Tuesday, June 11, 2013

குவைத் வாழ் இந்தியர்கள் அல்லல் போக்க நடவடிக்கை எடுப்பீர்! பிரதமருக்கு வைகோ கடிதம்

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (11.06.2013) அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வரு மாறு குறிப்பிட்டு உள்ளார்:

“குவைத் நாட்டு அரசின் அண்மைக் கால நடவடிக்கையால், குறிப்பாக காவல் துறையின் கெடுபிடிக் கைதுகளால், சட்டப்படி அனுமதியோடும், முறையான விசா ஆவணங்களோடும் அங்கே வசித்து வருகின்ற இந்தியர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

குவைத் நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 38 இலட்சம் ஆகும்.இதில்,68 விழுக் காடான 26 இலட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் 6 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தபோதிலும், தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் குவைத் வாழ் இந்தியர்களுள் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் தங்கள் கடுமை யான உழைப்பைத் தந்து, குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பெரும் பங்கு அளித்து வந்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், குவைத் அரசாங்கம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, ஆண்டுக்கு இலட்சம் பேர் என, அடுத்த பத்து ஆண்டுகளில், பத்து இலட்சம் பேரை தங்கள் நாட்டை விட்டு வெளியே அனுப்பத் திட்டமிட்டு உள்ளது.

தகுந்த விசா இன்றி, சட்ட அனுமதி தரும் ஆவணங்கள் இன்றி அங்கே இருக் கின்ற வெளிநாட்டினரை, இந்தியர்களை, தங்கள் நாட்டைவிட்டு அனுப்ப குவைத் அரசுக்கு உரிமை உண்டு என்றபோதிலும், முறையான விசா பெற்று, தகுந்த சட்ட ஆவணங்களோடு இருக்கின்ற இந்தியர்களையும் காவல்துறை யினர் அதிரடியாகக் கைது செய்து, அவர்கள் விளக்கம் அளிப்பதற்குக்கூட வாய்ப்புத் தராமல், கொட்டடிகளில் அடைத்து வைத்து இந்தியாவுக்குத் திருப்பி வைப்பது மிகவும் அநீதியானது.

இவ்வாறு, கடந்த சில நாட்களில் ஏராளமான இந்தியர்களின் வேலை பறிக்கப் பட்டு உள்ளது.

திடீரென்று கைது செய்யப்படுகிறபோது,அதுகுறித்து எவருக்கும் ஒரு தொலை பேசி தகவல்கூடத் தர இயலாமல், தங்கள் உடமைகளைக்கூட எடுப்பதற்கு அனுமதிக்காமல், சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குக் குடிதண் ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் நிர்வாகத்திடம் இருந்து அவர்கள் சட்டப்படிப் பெறவேண்டிய ஊதியம், அங்கு ஒப்படைத்து இருக்கின்ற ஆவணங்கள் எவற்றையும் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவே இல்லை.

இப்படிக் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றவர்கள், எதிர்காலத்தில் முறை யான விசா அனுமதியுடன்கூடக் குவைத்துக்குத் திரும்ப முடியாது என்ற தடையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற கலக்கத்தில் உள்ளனர். இந்தியா வில் உள்ள குவைத் நாட்டின் தூதர், அப்படி ஒரு அச்சத்திற்கு இடம் இல்லை என்றும், அத்தகைய தடை ஏற்படாது என்றும் விளக்கம் தந்து உள்ள போதிலும், குவைத் அரசு இதுகுறித்து திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து, இந்திய அரசு, குவைத் அரசிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தி, முறையான விசா ஆவணங்களுடன் இந்தியர்கள் குவைத்துக் குச் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

குவைத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, இந்தியாவுக்கு வந்த வர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்ணீரோடு தெரிவித் து உள்ளனர். 

எனவே, குவைத்தில் வாழும் இந்தியர்களின் நலனை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுடன் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் நலனைப் பாதுகாக் கத் தேவையான, தகுந்த நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டுகிறேன்.”

இவ்வாறு, வைகோ அவர்கள் பிரதமருக்கு எழுதிய தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

No comments:

Post a Comment