Tuesday, June 25, 2013

தொண்டர்களுக்கு வைகோ கடிதம்

இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத்துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இயக்கத்தின் இருபதாம் அகவையில், வெற்றியின் வெளிச்சம் பிரகாசிக்கப் போகிறது.கழக வளர்ச்சி நிதி -தேர்தல் நிதி திரட்டிட வேண்டிய அவசியம் வந்து விட்டதை விளக்கி, ‘இலட்சியச் சிகரம் நோக்கி இருபது ஆண்டுகள்’என்ற கடிதத்தில், ஆறு வாரங்களுக்கு முன்பே கண்ணின் மணிகளே உங்களுக்குக் கடிதம் தீட்டி இருந்தேன்.

நமது இயக்கத்தின் சார்பில் நிதி கேட்டால், எந்த இடத்திலும், எவரும் முகம் கோணாமல் பரிவோடு தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள். திட்டமிட்டு முறையாக, தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களில் நிதி திரட்டும் பணி கள் நிறைவு அடையும் நிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தை விரைவில் சந்திக்க இருக்கிறோம்.

“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்ற வள்ளுவப் பேரா சான் கூற்றுக்கு ஏற்ப, பொருட்செல்வம் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்வு இன்பமாக அமையாது.

தனிப்பட்டவர்கள் வாழ்விற்கே இப்படியென்றால்,தமிழகம் மறுமலர்ச்சி பெற்றி டவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்கவும் அனுதினமும் அயராது பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற
மறுமலர்ச்சி தி.மு.கழகம், மாற்றாரை, எதிரிகளை களத்திலே சந்திக்க, தற்கால அரசியலில் பணம்-நிதி பிரதானமான ஒன்றாகவே இருந்து வருகிறது. எனவே தான் ‘விரைந்து நிதி திரட்டுவீர்’ என்று அடுத்த கடிதமும், அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக ‘தேர்தல் நிதியினை அனுப்பித் தருவீர்’ என்று ஏடுகளுக்கு அறிக்கை ஒன்றினையும் தந்தேன்.

கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதியினை தாயகத்தில்தருவோர்க்கு, தாயகத்திற்கு அனுப்பி வைப்போருக்கு, பொதுச்செயலாளர் என்ற நிலைக்கு உங்களது அன் பால் உயர்த்தப்பட்டுள்ள அடியேன் கையொப்பம் இட்ட ரசீதுகளையும் அனுப்பி வைத்திடுவேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

நாட்டோரே நல்லோரே, தாயகத்திற்கு நிதியினை அனுப்பித் தாரீர்!

கடந்துபோன வரலாற்றில் காந்தியாரும்,நேதாஜியும் நிதி திரட்டியதும், தமிழர் களின் சகாப்த நாயகன் அறிஞர் அண்ணா நிதி திரட்டியதும் எவ்வளவு மேன் மை னது.

இதோ, அண்ணல் காந்தியார் எழுதியது:

“படகரா”வில் அப்போதுதான் என் சொற்பொழிவை முடித்தேன். பிரசங்கத்தின் போது அங்கிருந்த பெண்கள் தங்கள் நகைகளைத் தரவேண்டும் என்று தார்மீக தர்க்கவாதத்துடன் கேட்டுக்கொண்டேன். பேசி முடித்தபின், கிடைத்த நன் கொடைகளை நான் ஏலத்தில் விட்டு நிதியினைத் திரட்டிக் கொண்டு இருந்த போது, ‘கெளமுதி’ என்ற பதினாறு வயதுப் பெண் ஒருத்தி மெதுவாக வந்து மேடையில் ஏறினார்.

அவள் ஒரு வளையலைக் கழற்றிக் காட்டி, என்னுடைய கையெழுத்துக் கிடைக்குமா? என்று கேட்டாள். நான் கையெழுத்திட முன்வந்தபோது, இன் னொரு வளையலையும் கழற்றி விட்டாள். அவள் கைகளுக்கு ஒவ்வொரு வளையல்தான் அணிந்து இருந்தாள். “ நீ இரண்டையும் எனக்குத் தர வேண் டாம்; ஒரு வளையலுக்கே நான் கையெழுத்துப் போட்டு விடுகிறேன்” என்று நான் சொன்னேன். (காந்தி)

இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் கெளமுதி தன்னுடைய தங்கச் சங்கிலி யைக் கழற்றத் தொடங்கினாள். அதை இலேசில் கழற்ற முடியவில்லை. அவ ளுடைய நீண்ட கூந்தலில் மாட்டிக்கொண்ட அதைப் பறித்து எடுக்க வேண்டி யிருந்தது. வியப்பில் ஆழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களின் பெண் களின் மத்தியில் பகிரங்கமாக இந்தக் காரியத்தை நடத்துவது சம்பந்தமாக கெளமுதிக்கு போலி நாணம் எதுவும் ஏற்படவில்லை.

‘ஆனால், உன்னுடைய பெற்றோர்களின் அனுமதியைப் பெற்றிருக்கிறாயா? என்று நான் (காந்தி) கேட்டேன். பதிலே இல்லை. அவள் தன்னுடைய பரித்தியா கத்தை இன்னும் முடிக்க வில்லை.

அவளுடைய கைகள் தாமாகவே காதுகளை எட்டின; கல் பதித்த தோடுகள் வெளியே வந்தன.பொதுமக்கள் வான் அதிர முழக்க மிட்டனர்.அங்கிருந்த மக் களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை அடக்கிக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு தியாகம் செய்வதற்கும் பெற்றோர்களின் அனுமதியைப் பெற்றிருக் கிறாளா? என்று மறுபடியும் நான் கேட்டேன். கூச்சம் மிகுந்த சிறுமி கெளமுதி யிடமிருந்து நான் பதிலைப் பெறுவதற்குள், கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு வர் ‘இந்தக் கூட்டத்தில் கெளமுதியின் தந்தை இருப்பதாகவும், அவரே நான் போட்ட ஏலங்களில் கலந்துகொண்டு எனக்கு உதவி செய்து வருவதாகவும் (நிதியினைத் தருவதாகவும்) நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுப்பதில் தம் மகள் கெளமுதியைப் போலவே அவரது தந்தையாரும் தாராளக்காரர்’ என்றும் சொன்னார்.

அவருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பொழுது, ‘நீ களைந்துள்ள நகை களைவிட உண்மையான ஆபரணமாகும் உன்னுடைய பரித்தியாகம் ’ என்று என்னை அறியாமல் குறிப்பிட்டேன்”

என்று இந்தச் சம்பவத்தை காந்தியார் விவரித்து இருப்பதை வாசிக்கும்போதே நெஞ்சை உருக்கிற்று.

தனக்குள்ள தங்க ஆபரணங்கள் அனைத்தையும் அள்ளித்தர முனைவது தியா க உணர்வின் உச்சகட்டம் ஆகும். இப்படி நாட்டுக்காகத் தங்கள் உடல், பொருள், ஆவியையும் தாரை வார்த்துக் கொடுக்க முனையும் தியாகமே, சர்வ பரித் தியாகம் ஆகும்.

கடந்த 19 ஆண்டுகளாக, கழகத் தோழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் புத்தாடை வாங்குவதற்குச் செலவிட வேண்டிய பணத்தை, மகளுக்கு ஏதாவது தங்கநகை செய்யலாம் என்று எப்போதோ திட்டமிட்டு இருந்த பணத்தை கட்சிக்காகச் செலவிட்டார்கள். அதனை பேரணிகளில்-மாநாடுகளில் கலந்து கொள்ள ஆகும் செலவிற்குப் பயன்படுத்தியதையும் நினைக்கும்போதே, நமது இயக்கம் தொண்டர்களின் உன்னதமான தியாகத்தால் கட்டிக் காக்கப்படும் கொள்கை மணி மாளிகை என்ற பெருமிதமே எழுகிறது.

‘நெஞ்சில் நிறைந்த நேதாஜி’ என்ற கடிதத்தை வேலூர் சிறையில் இருந்த போது உங்களுக்கு எழுதியது நினைவு இருக்கும். தென்கிழக்கு ஆசியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின்
வீரஞ்செறிந்த யுத்தத்தை நடத்தவும், இந்தியாவின் விடுதலை வெற்றிக்கொடி யை உயர்த்தவும், நேதாஜி பர்மாவிலும், (மியன்மரிலும்) சிங்கப்பூரிலும் இலட் சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் சங்கநாதம் செய்தபோது, மக்கள் நிதியை அள்ளித் தந்தார்கள். தமிழ்ப் பெண்கள் தங்கள் கைகளில் அணிந்து இருந்த தங்க வளையல்களை, கழுத்தை அலங்கரித்த பொன் ஆபரணங்களை நேதாஜியிடம் தந்தார்கள்.

இரங்கூனில் இந்திய தேசிய இராணுவம் சுதந்திர லீக் சங்கம் சார்பில், 60,000 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒரு பூமாலையை நேதாஜி ஏலம் விட்டார்; அது ஏழு இலட்சம் ரூபாய்க்குப் போனது.

முதலில் ஒரு இலட்சத்திற்கு ஏலம் கேட்டு கடைசியில் ஏழு இலட்சமாகக் கேட்ட பஞ்சாப் இளைஞர், “இந்த மாலைக்காக என் சொத்து முழுவதையும் தருகிறேன்; அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன்; எனக்குச் சொந்தமான ஒவ் வொரு காசையும் தருகிறேன், எனக்கே இந்த மாலை வேண்டும்” என்றார்.

உணர்ச்சிவசப்பட்ட இளைஞரை நேதாஜி சமாதானப்படுத்தினார். “மாலை உம் முடையதே! அது உமக்கே உரியது. நம் சேனை பெறும் பெருமை அனைத்தும் உம்மைப் போன்ற தேசபக்தர்களுக்கே உரித்தானது” என்றார்.

“இப்பொழுது என் எல்லாச் சொத்துகளையும் தேசிய சேனைக்குக் கொடுத்து விட்டேன். தாய் நாட்டின் விடுதலைக்காக உயிரையும் அர்ப்பணம் செய்ய இந்தச் சேனையில் சேர விரும்புகிறேன்” என்றார் பஞ்சாபி இளைஞர்.

அதைப் போலவே, இஸ்லாமியச் செல்வந்தர் அன்வர் ஹபீப், “ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியதோடு, தன் சொத்து முழுவதையும் நேதாஜியின் இயக் கத்திற்குத் தருகிறேன்” என்று அறிவித்தார்.

எந்த ஒரு இயக்கத்திற்கும் இலட்சியங்களுக்காகப் போராடும் அமைப்புகளுக் கும் நிதி இன்றியமை யாத தேவையாகும். அதனை உலகம் முழுவதிலும்
காணலாம்.

நம் உயிரோடு கலந்து இருக்கின்ற திராவிட இயக்கத்தின் சரிதத்தில்,பேரறிஞர் அண்ணா நிதி திரட்டிய பாங்கினையும் இங்கே சொல்வது பொருத்தமாக இருக் கும்.

1948 ஏப்ரல் 04 இல் திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் தீட்டிய ‘காந்தி இராமசாமியும், பெரியார் இராமசாமியும்’ என்ற தலையங்கத்துக் காகவும். அதே திங்களில் 18 ஆம் தேதி ‘திராவிட நாடு’ இதழில், ‘வெள்ளி முளைக்க எட்டு ஆண்டுகள், வகுப்பு வாதம் சோகத் தொடர் கதை’ என்ற தலையங்கத் துக்காகவும், அன்றைய அரசாங்கம் பதினைந்து மாதங்கள் கழித்து 1949 சூன் 25 ஆம் தேதி, அறிஞர் அண்ணா அவர்கள் மீது குற்றச் சாட்டைத் தொடுத்து, திரா விட நாடு இதழுக்காக 3000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்தது.

1949 சூன் 12 ஆம் தேதி திராவிட நாடு இதழில், அறிஞர் அண்ணா ‘நெருக்கடி தீரும்வரை நன்கொடை’ என்று தலைப்பு இட்டுக் கடிதம் எழுதினார்.

“திராவிடப் பெருங்குடி மக்கள் தங்களின் ஆதரவு ‘திராவிட நாடு’க்கு என்றும் உண்டு என்பதை அரசியலார்க்கு எடுத்துக்காட்ட இந் நெருக்கடியைத் தீர்த்து, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளித்து, எதை யும் தாங்க இந்த இதயம் உண்டு” என்று வெற்றி முழக்கமிட்டு வீறிட்டுக் கிளம் ப வேண்டுகிறோம். ‘திராவிட நாடு’ திராவிட மக்களின் நலனுக்காகப் பாடுபடு கிறது என்பதை அறிவிக்கவும், திராவிட மக்களின் ஆதரவு அதற்கு உண்டு என்பதைக் காட்டவும் இவ்வாய்ப்பை ஏற்றுத் தங்களாலான நன்கொடையை இந் நெருக்கடி தீரும் வகையில் அளித்தருளக் கோருகிறேன்”

என்று எழுதினார்.

அப்போது அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் தங்கி இருந்ததால்,இந்த அறிக்கை பத்திரிகையில் பிரசுரமாவதற்கு முன்பே இதனைக் கேள்விப்பட்ட வாலாஜா பாத், காஞ்சிபுரம் தோழர்கள், அறிஞர் அண்ணாவைச் சந்தித்து ரூபாய் 650 வழங் கினார்கள்.

அறிஞர் அண்ணாவின் “நெருக்கடி தீரும்வரை நன்கொடை” என்ற வேண்டு கோள் வந்த 12.6.1949 திராவிட நாடு இதழிலேயே,

வாலாஜபாத் டபுள்யு.கே.தேவராசன் ரூபாய் 100
காஞ்சிபுரம் வி.புட்டாசாமி ரூபாய் 100
காஞ்சிபுரம் அ.க.தங்கவேல் ரூபாய் 100
காஞ்சிபுரம் என்.கே. கணபதி ரூபாய் 100
காஞ்சிபுரம் என்.கே.அரங்கநாதன் ரூபாய் 100
காஞ்சிபுரம் ஏ.பாலகிருஷ்ணன் ரூபாய் 100
காஞ்சிபுரம் கே.எஸ். முனுசாமி ரூபாய் 50

மொத்தம் ரூபாய் 650

நிதி வழங்கிய செய்தி வந்து உள்ளது.

19.6.1949 அடுத்த திராவிட நாடு இதழில் நிதி குவிந்தது. ‘திராவிட நாடு’ இதழுக்கு ஜாமீன் தொகை ரூ.3,000 கட்டியது போக, மீதி இருப்பாக ரூபாய் 1,046 அணா 3 பைசா 5 என்று வந்து உள்ளது.

18.07.1949 இல் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமியின், கிருஷ்ணன் நாடக சாலை சோலை எடிசன் தியேட்டரில் ‘ஓர் இரவு’ நாடகம் நடத்தியது. கே.ஆர். இராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, நடேசன், எம்.என்.
கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, மகாலிங்கம், மணி நடித்தனர். நாவலர் இரா.நெ டுஞ்செழியன் தலைமை தாங்கினார். ரூபாய் 1,150 வசூலானது.

14.08.1949 திராவிட நாடு இதழில், திராவிட நாடு இதழுக்கு ஜாமீன் பணம் 3,000 கட்டியது போக, எஞ்சி மீதம் இருப்பு 2,673 ரூபாய் 8 அணா 8 பைசா என்று கணக்கு விவரம் வந்துள்ளது.

பொதுப்பணத்தைக் கையாள்வதிலும், அதற்குக்கணக்கு வைப்பதிலும் அறிஞர் அண்ணா அவர்கள் கடைப்பிடித்த நேர்மை ஈடு இணையற்றது.

நமது இலட்சியப் பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தை நாம் கடந்து கொண்டு இருக்கிறோம்.நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச அடிப்ப டைச் செலவிற்கே பெருநிதி தேவைப் படுகிறது என்பதனை நீங்கள் நன்கு அறி வீர்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர் களும், காஞ்சி மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு அவர்களும், கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது தெரிவிக்கின்ற செய்திகள் மகிழ்ச்சி வெள்ள மாக உள்ளத்தில் பாய்கிறது. “எவரும் மறுக்கவில்லை,நாங்கள் எதிர்பார்த்த தைவிட அன்பு மொழி சொல்லி அதிகமாகவே நிதி தந்தனர். நமது நிர்வாகிகள் தயக்கமும், கூச்சமுமின்றி அணுகினால் நிதி தருவதற்கு மக்கள் சித்தமாகவே உள்ளனர்” என்றே கூறினார்கள்.

நமது இயக்கம் நாட்டு மக்கள் மத்தியில் பிரமிக்கத்தக்க மதிப்பைப் பெற்று இருக்கின்றது என்பதுதான் இன்றைய உண்மை நிலை ஆகும். நம் மீது எவரும்
விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாது. தேர்தலில் தோற்றார்கள், போட்டியி டாமல் விலகிக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் பரிகசிக்கலாம். இலட் சியங்களில் நாம் தோற்கவில்லை; உரிமைப் போர்க்களங்களில் ஒதுங்க வில்லை; இடையறாது இயங்கிக் கொண்டு இருக்கின்றோம்.‘சோர்வு’ என்ற சொல்லுக்கு, நம் நிழலில்கூட இடம் கிடையாது.

1993 அக்டோபர் 3 ஆம் நாள் முதல் ‘நாம் பிறவிப் போராளிகள்’ மற்றவர்கள் சாத்தியமற்றது என்று கருதியவற்றை, துணிச்சலோடு மேற்கொண்டு சரித் திரம் படைத்தோம்.

எனவே, தோழர்களே, உதவாது இனி ஒரு தாமதம்; நிதி திரட்டுகின்ற வேலை யை முழு முதல் கடமையாகச் செய்யுங்கள். காலம் விரைகிறது. சோம்பிக் கிடப்போருக்கு அது மந்தமாகச் செல்லும்;  உழைப்போர்க்கு வேகங்காட்டி விரையும். காலம் பறக்கின்றது; நம்மையும் தன்னுடன் ஈர்த்துச் செல்கிறது.

நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும் நொடிப் பொழுது, ஏற்கனவே என்னை விட்டுத் தொலைவில் சென்றுவிட்டது “கூழாங்கற்கள் பரவிய கரையை நோக் கி கடல் அலைகள் கடுகிச் செல்வதுபோல், நல் வாழ்வின் நிமிடங்கள் தங்கள்
முடிவு நோக்கி விரைந்து செல்கின்றன” என்பான் ஆங்கில நாடக ஆசிரியன் ஷேக்ஸ்பியர்.

நல்வாழ்வின் நிமிடங்கள் நம் இயக்கத்தை நோக்கிநகர ஆரம்பித்திடும் வேளை இது. கட்டுக்கடங்கா நோக்கம் கொண்ட நீரோடையைப் போலக் காலம் கடக் கின்றது. நேரத்தை நாம் சரியாகப் பயன் படுத்திக்கொண்டால், போதிய காலம் நமக்கு எப்பொழுதுமே இருக்கும்.

அரைமணி நேரத்தைக்கூட அற்பமாகக் கருதுவதைக் காட்டிலும், அந்த அரை மணி நேரத்திலும் அற்புதமான காரியத்தைச் செய்துகொண்டு இருப்பதே மேல் என்பதை உணர்த்திட, எனது கண்ணின் மணிகளே, நீங்கள் திரட்டி வைத்து உள் ள நிதியினை, சிறுகச் சிறுக சிற்றெறும்பென,தேனீக்கள் எனச் சேர்த்து வைத்து உள்ள நிதியினைப் பெற்றிட நானே நேரில் வருகிறேன்.

நிதியினை, நன்கொடைச் சீட்டுகளைப் பெற்றவர்கள் வழங்கிடவும், அதனை நான் பெற்றுக் கொள்வதுமான ஏற்பாடுகளை, நமது மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள்.

சூன் 27 ஆம் தேதி காலையில் சிவகங்கை மாவட்டம் நிதி வழங்கும் நிகழ்ச்சி; அன்று மாலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

29 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட நிதி அளிப்புக்கூட்டம்;

சூலைத் திங்கள் 5 ஆம் நாள் தஞ்சை, நாகை,திருவாரூர் மாவட்டங்கள் சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி;

சூலை 6 ஆம் நாள் விருதுநகர் மாவட்டம்; சூலை 7 ஆம் நாள் காலையில் மதுரை மாநகர் மாவட்டம்;சூலை 8 ஆம் நாள் திருவள்ளூர் மாவட்டத்தில்
நிதியினை வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

மே திங்களின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டபடி,நன்கொடைச் சீட்டுகளை பெற்றுச் சென்ற நிர்வாகிகள், வசூலித்த நிதியினையும், எஞ்சிய ரசீதுகளையும் அப்போது நேரில் ஒப்படைத்து விட வேண்டுகிறேன்.

கடமையில் பிழை நேர்ந்திடாமல், சேகரித்துள்ள நிதியினையும், எஞ்சிய நன் கொடைச் சீட்டுகளையும் கவனத்துடன் ஒப்படைத்திடுவீர் என்று உறுதியோடு இருக்கிறேன்.

உள்ளம் மகிழ, உங்களைக் காண நேரில் வருகிறேன், நிதியினைப் பெற்றிட...

“முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று!” என்ற இலக்கை வெல்வோம்!

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்

வைகோ

No comments:

Post a Comment