Monday, June 10, 2013

தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம்! பகுதி 1

எங்கள் மூதாதை கரிகாலனும், இராஜராஜனும், பராந்தகச்சோழனும், குலோத்துங்கனும், வருணகுலத்தானும் இங்கிருந்து படை எடுத்துச் சென்றதைப் போல, எதிர்காலத்தில் வீர வாலிபர்கள் கடல் கடந்து 
வருவார்கள். இந்தக் கடல் தடுக்க முடியாது. இது வெறும் பேச்சு அல்ல. இரத்தத் தில் இருந்து ஆவே சத்தோடு பீறிட்டு வருகின்ற வார்த்தைகள்.
வைகோ (21.02.2011 )

அன்னை பார்வதி அம்மையார் புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களின் புகழ் அஞ்சலிக் கூட் டம், 21.02.2011 அன்று, சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

அன்புச் சகோதரர்களே, தமிழ் ஈழ விடுதலை இனஉணர்வாளர்களே, ஊடகவிய லாளர்களே, செய்தியாளர்களே, சகோதரிகளே, வணக்கம்.


தேனிசை செல்லப்பா அவர்கள், நெஞ்சை உருக்குகின்ற பாடலைப் பாடியதற் குப் பிறகு, பேராசிரியர் அரசேந்திரன் அவர்கள் தீட்டிய இரங்கல் கவிதையின் வரிகளை நான் வாசித்ததில், என் மனதை ஈர்த்த அதே வரிகளை,மீண்டும் அன் னையின் நினைவாக இந்த மன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால் உகுக்கும் கண்ணீரால்
உம் பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று
உரைக்கும் சொல் ஒன்று
கொள்ளி வைப்பானா பிள்ளை?
கொள்ளி வைப்பானா பிள்ளை? - எனக்
கோடி முறை நினைந்து
நைந்திருப்பாய், நலிந்திருப்பாய்
நாடி தளர்ந்திருப்பாய்!
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடி இடியாய் முழக்கமிட்டுக்
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொண்ட உன் தவம் பலிக்கும்
கோடி ஆண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலை தாழ்ந்த வணக்கங்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், நானும், சென்னை விமான நிலையத்தில், கவலையோடு காத்து இருந்தோம்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு விட்டது.நமது அன்னை பார்வதி அம் மாள் வருகிறார்கள். உடன் இருந்து உதவிட, விஜயலெட்சுமி எனும் தங்கை யும் வருகிறார். விமான நிலையத்தில் அவர்கள்,விமானத்தில் இருந்து இறங்கி யவுடன், தள்ளு நாற்காலியில் அவர்களை அமர வைத்து, பத்திரமாக வெளியே அழைத்துக் கொண்டு வந்து, அங்கே ஏற்கெனவே ஏற்பாடு செய்து இருக்கின்ற
வாகனத்தில் அமர வைத்து, அண்ணன் நெடுமாறன் இல்லத்துக்கு அழைத்துச் செல்வது. ஓரிரு நாள் கழித்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து தேடி வரு கிறார்களே உயர்தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கின்ற மருத்துவமனை கள் சென்னை மாநகரில் இருக்கிறது எனத் தேடி வருகிறார்களே, அப்படி ஒரு
மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்து, தக்க சிகிச்சை வழங்குவது என்று திட்டமிட்டுக் காத்து இருந்தோம்.

அந்த நாளோடு, அந்த நாட்டில் அவர்கள் தங்குவதற்கான அனுமதி முடிகிறது. இந்திய அரசுக்கு அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து, அதை இந்தியத் தூதர கம் பரிசீலித்து, அனுமதி வழங்கி விசாவும் தந்துவிட்டது. எனவே, உரிய அனும திச் சீட்டோடு வருகிறார்கள். திடீரென்று, தமிழ்நாட்டுக் காவல்துறையின் அணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. நுhற்றுக்கணக்கான காவலர்கள் வந்து குவிந்தனர். காவல்துறையின் புகைப்படக் கலைஞர்கள் வந்தார்கள். காவல்துறையைச் சேர்ந்த காணொளி தயாரிக்கக்கூடிய கலைஞர்கள், தங்கள் கருவிகளோடு வந்தார்கள்.

எங்களுக்கு ஐயம் ஏற்பட்டது. அந்த வேளையில்,உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி, அருமைச் சகோதரர் வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர் களுக்குத் தகவல் கொடுத்து, பார்வதி அம்மாள் அவர்களை விமானத்தில் இருந் து கீழே இறங்குவதற்கே அனுமதிக்கப் போவது இல்லை; அப்படியே திருப்பி
அனுப்புவதற்கு ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தவுடன் பதட்டம் அடைந்தவர்களாக, அண்ணன் பழ. நெடுமாறன்
அவர்களும், நானும்,விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க வருகின்ற, பொதுமக்கள் நடமாடுகின்ற இடத்துக்குச் சென்றோம். இந்தப் புகழ் அஞ்சலி யை முறைப்படி தக்கவிதத்தில் ஏற்பாடு செய்து இருக்கின்ற அருமைச் சகோத ரர் வேளச்சேரி மணிமாறனும் எங்களோடு வந்தார்.

பொதுமக்கள் நடமாடுகின்ற இடத்தில், திடீரெனக் காவல்துறை அதிகாரிகள் வந்து எங்கள் இருவரையும் மறித்தார்கள். இதற்கு அப்பால் நீங்கள் போகக் கூடாது என்றார்கள். இது என்ன சர்வாதிகார நாடா?

பொதுமக்கள் நடமாடு கின்ற இடத்தில்,நாங்கள் நடமாடக்கூடாது என்று கூறி யதை நிராகரித்துவிட்டு நாங்கள் சென்றோம். மீண்டும் காவல்துறை அதிகாரி கள் வந்து எங்களை மறித்தார்கள். அப்போது, எங்களிடம் விமான நிலையத் துக்கு உள்ளே செல்வதற்கான அனுமதிச்சீட்டு இருந்தது.பயணிகளை வரவேற் பதற்கு,பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற இடத்துக்கான அனுமதிச் சீட்டை நாங்கள் முதலிலேயே பெற்று இருந்தோம். அதை அவர்களிடம் காண் பித்தவாறு நாங்கள் சென்றபோது, அந்த விமான நிலையத்துக்கு உள்ளே பார் வையாளர்கள், பயணிகளை வரவேற்பதற்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடத் தின் வாசலில் எங்களை உள்ளே விடாமல், காவல்துறை அதிகாரிகள் சுவர் போல
மறித்து நின்றார்கள். அவர்கள், விமான நிலையப்பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டு இருக்கின்ற மத்திய அரசின் காவல் அதிகாரிகள் அல்ல. தமிழக அரசின்
காவல்துறை அதிகாரிகள்தான். அவர்கள், விமான நிலையப் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடாத அதிகாரிகள்.அவர்கள் எங்களை மறித்தபோது, அண்ணன் நெடு மாறன் அவர்கள்,அவர்களிடம் காரணம் கேட்டார்.பதில் ஏதும் சொல்ல வில்லை.

எங்களிடம் அனுமதிச் சீட்டு இருக்கிறது என்று கூறி நாங்கள் உள்ளே செல்ல முயன்றபோது, எனது தோளைப்பற்றி, என் வலதுகரத்தை முறுக்கி, ஒரு அதி காரி என்னைக் கீழே தள்ள முயன்றார். அப்போது,அண்ணன் நெடுமாறன் அவர் கள், அக்கிரமம் செய்யாதீர்கள், விளைவுகளை நீங்கள் விரைவிலேயே அனுப விப்பீர்கள் என்று அந்த அதிகாரியை எச்சரித்தார்.

அதன்பிறகு, உங்கள் துப்பாக்கிகளுக்கோ,குண்டாந்தடிகளுக்கோ நாங்கள் பயப் படுகிறவர்கள் அல்ல என்று அந்த இடத்திலேயே உட்கார்ந்தோம்.அதன்பிறகு அவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. விமானம் தரை இறங்கி விட்டது. பார்வதி அம்மையாருடைய பொருள்கள், அவர்களுக்குத் தேவைப்படுகின்ற மருந்துகள், உடைகள் வைத்து இருக்கின்ற பெட்டி, கன்வேயர் பெல்டில் வந்து சேர்ந்து விட்டது. ஆனால், அதை மீண்டும் எடுத்துச் சென்று, அன்னை பார்வதி அம்மையார் அவர்களை விமானத்தில் இருந்து கீழே இறங்குவதற்குக்கூட அனுமதிக்காமல், அந்த விமானத்துக்கு உள்ளே மணிக்கணக்கிலே உட்கார
வைத்து, நடுநிசிக்குமேல், அந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினார்கள்.

அப்போது செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், எங்களிடம் கருத்துக்கேட்டார்கள். நாங்கள் சொன்னோம்: தாங்க முடியாத
வேதனை,அன்னை பார்வதி அம்மையார் இந்தத் தமிழ் மண்ணிலே கால் எடுத் து வைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை என்று சொன்னோம்.

முதல் அமைச்சர் அவர்களே, மறுநாள் நீங்கள் என்ன சொன்னீர்கள்? அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்குத்தெரியவே தெரியாது. காலை செய்தித்தாள் களைப்படித்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்கள். இதைவிட ஒரு பித்தலாட்டமான, மோசடியான பொய்யை யாரும் சொல்ல முடியாது.
உங்களுக்குத் தெரியாமலேயே, தமிழ்நாட்டுக் காவல்துறை இயங்கியதா? அப் படியானால், அது உங்கள் கட்டுப்பாட்டிலே இல்லையா? ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஏ.சி., டி.சி., இவர்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?காவல்துறையை இயக்குவதற்குப் பயன்படுகின்ற உளவுத்துறை உங்கள் கட்டுப்பாட்டில் இல் லையா? உளவுத்துறை உங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லையா?

ஒன்பது மணிக்கே தமிழகக் காவல்துறை அங்கே கொண்டு வந்து குவிக்கப் பட்டு விட்டதே, யாருடைய உத்தரவால்?

மாவீரர் திலகம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த பார்வதி அம்மை யார் வருகிறார். அவரை இந்த மண்ணிலேயே கால் எடுத்து வைக்கக்கூடாது என்று திருப்பி அனுப்புவதற்கு, டெல்லியோடு தொடர்புகொண்டு, உள்துறை அமைச்சரோடு தொடர்புகொண்டு, குடிவரவு அதிகாரிகளிடம் சொல்லவைத்து, வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதற்கான ஏற்பாடு களைச் செய்தது நீங்கள்தான்.

இந்திய அரசு அனுமதி கொடுத்தபிறகு, இந்தியாவுக்கு உள்ளே நுழைவதற்கு நுழைவு உரிமை (விசா) கொடுத்தபிறகு எப்படித் திருப்பி அனுப்பினீர்கள்?

நோய்வாய்ப்பட்டவர், 81 வயதைக் கடந்தவர், ஏற்கனவே, சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்து மூன்றரை மணி நேரம் காத்து இருந்து, விமானத்தில்
நான்கு மணி நேரம் பயணித்து வந்தவர். நோயாளி. மீண்டும், அவரை இங்கே விமானத்துக்கு உள்ளேயே நான்கு மணி நேரம் உட்கார வைத்து, அதே விமா னத்தில் திருப்பி அனுப்புகிறபோது, அவரது உயிருக்கு ஊறு நேரிடும் என்ற எண்ணம் வேண்டாமா? பதற்றம் வேண்டாமா?

திரும்பிச் செல்லுகின்ற வழியில் விமானத்திலேயே அவரது உயிருக்கு ஊறு நேர்ந்துவிட்டால், இந்தத் தமிழ் இனத்துக்கு அல்லவா வந்து சேரும் பழி? என்று
நினைத்தீர்களா? ஈவு இரக்கம் பச்சாத்தாபம் மனிதாபிமானம் எதுவுமே உங்க ளுக்குக் கிடையாதா? எல்லாவற்றையும் குழிதோண்டிப்புதைத்து விட்டீர்களா?

நீங்கள் சொல்லித்தான், இந்திய உள்துறை அமைச்சர், விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கே அனுமதிக்கவில்லை. அந்தத் தாயின் உள்ளம் என்ன
எண்ணி இருக்கும்? ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமென்றா ஆசைப்பட்டு இருப்பார்? இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், குஞ்சும் குழுவானுமாகக் கொல் லப் பட்டு,எத்தனைப்பெண்கள் நாசமாக்கப்பட்டு,பசியில்,பட்டினியில், நோயில் ,குண்டுவீச்சில், இரத்தச் சகதியில் துடிதுடிக்கக்கொல்லப்பட்டு, எவ்வளவு அழிவுக்குப் பின்னாலே, சிங்கள இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுக்
கிடந்தாரே அந்தத் தாய்? உத்தமர் வேலுப்பிள்ளை அவர்களோடு சேர்ந்து அடைக்கப்பட்டுக்கிடந்தாரே?உத்தமர் வேலுப்பிள்ளை அந்த இராணுவ முகாமி லேயே மடிந்து போனாரே?

மனிதனுக்கு மரணம் வந்துதான் தீரும். துன்பங்கள்,துயரங்கள் இல்லாத வாழ்க் கை கிடையாது. ஆனால், எப்படிப்பட்ட துன்பம்? சின்னஞ்சிறு பருவத்திலேயே,
தமிழ் ஈழத்தை மீட்பதற்கு ஆயுதம் ஏந்திப்போர்க்களத்துக்குச்சென்று விட்டாரே மகன்? எத்தனை நாள்கள், எத்தனை பகல்கள், எத்தனை இரவுகள், எத்தனை வாரங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள், தன் வீர மைந்தனை உலகமே போற்றுகின்றதே அந்த மகனைப் பார்த்தது உண்டா?அந்தத் தாயும், தகப்பனும் தங்கள் பிள்ளையைப் பார்த்தது உண்டா? அந்த வீரனைப் பெற்றதற் காகப் பெருமைப்பட்டார்கள். அந்த மகன், தன் தாயைக் காணவேண்டும், தந்தையைக் காண வேண்டும் என்பதற்காக, போராட்டக் களத்தை விட்டு விட்டுச் சென்றாரா எப்போதாவது?

அவ்வளவு அழிவுக்குப் பின்னாலே, அவர் உயிருக்கும் மேலாக நெஞ்சிலே பூசித்த கணவனும் இறந்ததற்குப்பிறகு, இல்லை, கொல்லப்பட்டதற்குப் பிறகு, ஆம்; அவர் கொல்லப்பட்டார். சிங்கள இராணுவத்தின் வதைமுகாமில்தானே உயிர் இழந்தார்? அதற்குப்பிறகு, ஐயா, ஐயா என்ற குரல்தானே ஒலித்துக் கொண்டு இருந்தது அந்தத் தாயின் உதடுகளில்? தன் கணவனை ஐயா, ஐயா என்றுதானே அவர் அழைத்துக் கொண்டு இருந்தார்?

சிங்கப்பூரில் இருந்து உங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துக்கொண்டு போகி றோம் என்றுதானே அவரிடம் அந்தச் சகோதரர்கள் சொன்னார்கள். தமிழ்நாட் டில் அண்ணன் நெடுமாறன் அவர்களின் இல்லத்திலே தங்கி, மருத்துவமனை யில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்றுதானே சொன்னார் கள்? இந்தத் தாயகத்தில், தமிழ்நாட்டில் ஏழு கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தத் தமிழ் மண்ணுக்கு வருகிறோம் என்றுதானே எண்ணி இருப்பார் விமானத் தில் இருந்து எல்லோரும் இறங்குகிறபோது, எங்கள் தாயும், அவருக் குத் துணையாக வந்த விஜயலெட்சுமியும் கீழே இறங்குவதற்கு அனுமதி இல்லை என்று மறுத்தபோது, எப்படித் துடிதுடித்து இருக்கும் அந்த உள்ளம்?

தமிழ்நாட்டில் நாம் கால் வைக்க அனுமதி கிடையாதா?புகல் அற்றுப் போய் விட்டதா? இல்லை, இல்லை தாயே. இதோ எரிகிறதே தாயே, இந்த நெருப்பு, இதற்கு உள்ளே முத்துக்குமார் இருக்கிறான். தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர் தணலுக்குத் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.எனவே, நம்பிக்கை அற்றுப்பேசக் கூடாது.

இந்த மேடை, அரசியல் எல்லைகளைக் கடந்த ஒரு பொது மேடை. நம்மை நாமே நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது. தற்காலிகமாக ஒரு தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.அதனால் அவநம்பிக்கை எதற்காக?நம்மை நாமே நிந்தித்துக் கொள்வது எதற்காக? தாயே, உன் வீர மகனை நெஞ்சிலே பூசித்த 16 பேர், எங்கள் மண்ணிலே உயிர்களைத் தந்தார்கள். இன்னும் தருவார் கள். நெருப்புக்குத் தரச் சொல்லவில்லை நான்.தீயிட்டு மடியச் சொல்ல வில் லை, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளச் சொல்லவில்லை. ஆனால், எங்கள் மூதாதை கரிகாலனும், இராஜராஜனும், பராந்தகச்சோழனும், குலோத் துங்கனும், வருணகுலத்தானும் இங்கிருந்து படை எடுத்துச் சென்றதைப் போல, எதிர்காலத்தில் வீர வாலிபர்கள் கடல் கடந்து வருவார்கள். இந்தக் கடல் தடுக்க முடியாது. இது வெறும் பேச்சு அல்ல. இரத்தத்தில் இருந்து ஆவே சத்தோடு பீறிட்டு வருகின்ற வார்த்தைகள்.

எங்கள் தாயைத் திருப்பி அனுப்பிய பாவத்தைச்செய்தீர்களே? மடியில் விழுந்த து ஒரு மணிப்புறா. என் பசியைப்போக்குவதற்காக அதைத் துரத்தி வந்து இருக் கிறேன். எனக்கு அந்த மணிப்புறா வேண்டும் என்று பார்வையிலேயே கேள்வி விடுத்தது அந்தப் பருந்து.

உன் பசியைப் போக்க வேண்டும். அது இயற்கையின் நியதி. அதற்காக என் தொடையை அறுத்துத்தருகிறேன்.தஞ்சம் என என் மடியிலே வந்து விழுந்த
மணிப்புறாவுக்காக, என் உடலை அரிந்து தருகிறேன் என்ற மன்னனின் வீர காவியம் படைத்த நாடு இந்தத் தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டிலா? வந்தவரை எல்லாம் வாழ வைத்த தமிழ்நாட்டிலா? யார் நாடி வந்தாலும், அவர்களது பசி யைப் போக்க, துயரத்தைப் போக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அருள் மழை பொழிந்த தமிழ்நாட்டிலா எங்கள் அன்னை கால் வைப்பதற்கு அனுமதி இல்லை?

தொடரும் .......

No comments:

Post a Comment