Monday, June 10, 2013

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி-மதிமுகவினர் எதிர்ப்பு

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி, நேற்று (09.06.2013 ) போராட்டம் நடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற் றுவரும் பல்வேறு வெளிநாட்டினரோடு,கடந்த 27-ஆம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் பண்டார தசநாயக, ஹரிஷ்சந்திர ஹெட்டியாரச்சிக ஆகிய இருவரும் பயிற்சி பெறுகின்றனர்.
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் மாதத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 27-ஆம் தேதி தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப் பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவர் பயிற்சிக்காக வெலிங்டனுக்கு வந்துள்ள தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

இத்தகவல் கிடைத்ததும் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக் கு செல்லும் பாதையான பிளாக்பிரிட்ஜ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக நீலகிரி மாவட்டச் செயலர் அட்டாரி நஞ்சன், கோவை மாநகர் மாவட்ட செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்டச் செயலர் குகன் மில் செந்தில் உள்ளிட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, திராவிடர் விடுதலை  கழகம் யின் சார்பில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல விடுதலை சிறுத்தை கள் கட்சி , நாம் தமிழர் கட்சி சார்பில்  போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 136 பேர் கைதாகினர்.



படங்கள் & செய்தி உதவி :- மின்னல் முகமது அலி 

No comments:

Post a Comment