Tuesday, June 25, 2013

குற்றேவல் புரியும் கூடாரமா? வைகோ கேள்வி-பகுதி 1

வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?
அல்லது, கொலைகாரன் இராஜபக்சேவுக்குக்
குற்றேவல் புரியும் கூடாரமா?
குன்னூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி!


கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை, மான உணர்வு உள்ள தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்தி, தமிழ்க்குலப் பகைவர்களை இனி இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம்; கேடு கெட்ட மத்திய அரசை எச்சரிக்கின்றோம் என்கின்ற வகை யில், பல்லாயிரக்கணக்கில் குன்னூரில் திரண்டு இருக்கின்றீர்கள்.

கோவையில், மேட்டுப்பாளையத்தில், குன்னூரில், கூடலூரில் என இந்த நீல கிரிப் பகுதி முழுவதுமே பலத்த மழை பெய்து கொண்டு இருக்கின்றது. அதற்கு நடுவிலும், கொலைகாரச் சிங்களவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டு விட்டார் கள்; எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்ற செய்திக்குப் பின்னரும், உணர்ச்சிப் பெருக்கோடு இங்கே திரண்டு இருக்கின்ற
உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, எங்கள் மண்ணில், இந்த நீலமலை யில் இருக்கின்றது.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என எங்கள் முன் னோர்கள் பகுத்த, இயற்கை எழில் கொஞ்சுகின்ற இந்தக் குறிஞ்சிப் பகுதியில் இருக்கின்றது. பத்து மாதங்கள் பயிற்சிக்காக இங்கே வரவழைக்கப்பட்ட சிங் களவர்கள், விங் கமாண்டர் பண்டார தசநாயக, மேஜர் ஹரிசந்திரா ஆகிய
இருவரும், 29 நாள்கள் பயிற்சிக்குப் பின்னர், நேற்றைய தினம் பிற்பகலில் தான் இங்கே இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள்.

தமிழர்களைக் கொன்றவனுக்குத் தமிழ் மண்ணில் பயிற்சியா?

இந்தக் கல்லூரி இருக்கின்ற தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதிதான். எங்கள்குலக் கொடிகளைக் கொன்றவர்களை, பச்சிளம் குழந்தை களைப் படுகொலை செய்தவர்களை, அந்தச் சிங்கள இராணுவத்தில் இடம் பெற்று இருக்கின்றவர்களை, ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுக்கத் திட்டமிட்ட கொடியவன் இராஜபக்சே நடத்திய இனப்படுகொலையில்,கூட்டுக் குற்றவாளியாக இருக்கின்ற இந்திய அரசு, தமிழகத்துக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை,இவ்வளவு காலம் எதிர்த்ததை,கண்டனம் தெரிவித்ததை, முற்றுகைப் போராட்டங்கள் நடத்தியதை, துச்சமாகக் கருதி இந்தப் பயிற்சி யை நீ தொடர்ந்தாய்.

மே 27 ஆம் தேதி, அந்தச் சிங்கள இராணுவ அதிகாரிகள் இங்கே அழைத்து வரப் பட்டார்கள். அந்தச் செய்தி, இந்த மாதம் 9 ஆம் தேதி வரையிலும் வெளியில் தெரியாமல் ரகசியமாகத்தான் இருந்தது.தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், இந்தியப் பிரதமருக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்.அதில், தமிழர்கள் நெஞ்சம் நெருப்பாக எரிகிறது; ஈழத்தமிழர்கள் படுகொலையால் அவர்கள் இத யம் துடிக்கின்றது; இதற்குக் காரணமான சிங்கள இராணுவத்தினரை, இந்தியா வுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து பயிற்சி கொடுப்பது அக்கிர மம் அல்லவா? அவர்களை உடனே வெளியேற்றுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.



தோழர்களே, நான் எந்த அரசியல் நோக்கமும் இன்றிப் பேசுகிறேன். தமிழக முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தில்லியில் செய்தியாளர்களிடம் ஏளனமாகப் பேசியபோது, நாடாளுமன்றத் தில் அதைக் கண்டித்தவன் நான். அதே பார்வையோடுதான் இப்போதும் பேசு கிறேன். ஏழரைக் கோடி மக்கள் வாழ்கின்ற எங்கள் தாயகமாம் தமிழகத்தின் முதல் அமைச்சர், கொலைகாரச் சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுக்காதே என்று கூறியதற்குப் பிறகும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க உனக்கு என்ன துணிச்சல்? என்ன செய்ய முடியும்? என்ற ஏளனமா? சுயமரியா தையை இழந்து விட்ட சில கைக்கூலிகள், இந்தியா பயிற்சி கொடுக்காவிட் டால், அவர்களுக்குச் சீனா பயிற்சி கொடுக்கும் என்கிறார்கள்.

தொடரும் ....

No comments:

Post a Comment