Tuesday, June 4, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்திடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆணித்தரமான வாதம்!

விடுதலைப்புலிகளைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்
மத்திய அரசு தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து 2010 மே மாதத்தில் அறிவித்த ஆணையை உறுதி செய்வதற்கு அமைக்கப்பட்ட தீர்ப் பாயத்தின் தலைவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் முன்னிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை நடந்தபோது, கழகப் பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, தடையை
இரத்து செய்திட வேண்டுமென வாதிட்டதோடு, தன்னையும் அந்த விசாரணை யில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் 25.09.2010-இல் வெளியிட்ட ஆணையில், வைகோவின் கோரிக்கை மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தார்.எனினும், அரசுத் தரப்புக்கு எதிரான கருத்துகளைத் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்க தகுதி
உடையவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை என் றும் அந்த ஆணையில் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தின் விசாரணை அக்டோபர் 5, 6 தேதிகளில் சென்னையிலும், 20-ஆம் தேதி உதகமண்டலத்திலும், 28-ஆம் தேதி மீண்டும் சென்னையிலும், பின்னர் நவம்பர் 1, 2 தேதிகளில் டெல்லியிலும் நடைபெற்றது.விசாரணை நடைபெற்ற அனைத்து நாட்களிலும் வைகோ பங் கேற்றார்.

நவம்பர் 12-ஆம் தேதி விடுதலைப்புலிகள் மீது மத்திய அரசு போட்ட தடை ஆணையை உறுதி செய்து தீர்ப்பாயத்தின் தலைவர் ஆணை வெளியிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ டிசம்பர் 8-ஆம் தேதி தாக்கல் செய்த ரிட் மனு, டிசம்பர் 14-ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன் றத் தின் தலைமை நீதிபதி மாண்புமிகு இக்பால், நீதிபதி மாண்புமிகு சிவஞா னம் அமர்வில் விசாரணைக்கு வந்தது
.

வைகோ நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு அமைந்தது.

“தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை மத்திய அரசு தடை செய்ததை இரத்து செய்ய வேண்டும் என்று நான் தீர்ப்பாயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 9-ஆவது பிரிவின்கீழ் சிவில் நடைமுறைச் சட்டப்படி என்னையும் விசா ரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந் தேன்.

எனது மனுவைத் தீர்ப்பாயத்தின் தலைவர் தள்ளுபடி செய்து விட்டார். தள்ளு படி செய்து வழங்கிய ஆணை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட விதிகளுக்கு முரணாகவும், இயற்கை நீதிக்குப் புறம்பாகவும் மட்டுமின்றி சட் டப் பிரிவுகளின் அடிப்படைக்கே எதிராகவும் உள்ளதால், தீர்ப்பாயத்தின் ஆணையை இந்த நீதிமன்றம் இரத்து செய்திட வேண்டுகிறேன்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 9-இன்கீழ் கண்டுள்ளபடி, சிவில் நடைமுறைச் சட்டத்தின்படி நான் அனுமதி கோரியது தவறு என்றும், கிரிமினல் நடைமுறைச் சட்டம்தான் இதில் நடைமுறைப்படுத்தப்படும் என் றும் தீர்ப்பாயத்தின் தலைவர் கூறியிருப்பது சட்டத்தின் அடிப்படைக்கே முற்றி லும் முரணாகும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சிவில்
நடைமுறைச் சட்டம் எந்தெந்தப் பிரிவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என் பதும் கிரிமினல் நடைமுறைச் சட்டம் எந்தெந்தப் பிரிவுகளில் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதும் தெளிவாக உள்ளது.

1967-இல்கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தில் 2004-ஆம் ஆண்டு திருத்தம் கொண் டு வரப்பட்ட போதும், சிவில் நடைமுறைச் சட்டம் கையாளப்படுவதைப் பல பிரிவுகளில் சட்டம் தொடரவே செய்கிறது.

எனவே, விசாரணையில் பங்கேற்க எனக்கு அனுமதி மறுத்ததே சட்ட விரோத மானதாகும்.” 

தலைமை நீதிபதி இக்பால் :நீங்கள் விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்த வரா?

வைகோ : நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர் அல்ல. ஆனால் முழுமையான ஆதரவாளன். தீவிரமான அனுதாபி.

தலைமை நீதிபதி இக்பால் : எந்த அடிப்படையில் விசாரணையில் பங்கேற் கக் கேட்கிறீர்கள்?

வைகோ : விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்த மத்திய அரசின் அர சிதழ் அறிவிப்பிலேயே புலிகளின் ஆதரவாளர் களையும், அனுதாபிகளையும்
சேர்த்தே குறிப்பிடப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்கு தமிழக அரசு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் நடைபெற்று உள்ளன. எங்கள் அரசியல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தை விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் என்று அரசுத் தரப்பு கூறி யுள்ளது.

என் மீதும், எங்கள் இயக்கத் தோழர்கள் மீதும் போடப் பட்ட வழக்குகள் விடு தலைப்புலிகளை ஆதரித்த தற்காகவே தொடுக்கப்பட்டவை ஆகும். இதனால்
நானும் எங்கள் இயக்கமும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

தீர்ப்பாய நீதிபதி விக்ரம்ஜித் சென் எனது மனுவைத் தள்ளுபடி செய்து அறிவித் த ஆணையில், உச்ச நீதிமன்றம் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் குறித்துச் சொன்ன கருத்துகளையும் குறிப்பிட்டு, அரசுக்கு மாறுபட்ட கருத்தை யும் தீர்ப்பாயத்தில் முன் வைக்கலாம் என அறிவித்தார்.

எனினும், அரசாங்கத் தரப்பில் இருந்து தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட ஆவ ணங்கள் எதையும் நான் பார்க்க வாய்ப்பு இல்லை. அதில் என்ன தகவல்கள் உள்ளன என்பதும் தெரியாது. சாட்சிகளை நான் நேரடியாகக் குறுக்கு விசார ணை செய்ய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சிவில் நடை முறைச் சட்டத்தின் அடிப்படையில் எனது மனு செல்லாது என்று தீர்ப்பாயம் வழங்கிய ஆணை சட்ட விரோதமானது ஆகும்.

தலைமை நீதிபதி இக்பால் : அப்படியானால் தீர்ப்பாயத்தில் இதையே நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கலாமே?

வைகோ : தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்காகக்காத்திருந்தேன். விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தீர்ப்பாயம் உறுதி செய்து விட்டதால், நான் நீதி கேட்டு உங்களிடம் வந்துள்ளேன்.

வழக்கறிஞர் இரவீந்திரன் (மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்) : சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 6-இன்படி மத்திய அரசே தடையை நீக்குவதற்கும் அப்படி நீக்கச் சொல்லி கோரிக்கை வைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

வைகோ : அநீதி இழைத்தவர்களிடமே நீதியை நான் கேட்க முடியாது. முறை யீடு செய்ய முடியாது. தடை விதித்து தமிழர்களுக்கு மத்திய அரசு தீங்கு
இழைத்து விட்டது.

தலைமை நீதிபதி இக்பால் : (அரசு வழக்கறிஞரைப் பார்த்து) தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரிவு 6-இல் இடம்
இருக்கிறதா? இல்லையே! எனவே, அரசுத் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.இதில் முழுப் பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசு மூன்று வாரத்தில் வைகோவின் ரிட் மனுவுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்க வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment