Sunday, June 2, 2013

வைகோவின் "குற்றம் சாட்டுகிறேன் " -பகுதி 2

இந்தியா -இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையைக் கைவிடுக!
பிரதமரிடம் வைகோ கோரிக்கை 
நாள் :- 10.11.2004

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்க முடியாத மன உளைச்சலோடும், வேதனையோடும் இந்தக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

இந்தியாவும், இலங்கையும் இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதாகவும், அதற்காக ஒரு உடன்படிக்கை கையெழுத்து ஆக இருப்பதாக வும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதனால் இலங்கைத் தீவில் வாழ் கின்ற தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பேராபத்து களையும், அழிவையும் தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகுந்த கவலையுடன் இக்கடி தத்தைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.
கடந்த ஜூலை மாதம் 28 ஆம் நாள் நான் தங்களைச் சந்தித்தபோது, இலங்கை யில் தற்போது ஏற்பட்டு உள்ள சூடிநநிலை, நார்வே அரசாங்கம் மேற்கொண்டு உள்ள அமைதிப் பேச்சுகள், திருமதி சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான அரசாங்கம் அமைதிப் பேச்சுகளுக்கு ஏற்படுத்தி உள்ள தடங்கல்கள் ஆகியவை குறித்து நான் கூறிய கருத்துகளைத் தயவுகூர்ந்து நினைவிற்கொள்ள வேண்டு கிறேன்.

இலங்கைப் பிரதமர் திரு மகிந்தா ராஜபக்சே, இந்தியா-இலங்கை பாதுகாப்பு
ஒப்பந்தம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்ததை, அச்சந்திப்பின் போது தங்களின் கவனத்துக்கு நான் கொண்டுவந்தபோது,‘அவ்வாறு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்பட மாட்டாது’ என்று தாங்கள் உறுதி அளித்தீர்கள்.

ஆனால், இலங்கை அதிபரின் டெல்லி வருகை தொடர்பாக செய்தித் தாள் களி லும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகியுள்ள செய்தியைக்கேள்வியுற்ற போது, தலையில் இடி விழுந்ததைப்போல் நான் அதிர்ச்சி அடைந்தேன்.இரண் டு அரசாங்கங்களுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம் செய்ய ஒரு திட்டமுன் வரைவு தயாராகி உள்ளது என்றும், அதன்படி பாதுகாப்புத் துறையில் இரு நாடு களும் இணைந்து செயல்படுவது என்றும், பலாலி விமான தளத்தை இந்தியா சீரமைத்துக் கொடுப்பது என்றும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தரப்பி னர்க்கும் வசதியான ஒரு நாளில் கையெழுத்து இடுவது என்று இரு அரசு களின் கூட்டறிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில், பலாலி விமானதளத்தைப் பயன்படுத்தி, இலங்கை விமா னப்படை, யாடிநப்பாணத் தீபகற்பத்தில், குறிப்பாக பொதுமக்கள் வசிக்கின்ற பகுதிகளில் குண்டு வீசித் தாக்கிய உண்மையை யாரும் மறுக்க முடியாது. வான்வெளியில் இருந்து குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதால், வழி பாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின, அழிக்கப்பட்டன. ஏதும் அறியாத அப்பாவிகள்,ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தாக்குதல்களால், ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், தங்கள் தாய கத்தை விட்டுப் புலம் பெயர்ந்து காடுகளுக்கு உள்ளே தஞ்சம் புகுந்தனர்.

போப் இரண்டாவது ஜான் பால் அவர்கள், ‘யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்
பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுங்கள்’ என்று உலக
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டும் அல்ல,அந்தக் கால கட்டத் தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இருந்த புத்ரோஸ் புத் ரோஸ் காலி அவர்களும், இதேபோன்று வேண்டுகோள் விடுத்தார்.

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர் மூளத் தொடங்கியது. ஏழு ஆண்டுகளாக அங்கே போர் நடைபெற்றது. 2001
ஆம் ஆண்டின் இறுதியில், விடுதலைப்புலிகள் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவித்ததற்குப் பின்னரும், இரண்டு மாதங்கள் கழித்துத் தான் இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

இந்தப் பின்னணியில், நார்வே அரசாங்கம் முன்வந்து அமைதிப் பேச்சு களுக் கான முயற்சிகளைத் தொடங்கியது. அதனால், பன்னாட்டுச் சமுதாயம், இலங் கைத் தீவில் உள்ள தமிழர்களின் இனப்பிரச்சனையை உற்றுநோக்கத் தொடங் கியது. பேரழிவுக்கு உள்ளான தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சீரமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியது.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின்
பிரதிநிதிகளும்கூட, யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் தமிழர் வசிக்கின்ற பகுதி களின் பேரழிவைக் கண்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ்,அமெரிக்கா மற்றும்
பிரிட்டன் ஆகிய நாடுகள், பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவு வதாக வெளிப்படையாக அறிவித்து உள்ளன.

எல்லாம் சரியான வழியில் சென்று கொண்டு இருந்தவேளையில், அமைதிப் பேச்சுகளைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இலங்கையின் குடியரசுத் தலை வர் சந்திரிகா, மூன்று அமைச்சர்களைப் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்தார்.

இலங்கை அரசாங்கம், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து ஏராள னமான ஆயுதங்களைக் கொள்முதல் செடீநுது இருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள், மீண்டும் ஒரு ஆயுதத் தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்ற அவர்களுடைய நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

தந்திரத்துடன் செயல்பட்டு, உண்மைகளை மறைத்து, இந்திய அரசாங்கத்தை
நம்பவைத்து ஏமாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதைக்
கண்டு நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறோம்.

இலங்கை அரசாங்கம் எல்லா வழிகளிலும் தனது படைபலத்தை வலுவாக்கிக்
கொண்டு வருகிறது. இலங்கை அரசாங்கத்துக்கும்,தமிழர்களுக்கும் இடையே
மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை
போர் மூளுமானால், இலங்கை விமானப்படை, தமிழர்கள் மீது குண்டுவீசித்
தாக்கி அழிப்பதற்கு பலாலி விமானதளத்தையே பயன்படுத்தும்.

இலங்கை அரசாங்கம் விரிக்கின்ற வலையில் இந்தியா ஏன் விழ வேண்டும்?
இதுதான் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி.

ஈழத்தமிழர்களின் மீது இலங்கை அரசு நடத்திவரும் இனப்படுகொலைத்தாக்கு தலைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்ற பழிக்கு ஆளாக நேரும் என்பதை எடுத்துக்கூற வேண்டியது எனது கடமை ஆகும்.

பதிவு ஆகி உள்ள மேலும் ஒரு செய்தியில்,‘இலங்கைக்கடற்படையின் ‘சயுரா’ என்ற போர்க்கப்பலை, இந்தியா தனது செலவில் பழுது நீக்கிக் கொடுக்கும்’
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 900 தடவைகளுக்கும் மேல் இலங் கைக் கடற்படை பன்னாட்டுக் கடல் எல்லையிலும் அதைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளும் அத்துமீறி நுழைந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்கு தல் நடத்தி பலரைக் கொன்று இருக்கிறது, ஏராளமான படகுகளை உடைத்து நொறுக்கியது.

தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்ற இலங்கைக் கடற்படையைப் பாராட்டி,
அவர்களுடைய போர்க்கப்பலை தன் செலவில் இந்தியா பழுது நீக்கித் தருகிறதா?

பலாலி விமான தளத்தைச் சீரமைப்பதையும், இலங்கைக் கடற்படைக் கப்ப லைப் பழுது நீக்கித் தருவதையும் இந்தியா கைவிட வேண்டும் என்று  உள் ளார்ந்த பணிவுடன் தங்களை வேண்டுகிறேன்.

மேலும், இலங்கை அரசாங்கத்துடன் எவ்விதமான பாதுகாப்பு உடன்படிக்கை யும் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அத்தகைய உடன்பாடு, இந்தியா செய்கிற மன்னிக்க முடியாத ஒரு வரலாற் றுப் பிழையாக ஆகிவிடும் என்பதையும் எடுத்துக்கூறக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

உண்மை நிலையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியது எனது
முதன்மையான கடமை என்பதால், இந்தியாவின் புவியியல் அரசியல் நலன் களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதற்காக வே, இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதி உள்ளேன்.

மிகுந்த மரியாதையுடன்,
தங்கள் அன்புள்ள,

வைகோ
10.11.2004

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment