Wednesday, June 26, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 3

கூட்டுக் குற்றவாளி இந்தியா

அவனை இங்கே அழைத்து வருவதற்கு என்ன காரணம்? அந்தப் படுகொலை களுக்கு இந்திய அரசும் உடந்தையான கூட்டுக் குற்றவாளி. அதுதான் காரணம். இவர்கள்தாம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; ஆயிரம் கோடிப் பணம் கொடுத்தார்கள்; கொத்துக்குண்டுகளை வீசுவதற்கு உடந்தையாக இருந்தார் கள்; உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி போரை இயக்கினார்கள்.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை, காமன்வெல்த் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்த நேரத்தில் நீ அவனை இங்கே அழைத்து வந்து பரிவட்டம் கட்டினாய்.அவனை இங்கே அழைத்து வராதே என்றோம். அதையும் மீறி அழைத்து வந்தாய். 1200 தோழர் களோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய சாத்புரா மலைச் சரிவுகளிலே வந்து போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தாய். திருப்பதி எங்கள் தமிழகத்தின் பூர் வீக மண். இந்தியாவுக்கு உள்ளே அவன் எங்கே வந்தாலும், தில்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து முற்றுகை இட்டோம். தில்லிக்கு வராமல் கட்டாக் வழியாக பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு போனாய்.


மன்னிக்க மாட்டோம்

இந்த ஊரின் பெயராக உள்ளதே வெலிங்டன், அவன் ஒரு பெரிய தளபதி. அயர் லாந்திலே பிறந்தவன். 1787 இல் இங்கி 1796 இல் இந்தியாவுக்கு வந்தான். 1803 ஆம் ஆண்டு மராத்தியர்களுக்கு எதிரான போரில் இங்கிலாந்துக்கு வெற்றி தேடிக் கொடுத்ததால், ஃபீல்டு மார்ஷல் ஆக்கப்பட்டவன். 1815 இல், வாட்டர்லூ போரில், உலகம் போற்றும் ஐந்து மாவீரர்களுள் ஒருவனாகிய நெப்போலிய னின் படைகளைத் தோற்கடித்தவன். படைக்கலப் பிரிவுக்குத் தலைவன்
ஆனான். 1828 இல், இங்கிலாந்தின் பிரதமராகவே ஆக்கப்பட்டான். அவனது சீர் திருத்தச் சட்டங்களை மக்கள் ஏற்காததால், அவன் பதவியில் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. அவன் பெயரால் அமைக்கப்பட்டதுதான், இந்த வெலிங்டன் கல்லூரி. இங்கே கொண்டு வந்து பயிற்சி கொடுக்கின்றாயே, உனக்கு மன்னிப் பே கிடையாது.

இங்கே மட்டும் அல்ல, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் சிங்கள வனுக் குப் பயிற்சி கொடுக்காதே. அப்படி நீ கொடுத்தால், இந்தியா எங்களுக்கு அந்நிய நாடு என்று நாங்கள் கருத வேண்டிய நிலை ஏற்படும். (பலத்த கைதட்டல்). இந் தக் கொடுமை தொடரும் என்றால், எங்கள் வருங்காலத் தலைமுறை பொறுத் துக் கொள்ளாது. இதே நிலைமை நீடித்தால், இந்திய இராணுவத்துக்கு வெலிங் டனில் பயிற்சிக் கல்லூரி இருக்கக்கூடாது என்ற வகையில் எங்கள் போராட் டம் அமையும்.



அடுத்த கட்டம் என்ன?

எங்கள் வாழ்வாதாரங்களை முடக்கினால், எங்கள் குலக்கொடிகளைக்கொன்ற கொடியவனுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்புக் கொடுத்தால்,அவர்களுக்கு இன் பச் சுற்றுலா ஏற்பாடு செய்கின்ற கொடுமை நீடித்தால், வருங்காலத் தமிழக வாலிபர் உலகம் பொறுத்துக் கொள்ளாது. வினையை விதைக்காதே, வினை யை அறுக்காதே!

அரசியலைக் கடந்து நாங்கள் பேசுகின்றோம். அறவழியில்தான் போராடுகின் றோம். திருப்பி அனுப்பி விட்டார்கள் என்பதற்காக நாங்கள் மன்னித்து விட மாட்டோம். இந்திய அரசை மன்னிக்க மாட்டோம்.

இந்திய இலங்கை உடன்படிக்கை என்றார்கள். அவன் இப்போது, இலங்கை அர சியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீக்கப் போகிறானாம். இவர்கள் வாய் மூடிக் கிடக்கின்றார்கள். அவன் செருப்பால் அடித்தது போலச் சொல்லுகிறான், இந்தியப் பிரதமர் ஒன்றும் இதைப்பற்றி எங்களிடம் பேசவில்லை என்கிறான். இந்திய அரசைத் துச்சமாகக் கருதுகிறான். 563 தமிழக மீனவர்களைக் கொன்று விட்டான்.சிங்களப்போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து கச்சத்தீவுக்குஅருகில் நிறுத்தி இருக்கின்றான். இன்றைக்கு அங்கே சீனர்கள் உலவுகிறார்கள், மீன் பிடிக்கின்றார்கள். சீனக் கடற்படை வீரர்கள் ரோந்து வருகின்றார்கள்.இதனால், தாய்த் தமிழகத்துக்குத்தான் ஆபத்து.

விடுதலைப்புலிகள் வலுவாக இருந்ததால், தமிழகத்துக்கும் பாதுகாப்பு அர ணாக இருந்தார்கள்.அவர்களை வலு இழக்கச் செய்ததன் மூலம், பேராபத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். அது நம் தலையில்தான் விடியும். ஆகவே, தமிழ கத்தின் நலன்களைக் காக்க, நாம் மிக விழிப்போடு இருக்க வேண்டும்.

தமிழனைக் கொன்ற கொலைகாரனுக்குத் தமிழகத்தில் பயிற்சி என்றால், உல கம் நம்மைம் பற்றி என்ன நினைக்கும்? தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அறவழியில் பாடம் கற்பியுங்கள். அவர் களை, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியுங்கள்.

காங்கிரஸ் கட்சியையும், அதன் பங்காளிகளையும் தூக்கி எறியுங்கள்.இந்திய அரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள வனை வெளியேற்ற வேண்டும். அதற்காகத் தாய்த் தமிழகம் கொந்தளித்து எழுந்தது என்றால்தான், அகிலம் அதைக் கவனிக்கும். அந்தக் கடமை நமக்கு இருக்கின்றது. அதை நிறைவேற்றுவோம். தமிழகத்தின் இளைஞர்கள், மாண வர்கள் உள்ளத்தில் கொதித்து எழுந்து இருக்கின்ற உணர்வு மறையாது. தமிழ்
ஈழம் மலரும். அது வரலாற்றுக் கட்டாயம்!

(25.6.2013 அன்று காலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை)

(திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி,வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், தந்தை பெரியார் திராவிடர் கழகப்
பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழக வாழ்வு உரிமைக் கட்சியின் சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பண்ருட்டி காமராஜ் ஆகியோர் பங்கு ஏற்றனர்.)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment