Saturday, June 1, 2013

வைகோவின் "குற்றம் சாட்டுகிறேன் " -பகுதி 1

தமிழக மீனவர்களைக் கொன்றது சிங்களக் கடற்படைதான்!
நாள் :- 18.09.2004

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

ஐக்கிய நாடுகள் சபை,அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தாங்கள் மேற்கொள்கின்ற சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்திட, என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவலை அளிக்கக்கூடிய கீழ்க்கண்ட முக்கியமான செய்தியை, தங்களின்
மேலான கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.
17.9.2004-ஆம் நாளிட்ட, ‘இந்து’ இதழின் அறிக்கை ஒன்றில், நமது கடற்படைத் தலைமை தளபதி அருண் பிரகாஷ் அவர்கள், ஐந்து நாள் பயணமாக இலங்கை சென்று, அந்நாட்டு அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களையும், பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களையும் சந்தித்துப் பேசிய செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியச் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, கேடுகளை விளை விக்கக்கூடிய பேச்சாக அமைந்து இருந்தது.

இலங்கையில் வாழும் தமிழர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக பயங்கரமான
துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் விடுதலைப்
புலிகள் ஆயுதம் ஏந்திப் போரிட நேர்ந்ததையும், அதன்பின்னர் நார்வே நாடு மேற் கொண்ட முயற்சிகளின் விளைவாக அமைதிப் பேச்சுகள் நடத்தப்பட்ட
தையும், உலக நாடுகள் அறிந்து உள்ளன. இந்திய அரசு, நடைமுறை சாத்தியங் களைக் கருத்தில் கொண்டு அமைதிப் பேச்சுகளுக்குச் சாதகமான முடிவு எடுத் து, அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத் தில் சேர்த்து உள்ளது. இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை தடைபட்டது கவலை அளிக்கக் கூடியது ஆகும்.

இந்தியக் கடற்படை யின் தலைமைத் தளபதி,விடுதலைப்புலிகளை மோசமா ன வார்த்தைகளில் மறைமுகமாகத் தாக்கிப் பேசி உள்ளார்.இவருடைய அறிக் கையில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய பகுதி, ‘இந்திய மீனவர்களை இலங் கைக் கடற்படை தாக்கவில்லை’ என்றும், இலங்கைக் கடற்படையினர் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், அதற்கு முழு முதற் காரணம் விடுதலைப்புலிகள்தான் என்று பிரச்சனையைத் திசைதிருப்புகின்ற முயற்சியிலே ஈடுபட்டு உள்ளார்.

இலங்கைக் கடற்படைதான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது என் பதற்கு உறுதியான சான்றுகள் இருக்கின்றன. தமிழக மீனவர்களைக் கொன்று குவித்ததோடு, அவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் சேதப்ப டுத்தி உள்ளார்கள். கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக இலங்கை இராணு வம் நமது மீனவர்களைக் கடத்துகின்ற நடவடிக்கையிலே ஈடுபட்டு உள்ளது. அண்மைக்காலமாக இந்தத் தாக்குதல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.

இதுவரை 900 முறை இலங்கைக் கடற்படை நமது மீனவர்களைத் தாக்கி உள் ளது. 500க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று உள்ளது.நாடாளுமன்ற உறுப் பினராகக் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகள் இருந்த காலங்களில், இது குறித்து பலமுறை நாடாளுமன்றத்தில பேசி உள்ளேன்.

இந்திய அரசு, இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண் டு சென்று உள்ளது. நமது மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் பல முறை தாக்குதலுக்கு உள்ளானபோது இந்தியக் கடற்படை, வாய்மூடி மெளன மாக வேடிக்கை பார்த்ததைக் கடுமையாக நான் விமர்சனம் செய்து இருக்கின் றேன்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் உச்சமாக, கடற்படைத் தளபதியின் பொறுப்பு
அற்ற பேச்சு, தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற இலங்கை
அரசாங்கத்தின் தாக்குதல்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலும், அங்கு
வாழுகின்ற தமிழர்களின் உணர்வுகளைப் பெருமளவிலே பாதிக்கின்ற வகை யிலும் உள்ளது.

கடற்படைத் தளபதியின் பொறுப்பு அற்ற பேச்சு எனக்கு மன உளைச்சலை ஏற் படுத்தியது மட்டும் அல்லாமல், எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலையும் ஏற்பட்டு உள்ளது.

எனவே, இந்த முக்கியமான பிரச்சனையில் தாங்கள் உடனடியாகத் தலை யிட்டு, இந்திய அரசின் கருத்தையும், அணுகுமுறையையும் தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்தியக் கடற்படைத் தளபதியின் கருத்து, இந்திய அரசின் கருத்து அல்ல என்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கும், இரு நாடுகளிலும் வாழுகின்ற மக்களுக்கும் தெளிவாகின்ற நிலை ஏற்படும்.

மிகுந்த மரியாதையுடன்,
தங்கள் அன்புள்ள,

வைகோ

18.09.2004

பெறுநர்
மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர்,
புது டெல்லி

No comments:

Post a Comment