முல்லைப் பெரியாறு அணை எந்த பூகம்பத்திற்கும் ஈடுகொடுக்கக்கூடிய அணை. வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பே பென்னி குக்
கட்டிய அணை. பூம்பத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய அணைதான். அதனை நிபு ணர்கள் எல்லாம் எத்தனையோ ஆதாரங்களோடு நிருபித்துவிட்டார்கள்.
அந்தப் பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூகம்பமே வராது என்றுகூடச் சொல்லி
விட்டார்கள். அப்படி 5 புள்ளி அளவிலே வருமானால், அங்கே இருக்கக் கூடிய
வல்லக்கடவு, வண்டிப்பெரியார், குமுளி கேரளப் பகுதியில் இருக்கக்கூடிய
கட்டிடங்கள் இடிந்துவிழுமே தவிர முல்லைப் பெரியாறு அணை ஒருபோதும்
உடையாது என்பதைத் தெரிவித்து விட்டார்கள்.
ஆனால் மத்திய அரசின் உளவுத்துறை Inteligence Bureo இங்கே கூட வந்து இருக் கின்றார்கள். பதிவு செய்து கொண்டு இருக்கின்றார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறை பிரிவு, அதனுடைய Industrial Security Branch தொழில் பாதுகாப்புப் பிரிவு, 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9, 10 தேதிகளில் ஒரு அறிக்கை அனுப்பி இருக்கின்றது. அந்த அறிக்கை அனுப்பியது அன்றைய தமிழக அரசுக்கும் தெரியும்.அறிக்கையின் பிரதி இவர்களிடமும் இருக்கின்றது.
அந்த அறிக்கையிலே மிகத் தெளிவாக உளவுப் பிரிவு எச்சரிக்கின்றது. பூகம்பம்
வந்து அணை உடையும் என்று எச்சரிக்கவில்லை. அந்த அணையை நாசகார சக்திகள் உடைப்பதற்கு முயற்சிக்கக் கூடும் என்பதனால், மத்திய அரசுக்கு அந்த உளவுத்துறை எச்சரிக்கை செய்கின்றது.
அணைப் பகுதியிலே இருந்து கேரளக் காவல்துறை உடனடியாக அகற்றப்பட வேண்டும்; கேரள போலீசை அங்கே இருந்து அகற்றிவிட்டு, மத்திய அரசினு டைய ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தையாவது, மத்திய அரசினுடைய மத்திய தொழில் பாதுகாப்புப் பட்டாளத்தையாவது அந்த இடத்திலே கொண்டு போய்க் குவிக்க வேண்டும் என்று, மத்திய அரசினுடைய உள்துறை அமைச்சகத்தி னு டைய உளவுப் பிரிவு எச்சரிக்கை செய்ததே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இதன் பிறகு தானே டிசம்பர் 2 ஆம் தேதி கேரள காங்கிரஸ் கட்சியிலே இளை ஞர் காங்கிரஸ் பிரிவினர், தமிழ்நாட்டுக்கு வருகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதற்காக இயக்குகிற ஷட்டர்களை அடித்து உடைத்து, சங்கிலிகளை உடைப்பதற்காக வெல்டிங் மிஷின்களோடு போனார்கள்.
அதுவரை தமிழ்நாடு பொறுமையாகத் தான் இருந்தது.இன்றைக்குத் தமிழகத் தில் எல்லா இடங்களிலும் கிளர்ச்சி. வணிகர்கள் கிளர்ச்சி செய்கின்றார்கள். தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று எண்ணாமல், தமிழகத்தைக் காப்பாற்ற
வேண்டும் என்பதற்காக, வணிகப் பெருமக்கள் எந்தப் பொருளும் அனுப்ப மாட்டோம் என்கிறார்கள்.
காய்கறி வியாபாரிகள் போராட்டம் நடத்துகிறார்கள், பழ வியாபாரம் செய்கிற வர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தொழிலாளர்கள் விவசாயிகள் என, தமிழ கத்தின் அனைத்துப் பிரிவினரும் போராடுகிறார்கள். முல்லைப் பெரியாறு
அணையைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள்.
2 ஆம் தேதி கேரளத்தின் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அங்கே சென்று, நாங்கள் சங்கிலியை உடைத்து விடுவோம் என்றபோது, தமிழ்நாடு அமைதியாகத் தான் இருந்தது. 4 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்மட்டிக ளோடும் கடப்பாறைகளோடும் போய் பேபி டேமை உடைக்கப் போகிறோம் என்று போய், தடுக்க வந்த போலீஸ்காரர்களின் மண்டையை உடைத்தார் களே, தமிழ்நாடு அமைதியாகத்தான் இருந்தது. எல்லையற்ற பொறுமையைக் கையாண்டது தமிழ்நாடு.
இன்னும் சொல்லுகிறேன் தோழர்களே, கேரளத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் திமிரோடு சொன்ன வார்த்தைகள், என்ன நெஞ்சழுத்தம்? அணையை
உடைப்போம். அதற்காக நாங்கள் 40 கோடி ஒதுக்கி வைத்து விட்டோம். அமெ ரிக்கத் தொழில் நுட்பத்தைக் கேட்டு இருக்கின்றோம். உடைத்ததற்குப் பிறகு நொறுக்கப்பட்ட அந்த அணைப் பகுதிகளைக் கொண்டு போய் நாங்கள் கேரளத் தில் சாலைகள் அமைப்போம் என்று சொன்னார். தமிழகம் இதற்குப் பிறகும் பொறுமையாகத்தான் இருந்தது.
அணையை உடைப்போம் என்றும், உடைத்த பொருள்களைக் கொண்டு போய் கேரளத்திலே சாலைகள் அமைப்போம் என்றும் கேரளத்தினுடைய நீர்வளத் துறை அமைச்சர் சொன்னாரே, மத்திய அரசே, இதற்கும் நீ வேடிக்கை பார்த் துக்கொண்டிருந்தாய், ஊக்குவித்தாய்.
இன்றைக்கு பேரிடர் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவு கொடுத்து இருக்கிறது என்றால், பிரதமர் கொஞ்சமாவது உணர்ந்திருப்பார்; உணர வைத்து இருக்கிறது தமிழ்நாடு.நேற்றைக்கு பிரதமர் வந்து போயிருக்கிறார். நான் பிரதம அமைச்சருக்குச் சொல்கிறேன், அக்கிரம மாக கேரளத்திற்கு சாதகமாக நடக்கலாமா?
கேரள மக்களுக்குச் சொல்கிறோம். உங்களிலே இலட்சக்கணக்கான மக்கள் இந்த அணை உடைந்து மடிந்து போவார்கள் என்பது உண்மையாக இருக்கு மானால், உங்களைச் சாகடித்து சாகுபடி செய்ய நினைக்கக் கூடிய அற்ப மனி தர்கள் அல்ல இங்கே இருக்கின்ற தமிழர்கள். உங்கள் உயிர்களைப் பறித்து
வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல நாங்கள்.
உங்கள் அரசியல் கட்சிகளும், உங்கள் அமைச்சர்களும், இன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லுவது பொய் பொய் நீங் கள் சொல்வது அத்தனையும் பொய். அணைக்கு ஆபத்து இல்லை. அணை உடையாது. பின் எதற்காக இப்படிச் சொல்கிறார்கள்?
70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு,எதிர்பார்த்த தண்ணீர் அந்த நீர் பரப்பிலே இருந்து கிடைக்கவில்லை. அதனாலே இங்கே இருந்து
தண்ணீரைக் கொண்டு போக வேண்டும் என்று நினைப்பதற்கு வகுத்த சதித் திட்டம், இது வஞ்சகமான திட்டம் அல்லவா? கொஞ்சம் யோசியுங்கள்.
அன்றைக்கு அது சென்னை ராஜதானி. சென்னை ராஜதானி மட்டுமல்ல, அது எல்லைகள் பிரிக்கப்பட்டபோதும் தமிழகத்திலே சேர வேண்டிய பகுதி. முல் லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட பகுதி, தேவிகுளம், பீர்மேடு பகுதி.சரி அது போகட்டும். அதைப்பற்றி இப்பொழுது பேசி, இப்பொழுது உடனே சேர்த்துவிடு வோம் என்று பேசுவது, அதைச் செய்துவிடும் என்று சொல்வதற்கு இன்றைக்கு அது வாய்ப்பு இல்லை. நாளைக்கு எதுவும் நடக்கலாம்.ஆனால், தமிழகத்திலே தான் அந்தத் தண்ணீர் உற்பத்தியாகிறது என்பதை மறைத்து, கேரள அரசு நீதி யரசர் ஆனந்த் தலைமையிலான குழுவுக்கு அக்டோபர் மாதத்திலே தந்து இருக்கின்ற அறிக்கையில் சொல்கிறது, இது மாநிலங்களுக்கு இடையிலே ஓடுகின்ற நதி அல்ல. இது கேரளத்திற்கு உள்ளேயே ஒடுகின்ற நதி என்பது அப்பட்டமான பொய்.
பெரியாறு உற்பத்தி ஆகின்ற இடம் சிவகிரி மலைத்தொடர். முல்லையாறும் தமிழகத்தின் பகுதியிலேதான் தொடங்குகின்றது. ஆகவே இது இரு மாநிலங் களுக்கு இடையிலே ஓடுகிற நதி தான்.தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுப்பீர் களா? என்று கேட்டால் அதே அறிக்கையில், அங்கு தண்ணீர் எங்களுக்கு இருப் பதைப் பொறுத்தது என்கிறார்கள்.
என்னுடைய அன்புக்குரிய சகோதரர்களே! ஒன்றை நாம் அவர்களுக்குத் தெளி வுபடுத்துவோம். இந்த அணையை பென்னி குக் கட்டிய போது, கடலிலே போய்
வீணாகின்ற தண்ணீரைக் கொண்டுவந்து தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் இன்றைக்குப் பாசனமும், ஆறு மாவட்டங்கள் குடிதண்ணீரும் பெறுகின்றதே, இரண்டு இலட்சத்துப் பதினேழாயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றதே! எண்பத்து ஐந்து இலட்சம் மக்கள் குடிதண்ணீர் பெறுகின்றார்களே, இந்தத் தண்ணீரிலே
பாசனம் செய்து, இதிலே விளைகின்ற காய்கறிகள், நெல் இதில் கிடைக்கின்ற அனைத்திலும் ஒரு பகுதியை உங்களுக்குத்தானே தருகின்றார்கள்?
இலவசமாகவா தருகிறார்கள் என்று எவராவது குதர்க்கமாகக் கேட்கலாம் இலவசமாக அல்ல. நியாயமான விலைக்குத் தருகிறோம். நாங்கள் தராவிட் டால், தரமுடியாது என்று முடிவெடுத்தால் ஆகாய மார்க்கமாக, கடல் மார்க்க மாகக் கொண்டுவந்து நீங்கள் பிழைத்துக் கொள்ள முடியுமா? உங்களுக்குக்
கிடைக்குமா?
சரி இடுக்கி அணைக்குத் தண்ணீர் கொண்டு போய்நீங்கள் பாசனம் செய்யப் போகின்றீர்களா? விவசாயம் செய்யப்போகின்றீர்களா? விவசாயம் செய்யத் தான் உங்களுக்குக் கழனி கிடையாதே? நிலம் கிடையாதே? நீங்கள் விவசாயம் செய்ய முடியாதே? அது மின்சார உற்பத்திக்குத்தானே?
அப்படி மின்சாரம் அதிகம் வேண்டும் என்றால் தலைவர்கள் இருக்கிறார்கள், ஒரு காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தலைவர் இராஜாஜி அனுப்பி வைத்த இராமமூர்த்தி போய்ப் பேசிவிட்டு வந்தார்.தலைவர்கள் இருக்கிறார்கள். அவர் கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்தியாகின்ற மின்சாரத்தில் எங்களுக் குக் கூடுதலாக வேண்டும் என்று முறையாகப் பேசிக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ளலாமே?
நான் வாதத்திற்காக வைக்கிறேன், இடுக்கியில் மின்சாரம் தயாரிக்கத்தானே இந்த அணையின் தண்ணீரை உடைத்துக் கொண்டுபோக நினைக்கிறாய்? அது பள்ளத்தாக்கிலே பாய்கிறபோது, 500 அடி, 800 அடி உயரத்திற்கு மேலே இருக் கிற மக்களை ஒருபோதும் பாதிக்காது அல்லவா? அப்படியானால் இந்தத்
தண்ணீரைப் பயன்படுத்தி தமிழர்கள் உற்பத்தி செய்கிற பொருட்களில் ஒரு பகுதி உங்களுக்குத்தானே தருகிறார்கள். எங்களுக்கு கேடு செய்ய நினைத்து
நீங்கள் ஏன் விபரீதத்தை அறுவடை செய்கிறீர்கள்?
இப்பொழுதாவது அவர்கள் புரிந்துகொள்ளட்டும் ஒன்றை.முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வினால் எந்த ஆபத்தும் வராது. இந்த அணை மிக வலு வான அணை. முன்பைவிட ஆயிரம் மடங்கு வலுப்பட்டுவிட்டது. ஆர்தர் காட்டன் என்கின்ற அந்த மகத்தான ராயல் பொறியாளர் சொன்னார், “மணல்
பாங்கான இடத்திலே ஒரு அணை எப்படிக் கட்ட முடியும் என்பதை நான் கரி காலன் காலத்து ஆட்களிடமிருந்து படித்துக்கொண்டேன்” என்று சொல்கிறார்.
அதுமட்டுமல்ல அவர் இன்னும் சொல்கிறார், பாண்டிய மன்னர்கள் நீர்ப்பாசன முறை உலகத்திலேயே உயர்ந்தது என்று. இப்படிச் சொல்கிறவர் யார்? அற்புத மான அணைக்கட்டுகளை உருவாக்கித் தந்த ஆர்தர் காட்டன்.
ஒரு புகைப்படம் இருக்கிறது. மதுரை உள்ளிட்ட சில இரயில்வே நிலையங் களில் கூட இருக்கிறது பாருங்கள்.அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று படத்திற்கு கீழே உள்ள வாசகங்களை மறைத்து விட்டுப் பார்த்தால், யாரிடமும் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால், இது எத்தியோபியா விலே எடுக்கப்பட்ட படம் என்பார்கள்.
எலும்பும் தோலுமாக சாக்காட்டின் மடியிலே விழப் போகின்ற நிலையிலே மக் கள் அந்த படத்தைப் பார்த்து நிச்சயமாக அது எத்தியோபியாவினுடைய படம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அது இந்தத் தென் தமிழ்நாட்டிலே பஞ்சம் வந்தபோது எடுத்த படம்.
இதற்குப் பிறகுதான் இராமநாதபுரம் மன்னருக்குத் திவானாக இருந்த முத்து அருளப் பிள்ளை நேரடியாகப் போய்ப் பார்வையிட்டுவிட்டு வந்து, இப்படி ஒரு
அணையைக் கட்ட வேண்டும் என்ற யோசனையை அவர் தருகிறார். இராமேஸ்வரம் கோவிலுக்குள் நான் போனதில்லை. அந்தக் கோவிலுக்குள் இரண்டு சிலைகள் இருக்கிறது மூன்றாம் பிரகாரத்திலே. ஒன்று மன்னர் சேது பதியின் சிலை, இன்னொன்று முத்து அருளப் பிள்ளையினுடைய சிலை. இரண்டும் மூன்றாம் பிரகாரத்திலே இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

தொடரும் .....
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
No comments:
Post a Comment