் உள்ள புள்ளி விவரங்கள் பார்த்து விவசாயம் எங்கே போகிறது என பொது மக்கள் முடிவு செய்வார்கள் ... இதில் அதிமுக , திமுக என்ற பாகுபாடு கிடையாது....
நன்றி........
ReplyDelete