இந்தியப் பிரதமர் நேரு மட்டுமல்ல,அவர் மகள் இந்திராகாந்தி வரை தமிழினத் திற்குத் துரோகம் இழைப்பதில் குறியாகவே இருந்தனர். இலங்கையின் சார் பில், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமலேயே அநீதியாக நமது கச்சத்தீவை எடுத்து தங்கத் தட்டில் வைத்து சிறிமாவோ பண்டார நாயகாவுக்குத்தாரை வார்த்துக் கொடுத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.
இந்த ஒப்பந்தத்தின் 5 ஆவது விதியின்படி இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர் கள்) கச்சத் தீவுக்கு எப்போதும் போல் வந்துபோகவும், கச்சத் தீவை அனுபவிப் பதற்கும் முழுஉரிமை உடையவர்களாவர். அதற்காக சிங்கள அரசிடமிருந்து நுழைவு அனுமதி எதுவும் பெறவேண்டியதில்லை (will not be required)
மீனவர்கள் கபடி விளையாடுவதற்காகவா கச்சத் தீவுக்கும் அதைச்சுற்றி உள்ள கடலுக்கும் போகிறார்கள்? தங்களது வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலுக்கா கத்தானே போகின்றார்கள். அந்த நிலையில் அன்றோ சிங்கள அரசு தமிழ் மக் களைச் சுட்டுக் கொல்கிறது.படகுகள் பறிமுதல் செய்து அழிக்கப் படுகின்றன. இதுவரை 1000க்கும் அதிகமான மீனவர்கள் சிங்கள அரசால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றனர்.அதுமட்டுமல்ல; ஒப்பந்தத்தின் 7ஆவது விதியின்படி கச்சத் தீவின் முழு உரிமையும் சிங்கள அரசுக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை என் பதற்கான ஆதாரமும் அந்த ஒப்பந்தத்தின் வரிகளின் ஊடே பதுங்கி உயிரோட் டம் பெற்றிருக்கிறது.
விதி -7: என்ன சொல்கிறது என்றால், “இப்பகுதிக் கடலுக்குள் பெட்ரோலியம்,
இயற்கை வாயு மற்றும் இன்னபிற உலோகங்களும், கடல் பூமிக்குள் மணல், கனிமம் போன்றவைகளும் கண்டறியப்பட்டால், அவ்வளங்கள் எல்லையின் இருபுறங்களிலும் இருந்தால், அவற்றை எடுப்பதற்கும் பயன்படத்துவதற்கும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயினைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்திய அரசும்-சிங்கள அரசும் உடனே கூடிக் கலந்துபேசி (மறு) உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.”
இந்த சரத்தில் உள்ள கருத்தின்படி இன்றைய நிலையிலும்கூட கச்சத் தீவும்
அதைச்சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் சிங்களவனுக்கே உரிமையுடையது
அல்ல என்பது தெளிவாகும்.
இராமனும் வாலியும் மோதிக் கொண்ட இடம்தான் கச்சத் தீவு என்றும், அத னால், அதற்கு வாலித் தீவு என்றும் பெயர் பெற்றதாக முன்னாள் பிரதமர் வாஜ் பாய் அவர்கள் ஒருமுறை சொன்னார். சேதுக்கால்வாய்த் திட்டத்தில் ராமன் கட்டிய பாலம் புனிதச் சின்னம் என்று போராடும் புத்திசாலிகள் - இராமனும் வாலியும் போர் புரிந்த இடமான கச்சத் தீவைப்புனிதச்சின்னமாகக்கருதி அதை மீட்கப் போராட முன்வராதது ஏன்?
இதையெல்லாம் டெல்லி நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதற்கும் தட்டிக் கேட்பதற்கும் எவருமே முன்வரவில்லை.அதற்குத் தகுதியானவர்களும் நாடா ளுமன்றத்திற்குச் செல்லவில்லை.
கச்சத் தீவு உடன்பாட்டில் இந்திய-சிங்கள அரசுகள் கையெழுத்து இட்ட போது (28.06,1974), தமிழ்நாட்டில் தி.மு.க. அரசுதான் இருந்தது. தமிழ்நாடு சட்டப்பேர வை யில் தி.மு.க. உறுப்பினர்களாக 184 பேர் இருந்தனர். அப்போது டெல்லி நாடாளுமன்றத்தில் தி.மு.க.சார்பில், 22 எம்.பி.க்கள் இருந்தார்கள்.என்ன பயன்? கச்சத் தீவு உடன்பாட்டை எதிர்ப்பதற்குத் தி.மு.க. உறுப்பினர் களுக்குத் திராணி இருந்ததா? பணத்திற்காக வீரவசனம் எழுதும் கருணாநிதி, மீனவர்கள் நலத் திற்காக மத்திய அரசை எதிர்த்து வீரவசனம் பேச முடிந்ததா? வழக்கம்போல, ஒரு கவிதையாவது எழுதினாரா?
கருணாநிதியின் இச்சைக்குரிய காரியங்கள் எத்தனையோ உள்ளனவே. அவற் றை எதிர்பார்த்து ஏங்கியிருந்தவர் முத்தமிழ் அறிஞர். கேவலம் எச்சில் இரவு களில் மூழ்கிக் கிடப்பவருக்கு இனமானம், நாட்டுப் பற்று எப்படி வரமுடியும்?
மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களாவது ‘படகோட்டி’ சினிமா படத்தில் மீனவர்
களின் துன்பியல் பற்றி உருக்கமாக ஒரு பாட்டுப்பாடுவார்:
“தரைமேல் பிறக்க வைத்தான் -எங்களைத்
கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்
Agreement between India and Srilanka on the boundary in historic waters between the two countries and related matters (26 June 1974)

தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் -எங்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்”
என்று பாடுவதுடன் மீனவராகவும் நடித்துக் காட்டினார்.
கச்சத் தீவைச்சிங்களவனுக்கு அள்ளிக்கொடுத்த அநியாயத்திற்கு அணிந்துரை
வழங்கிய துரோகி கருணாநிதி என்பதனைக் காலம் உள்ளவரை மறக்க முடி யாத ஆவணம் ஒன்று உள்ளது.
தமிழக அரசின் ஆவணக்காப்பகம் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசுப் பதிவு
இதழ் (கெஜட்) திருத்திய பதிப்பு (The Tamilnadu Gezetter pertaining to Ramanathapuram) வெளியிட்டது.அந்தப் பதிப்பில் அன்றைய முதலமைச்சர் தமிழினத் துரோகி
கருணாநிதி அணிந்துரை வழங்கி கையெழுத்து இட்டுள்ளார்.
அந்த அரசுப் பதிவு இதழின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்ட வரைபடம் உள்ளது. அந்த வரை படத்தில் கச்சத் தீவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (15.07.1972) மொத்தம் 1062 பக்கங்களைக்கொண்டது அந்தப் பதிப்பு.
கச்சத் தீவை இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) உத்தரவிட்டார். அந்த உத்தரவில் இராமேசுவரம் கிராமப்புல எண்:1250, சர்க்கார் புறம்போக்கு, கச்சத் தீவு ஆர்.சி.எப்.23. 75/83, பி.எ.சி. 6-02-82. குறிப்பு ஆணையின்படி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இராமேசுவரம் வாட்டாட்சியரும் (தாசில்தார்) 118/82, நாள்: 19.02.82.மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத்தீவை நீக்க வேண்டி டேராடூனில் உள்ள இந்திய வரைபட அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்டம் பட்டா சர்வே எண்:1250 இல் இருந்து கச்சத் தீவு நீக்கப்பட்டது. அப் போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.
துரோகி கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு முதலமைச் சர்களை விட, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எவ்வளவோ மேல் என்று தான் சொல்ல வேண்டும்.அவரது செயல்களில் தெரிந்து சில நன்மைகளும் தெரியாமல் சில தீமைகளும் நிகழ்வது அரசியலில் பக்குவம் இன்மையைக் குறிக்கும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, 1991இல் சென்னை கோட்டையில் உள்ள கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா உரை
ஆற்றினார்:-
“தமிழக மக்களே! 1974 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு அநீதியாக வழங்கப் பட் ட கச்சத் தீவைத் திரும்பப்பெறுவோம். நமது தீவை மீட்டெடுப்போம். அதற்காக மத்திய அரசுடன் நாம் போராடவும் தயாராவோம்” என்று சூளுரைத்தார். 05.09. 1991 அன்று இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்தபோது:-
“கச்சத் தீவைத் தாம் திரும்பப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சி, இன வெறி யால் ஏற்பட்டதல்ல,(The demand was not motivated by shauvinistic consideration) தமிழகத்தின் உரிமையைக் காத்திடவும், மீனவர்களின் உயிரைக் காத்திடவுமே கச்சத் தீவைத் திரும்பக் கோருகிறோம்” என்றார்.
இப்போது 21.05.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கச்சத் தீவை மீட்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளார். அதே வேளையில் தமிழை அழிப்பதற்கான சதிகேடு களையும் செய் வார்.
கருணாநிதி தமிழக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தபோது மனது வைத்து இருந் தால் கச்சத் தீவை மீட்பதற்கு வழிகண்டிருக்க முடியும்.
தமிழக அரசின் வரலாற்றையும் மத்திய அரசின் மனப்பாங்கையும் கடந்த கால
நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,தமிழர் நலம் காப்பதில் வல்லவர், வெல் லும் சொல்வலர் வைகோ ஒருவர் தான் என்பதனைக் காலக் கண்ணாடி தெளி வாகச் சுட்டிக்காட்டுவதை உணரலாம்.
தமிழ்நாட்டில் ம.தி.மு.க அதிகாரத்தைக்கைப்பற்றி, இரண்டாம் அண்ணா வைகோ தலைமையில் 40 எம்.பி.க்கள் அணி வகுக்கும் நிலை ஏற்பட்டால், அப் போது கச்சத் தீவு நம் கைவசமாகும். “கச்சத் தீவு கொண்டான்” எனும் பட்டத் திற்கு உரியவராக வைகோ பொது மக்களால் புகழப்படுவார்.
எந்தப் பதவியிலும் இல்லாமலேயே மக்கள் ஆதரவுத் தளத்தில் நின்று தன்னந் தனியாகப் போராடி, கேரள அரசை வென்று “முல்லைப் பெரியாறு அணை காத்த முடிசூடா மன்னர்” எனும் மணிமகுடத்தை மக்களிடமிருந்து பெற்றிருப் பவர் வைகோ.
மத்திய அரசு என்பது ஒரே கட்சியின் ஆட்சிக்கு இனி இடமில்லை. மாநிலங்க ளின் கூட்டுச் சக்தியால்தான் அரசு அமைக்க முடியும். வைகோ சொன்னபடி “அதிகாரத்தைக் கைப்பற்று” எனும் ஆணைக்கு வடிவம் கொடுக்க வேண்டு மெனில், நாம் நடக்க வேண்டிய தொலைவு மிக அதிக மில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் இருக்கிறது.
காலம் அறிந்து இடைவெளி கிடைக்கும் போது முன்னேறிச் செல்லும் வலி மை யை நாம் பெற்றாக வேண்டும். மனஉறுதியும் பண வலிமையும் கொண்ட தோழர்களும் தொண்டர்களும் தான் எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் உந்து
சக்தியாக விளங்கிடும் இயந்திரமாகும்.
இன்றியமையாத இந்தச் சக்திகளை ம.தி.மு.க.வில் புதிய வரவுகளாக இருப்பு
வைப்பதில் கழக நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். வைகோ அவர் களின் விருப்பமும் வேண்டு கோளும் இதுதான்.
ஆலமரம் விழுதுகளை வேர் ஊன்ற விடாமல் தடுப்பதில்லை. தாய் ஆல மரத் தையும் அதன் நீண்ட கிளைகளையும் விழுதுகள் தாங்கி நிற்பதையும் பார்க் கிறோம். கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் உள்ள தலைவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பட்டிதொட்டி,நாடு நகரம் எல்லாம் புதிய புதிய விழுதுகள் வேர் ஊன்றிட வழி வகுப்பதைப் பார்த்துப் பூரிப்படைகிறோம்.
மனித வாழ்க்கையில் அவசரமும் அவசியமும் குறுக்கிடுவது இயல்பாகும். அவசியம் எது? அவசரம் எது? என்பதனைத் தெரிந்து செயல்படுவதில் தான் வாழ்க்கையில் இன்பமே இருக்கிறது. அவசரம் எது? அவசியம் எது? என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
வைகோ அவர்களின் ஆணைப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவசியம்.
வைகோ அவர்களை எம்.பி. ஆக்குவது அவசரம்.
அறிஞர் அண்ணா அவர்களையே இதற்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம். அண்ணா அவர்கள் டெல்லி மாநிலங்கள் அவையில் எம்.பி.ஆக வீற்றிருந்த நேரம்.இந்திய அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத்தையே தென்னாட்டைத்
திரும்பிப் பார்க்க வைத்த அதிசயத்தை நிகழ்த்தியவர் அண்ணா.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதிகா ரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு தி.மு.க. பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது. வெள்ளையனை விரட்டிய காங்கிரசைக் கோட்டையை விட்டு விரட்டிய பெருமை வரலாற்றுச் சிறப்புடையதாகும்.
தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும்.அறிஞர் அண்ணாவோ டெல்லியில் எம்.பி. யாக இருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு கருணாநிதி முதலமைச் சராகிவிடலாம் என்பதற்கான சூழ்ச்சிகளைச் செய்தார்.
அண்ணா டெல்லியில் இருந்தால்தான் மத்திய அரசின் பேராதரவுகளைத் தமிழ் நாட்டுக்குத் திரட்டித் தரமுடியும் என்கிற கருத்தை முன் வைத்து, மூதறிஞர் இராஜாஜி முதல் கண்ணிய மிக்க காயிதே மில்லத் வரை நேரில் சந்தித்து

தன்னை முதல் அமைச்சராக்கும்படி அண்ணாவை வற்புறுத்துமாறு வேண்டிக் கொண்டார்.கருணாநிதியின் கருத்துக்கு ஆதர வில்லை. அதனால் எம்.பி. பத வியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அறிஞர் அண்ணா வந்து விட்டார்.
இதையே முன் மாதிரியாக வைத்து வைகோ அவர்களை முதலில் நாடாளு மன்ற உறுப்பினர் ஆக்கி, டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
அடுத்து -தமிழ்நாட்டில் அதிகாரத்தைக்கைப்பற்றும் அளவுக்கு ம.தி.மு.க. மாபெ ரும் வெற்றியினை ஈட்டும் காலம் வரும். அப்போது, எம்.பி. பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள இரண்டாம் அண்ணா வைகோ வர வேண்டும்.
இதுவே தமிழர்களின் ஆசை! உலகத்தமிழர்களின் ஒருமித்த கருத்து.காலமகள் போடும் கணக்கு.
கச்சத் தீவு முதல் காவிரி-முல்லைப்பெரியாறு, மற்றும் வரையறுக்கப்பட
வேண்டிய எல்லைப் பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டு, நீர்வளம், நிலவளம் செழிப்புற, மனித வளம் பொது நலம் சார்ந்து பொலிவுறும் விதத்தில் புதுமைத் திட்டங்கள் பூத்துக் குலுங்கிடும் நன்னாளை உருவாக்குவோம்.
தமிழ்நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்கும் ஆற்றல் வைகோ ஒருவருக்குத் தான் உண்டு.

நன்றிகள்
கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment