Saturday, June 29, 2013

உத்தரகண்ட் உணர்த்தும் எச்சரிக்கை

சங்கொலி தலையங்கம்

‘கடவுள்களின் பூமி’ என்று பக்தர்களால் அழைக்கப்படும்உத்தரகண்ட் மாநிலம்
உருக்குலைந்து போய்விட்டது. ஜூன் 17 ஆம் தேதி, தொடங்கிய பருவமழை மூன்றே நாட்களில் உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள காட் டாறுகளில் பெருவெள்ளம் கரைபுரண்டோடக்கூடிய நிலையை உருவாக்கிற் று. பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை மாநில நிர்வாகம் கணிக்கத் தவறியதால், உத்தரகண்ட் மலைப்பகுதிகளில் வெள்ளச் சேதம் வரலாறு காணாத வகையில் சீரழித்துவிட்டது.

இந்துகளின் புனிதத் தலங்கள் நிறைந்த இமாலயப் பகுதிகளில் வழிபாடு நடத் தச் சென்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். கேதார்நாத், பத்ரிநாத், கங் கோத்ரி,யமுனோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கினர். மலைப்பகுதி களில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உணவு இன்றி யும், போதிய மருத்துவ உதவி இன்றியும் மரணத்தைத் தழுவுகின்ற பரிதாபம் நிகழ்ந்து இருக்கின்றது.


உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா, இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரம் பேர் என்று கூறினார். ஆனால், நிவாரணப் பணிகளுக்காக அங்கே முகாமிட்டிருக்கும் மாநில அமைச்சர் யஷ்பால் ஆர்யா, உண்மை நிலவரத் தைக் கூறியிருக்கிறார். “பேய் மழையாலும் நிலச்சரிவாலும் இறந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டி இருக்கும் எனக் கருதுகிறோம். ஏனெ னில் ஏராளமானோரைக் காணவில்லை. மீட்புப் பணிகளில் ஏராளமான உடல் கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சுகிறேன்” என்றார்.

இதனால் ‘இமயமலையின் சுனாமி’ என்று வர்ணிக்கப்படும் இந்த இயற்கைப் பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை குறித்து குழப்பமான நிலை நிலவுகிறது. ஜூன் 17 ஆம் தேதி, இமயமலை சிவாலயங்களுக்கு புனித யாத்திரை மேற் கொண்ட பக்தர்கள் எண்ணிக்கை 75 ஆயிரம் பேர் என்று கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, பலியானோர் எண்ணிக்கை மாநில அரசு கணித்துள் ளதைக் காட்டிலும் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. பக்தர்கள் மட்டுமின்றி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனிதத் தலங்களைச் சுற்றி இருந்த 60 கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியாதவாறு சரமாரியாக நிலச்சரிவுகள் ஏற்பட் டதாலும், தங்கியிருந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும் ஒரு இலட்சம் பேர் சிக்கித் தவித்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்தப் பகுதி யை யாருமே அணுகமுடியாத நிலை ஏற்பட்டதால், உயிரிழப்பு அதிகரித்தது.

கங்கை ஆற்றங்கரையில் உள்ள ரிஷிகேசத்தில் பர்மார்த் நிகேதன் ஆசிரமம் சார்பில், 30 அடி உயரத்தில் சிவன் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இங்கும் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தபோது, வெள்ளம் கரைபுரண்டு வந்ததால்,சிவன் சிலையும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய மக்களும் உயிரிழந்தனர். பலத்த மழை தொடர்ந்ததால், மூன்று நாட்கள் கழிந்த பிறகே, மீட்புப் பணிகளைத் தொடங்க முடிந்தது. இந்தோ-திபெத் எல்லை காவல்படை, இராணுவம், விமானப்படை, பேரிடர் மேலாண்மைக்குழு, எல்லை சாலை பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் உதவி யுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஜூன் 23 ஆம் தேதி 80 ஆயிரம் பேர் மீட்கப் பட்டனர். மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், இராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட் டதால், இன்னும் சேதம் அதிகரித்து வருகின்றது. கொட்டிக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான மழையின் காரணமாக கங்கையின் துணை நதிகளிலும், காட் டாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை வழியே எவ்வித நிவாரணப் பணிகளும் மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், காடுகளிலும், சமவெளி களிலும், நடுங்கும் குளிரிலும் வெட்ட வெளியிலும் ஆங்காங்கே சிதறிப் போய் தங்கியிருக்கும் 20 ஆயிரம்பேரின் கதி என்னவாகும் என்ற கவலை ஏற்பட் டுள்ளது. ஏனெனில் கடந்த 9 நாட்களாக அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து கிடைக்கவில்லை.

‘சகஸ்ரதாரா’ என்ற இடத்திலிருந்துதான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன.
கேதார்நாத், பத்ரிநாத் பகுதியில் மழை பெய்து வருவதால், ஹெலிகாப்டர்கள்
இயங்குவது தடைபட்டுள்ளது. அதுபோல சமோலி மற்றும் பாவ்ரி மாவட்டங் களில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கிருந்தும் ஹெலிகாப்டர்கள் இயக்க முடியவில்லை. பத்ரிநாத், தேசிய நெடுஞ்சாலையில் புதிது புதிதாக ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளால் நிலைமை மேலும் மோசமடைந்து வரு கிறது. கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் மட்டும் இன்னும் 10 ஆயிரம் பேரை மீட்க வேண்டியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் அதிர்ச்சி தரும் துன்பச் செய்தி என்னவென்றால், மீட்புப் பணியில் ஈடு பட்ட ஹெலிகாப்டர் நொறுங்கி, பணியில் ஈடுபட்டவர்களும், மீட்கப்பட்டவர் களுமாக 19 பேர் பலியானதுதான்.

உத்ரகண்ட் இமாலய மலைப் பகுதிகளில் பொதுமக்கள் பயணம் செய்யப் பயன் படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குதிரைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. எஞ்சிய குதிரைகள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கின் றன. புனிதத் தலங்களை நம்பி வாழ்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்களின்
வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

தமிழ்நாட்டிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர்களில் இதுவரை 381 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உயர் அதிகாரி ஒரு வர் தெரிவித்து இருக்கின்றார். வெள்ள இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட தமி ழர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் டேராடூன் அழைத்துவரப்பட்ட னர்.அங்கிருந்து டெல்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, விமானம் மூலம் சென்னை திரும்புவதற்கு தமிழக அரசின் சார்பில் முறை யான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஜக்கையனுக்கு முதல்வர் ஜெயலலிதா மீட்புப் பணிகள் ஒருங்கிணைத்து தீவிரப்படுத்திட பணித்திருந்தார்.இருப்பினும் கேதார்நாத், பத்ரிநாத் சிவால யங்களில் வழிபாடு நடத்தச் சென்ற தமிழர்கள் பலர் பலியாகி விட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மக்களை மீட்பதற்காக, முதல் வர் நரேந்திரமோடி மீட்புக் குழுவினருடனும், அதிகாரிகளுடனும் நேரிடை யாக உத்தரகண்ட சென்று, முகாமிட்டார். 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டு
விமானங்கள் மூலம் அவர்கள் குஜராத் மாநிலம் திரும்ப உரிய ஏற்பாடுகளைச் செய்தார்.அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் மீட்க தமது குழுவினரை ஈடுபடுத்தினார்.

எல்லாவற்றிலும் அரசியல் பார்வையுடன் செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கு,
நரேந்திரமோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்பதால்,கண்களை உறுத்தி யது. உத்தரகண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், முதல்வர் பதவி வகிக்கும் விஜய் பகுகுணாவை காங்கிரஸ் கட்சி தலைமை கண்டித்துள்ளது. உடனே முதல்வர் விஜய் பகுகுணா “தங்கள் மாநில மக்களை மீட்கும் முயற்சியில் எந்த மாநில அரசுகளும் தனிப்பட்ட முறையில் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளக் கூடாது.உத்தரகண்ட் மாநில அரசின் அனுமதி மற்றும் ஒருங்கி ணைப்புக் குழுவின் மூலமே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும” என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “உத் தரகண்ட் மாநிலத்திற்கு வி.ஐ.பி.கள் யாரும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. அதனால் நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்படும்” என்று அறிக்கை வெளியிட் டுள்ளார். இழவு வீட்டிலும் அரசியல் செய்யும் இழிநிலைக்கு காங்கிரஸ் இறங் கிவிட்டது.

உத்தரகண்ட் உருக்குலைந்ததற்கு வழக்கத்திற்கு மாறாக, பெய்த பெருமழை யும் காட்டாற்று வெள்ளமும், நிலச்சரிவுகளும் தான் காரணம் என்று கூறப் படுவது உண்மைதான். ஆனால், அதைவிட முக்கியமானது இயற்கையின் சமன்பாடு மனிதர்களால் கொடூரமாக அழிக்கப்பட்டதால் தான் இந்நிலைமை உருவாகிவிட்டது.இமாலயப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் கட்டி வருகின்றனர். வளர்ச்சி யின் பெயரால் தனியார் நிறுவனங்கள் காட்டு வளங்களைச் சூறையாடவும், பெருமளவு மரங்களை வெட்டிச் சாய்க்கவும் அனுமதி பெற்றிருக்கின்றன.

இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று 130 கி.மீ. தொலைவுள்ள பகுதியை அறிவிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வகம் உள்ளிட்ட துறை களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் கோரியபோது, உத்தரகண்ட் மாநில அரசு, ‘சுற்றுலா வளர்ச்சி’ பாதிக்கப்படும் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசும் அதற்கு உடன்பட்டது.

காடுகளாம் இயற்கை வனங்கள் அழிக்கப்பட்டதால்தான் வெள்ளத்தின் வேகத் தைத் தடுத்து நிறுத்தக்கூடிய இயற்கை அரண்கள் தகர்க்கப்பட்டன. இதனால் வெள்ளச்சேதமும் நிலச் சரிவுகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன.

உத்தரகண்ட் மாநிலத்தில் அலக்நந்தா ஆறும், பாகீரதி  ஆறும்  இணைந்து கங்கை நதியாக மாறி ஓடுகிறது. இமாலயப்பகுதி முழுமையும் 14 ஆறுகள் ஓடுகின்றன.ஆறுகளின் கரைகளில் மின் திட்டங்களுக்காகவும், சுரங்கத் தொழிலுக்காகவும் ஆறுகளின் போக்கை செயற்கையாக திசை திருப்பி விடப் பட்டுள்ளது. ஏராளமான மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதனால்தான் இயற் கை சீற்றம் வரலாறு காணாத சேதத்தை உண்டாக்கியிருக்கிறது. இயற்கைக்கு விரோதமான போக்கு தொடர்ந்தால், இன்னும் விளைவுகள் மோசமாகவே இருக்கும்.

மேலும், காலநிலை மாற்றங்களால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கி உள்ளன. கங்கை, யமுனை நதிகளின் நீராதார மாக உள்ள பனி மலைகள், புவி வெப்பமயமாவதால், அதிவிரைவாக உருகி வருகின்றன. இதன் விளைவாக மழைப்பொழிவு குறைவது மட்டுமின்றி, நதி களும் வறண்டு போகும் நிலை ஏற்படும் என்று சுற்றுச் சூழல் பன்னாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

அளவுக்கு மீறி இயற்கை வளங்களை மனித சமூகம் உறிஞ்சுவதால், இயற்கை யின் சமநிலை பாதிக்கப்படுகிறது. கற்பனைக்கும் எட்டாத சேதங்களை சந்திக்க வேண்டிய நிலை தொடருகிறது.

மனிதன் இயற்கையை எவ்வாறு நுகர வேண்டும் என்பதை இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வழிகாட்டியிருக்கிறார். ஒரு மலரின் தேனை வண்டுகள் எவ்வாறு நுகருமோ, அதுபோன்றுதான் மனிதன் இயற்கையை நுகர வேண்டும்.

புத்தப் பெருமானின் வேதவாக்கை மனித இனம் கடைப்பிடிக்காமல் போனால்,
பேரழிவைத் தடுக்கவே முடியாது என்பதற்கு உத்தரகண்ட் ஒரு உதாரணம். நமது ஊட்டிக்கும் இது எச்சரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment