Sunday, June 2, 2013

மாணவர்களின் பிரதிநிதிகளையும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்குள் உறுப்பினராகக் கொண்டு வர வேண்டும்.-மதிமுக மாநில இளைஞரணிச் செயலர்

பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல் படக் கூடாது என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் முதல் 200 இடத்துக்குள் இந்தியாவின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் இல்லை என்பது வருத்தமளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடக் கும் ஊழல்,நிர்வாகச் சீர்கேடுகளைக் களையாமல் அவர் கனவு காண்பது வீண்.
பல்கலைக் கழகம் சிறந்த வளர்ச்சி பெற துணைவேந்தர்களும் நிர்வாகக் கட்ட மைப்பும் நேர்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் திறமையோடும் செயல்பட வேண்டும்.

துணைவேந்தர் பதவி என்பது எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும்
வாய்ப்புள்ள மரியாதையும் பொறுப்பும் வழிகாட்டியாகவும் உள்ள பதவியாகும். பதவியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் துணைவேந்தர்கள் செயல்படக் கூடாது. அப்படிச் செயல்படும்போது அனைவரும் அதைத் தடுக்க வேண்டும்.

இப்போது பல்கலைக் கழக நடைமுறையில் உள்ள துணைவேந்தர் தேர்வு, சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் தேர்வு நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற் றை ஆராய்ந்து ஊழலுக்கும் ஏதேச்சாதிகாரத்துக்கும் வழியில்லாத வகையில் புதிய பல்கலைக் கழக சட்டத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களின் பிரதிநிதிகளையும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்குள் உறுப்பினராகக் கொண்டு வர வேண்டும்.

ஒவ்வோராண்டும் கணக்குத் தணிக்கையை முறையாகச் செய்து ஊழல் செய்திருந்தாலோ பணி விரயம் செய்திருந்தாலோ யாராக இருந்தாலும் வெளியேற்றும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும்.

பாரதியார் பல்கலைக் கழகம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எப்படிச் செலவு செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 

இல்லையென்றால் மாணவர்களின் எழுச்சியையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழல் ஏற்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment