Saturday, June 8, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 28

இந்து ராஷ்டிரம் ஏற்படுத்த முயன்றால்  இந்தியா துண்டாடப்படுவதைத் தடுக்கவே முடியாது!

1992, டிசம்பர் 6, இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். பாகிஸ்தான் பிரி வினைக்குப் பின்னர் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்கா லம் குறித்த கவலையுடன் கண்ணீர் சிந்திய நாள். எது நடந்துவிடக்கூடாது என் பதற்காக நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ கர்ஜித்தாரோ, அந்தத் துயர சம்பவம் நடந்தேறிவிட்டது;

ஆம்: மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள்;
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அரசு காவிக்கூட்டத்தின் கொட்டத் திற்கு அடிபணிந்தது. இந்திய பூபாகம் இரத்தக்கோடுகளால் கிழிக்கப்பட்டு விட் டது. மதவெறி அமைப்புகளின் கரசேவை(?)யைத் தடுத்து நிறுத்தி பாபர் மசூதி யைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசும்; பிரதமர் நரசிம்மராவும் இராணுவப் பாதுகாப்புடன் மசூதியை இடிக்கத் துணைபோன கொடுமையைக்கண்டு நாடே கொதித்துக் கொந்தளித்தது.


உச்சநீதிமன்றத்தில், பாபர் மசூதியைக் காப்பாற்றுவோம் என உறுதி கூறிய உத் திரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், தனது பாரதிய ஜனதாகட்சியும், சங்ப ரிவார் அமைப்புகளும் மசூதியை இடிப்பதற்கு தகுந்த ஏற்பாடுகளைக் கச்சித மாகச் செய்து முடித்தார். எனவே, நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு,
கல்யாண்சிங் ஆட்சியை, அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத் திக் கலைத்தது. கூடவே பா.ஜ.க. ஆட்சி செய்த மத்தியபிரதேசம், இமாசல பிர தேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளையும் கலைத்தது.

1992, டிசம்பர் 24இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், தலைவர் வைகோ அவர்கள் உத்திரபிரதேசம் தவிர ஏனைய மாநில ஆட்சிகள் கலைக்கப் பட்டதற்கும், பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து உரையாற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரை வருமாறு:
மதவெறியை எதிர்ப்போம்

“மத்தியபிரதேசம், இமாசலபிரதேசம், ராஜஸ்தான் இம்மூன்று மாநில பாரதிய
ஜனதா அரசுகளை டிஸ்மிஸ் செய்த மத்திய அரசினுடைய செயல் ஜனநாயகத் தின் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதல் எனக் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறேன்.

ஆனால், அதே நேரத்தில் இந்தியாவை ‘இந்து மதமாக்கியே தீருவோம்’ என்ற
பாரதிய ஜனதாவின் வெறித்தனமான போக்கை அடி முதல் நுனி வரை வேர றுப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் தன் தோள்களை உயர்த்தும் என்ப தை யும் இந்த போராட்டத்தில் உபகண்டத்தில் எவருக்கும் நாங்கள் சளைத்த
வர்கள் அல்ல என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறேன்.

1975இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அந்த பாசிச பிரகட னத்தை எங்கள் தலைவர்கலைஞர் முழுமூச்சாக எதிர்த்தார் என்பதால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எந்தத் தலைவரும், எந்தக் கட்சியும் சந்தித்திராத கொடூரமான அடக்குமுறையை, இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. முதல மைச்சர் நாற்காலியைக் காப்பாற்றக் கருதி கலைஞர் சமரசம் செய்திருந்தால்,
அவரது ஆட்சிக்கு கேடு நேர்ந்திருக்காது.ஜனநாயகம் காக்கும் தர்மயுத்தத்தில்
‘இருண்ட சிறைகளின் கொடுமைகளை அனுபவித்தோம்’.

மாநில சுயாட்சிக்கு அடிகோலிய தி.மு.க.

அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு அகற்றப்பட வேண்டும் என்பதில் நாங் கள் உறுதியாக இருக்கிறோம். மாநிலஅரசுகளின் தலைக்கு மேலே தொங்கு கிற இந்தக் கத்தி, திடீரென்று மத்திய அரசு கரங்களில் ஏந்தும் தங்கத் தாம்பா ளம் ஆகிவிட முடியாது

மாநில சுயாட்சிக் கொள்கையை வெற்றி பெறச் செய்வதற்காக இந்தியாவில் முதன் முதலாக தி.மு.க. அரசுதான் ராஜமன்னார் குழுவினையும் அமைத்து, தமிழக சட்டமன்றத்தில் 1974 ஆம் ஆண்டில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை யும் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பிவைத்தது. இது குறித்த விவாத மேடை யின் அடித்தளத்தை அமைத்ததே தி.மு.க.தான்.

அதனால்தான் மூன்று மாநில பாரதிய ஜனதா அரசுகள் கவிழ்க்கப்பட்டவுடன்
கலைஞர் கருத்துத் தெரிவிக்கையில், ‘பண்டித நேருவின் ஆட்சிக்காலத்தில்
‘பெப்சு’ மாநில அரசு கவிழ்க்கப்பட்டதைக் கண்டித்து டாக்டர் அம்பேத்கர் அர சியல் சட்டத்தின் மீது விழுந்த பலத்த அடி’ என்று குறிப்பிட்ட வார்த்தைகளே இப்போதும் பொருந்தும் என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 6 கறுப்பு நாள்

ஜனநாயகத்தைக் காப்பதில் ஒரே நிலையில் தி.மு.கழகமும், தலைவர் கலை ஞரும் உறுதியோடு இருப்பது குறித்த பெருமிதத்துடனும், பெருமையுடனும் இம்மன்றத்தில் தலைநிமிர்ந்து பேசுகிறேன்.ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை யே ஆட்டங்காணச் செய்துவிட்ட மிருகத்தனமான தாக்குதலால் விளைந்த
பயங்கரமான துயரத்தின் நிழலில் அயோத்திப் பிரச்சினையை விவாதித்துக்
கொண்டிருக்கிறோம். கறுப்பு ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 6 ஆம் தேதி இருள் சூழ்ந்த நாளாக வஞ்சத்தால், துரோகத்தால் நடத்தப்பட்ட அராஜகத்தின் நாளாக இந்திய சரித்திர ஏடுகளில் பதிவாகிவிட்டது

அத்வானி-ஜோஷி-குற்றவாளிகள்

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கிய செயல், இந்தியாவின்
மதச்சார்பின்மை மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலாகும். பாரதிய
ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ இந்து பரிசத், பஜரங்தளம் அமைப் பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் ‘சங்பரிவார்’ எனும் மதவெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்திய குற்றவாளிகள் என்று எல்.கே. அத் வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றம் சாட்டுகிறேன்.

அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உடைக்கப்பட்ட மசூதி யின் இடிபாடுகளுக்குள் புதைந்து விட்டது. பாரதிய ஜனதாவும், மதவெறி கும்ப லும் மேற்கொண்டுவிட்ட போர்க்கோலத்தை பல்வேறு கலாச்சாரங்கள், பல் வேறு மதங்கள், பல்வேறு மொழிகள் இணைந்துள்ள அமைப்பாக இந்தியா தொடர முடியுமா? எனும் அறைகூவலாகவே கருதுகிறேன்.

மகாத்மாவின் கொள்கை -கொலையானது

மசூதியின் முன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம் காந்தி யடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது. வேதனை கலந்த விசித்திரம் என்னவெனில் தனது பெயரிலே யே ‘ராம்’ என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருந்த ‘நாதுராம் வினாயக கோட்சே’ அக்குண்டுகளை பாய்ச்சினான்.இப்போதும் ராமர் பெயரால் மகாத்மா வின் சிந்தனையும், கொள்கையும் அயோத்தியிலே கொலை செய்யப்பட்டது.

திட்டமிட்ட தாக்குதல்

அயோத்தியில் நடந்தது திடீரென்று வெடித்துவிட்ட சம்பவம் அல்ல. முன்கூட் டியே திட்டமிட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நடத்தப்பட்ட தாக்குதலாகும். நவம் பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்தே (1992) மசூதியை உடைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் ஆயத்தங்களும் செய்யப்பட்டன. கரசேவை என்ற பெய ரால் மசூதியை இடிப்பதற்கு மதவெறியின் கோர நர்த்தனத்திற்கு பல்லாயிரக் கணக்கானோர் தயார் ஆனார்கள். இவற்றைத் தடுத்து நிறுத்தத்தவறிய பெருங் குற்றத்திற்கு, பிரதம அமைச்சரும், உள்துறை அமைச்சரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

கரசேவைக்கு ஜெயலலிதா ஆதரவு

தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரை தவி ர கலந்து கொண்ட அனைத்துக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் தீர்வுகாண மசூதியைக் காப்பாற்ற பிரதமரின் கரங்களை வலுப்படுத்த தங்களின்பரி பூரண ஆதரவைத் தெரிவித்தன.தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டும் பாரதிய ஜன தாவையும் கரசேவையையும் ஆதரித்துப் பேசினார்.

ஜி.சுவாமிநாதன் (அதிமுக) : கோபால்சாமி சொல்வது தவறு. தேசிய ஒரு மைப்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஆதரித்தார்.

வைகோ : தமிழக முதல்வர் அயோத்தி கரசேவையை ஆதரித்துப் பேசியதை
சுவாமிநாதன் மறுக்கிறாரா? பாரதிய ஜனதாவை ஆதரித்ததை மறுக்கிறாரா?
நான் கூறுவதெல்லாம் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு, பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படுத்திய நம்பிக்கை நாசமானதற்கு பிரதமர்தானே கார ணம். பாரதிய ஜனதா துரோகம் செய்ததாக பிரதமர் சொல்கிறார். மதச்சார்பின் மைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் பிரதமர் நரசிம்மராவ் துரோகம் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டுகிறேன். உள்துறை அமைச்சர் அவர்களே! உங் கள் உளவு ஸ்தாபனங்கள் செயலிழந்து விட்டனவா? முடங்கி விட்டனவா? மசூதிக்கு ஆபத்து நேரிடும் என்று உளவுத்துறையினர் தகவல் தந்தார்களா?இல்லையா? தகவல் தரவில்லையெனில், உள்துறை இலாகாவே டிசம்பர் முதல் வாரத்தில் காற்றில் கலந்து மறைந்துவிட்டது என்று அர்த்தம்.

ஆட்சி நடத்த யோக்கியதை இல்லை

ஆட்சி நடத்த உங்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று அர்த்தம். உள வுத்துறையினர் அறிக்கை தந்தும், அவற்றை நீங்கள் குப்பைத் தொட்டியில் போட்டிருந்தால் இந்த நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் உங்கள் அரசு துரோகம் செய்தது என்று அர்த்தம்.

தான் தப்புக் கணக்கு போட்டு விட்டதாகவும், தனது கணிப்பு தவறாகப் போய் விட்டது என்றும் நரசிம்மராவ் கூறுகிறார். நெடுஞ்சாலையில் நாலுபேர் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு தனது கணிப்பு தவறாகப்போனதால் விபத்து ஏற் பட்டுவிட்டது என்று அந்த கார் டிரைவர் காரணம் சொல்லி குற்றத்திலிருந் து தப்பித்துக் கொள்ள முடியுமா? முடியாது. அதுபோல பிரதமரும் தனது பொறுப் பிலிருந்து தப்ப முடியாது.

இந்திய சேம்பர்லின் நரசிம்மராவ்

மாதக்கணக்கிலே மதவெறி சாமியார்களுடன் நரசிம்மராவ் குலாவி குலாவி பேசினார். பாரதிய ஜனதாவுடன் திரை மறைவில் ஒப்பந்தம் செய்து கொண் டார். எனக்கு ஐரோப்பிய சரித்திரம்தான் நினைவுக்கு வருகிறது.

நரசிம்மராவ் பி.ஜே.பி.யுடன் உடன்பாடு கண்டது போல, இங்கிலாந்து பிரதமர்
சேம்பர்லின், ஜெர்மானிய இட்லருடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அவ் வுடன்படிக்கையை ஜெர்மன் மீறியது.ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இந்தியா வின் சேம்பர்லின் ஆக நமது பிரதமர் இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம்.அந்த சேம்பர்லின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்தார். நமது பிரதமர் நரசிம்மராவ் பதவியை விடவே மாட்டேன் என்று அறிக்கை விடுகிறார்.

அயோத்தி பிரச்சினைக்கு காங்கிரசே காரணம்

அயோத்தி பிரச்சினை பூதாகரமாக வளர்ந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம். 1949, டிசம்பர் 22 ஆம் தேதி இரவில் மசூதிக்குள்ளே ராமர் சிலைகளைக் கொண் டுபோய் வைத்த சம்பவம் நடந்தபோது மத்தியிலும், உ.பி.யிலும் காங்கிரஸ் தான் இருந்தது.

1986இல் மத்தியிலும், உ.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்த போதுதானே மசூதி யின் பூட்டுகள் திறக்க அனுமதிக்கப்பட்டு,ராமர் சிலைக்கு வழிபாடும் தொடங் கி, மசூதியை திடீரென்று கோவிலாக்கும் மதவெறிக்கு ஊக்கம் தரப்பட்டது.

மசூதியை இடித்துவிட்டுக் கோயில் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நட்டு விழா நடத்த அனுமதித்தபோது,உ.பி.யிலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசுதானே இருந்தது! அரசியல் இலாபத்துக்கு மத உணர்ச்சிகளை காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது என குற்றம் சாட்டுகிறேன். ஜம்முவில் தேர்தலின்போது இந்துமத உணர்வை காங்கிரஸ் தூண்டிவிட்டதை யாரும் மறுக்க முடியாது.

பிரதமர் நரசிம்மராவ் என்ன செய்து கொண்டிருந்தார்?

காலை 11 மணிக்கெல்லாம் மசூதியை ஆபத்து வளைத்தது. பிற்பகல் 2.40க்கு
முதல் விதானம் இடிந்தது. 3 மணிக்கு இரண்டாவது விதானம் இடிந்தது. 4.40 க் குள் மூன்றாவது விதானமும் இடிந்தது. மாலை 6 மணிக்குள் எல்லாம் தரை மட்டமாகிவிட்டன. இந்த ஏழு மணி நேரமும் டெல்லியில் மத்திய சர்க்காரில்
எந்த அசைவும் இல்லை. மசூதி அடியோடு அழிக்கப்பட்ட தகவலுக்காக பிரதமர் காத்து இருந்தாரா? அதனால் தான் அஸ்தமனத்திற்குப் பிறகு மத்திய மந்திரி சபைக் கூட்டத்தை நடத்தினாரா?

அமெரிக்காவில் கறுப்பர் இன மாணவர்களுக்கு ஆர்க்கன்சாஸ் மாநிலப் பள்ளி களில் அனுமதி மறுக்கப்பட்ட போது, அவர்களை அனுமதிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், அம்மாநில ஆளுநர் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டு கறுப்பர் மாணவர்களை நுழையவிடாமல் தடுத்தார். ஆனால், மத்திய அரசின் பாதுகாப்புப் படையினர் அந்த ஆளுநரை அலாக்காக தூக்கி அப் புறப்படுத்திவிட்டு, நீக்ரோ மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய வழி வகுத்தனர்.

அதுபோல அயோத்தியிலும், மத்திய அரசு பாதுகாப்புப் படையினரை பயன் படுத்தி,மசூதியைக் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனல், மன்னிக்க முடியாத
மாபெரும் தவறு இழைத்துவிட்டது.

இந்துமத மயமாக்குதல்

அயோத்தியில் வீசிய மதவெறிப்புயல் இந்தியாவின் ஒற்றுமையையும், ஒரு மைப்பாட்டையும் நிர்மூலம் ஆக்கும் அபாயம் இந்நாட்டை அச்சுறுத்திக்கொண் டிருக்கிறது.பாரதிய ஜனதாவை உள்ளடக்கிய சங்பரிவார் எனும் இந்து மதவாத அமைப்பு 1989இல் உஜ்ஜயினியில் நிறைவேற்றிய ஐந்து அம்சத் தீர்மானத்தில் அரசியலை இந்து மத மயமாக்குதல் என்பதே தலையாயத் தீர்மானம் ஆகும். இந்து ராஷ்டிரத்தை நிர்மாணிப்பதே அவர்களின் ஒரே குறிக் கோளாகும். என வே அயோத்தியில் நடந்த சம்பவம் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த முனை யும் திட்டங்களின் தொடக்கம்தான். மதுராவிலும் வாரணாசியிலும் இனி மசூதி களை இடிப்பதற்கும், அதோடு நிற்காமல் இந்துமத நாடாக இந்தியாவை மாற் றும் நோக்கத்தில் மூர்க்கத்தனமான செயல்களைத் தொடங்குவதற்கும் தயாரா கிவிட்டார்கள்.

சரித்திரத்தை அழித்து எழுத முயற்சிக் கிறார்கள். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
மாற்றி எழுதத் துடிக்கிறார்கள்.காலக்கடிகாரத்தை பின்னோக்கித் திருப்ப முடி யுமா? முடியாது. முடிந்துபோன சம்பவங்களை வரலாற்றில் இல்லாமல் ஆக்க முடியுமா? முடியாது.

பாரதிய ஜனதா ஆண்ட மாநிலங்களில் கல்விச் சாலைகளில், பாடநுல்களில்
சரித்திர உண்மைகளை மறைத்து திரித்து எழுதி இந்துமதவெறியை போதிக்க
முற்பட்டுள்ளார்கள்.

ஆரிய நாகரிகமே உலகத்தின் உயர்ந்த நாகரிகம் என்றும் மவுரியர்களின் கால மும், குப்தர்களின் காலமும் பொற்காலம் என்றும் அந்தக் காலத்துக்கு இந்தி யாவைக் கொண்டு செல்வது என்றும் அதுவே அவர்கள் நிர்மாணிக்கப் போகும் இந்து ராஷ்டிரம் என்றும் உரத்தகுரல் எழுப்புகிறார்கள்.

ராமர் பெயரில் ரத்த குளியல்

1528இல் மொகலாய பாபர்,அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.அதை இடித்து விட்டு ராமர் வாழ்ந்த காலத்தை அயோத்தியில் நிலை நிறுத்தப் போகிறோம் என இந்த வெறிபிடித்த மதவாதிகள் தங்கள் வாதத்தை முன் வைக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்,ஏன் லட்சக்கணக்கான ஆண் டுகளுக்கு முன்னர் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது புராணம்.ராமர் பிறந் தாரா? வாழ்ந்தாரா?என்பது சரித்திர ஆசிரியர்களின் சர்ச்சையாக இன்னும் இருக்கிறது. அது உண்மை என்று ஒப்புக்கொண்டாலும் இதிகாச ராமன் கான கத்து வேடன் குகனை சகோதரனாகவும், வானரனான சுக்ரவனை சகோதர னாகவும், எனது பார்வையில் துரோகி என்று கருதினாலும் (இதுதான் திராவிட இயக்கப் பார்வை -கட்டுரையாளர்) அந்த விபீடணனை சகோதரனாகவும் ஏற் றுக் கொண்டானே...அந்த ராமன் பெயரைச் சொல்லி, ரத்த குளியல் நடத்த முற் படுவதுதான் ராமபக்தியா?

யானையின் கண்கள்

சிறுபான்மையோர் பாதுகாப்பு என்பது ஜனநாயக மண்டபத்தைத் தாங்கும் தூண்களுள் ஒன்றாகும்.பெருந்தன்மையுடன் நடப்பது பெரும்பான்மை யோ ரின் கடமை ஆகும்.மிகப்பெருத்த யானையின் சரீரத்தில் கண்கள் மிகச்சிறிய வைதான். ஆனால், அக்கண்களுக்கு சேதம் ஏற்பட்டால் மலைபோன்ற யானை நிலை குலைந்து போகும். ஜனநாயகத்தில் அக்கண்களைப்போன்றவர்கள் சிறு பான்மையோர் என்பதை இம்மன்றத்தின் கவனத்திற்கு வைக்கிறேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்துக்கள்

பரந்துபட்ட உலகத்தில் சகவாழ்வுக்கொள்கைதான் எத்தரப்பையும் பாதுகாக் கும். பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும், ஈரானிலும்,இந்துக்களுக்கு விரோத மாக நடந்த சில சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியன. ஆனால், பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் அந்த அரசுகள் இந்துக்களை பாதுகாத்து உள்ளனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பொருள் தேடச்சென்று உழைக்கும் இலட்சக் கணக்கான இந்துக்களுக்கு தீங்கு நேராமல் பாதுகாத்து உள்ளனர்.

எங்கள் தமிழின மக்கள் மலேசியாவிலும்,சிங்கப்பூரிலும் பல லட்சம்பேர் வசிக் கிறார்கள். இப்பூமண்டலத்தில் இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் இங்குதான் நிம்மதியாக வாழ்கிறார்கள்.இஸ்லாமியர் அதிபராக உள்ள மலேசியாவில் இந் துக்களான தமிழர்கள் மாரியம்மன் கோவிலையும், முருகன் கோவிலை யும் கட்டி முழு சுதந்திரத்துடன் வழிபட்டு வருகிறார்கள்.இந்தியாவில் பாரதிய ஜன தா மதவாதிகளின் வெறித்தனம் தலைவிரித்து ஆடுமானால், மலேசியத் தமி ழர்களின் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தர முடியும்?

திப்பு சுல்தானின் மத ஒற்றுமை

பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நடுங்கச் செய்த தீரன் திப்பு சுல்தான் தனது ரங்கப்பட்டி னக் கோட்டைக்குள்ளே ரங்கநாதர் ஆலயத்தில் வழிபாடும், மசூதியில் தொழு கையும் தடையின்றி நடத்த அனுமதித்து மத ஒற்றுமைக்கு வழிகாட்டியதை யார் மறுக்கமுடியும்? இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான்! இந்நாட்டின் குடிமக்கள்தானே!

பாகிஸ்தான் இருமுறை படையெடுத்த போது எண்ணற்ற இஸ்லாமியக் குடும் பங்கள், தங்கள் பிள்ளைகளை இந்தியாவின் எல்லையைக் காக்க போர்மு னைக்கு அனுப்பவில்லையா? பாகிஸ்தானை எதிர்த்து சமர்க்களத்தில் இஸ் லாமிய வாலிபர்கள் தங்கள் இன்னுயிரை தரவில்லையா?

திராவிட நாகரிகம்

‘இந்துத்துவா’ எனும் நச்சுத் தத்துவத்தை இந்தியாவின் அமைப்பிலும், அரசி லும், அரசியலிலும் திணிக்க முற்படுவோருக்கு எச்சரிப்பது எல்லாம் இந்தியா வின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உடைத்து சிதறடிக்க முற்படா தீர் என்பதுதான். ஆரிய நாகரிகம் குறித்து ஆணவம் கொள்ளும் கூட்டத்திற்கு
சொல்கிறேன். உலகத்தின் மிகப்புராதனமான நாகரிகம் எங்கள் திராவிட நாகரி கம். கீர்த்திக்குரிய திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் கலாச் சாரம் வேறு; உங்கள் கலாச்சாரம் வேறு; எங்கள் பண்பாடும் உங்கள் பண்பா டும் முற்றிலும் வேறு பட்டவை; எங்களின் பாரம்பரியமும் வாழ்க்கை முறை யும் உங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

நாடோடி கூட்டம்

பாபரின் கூட்டம் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வந்ததென்று சொல்வீர் களா னால் ஆரியக்கூட்டம் கைபர் போலன் கணவாய் வழியாக மேய்ச்சல் தரையை நாடி வந்த நாடோடி கூட்டம் என்றுதானே வரலாறு கூறுகிறது.பாபருக்கு முந் தைய பழைய இந்தியாவை மீண்டும் உருவாக்குவோம் என்று வெறி கூச்சல் போடும் பாரதிய ஜனதாவுக்கு சொல்வேன்; வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு இன்றைய இந்திய நிலப்பரப்பு ஒரு நாடாக இல்லை. மவுரிய சாம்ராஜ் யத்தின் அதிகாரம் எங்கள் தமிழ் மன்னர்கள் நிலத்தில் அடியெடுத்து வைத்த தில்லை. குப்தர்களின் அதிகாரம் எங்களை எட்டிப் பார்த்ததில்லை.

அந்த மன்னர்களின் படைகளுக்கு எங்கள் மூதாதையர் மண்ணில் காலெடுத்து
வைக்கும் துணிச்சல்இல்லை.ஆனால்,தமிழ் மன்னர்களின் சேனைகள் கங்கை சமவெளியிலும், வெற்றி முரசு கொட்டின. இமயமலையின் உயர்ந்த சிகரங் களிலும் எங்கள் கொடி பறந்த சரித்திரம் உண்டு. அசோகர் காலத்திலும், அக்பர் காலத்திலும் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரஜைகளாக எங்கள் முன் னோர்கள் இருந்தது இல்லை.பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இன்றைய இந்தியாவை ஒன்றுபடுத்தி உருவாக்கிற்று. பாரதிய ஜனதாவின் காவிக்கொடி இந்தியாவை உடைத்து துண்டுபடுத்தப்போகிறது என எச்சரிக்கிறேன்.

இந்தியா துண்டாடப்படும்

இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்த முனைந்தால்,ஏற்கனவே கொந்தளித்துக்கொண் டிருக்கும் வடகிழக்கு பிரதேசம் இந்தியாவிலிருந்து துண்டாடப்படும். பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீர் இந்திய வரைபடத்தை விட்டு வெளியேறும். கிளர்ச்சிக்களமாக மாறிவிட்ட பஞ்சாபை இந்தியா நிரந்தரமாக இழக்கும்.

எங்கள் தமிழகத்தைப் பொறுத்தமட்டில், சமய ஒற்றுமைக்கும், சகோதர உணர் வுக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகும். நாட்டுப் பிரிவினை நடந்த காலத்தில் வடஇந்தியாவில் இந்து-முஸ்லிம் மோதல்களில் ரத்த ஆறு ஓடிய போது, தமிழகத்தில் இந்துக்களும்,முஸ்லிம்களும் பாசத்தோடு ஒருவரை ஒரு வர் அரவணைத்துக் கொண்டனர்.

தந்தை பெரியார் - அண்ணா பூமி

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகம் போற்றிவந்த மரபுகளைப் பாதுகாக் கத் தோன்றிய திராவிட இயக்கம்தான் இந்தப் பெருமைக்கு மூலகாரணம் - இப் பெருமை தந்தை பெரியாரை சாரும், அண்ணாவை சாரும்.

வடக்கே வளர்க்கப்பட்ட வகுப்பு துவேசவிஷக்காற்று கேரளத்திலும் வீசுகிறது.
தமிழ்நாட்டிலும் நுழையப்பார்க்கிறது. ஆனால், தமிழகம் இந்த நாசக்கருத்து வளர அனுமதிக்காது. வட இந்தியாவில் இந்து ராஷ்டிர கருத்து வலுப்பெறுமா னால் -இருபதாம் நூற்றாண்டின் இறுதி நாட்களில் இன்றைய இந்திய நிலப் பரப்பு ஒரு நாடாக இருக்காது என்பதே காலத்தின் தீர்ப்பாக அமையும் என மீண்டும் எச்சரிக்கிறேன்.

தொடரும்...

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment